விவாகரத்து
இயேசு இவற்றைச் சொல்லி முடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டுப் புறப்பட்டு, யோர்தானின் மறுபக்கத்திலுள்ள யூதேயா பகுதிக்குச் சென்றார். யோவா 10:40மத் 19:1-9மத் 7:28மாற் 10:1-12 மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அங்கே அவர், அவர்களில் வியாதியுள்ளோரைக் குணப்படுத்தினார். மத் 12:15மத் 14:35-36மத் 15:30-31மத் 4:23-25மத் 9:35-36மாற் 6:55-56
சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தன் மனைவியை எந்தவொரு காரணத்திற்காகவும் விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள். மாற் 10:2எபி 3:9யோவா 8:6லூக் 11:53-54மத் 16:1மத் 22:16-18மத் 22:35மத் 5:31-32
அதற்கு அவர், “தொடக்கத்திலே படைப்பில் இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்’ 1 என்பதை நீங்கள் வாசித்ததில்லையா” ஆதி 2:23ஆதி 1:27ஆதி 5:2லூக் 10:26மல்கி 2:15ஆதி 2:18மத் 22:31மத் 21:42 இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள் 2. ஆதி 2:21-241 கொரி 7:41 கொரி 7:2எபே 5:31மாற் 10:5-91 கொரி 6:161 சாமு 18:1சங் 63:8 எனவே அவர்கள் இருவராய் இல்லாமல் ஒரே உடலாக இருக்கிறார்கள். ஆகையால் “இறைவன் ஒன்றாய் இணைத்தவர்களை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார். எபி 13:4மாற் 10:91 கொரி 7:10-14ரோம 7:2எபே 5:28மல்கி 2:14நீதி 2:17
அதற்கு அவர்கள், “அப்படியானால் ஒருவன் தனது மனைவிக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து அவளை அனுப்பிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டிருப்பது ஏன்?” என்று கேட்டார்கள். உபா 24:1-4மத் 5:31மாற் 10:4மல்கி 2:16ஏசா 50:1எரே 3:8மத் 1:19
இயேசு அதற்குப் பதிலாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, உங்கள் மனைவியை விவாகரத்து செய்வதற்கு மோசே அனுமதித்தார். ஆனால் இது தொடக்கத்திலிருந்து அப்படியிருக்கவில்லை. மல்கி 2:13-14ஆதி 2:24எரே 6:16மாற் 10:5சகரி 7:12ஆதி 7:7மத் 3:151 கொரி 7:6 நான் உங்களுக்குச் சொல்கிறேன், தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் ஒருவன் அவளை விவாகரத்து செய்துவிட்டு, அதற்குப் பின்பு வேறு ஒருத்தியைத் திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான்” என்றார். மத் 5:32லூக் 16:181 கொரி 7:391 கொரி 7:10-13மாற் 10:11-12ரோம 7:2-3ஆதி 12:18-19ஆதி 20:3
சீடர்கள் அவரிடம், “கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் உறவுநிலை இப்படியானால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்றார்கள். 1 கொரி 7:32-351 கொரி 7:1-21 கொரி 7:39-401 கொரி 7:81 தீமோ 4:31 தீமோ 5:11-15நீதி 18:22நீதி 19:13-14
இயேசு அதற்குப் பதிலாக, “இந்த வார்த்தையை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான வரம் பெற்றவர்கள் மட்டுமே இதை ஏற்றுக்கொள்வார்கள். 1 கொரி 7:171 கொரி 7:21 கொரி 7:351 கொரி 7:7-9மத் 13:11 சிலர் பிறவியிலேயே திருமண உறவுகொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள்; சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; சிலர் பரலோக அரசுக்காகத் திருமணத்தைக் கைவிட்டுத் தங்களைத் தாங்களே அப்படி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவன் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார். 1 கொரி 7:32-381 கொரி 9:5ஏசா 56:3-4ஏசா 39:71 கொரி 9:15
சிறுபிள்ளைகளும் இயேசுவும்
அதற்குப் பின்பு சிறுபிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைத்து ஜெபிக்க வேண்டும் என்று, அவர்கள் சிறுபிள்ளைகளை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்களோ, அவர்களைக் கொண்டுவந்தவர்களைக் கண்டித்தார்கள். மாற் 10:13-16லூக் 18:15-17மத் 18:2-5அப் 2:391 கொரி 7:141 சாமு 1:24ஆதி 48:1ஆதி 48:9-20
இயேசு அவர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில் பரலோக அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது” என்றார். மத் 18:3லூக் 18:16-171 கொரி 14:20மத் 11:25மாற் 10:141 பேது 2:1-21 சாமு 1:11ஆதி 17:24-26 அவர் பிள்ளைகள்மேல் தமது கைகளை வைத்து ஆசீர்வதித்த பின்பு, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். மாற் 10:161 கொரி 7:142 தீமோ 3:15ஏசா 40:11
செல்வந்தனான வாலிபன்
அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்யவேண்டிய நல்ல செயல் என்ன?” எனக் கேட்டான். மாற் 10:17-30யோவா 3:15லூக் 18:18-30யூதா 1:21மத் 25:461 யோவா 1:21 யோவா 5:20தீத் 3:7
“நல்லது என்ன என்பதைப்பற்றி நீ ஏன் என்னிடம் கேட்கிறாய்? நல்லவர் ஒருவரே இருக்கிறார். நீ வாழ்விற்குள் செல்லவேண்டுமானால் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி” என்றார். லேவி 18:5கலா 3:11-13லூக் 10:26-281 சாமு 2:2ரோம 10:51 யோவா 4:16எசேக் 20:11-12எசேக் 20:21
“எந்தக் கட்டளைகள்?” என அவன் விசாரித்தான். உபா 5:16-21யாத் 20:12-17யாக் 2:10-11லூக் 18:20மாற் 10:19கலா 3:10மத் 5:21-28ரோம 13:8-10
இயேசு அதற்குப் பதிலாக, “கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட, 3 உன்னில் அன்பாய் இருப்பதுபோல், உன் அயலானிடம் அன்பாய் இரு என்பவைகளே” என்றார். 4 லேவி 19:18உபா 5:16யாத் 20:12மத் 22:39எபே 6:1-2யாக் 2:8லூக் 10:27மத் 15:4-6
அதற்கு அந்த வாலிபன், “இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன், இன்னும் எனக்கு என்ன குறைபாடு?” என்றான். கலா 3:24மாற் 10:20-21பிலி 3:6யோவா 8:7லூக் 15:29லூக் 15:7லூக் 18:11-12லூக் 18:21-22
இயேசு அதற்கு பதிலாக, “நீ குறைபாடற்றவனாய் இருக்க விரும்பினால், போய் உனது உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார். மாற் 10:21லூக் 18:22லூக் 12:33அப் 2:45லூக் 14:33மத் 5:481 தீமோ 6:17-19யோவா 10:27
இதை அந்த வாலிபன் கேட்டபோது, துக்கத்துடன் திரும்பிப்போனான். ஏனெனில் அவன் பெரிய செல்வந்தனாய் இருந்தான். எசேக் 33:31மத் 6:24மத் 13:22கொலோ 3:5எபே 5:5மத் 16:26மாற் 10:22லூக் 18:23
அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு செல்வந்தன் பரலோக அரசிற்குள் செல்வது மிகக் கடினமானது. 1 தீமோ 6:9-10மத் 13:22யாக் 5:1-4லூக் 18:24மாற் 10:231 கொரி 1:26யோவா 3:3மத் 18:3 மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு செல்வந்தன் இறைவனின் அரசிற்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதிற்குள் நுழைவது சுலபமாக இருக்கும்” என்றார். யோவா 5:44லூக் 18:25மாற் 10:24-25எரே 13:23மத் 19:26மத் 23:24
இதைச் சீடர்கள் கேட்டபோது, மிகவும் வியப்புற்று, “அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” எனக் கேட்டார்கள். ரோம 10:13மத் 24:22லூக் 13:23-24மாற் 13:20ரோம 11:5-7
இயேசு அவர்களை நோக்கிப்பார்த்து, “மனிதனால் இது முடியாது. ஆனால் இறைவனால் எல்லாவற்றையும் செய்யமுடியும்” என்றார். எரே 32:27லூக் 1:37யோபு 42:2லூக் 18:27மாற் 10:27எரே 32:17ஆதி 18:14சங் 62:11
பேதுரு அவரிடம் மறுமொழியாக, “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோமே! அப்படியானால், எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்றான். பிலி 3:8லூக் 18:28லூக் 5:11மாற் 1:17-20லூக் 15:29உபா 33:9லூக் 5:27-28மத் 4:20-22
இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எல்லாக் காரியங்களும் புதுப்பிக்கப்படும் நாளில், மானிடமகனாகிய நான் எனது மகிமையின் அரியணையில் உட்கார்ந்திருப்பேன். என்னைப் பின்பற்றிய நீங்களும் பன்னிரண்டு அரியணைகளில் உட்கார்ந்து, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள். லூக் 22:28-301 கொரி 6:2-3மத் 25:31வெளி 20:4ஏசா 65:172 தீமோ 2:12மத் 16:27வெளி 2:26-27 என் நிமித்தம் வீடுகளையோ, சகோதரர்களையோ சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறுமடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான். லூக் 18:29-30மாற் 10:29-30பிலி 3:8லூக் 14:26மத் 16:25மத் 10:37-38மத் 6:331 பேது 4:14 ஆனால் முதலாவதாய் இருக்கும் அநேகர் கடைசியாகவும், கடைசியாய் இருக்கும் அநேகர் முதலாவதாயும் இருப்பார்கள்” என்றார். லூக் 13:30மத் 20:16மாற் 10:31மத் 21:31-32லூக் 18:13-14ரோம 5:20-21ரோம 9:30-33லூக் 7:29-30