இயேசு முதல் சீடனை அழைத்தல்
ஒரு நாள் இயேசு கெனேசரேத் ஏரியருகே 1 நின்றுகொண்டிருந்தபோது, இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்கு மக்கள் அவரைச் சுற்றிலும் கூடிவந்தார்கள். மாற் 1:16-20மத் 4:18-22மாற் 3:9மத் 14:34மாற் 6:53உபா 3:17யோசு 12:3மத் 11:12 அவர் கரையோரம் இரண்டு படகுகளைக் கண்டார், மீனவர் அவற்றை அங்கு விட்டுவிட்டுத் தங்களது வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். மாற் 1:19மத் 4:21 அவர் சீமோனுக்குச் சொந்தமான படகில் ஏறினார். அவர் அந்தப் படகை கரையிலிருந்து கொஞ்சம் தள்ளிவிடும்படி சீமோனிடம் கேட்டுக்கொண்டு, படகில் உட்கார்ந்து மக்களுக்கு போதனை செய்தார். மத் 4:18மத் 13:1-2யோவா 1:41-42மாற் 4:1-2யோவா 8:2
அவர் பேசி முடித்தபின்பு, சீமோனை நோக்கி, “படகை ஆழமான தண்ணீர் பகுதிக்குக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். யோவா 21:6மத் 17:27
அதற்குச் சீமோன், “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றுமே கிடைக்கவில்லை. ஆனால் உம்முடைய வார்த்தையின்படியே நான் வலைகளைப் போடுகிறேன்” என்றான். யோவா 2:5யோவா 15:14லூக் 6:46-482இராஜா 5:10-14எசேக் 37:4-7சங் 127:1-2யோவா 21:3எசேக் 37:11-12
அவர்கள் அப்படிச் செய்தபோது, திரளான மீன்களைப் பிடித்தார்கள். அவர்களுடைய வலைகள் பாரத்தால் கிழியத்தொடங்கின. 1 கொரி 15:58யோவா 21:6-112இராஜா 4:3-7பிரச 11:6கலா 6:9அப் 2:41அப் 4:4 அப்பொழுது மற்றப் படகில் இருந்த தங்கள் பங்காளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படி, அவர்களுக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்து இரண்டு படகுகளையும் மீன்களினால் நிரப்பினார்கள்; அவை மூழ்கத் தொடங்கின. கலா 6:2பிலி 4:3அப் 11:25யாத் 23:5ரோம 16:2-4நீதி 18:24
சீமோன் பேதுரு இதைக் கண்டபோது, இயேசுவின் பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, என்னைவிட்டுப் போய்விடும்; நான் பாவியான மனிதன்!” என்றான். ஏசா 6:5யோபு 42:5-6வெளி 1:17நியாயாதி 13:22யோபு 40:4யாத் 20:19மத் 2:11மத் 8:8 அவனும் அவனுடன் இருந்தவர்கள் எல்லோரும் தாங்கள் பிடித்த மீன்களைக் கண்டு வியப்படைந்தார்கள். லூக் 4:32மாற் 9:6சங் 8:8சங் 8:6லூக் 4:36 சீமோனின் பங்காளிகளான செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்கூட வியப்படைந்தார்கள். மத் 13:47மத் 4:19எசேக் 47:9-10மாற் 1:17லூக் 5:72 கொரி 8:23அப் 2:4லூக் 6:14
அப்பொழுது இயேசு சீமோனிடம், “பயப்படாதே; இதுமுதல் நீ இறைவனுக்காக மனிதரைப் பிடிப்பவனாவாய்” என்றார். எனவே அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் சேர்த்தபின், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். மத் 4:20லூக் 18:28-30லூக் 5:28மத் 19:27மாற் 10:21மாற் 1:18-25பிலி 3:7-8மத் 10:37
குஷ்டவியாதி உள்ள ஒருவன்
இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, தரையில் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்றான். சங் 50:15மத் 8:2-4லூக் 17:16லூக் 17:12-13மத் 9:28மாற் 1:40-45ஆதி 18:14எபி 7:25
இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார். உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கிற்று. மத் 9:29-30யோவா 4:50-532இராஜா 5:14எசேக் 36:25-27எசேக் 36:29ஓசி 14:42இராஜா 5:10ஆதி 1:9
அப்பொழுது இயேசு அவனிடம், “இதைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம்; ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து; அது அவர்களுக்கு சாட்சியாய் இருக்கும்” என்று கட்டளையிட்டார். லேவி 14:2-32லேவி 13:2லூக் 17:14மத் 8:4மாற் 1:44மத் 12:16மத் 9:30லூக் 9:5
ஆனால் அவரைப்பற்றிய செய்தி இன்னும் அதிகமாய் பரவிற்று, இதனால் அவர் சொல்வதைக் கேட்பதற்கும் தங்கள் நோய்களிலிருந்து சுகமடைவதற்கும், மக்கள் கூட்டம் கூட்டமாய் அவரிடம் வந்தார்கள். மத் 15:30-31லூக் 12:1மத் 4:23-25மத் 9:26மாற் 1:45மாற் 1:28மாற் 3:7லூக் 14:25 ஆனால் இயேசுவோ அவர்களைவிட்டுத் தனிமையான இடத்திற்கு விலகிப்போய், அங்கே மன்றாடினார். லூக் 6:12மாற் 1:35-36மத் 14:23மாற் 6:46யோவா 6:15
இயேசு முடக்குவாதக்காரனை சுகப்படுத்துதல்
ஒரு நாள் இயேசு போதித்துக் கொண்டிருந்தார், கலிலேயாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் யூதேயாவிலும் எருசலேமிலுமிருந்து வந்த பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நோயாளிகளை குணமாக்கும்படியான கர்த்தருடைய வல்லமை இயேசுவோடு இருந்தது. லூக் 6:19லூக் 8:46அப் 19:11மத் 11:5அப் 4:30மத் 15:1மாற் 5:30மாற் 7:1 அப்பொழுது படுக்கையில் இருந்த முடக்குவாதக்காரன் ஒருவனை சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; அவனை வீட்டிற்குள் கொண்டுபோய் இயேசுவுக்கு முன்பாகக் கிடத்துவதற்கு அவர்கள் முயற்சிசெய்தார்கள். மத் 9:2-8மாற் 2:3-12அப் 9:33யோவா 5:5-6 மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால் அப்படிச் செய்வதற்கான வழி அவர்களுக்குக் கிடைக்கவில்லை; எனவே அவர்கள் வீட்டின்மேல் ஏறி கூரையின் ஓடுகளைப் பிரித்து, அதன் வழியாக படுக்கையில் கிடந்த அவனைக் கூடியிருந்த மக்கள் நடுவே இயேசுவுக்குமுன் இறக்கினார்கள். மாற் 2:4மத் 10:272 சாமு 11:2உபா 22:8மத் 24:17எரே 19:13
இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். அப் 14:9மத் 9:2கொலோ 3:13யாக் 2:18யோவா 2:25லூக் 7:48மாற் 2:52 கொரி 2:10
பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், “இறைவனை நிந்தித்துப் பேசுகிற இவன் யார்? இறைவனாலன்றி யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று தங்களுக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். ஏசா 43:25மாற் 2:6-7அப் 6:11-13யோவா 10:33லூக் 7:49தானி 9:9மத் 26:65சங் 32:5
அவர்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்து, “உங்கள் மனதில் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்? மத் 9:4அப் 5:3லூக் 24:38மத் 12:25மாற் 8:17ஏசா 66:18சங் 139:2வெளி 2:23 ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது? மத் 9:5மாற் 2:9 ஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன். பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார். ஏசா 53:11அப் 14:10அப் 9:40வெளி 1:13அப் 3:6-8அப் 5:31அப் 9:34லூக் 8:54 உடனே அவர்களுக்கு முன்பாக அவன் எழுந்து நின்று, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு இறைவனைத் துதித்தபடி தன் வீட்டிற்குப் போனான். யோவா 9:24சங் 103:1-3சங் 107:20-22லூக் 13:13லூக் 17:15-18லூக் 18:43லூக் 5:13சங் 33:9 எல்லோரும் வியப்படைந்து இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் திகிலடைந்து, “நாங்கள் இன்று ஆச்சரியமானவற்றைக் கண்டோம்” என்றார்கள். மத் 9:8அப் 4:21எரே 33:9மத் 12:23மாற் 2:12அப் 5:11-13ஓசி 3:5லூக் 7:16
லேவியின் அழைப்பு
இதற்குப் பின்பு, இயேசு வெளியே சென்று வரி வசூலிக்கும் அலுவலகத்தில் வரி வசூலிக்கிறவனான லேவி 2 என்பவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். மாற் 2:13-22மத் 9:9-17மாற் 3:18யோவா 1:43மத் 10:3லூக் 18:22மத் 4:19-21யோவா 12:26 லேவி எழுந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றான். லூக் 5:111 இராஜா 19:19-21மத் 19:22-27லூக் 9:59-62
பின்பு லேவி தன்னுடைய வீட்டிலே இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்தான்; வரி வசூலிக்கிறவர்களும் வேறு பலரும் பெருங்கூட்டமாக வந்து, அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மாற் 2:151 கொரி 10:27லூக் 15:1மத் 9:101 கொரி 5:9-11யோவா 12:2 ஆனால் பரிசேயரும் அவர்களுடைய குழுவைச் சேர்ந்த மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவின் சீடர்களிடம், “நீங்கள் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறது ஏன்?” என்று கேட்டார்கள். அப் 23:9லூக் 15:1-2லூக் 19:7லூக் 5:17லூக் 5:21லூக் 7:29-30மத் 21:28-32மாற் 7:3
அதற்கு இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. மாற் 2:17மத் 9:12-13எரே 8:22 நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே மனந்திரும்பும்படி அழைக்கவந்தேன்” என்றார். லூக் 19:10லூக் 15:101 தீமோ 1:15-16லூக் 15:7அப் 3:19லூக் 24:47அப் 17:30ஏசா 55:6-7
உபவாசத்தைப் பற்றிய கேள்வி
சிலர் இயேசுவிடம், “யோவானின் சீடர்கள் அடிக்கடி உபவாசித்து மன்றாடுகிறார்கள், பரிசேயருடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள்; ஆனால் உம்முடைய சீடரோ சாப்பிடுவதும் குடிப்பதுமாக இருக்கிறார்களே” என்றார்கள். மத் 9:14-17மாற் 2:18-22யோவா 3:25லூக் 18:12லூக் 20:47ரோம 10:2-3அப் 9:11ஏசா 1:15
அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது அவனுடைய நண்பர்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா? யோவா 3:29மத் 25:1-10வெளி 19:7-92 கொரி 11:2எபே 5:25-27ஏசா 54:5ஏசா 62:5சங் 45:10-16 ஆனால் மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்நாட்களில் அவர்கள் உபவாசிப்பார்கள்” என்றார். அப் 14:23அப் 3:21யோவா 16:4-7லூக் 17:221 கொரி 7:52 கொரி 11:27அப் 1:9அப் 13:2-3
பின்பு இயேசு அவர்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறினார்: “ஒருவனும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும். புதிய துண்டும் பழைய ஆடைக்குப் பொருந்தாது. மத் 9:16-17மாற் 2:21-222 கொரி 6:16உபா 22:11லேவி 19:19 யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படிச் செய்தால், புதிய திராட்சை இரசம் அந்த தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும். சங் 119:83யோசு 9:13யோசு 9:4 புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில்தான் ஊற்றி வைக்கவேண்டும். எபி 8:8-132 கொரி 5:17எசேக் 36:26கலா 4:9-11கலா 5:1-6வெளி 21:51 தீமோ 4:8எபி 13:9-10 யாரும் பழைய திராட்சை இரசத்தைக் குடித்த பின்பு புதியதை விரும்பமாட்டார்கள். ஏனெனில், ‘பழையதே நல்லது’ என்பார்கள்.” எபி 11:39எரே 6:16மாற் 7:7-13ரோம 4:11-12எபி 11:1-2