யோவான் ஸ்நானகன் வழியை ஆயத்தப்படுத்துதல்
இறைவனுடைய மகன் 1 இயேசுகிறிஸ்துவைப் 2 பற்றிய நற்செய்தியின் தொடக்கம். 1 யோவா 5:11-12மத் 3:17மத் 4:3யோவா 20:31யோவா 1:14லூக் 1:2-3மத் 14:33மத் 17:5 இது ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: மல்கி 3:1லூக் 1:76மத் 11:10மத் 3:1-11லூக் 1:15-17லூக் 7:27-28லூக் 1:70மத் 26:31
“நான் என்னுடைய தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்;
அவன் உமது வழியை ஆயத்தப்படுத்துவான்” 3
“ ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; ஏசா 40:3-5மத் 3:3லூக் 3:4-6யோவா 3:28-36யோவா 1:15யோவா 1:19-34
அவருக்காகப் பாதைகளை நேராக்குங்கள்’
என்று ஒருவனுடைய குரல் பாலைவனத்திலே சத்தமிட்டது.” 4
அவ்வாறே யோவான் ஸ்நானகன் பாலைவனப் பகுதியில் வந்து, திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான். அப் 19:3-4மத் 3:6அப் 13:24-25யோவா 3:23அப் 22:16லூக் 1:77லூக் 3:2-3மத் 3:1-2 யூதேயா மாகாணத்தின் எல்லா நாட்டுப்புறங்களிலும் எருசலேம் நகரத்திலுமிருந்து எல்லாரும் அவனிடம் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்குப் பெற்றார்கள். அப் 19:18லேவி 26:40-42அப் 2:38மத் 3:5-61 யோவா 1:8-10யோவா 1:28யோவா 3:23யோசு 7:19 யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது. 2இராஜா 1:8லேவி 11:22மத் 3:4சகரி 13:4 அவன் அறிவித்த செய்தி என்னவென்றால், “என்னைப் பார்க்கிலும் அதிக வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். நானோ அவருடைய பாதரட்சைகளின் வாரையும் குனிந்து அவிழ்ப்பதற்குத் தகுதியற்றவன். 5 அப் 13:25லூக் 3:16யோவா 1:27மத் 3:11யோவா 3:28-31லூக் 7:6-7மத் 3:14 நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுப்பார்.” அப் 1:51 கொரி 12:13அப் 19:4-6அப் 10:45அப் 11:15-16அப் 2:4யோவே 2:28எசேக் 36:25-27
இயேசுவின் திருமுழுக்கும் சோதிக்கப்படுதலும்
அக்காலத்தில் இயேசு கலிலேயா மாகாணத்தின் நாசரேத் பட்டணத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் திருமுழுக்கு பெற்றார். மத் 2:23மத் 3:13-17லூக் 3:21-22 இயேசு தண்ணீரிலிருந்து கரையேறிய உடனே, வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் அவர் கண்டார். யோவா 1:31-34லூக் 3:22ஏசா 42:1ஏசா 64:1மத் 3:16 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு குரல்: “நீர் என்னுடைய அன்பு மகன்; நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்” என்று ஒலித்தது. ஏசா 42:1மாற் 9:7மத் 3:17சங் 2:7கொலோ 1:132 பேது 1:17-18யோவா 12:28-30யோவா 3:16
உடனே ஆவியானவர் இயேசுவைப் பாலைவனத்துக்கு அனுப்பினார். மத் 4:1-11லூக் 4:1-13 இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்கள் இருந்து சாத்தானால் சோதிக்கப்பட்டார் 6. அங்கு அவர் காட்டு மிருகங்களுடன் இருந்தார்; இறைவனுடைய தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள். எபி 2:17-18எபி 4:15யாத் 34:28மத் 26:531 இராஜா 19:5-8உபா 9:11உபா 9:18உபா 9:25
இயேசு நற்செய்தி அறிவித்தல்
யோவான் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, இயேசு இறைவனுடைய நற்செய்தியை அறிவித்துக்கொண்டு கலிலேயாவுக்கு வந்து, மத் 4:23மத் 4:12லூக் 8:1மத் 9:35எபே 2:17ஏசா 61:1-3அப் 28:23லூக் 4:17-19 “காலம் நிறைவேறிவிட்டது, இறைவனுடைய அரசு சமீபித்திருக்கிறது. மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்” என்றார். மத் 3:2மத் 4:17அப் 2:36-38அப் 20:21எபே 1:10கலா 4:4மத் 10:7தானி 2:44
இயேசு தமது முதல் சீடர்களை அழைத்தல்
இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது சீமோனையும் அவனது சகோதரன் அந்திரேயாவையும் கண்டார்; மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். மத் 4:18-22யோவா 1:40-42யோவா 6:8லூக் 6:14அப் 1:13யோவா 12:22லூக் 5:1-11மத் 10:2 இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” 7 என்றார். லூக் 5:10மத் 4:19-20அப் 2:38-41எசேக் 47:10 உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள். லூக் 14:33லூக் 18:28-30லூக் 5:11மத் 19:27-30மாற் 10:28-31பிலி 3:8
இயேசு சற்று தூரம் போனபின்பு, செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார்; அவர்கள் ஒரு படகிலிருந்து தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப் 1:13அப் 12:2மத் 4:21மாற் 10:35மாற் 14:33மாற் 3:17மாற் 5:37மாற் 9:2 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார்; அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள். லூக் 14:26மத் 10:37மாற் 10:291 இராஜா 19:202 கொரி 5:16மத் 4:21-22மத் 8:21-22உபா 33:9
இயேசு தீய ஆவியைத் துரத்துதல்
பின்பு அவர்கள் கப்பர்நகூம் நகரத்திற்குச் சென்றார்கள்; ஓய்வுநாளில் இயேசு யூத ஜெப ஆலயத்திற்குச் சென்று, அங்கு போதித்தார். மாற் 6:2மாற் 1:39மத் 4:23அப் 13:14-52அப் 17:2அப் 18:4மத் 4:13லூக் 10:15 அங்கிருந்த மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார். மத் 7:28-29மத் 13:54லூக் 4:32அப் 6:10எரே 23:29யோவா 7:46லூக் 21:152 கொரி 4:2 அப்பொழுது, அந்த ஜெப ஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு, மாற் 9:25லூக் 4:33-37மத் 12:43மாற் 1:34மாற் 5:2மாற் 7:25 “நசரேயனாகிய இயேசுவே, எங்களிடம் உமக்கு என்ன? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்பது எனக்குத் தெரியும், நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான். யாக் 2:19மத் 8:29அப் 3:14லூக் 4:34வெளி 3:7அப் 2:27லூக் 8:28மாற் 5:7
“அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார். மாற் 1:34அப் 16:17லூக் 4:41மாற் 3:11-12மாற் 9:25லூக் 4:35சங் 50:16 அப்பொழுது தீய ஆவி, அந்த மனிதனை வலிப்புடன் வீழ்த்தி, பெருங்கூச்சலிட்டுக் கொண்டு, அவனைவிட்டு வெளியேறியது. மாற் 9:26மாற் 9:20லூக் 11:22லூக் 9:39லூக் 9:42
எல்லோரும் வியப்படைந்து ஒருவரோடொருவர், “இது என்ன? இது அதிகாரமுடைய ஒரு புதிய போதனையாக இருக்கிறதே! இயேசு தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார்; அவைகளும் அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று பேசிக்கொண்டார்கள். லூக் 9:1மத் 15:31மாற் 7:37லூக் 4:36மத் 9:33மத் 12:22-23மாற் 10:24மாற் 10:32 இயேசுவைப்பற்றிய இச்செய்தி கலிலேயா பகுதிகள் முழுவதும் விரைவாய் பரவியது. லூக் 4:37மத் 9:31லூக் 4:17மத் 4:24மீகா 5:4மாற் 1:45
இயேசு அநேகரைக் குணமாக்குதல்
ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்ட உடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். மத் 8:14-15லூக் 4:38-39மாற் 1:21லூக் 9:58மாற் 1:23 அங்கே சீமோனுடைய மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் கிடந்தாள். உடனே அவர்கள் அவளைப்பற்றி இயேசுவுக்குச் சொன்னார்கள். 1 கொரி 9:5யாக் 5:14-15யோவா 11:3மாற் 5:23 எனவே இயேசு அவளிடத்தில் சென்று, அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்துகொள்ள உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று; அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள். அப் 9:41லூக் 8:2-3மாற் 5:41சங் 103:1-3சங் 116:12மாற் 15:41மத் 27:55
அன்று மாலை கதிரவன் மறைந்தபின்பு, வியாதிப்பட்டவர்கள், பிசாசு பிடித்தவர்கள் எல்லோரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். மத் 8:16லூக் 4:40மத் 4:24மாற் 3:2மாற் 1:21 பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடியிருந்தார்கள். அப் 13:44மாற் 1:5 பலவித வியாதி உடையவர்களாயிருந்த அநேகரை, இயேசு குணமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்தினார். அந்தப் பிசாசுகள் தம்மை யாரென்று அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு இயேசு அனுமதிக்கவில்லை. லூக் 4:41மாற் 3:12அப் 16:16-18மத் 4:23மாற் 1:25
இயேசு தனிமையான இடத்தில் மன்றாடுதல்
விடியுமுன் இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார். லூக் 6:12லூக் 5:16லூக் 22:39-46எபே 6:18சங் 5:3யோவா 6:15எபி 5:7மத் 14:23 சீமோனும் அவனுடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச்சென்றார்கள். அவர்கள் இயேசுவைக் கண்டபோது, “எல்லோரும் உம்மைத் தேடிக்கொண்டு இருக்கிறார்களே” என்றார்கள். யோவா 12:19யோவா 11:48யோவா 3:26மாற் 1:5சகரி 11:11
இயேசு அவர்களிடம், “நாம் வேறுசில கிராமங்களுக்குப் போவோம்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார். லூக் 4:43ஏசா 61:1-3யோவா 17:8யோவா 16:28யோவா 17:4லூக் 2:49லூக் 4:18-21யோவா 9:4 எனவே, இயேசு கலிலேயா முழுவதிலும் பயணம் செய்து, ஜெப ஆலயங்களில் நற்செய்தியை அறிவித்து, பிசாசுகளையும் துரத்தினார். மத் 4:23மாற் 1:21லூக் 4:41லூக் 4:43-44மாற் 7:30
இயேசு குஷ்டவியாதி உடையவனை குணப்படுத்துதல்
குஷ்டவியாதி உள்ளவன் இயேசுவினிடத்தில் வந்து முழங்காற்படியிட்டு, நீர் விரும்பினால், “என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று கெஞ்சி வேண்டிக்கொண்டான். லூக் 5:12-14மத் 8:2-4லேவி 13:1-142 சாமு 3:29மத் 17:14மாற் 9:22-23உபா 24:8-9மாற் 10:17
இயேசு மனதுருகினவராய் தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார். மத் 9:36எபி 2:17எபி 4:15லூக் 7:12-13மாற் 5:41மாற் 6:34ஆதி 1:3எபி 1:3 உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கியது, அவன் குணமடைந்தான். யோவா 15:3யோவா 4:50-53மத் 15:28மாற் 1:31மாற் 5:29சங் 33:9
இயேசு அவனுக்கு ஒரு கண்டிப்பான எச்சரிப்பைக் கொடுத்து: மத் 9:30லூக் 8:56மாற் 3:12மாற் 5:43மாற் 7:36 “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து. அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்” என்று சொல்லி அவனை உடனே அனுப்பிவிட்டார். லேவி 14:1-32லூக் 17:14மத் 8:41 கொரி 10:11லூக் 5:14ரோம 15:4மத் 23:2-3 ஆனால் அவன் புறப்பட்டுப்போய் தாராளமாய் பேசத்தொடங்கி, தனக்கு நடந்த செய்தியை எங்கும் பரப்பினான். இதன் காரணமாக, இயேசுவினால் ஒரு பட்டணத்திற்குள்ளும் வெளிப்படையாக செல்லமுடியாமல், வெளியே தனிமையான இடங்களிலேயே தங்கினார். ஆனால் எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். மத் 9:31மாற் 2:13யோவா 6:2லூக் 5:15-17சங் 77:11மத் 28:15மாற் 2:1-2மாற் 3:7