“லீலிமலர்கள்” என்ற சுருதியிலே வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட திருமணப் பாடலாகிய சங்கீதம்.
அரசனைப் புகழ்ந்து, நான் கவிகளைப் பாடும்போது, சங் 49:32 சாமு 23:2யோபு 33:3நீதி 16:23யோபு 32:18-202 பேது 1:21ஏசா 5:1உன்னத 1:1-7
அதின் உயர்வான கருப்பொருளால் என் உள்ளம் பொங்குகிறது;
என் நாவு சிறந்த ஓர் எழுத்தாளனின் எழுதுகோல்.
மனுஷரெல்லாரிலும் அழகுமிக்கவர் நீரே, லூக் 4:22உன்னத 5:10-16யோவா 7:46சங் 21:6எபி 7:26யோவா 1:14உன்னத 2:3நீதி 22:11
இறைவன் என்றென்றுமாய் உம்மை ஆசீர்வதித்திருப்பதால்,
உமது உதடுகளில் கிருபை பொழிகிறது.
வலிமை மிகுந்தவரே, உமது வாளை எடுத்து உமது இடையில் கட்டிக்கொள்ளும்; எபி 4:12ஏசா 49:2வெளி 1:16வெளி 19:15ஏசா 63:1-6சங் 21:5சங் 96:6எபி 1:3
மகிமையினாலும் மகத்துவத்தினாலும் உம்மை உடுத்திக்கொள்ளும்.
உண்மையும் தாழ்மையும் நீதியும் உயர, சங் 65:5வெளி 19:11வெளி 6:2ஏசா 59:17-18மத் 11:29சகரி 9:91 தெச 1:51 தெச 2:13
உமது மகத்துவத்தில் வெற்றியுடன் விரைந்து வாரும்;
உமது வலதுகரம் பயங்கரமான செயல்களைச் செய்யட்டும்.
உமது கூர்மையான அம்புகள் அரசனின் பகைவருடைய இருதயத்திற்குள் பாயட்டும்; சங் 21:12எண் 24:8சங் 38:2சங் 22:27சகரி 9:13-14சங் 66:3-4ரோம 15:18-19அப் 4:4
நாடுகள் உமது பாதத்தின்கீழ் வீழ்ச்சியடையட்டும்.
இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும்; எபி 1:8-9சங் 93:2யோவா 1:1ஏசா 9:6-7எரே 23:5-6எரே 33:15-16சங் 145:131 தீமோ 3:16
நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும்.
நீர் நீதியை விரும்பி அநீதியை வெறுக்கிறீர்; எபி 1:9சங் 21:6ஏசா 61:1-3சங் 33:5கொலோ 1:18-19எபே 1:3லூக் 4:18-21யோவா 3:34
ஆகையால் இறைவனே, உமது இறைவன் உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து,
உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்திவைத்தார்.
உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கம் உன்னத 1:32 கொரி 2:14-16யோவா 19:39மத் 2:11உன்னத 4:6யாத் 30:23-24சங் 16:11உன்னத 5:1
ஆகியவற்றின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது.
யானைத் தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனைகளிலிருந்து வரும்,
கம்பியிசைக் கருவிகளின் இசை உம்மை மகிழ்விக்கிறது.
உமது கனம்பொருந்திய பெண்கள் நடுவில் அரச குமாரத்திகளும் இருக்கிறார்கள். 1 இராஜா 2:19வெளி 21:9எபே 5:26-27வெளி 19:7வெளி 21:2ஏசா 60:10-11யோவா 3:29உன்னத 6:8-9
அரச மணமகளோ, ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.
மகளே கேள், உன் செவியைச் சாய்த்துக் கவனி: உன்னத 2:10-13ஆதி 12:1மத் 10:37மத் 19:292 கொரி 6:17உபா 21:13ஆதி 2:242 கொரி 5:16
உன் மக்களையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
அரசர் உன் அழகில் பிரியப்படுவார்; சங் 95:6ஏசா 54:5உன்னத 4:1-5செப்ப 3:17பிலி 2:10-11லூக் 24:52உன்னத 1:8பிலி 3:8
அவரே உனது யெகோவா, ஆதலால் அவரை கனம்பண்ணு.
தீரு நகர மக்கள் ஒரு வெகுமதியுடன் வருவார்கள்; சங் 22:29ஏசா 60:3ஏசா 23:17-18ஏசா 49:23மத் 2:11சங் 72:10ஏசா 60:10-11சங் 68:29
செல்வந்தர் உன் தயவை நாடுவார்கள்.
இளவரசி எல்லா மகிமையோடும் அவளது அறைக்குள் இருக்கிறாள்; ஏசா 61:10வெளி 19:7-8லூக் 11:40மத் 5:16ரோம 13:14ரோம 3:221 பேது 2:92 கொரி 5:17
அவளுடைய உடை தங்கச் சரிகையாயிருக்கிறது.
அவள் அலங்கார வேலைப்பாடு கொண்ட உடைகளோடு 2 கொரி 11:2உன்னத 8:13யாத் 28:39உன்னத 1:3-5உன்னத 2:7உன்னத 6:1உன்னத 6:13உன்னத 6:8
அரசனிடம் அழைத்துச் செல்லப்படுகிறாள்;
அவளுடைய தோழியர்களாகிய கன்னியர்கள்
அவளைத் தொடர்ந்து உம்மிடம் அழைத்து வருகிறார்கள்.
அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வெளி 7:15-17ஏசா 35:10ஏசா 61:10யூதா 1:24ஏசா 55:12-13ஏசா 56:5ஏசா 60:19-20வெளி 3:12
அவர்கள் அரசனின் அரண்மனைக்குள் வருகிறார்கள்.
உம்முடைய மகன்கள் உமது முற்பிதாக்களின் இடத்தில் நிலைத்திருப்பார்கள்; வெளி 5:101 பேது 2:9வெளி 1:6ஏசா 60:1-5ஏசா 49:21-22ஏசா 54:1-5மத் 19:29மாற் 10:29-30
அவர்களை நீர் நாடு முழுவதிலும் இளவரசர்களாகும்படி செய்வீர்.
நான் எல்லா தலைமுறைகளின் நடுவிலும் ஏசா 62:3மல்கி 1:11சங் 72:17-19ஏசா 61:9ஏசா 59:21மத் 26:13சங் 138:4சங் 22:30-31
உம்மைக் குறித்த நினைவுகளை நிலைபெறச் செய்வேன்;
அதினால் மக்கள் கூட்டம் உம்மை என்றென்றைக்கும் துதிப்பார்கள்.