தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 1

Song 1

சாலொமோனின் உன்னதப்பாட்டு. ஏசா 5:11 இராஜா 4:32சங் 14:1

1

காதலி

அவர் தமது வாயின் முத்தங்களினால் என்னை முத்தமிடுவாராக; உன்னத 4:10சங் 36:7உன்னத 1:4ஏசா 55:1-2சங் 63:3-5லூக் 15:20மத் 26:26உன்னத 7:9

ஏனெனில் உமது அன்பு திராட்சை இரசத்தைப் பார்க்கிலும் அதிக இன்பமாயிருக்கிறது.

உமது வாசனைத் தைலங்களின் நறுமணம் இன்பம் தருகிறது; பிரச 7:1யாத் 30:23-28யோவா 12:3உன்னத 4:10பிலி 2:9-10சங் 45:7-8வெளி 14:42 கொரி 2:14-16

உமது பெயர் ஊற்றுண்ட வாசனைத் தைலம்போல் இருக்கிறது.

கன்னியர் உம்மைக் காதலிப்பதில் ஆச்சரியம் இல்லையே!

என்னை உம்முடன் கூட்டிச்செல்லும்; நாம் விரைவாய் போய்விடுவோம். ஓசி 11:4யோவா 6:44சங் 45:14-15யோவா 12:32எபி 12:1எரே 31:3ஏசா 25:8ஏசா 45:25

அரசன் தமது அறைக்குள் என்னைக் கொண்டுவரட்டும்.

தோழியர்

நாங்கள் உம்மில் மகிழ்ந்து களிப்படைகிறோம்;

திராட்சை இரசத்தைப் பார்க்கிலும் உமது அன்பையே புகழ்வோம்.

காதலி

அவர்கள் உம்மீது காதல்கொள்வது எவ்வளவு சரியானது!

எருசலேமின் மங்கையரே, லூக் 15:22உன்னத 2:142 கொரி 5:21சங் 120:5உன்னத 2:7உன்னத 5:16உன்னத 5:81 கொரி 4:10-13

நான் 2 கேதாரின் கூடாரங்களைப் போலவும்,

சாலொமோனின் 3 திரைகளைப்போலவும்

கருப்பாய் இருந்தாலும் அழகாகவே இருக்கிறேன்.

நான் கருப்பாய் இருக்கிறேன் என்று பார்க்கவேண்டாம்; உன்னத 8:11-12லூக் 12:51-53எரே 12:6யோபு 30:30மாற் 4:6சங் 69:8அப் 14:22கலா 4:29

வெயில் பட்டதினாலே நான் கருப்பாய் இருக்கிறேன்.

என் சகோதரர்கள் 4 என்மேல் கோபங்கொண்டு,

திராட்சைத் தோட்டங்களைப் பராமரிக்க என்னை வைத்தார்கள்;

அதினால் என் சொந்தத் திராட்சைத் தோட்டத்தை 5 என்னால் கவனிக்க முடியாமல் போய்விட்டது.

என் காதலரே, உமது மந்தைகளை எங்கே மேய்க்கிறீர்? உன்னத 3:1-4ஏசா 13:20சங் 23:1-2ஆதி 37:16சங் 28:11 யோவா 2:191 பேது 1:81 பேது 2:7

மத்தியான வேளையிலே உமது செம்மறியாடுகளை எங்கே இளைப்பாறப் பண்ணுகிறீர்?

அதை எனக்குச் சொல்லும்.

முகத்திரையிட்ட பெண்போல் 6,

ஏன் நான் உமது தோழர்களின் மந்தைகளுக்கிடையில் இருக்கவேண்டும்?

தோழியர்

பெண்களுள் பேரழகியே, அதை நீ அறியாவிட்டால், உன்னத 6:1உன்னத 5:9எபி 11:4-40யாக் 2:21யாக் 5:101 கொரி 11:11 பேது 3:6எபே 5:27

செம்மறியாட்டின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து போய்,

மேய்ப்பர்களின் கூடாரங்களுக்கு அருகில்

உன் வெள்ளாட்டுக் குட்டிகளை மேயவிடு.

காதலன்

என் அன்பே, நான் உன்னைப் உன்னத 2:10உன்னத 2:13யோவா 15:14-15ஏசா 31:1உன்னத 1:15உன்னத 2:2உன்னத 4:7உன்னத 5:2

பார்வோனின் தேர்களில் பூட்டப்பட்ட பெண் குதிரைக்கு ஒப்பிடுகிறேன்.

காதணிகள் தொங்கும் உன் கன்னங்களும், எசேக் 16:11-131 பேது 3:4ஆதி 24:47உன்னத 5:132 பேது 1:3-4ஆதி 24:22ஆதி 41:42ஏசா 3:18-21

நகைகள் அணிந்த உன் கழுத்தும் அழகானவை.

நாங்கள் உனக்கு வெள்ளிப் பதிக்கப்பட்ட பிலி 3:21சங் 149:4ஆதி 1:26எபே 5:25-27உன்னத 8:9

தங்கக் காதணிகளைச் செய்வோம்.

காதலி

அரசர் தமது பந்தியில் 7 இருக்கையிலே யோவா 12:3வெளி 3:20மாற் 14:3லூக் 24:30-32மத் 22:11மத் 22:4மத் 25:34மத் 26:26-28

எனது வாசனைத் தைலம் நறுமணம் வீசியது.

என் காதலர் எனக்கு என் மார்பகங்களுக்கிடையில் இருக்கும் யோவா 19:39சங் 45:8எபே 3:17ஆதி 43:11உன்னத 2:7உன்னத 3:5உன்னத 4:14உன்னத 4:6

வெள்ளைப்போள முடிச்சாய் இருக்கிறார்.

என் காதலர் எனக்கு என்கேதி 8 ஊர் திராட்சைத் தோட்டங்களில் உள்ள, 1 சாமு 23:29யோசு 15:62உன்னத 1:13உன்னத 2:3உன்னத 4:13-14

மருதாணி பூங்கொத்து போன்றவர்.

காதலன்

என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! உன்னத 4:1உன்னத 5:12உன்னத 4:72 கொரி 11:2-3எபே 1:17-18மல்கி 2:14உன்னத 1:8உன்னத 2:10

ஆ, நீ எவ்வளவு அழகானவள்!

உன் கண்கள் புறாக்கண்கள்.

காதலி

என் காதலரே, நீர் எவ்வளவு அழகானவர்! உன்னத 2:3சங் 45:2சகரி 9:17பிலி 3:8-9சங் 110:3வெளி 5:11-13உன்னத 3:7உன்னத 5:10-16

ஆ, எவ்வளவு கவர்ச்சி!

நமது படுக்கை பசுமையானது.

காதலன்

நம் வீட்டின் விட்டங்கள் கேதுரு மரத்தாலானவை, எபி 11:10சங் 92:121 இராஜா 6:91 பேது 2:4-51 தீமோ 3:15-162 நாளாக 2:8-9எசேக் 41:16எசேக் 42:3

நம்முடைய மச்சு தேவதாரு மரத்தாலானவை.