காதலி
நான் 1 சாரோனின் ரோஜாவும் 2, ஓசி 14:5ஏசா 57:15ஏசா 35:1-2உன்னத 5:13உன்னத 2:16உன்னத 6:3சங் 85:11
பள்ளத்தாக்குகளின் லில்லிப் பூவுமாய் இருக்கிறேன்.
காதலன்
முட்களுக்கிடையில் லில்லிப் பூவைப்போல் 1 பேது 2:12ஏசா 55:13மத் 10:16மத் 6:28-29பிலி 2:15-16
கன்னியர் நடுவில் என் காதலியும் இருக்கிறாள்.
காதலி
காட்டு மரங்கள் நடுவில் ஆப்பிள் மரத்தைப்போல், உன்னத 8:5எபி 1:1-6ஏசா 25:4ஏசா 32:2எபி 12:2யோவா 1:14-181 யோவா 1:3-4எசேக் 47:12
வாலிபர்களுக்குள் என் காதலரும் இருக்கிறார்.
அவருடைய நிழலில் நான் மகிழ்ந்திருந்தேன்,
அவருடைய கனி எனக்கு மிகவும் இனிமையாயிருந்தது.
அவர் என்னை விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்; யோவா 15:9-15ரோம 5:8-10ரோம 8:28-39உன்னத 1:4வெளி 3:20சங் 84:10ஏசா 11:10உன்னத 6:4
என்மேல் அவருடைய அன்பு, கொடியாகப் பறந்தது.
உலர்ந்த திராட்சையினால் என்னைப் பெலப்படுத்துங்கள், உன்னத 5:82 சாமு 6:19ஓசி 3:12 சாமு 13:1-2ஏசா 26:8-9லூக் 24:32பிலி 1:23சங் 119:130-131
ஆப்பிள் பழங்களினால் எனக்குப் புத்துயிர் கொடுங்கள்,
ஏனெனில் நான் காதலால் பலவீனமடைந்திருக்கிறேன்.
அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது, ஏசா 54:5-10செப்ப 3:17எரே 32:41உன்னத 8:3-5எபே 5:25-29ஏசா 62:4-5யோவா 3:29நீதி 4:8
அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது.
எருசலேமின் மங்கையரே, உன்னத 3:5உன்னத 8:4உன்னத 1:5நீதி 5:19உன்னத 5:8-9எபே 5:22-33உன்னத 2:9உன்னத 5:16
கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை!
காதலைத் தட்டி எழுப்பவேண்டாம்,
அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம்.
கேளுங்கள்! இதோ, என் காதலரின் குரல் கேட்கிறது! யோவா 10:27ஏசா 52:7யோவா 3:29வெளி 3:20உன்னத 2:172 சாமு 6:16அப் 14:10அப் 3:8
இதோ, என் காதலர் வந்துவிட்டார்!
மலைகளைத் தாண்டியும்,
குன்றுகள்மேல் தாவியும் வருகிறார்.
என் காதலர் வெளிமானுக்கும், மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார். உன்னத 8:14உன்னத 2:171 கொரி 13:121 பேது 1:10-122 கொரி 3:13-182 சாமு 2:18கொலோ 2:17எபே 2:14-15
இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் பின்னே நிற்கிறார்,
ஜன்னல்களின் வழியாய்ப் பார்க்கிறார்,
கிராதியின் வழியாய் எட்டிப் பார்க்கிறார்.
என் காதலர் என்னோடு பேசி, உன்னத 2:13உன்னத 4:7-8வெளி 22:172 கொரி 11:22 கொரி 6:17-18சங் 45:10-11வெளி 19:7-9உன்னத 2:8
“என் அன்பே, எழுந்திரு,
என் அழகே, என்னோடு வா.
இதோ பார், குளிர்க்காலம் முடிந்துவிட்டது; ஏசா 60:1-2பிரச 3:11எபே 5:8ஏசா 54:6-8பிரச 3:4ஏசா 40:2மத் 5:4வெளி 11:14-15
மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.
பூமியில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிட்டன; ஏசா 55:12கொலோ 3:16எரே 8:7சங் 148:7-13சங் 89:15எபே 1:13-14எபே 5:18-20ஓசி 14:5-7
பறவைகள் பாடும் பருவம் வந்துவிட்டது,
காட்டுப்புறா கூவும்
சத்தமும் நம் நாட்டில் கேட்கிறது.
அத்திமரத்தில் பழங்கள் பழுத்திருக்கின்றன; உன்னத 2:102 கொரி 6:1-2ஏசா 55:10-11ஏசா 61:11லூக் 13:6-7உன்னத 7:11-132 கொரி 5:20ஆகா 2:19
திராட்சைக்கொடிகள் பூத்து நறுமணம் வீசுகின்றன.
என் அன்பே, எழுந்து வா;
என் அழகே, என்னோடு வா” என்று சொல்கிறார்.
காதலன்
பாறைப் பிளவுகளில் மறைந்திருப்பவளே, எஸ்றா 9:5-6உன்னத 1:5உன்னத 5:2யாத் 3:6உன்னத 8:13யாத் 33:22-23யாத் 4:11-13எசேக் 7:16
கற்பாறை வெடிப்புகளில் தங்கும் என் புறாவே,
உன் முகத்தை எனக்குக் காட்டு,
உனது குரலை நான் கேட்கட்டும்;
உன் குரல் இனிமையானது,
உன் முகம் அழகானது.
நம்முடைய திராட்சைத் தோட்டங்கள் லூக் 13:322 பேது 2:1-3உன்னத 7:12சங் 80:13எசேக் 13:4-16வெளி 2:2உன்னத 2:13
பூத்திருக்கின்றன,
அவற்றைப் பாழாக்குகின்ற நரிகளையும்
குள்ளநரிகளையும் 3 நமக்காகப் பிடியுங்கள்.
காதலி
என் காதலர் என்னுடையவர், நான் அவருடையவள்; உன்னத 6:3உன்னத 7:10எரே 31:33சங் 48:14சங் 63:11 கொரி 3:21-23கலா 2:20வெளி 21:2-3
அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார்.
என் காதலரே, பொழுது விடிவதற்குள், உன்னத 4:62 பேது 1:19எபி 10:1எபி 8:5லூக் 1:78ரோம 13:12உன்னத 2:8-9உன்னத 8:14
நிழல்கள் மறைவதற்குள்
திரும்பி வாரும்,
குன்றுகளில் உள்ள மானைப்போலவும்,
மரைக்குட்டியைப் போலவும்
திரும்பி வாரும்.