யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 1 நாளாக 16:23-33சங் 98:1சங் 149:1சங் 33:3வெளி 14:3சங் 67:3-6வெளி 5:9சங் 68:32
பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்.
யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள், மாற் 16:15சங் 71:15சங் 103:1-2சங் 145:1சங் 40:10ஏசா 40:9சங் 72:17-181 நாளாக 29:20
நாள்தோறும் அவருடைய இரட்சிப்பை அறிவியுங்கள்.
நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், தானி 4:1-3லூக் 24:47சங் 22:27ஏசா 19:23-25ஏசா 49:6மத் 28:19மீகா 4:2சங் 117:1-2
மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள்.
ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; சங் 145:3எரே 10:6-7சங் 18:3வெளி 15:4சங் 95:3சங் 66:3சங் 89:7சங் 86:10
எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே.
நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; சங் 115:15ஏசா 42:51 கொரி 8:4எரே 10:11-12சங் 135:18அப் 19:26ஆதி 1:1ஏசா 44:8-28
ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார்.
மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; சங் 63:2-31 நாளாக 16:27சங் 104:1சங் 93:12 பேது 1:16-17எபி 1:3சங் 29:1-2சங் 27:4
வல்லமையும் மகிமையும் அவருடைய பரிசுத்த இடத்தில் இருக்கின்றன.
நாடுகளின் குடும்பங்களே, மகிமையையும் வல்லமையையும் வெளி 19:1மத் 6:131 நாளாக 29:11-13வெளி 5:9சங் 22:27வெளி 7:12யூதா 1:24-25சங் 29:1-2
யெகோவாவுக்கு செலுத்துங்கள்;
யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள்.
யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; சங் 100:4ரோம 12:1யாத் 34:5-9எபி 13:15-16மல்கி 1:11சங் 108:3-5சங் 45:12சங் 72:10
காணிக்கையை எடுத்துக்கொண்டு அவருடைய ஆலய முற்றத்திற்கு வாருங்கள்.
அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்; சங் 29:2சங் 114:7சங் 110:3தானி 11:45சங் 33:8எசேக் 7:20எஸ்றா 7:27லூக் 21:5-6
பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள்.
“யெகோவா ஆளுகிறார்” என்று நாடுகளின் மத்தியில் சொல்லுங்கள்; சங் 93:1சங் 67:4சங் 9:8அப் 17:31சங் 98:9மல்கி 1:11சங் 96:13வெளி 19:11
உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அது அசையாது;
அவர் நாடுகளை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.
வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; ஏசா 49:13சங் 69:34சங் 97:1சங் 98:7-9சங் 148:1-4ஏசா 44:23லூக் 15:10லூக் 2:10
கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும்.
வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்; ஏசா 55:12-13ஏசா 35:1ஏசா 42:10-11ஏசா 44:23சங் 65:12-13
அப்பொழுது காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும்.
யெகோவா வருகிறார், அதினால் அவருக்கு முன்பாக வெளி 19:112 தீமோ 4:8ஏசா 25:8-91 தெச 4:16-18சங் 67:4சங் 96:10சங் 98:9தீத் 2:13
அனைத்துப் படைப்புகளும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்;
ஏனெனில் அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;
அவர் உலகத்தை நீதியுடனும்
மக்களை அவருடைய சத்தியத்தின்படியும் நியாயந்தீர்ப்பார்.