ஆகூரின் வார்த்தைகள்
யாக்கேயின் மகன் ஆகூரினால் கூறப்பட்ட இறைவாக்கு. நீதி 31:12 பேது 1:19-21
அவன் ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்னது:
“இறைவனே, நான் சோர்ந்துவிட்டேன்,
ஆனால் நான் வெற்றிபெற முடியும்.
நான் ஒரு முட்டாள், ஒரு மனிதன் அல்ல; 1 கொரி 3:18சங் 73:22நீதி 5:121 கொரி 8:22 பேது 2:12-16ஏசா 6:5யாக் 1:5எரே 10:14
ஒரு மனிதனுக்குரிய அறிவாற்றல் எனக்கு இல்லை.
நான் ஞானத்தைக் கற்கவில்லை, எபே 3:18-19நீதி 9:10வெளி 3:7ரோம 11:33ஆமோ 7:14-15ஏசா 30:11ஏசா 57:15ஏசா 6:10
பரிசுத்தரைப் பற்றிய அறிவும் எனக்கில்லை.
மேலே வானத்திற்கு போய் கீழே இறங்கி வந்தவர் யார்? யோவா 3:13எபே 4:8-10யோபு 26:8உபா 30:12ஏசா 7:14ஏசா 9:6மத் 1:21-23ஏசா 40:12-31
தனது கைகளின் பிடிக்குள்ளே காற்றைச் சேர்த்துக்கொண்டவர் யார்?
வெள்ளத்தைத் தனது உடையில் சுற்றிக் கட்டியவர் யார்?
பூமியின் எல்லைகளை நிலைநாட்டியவர் யார்?
அவருடைய பெயர் என்ன, அவருடைய மகனின் பெயர் என்ன?
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
“இறைவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் குறைபாடற்றது; சங் 18:30சங் 12:6யாக் 3:17சங் 3:3சங் 84:11சங் 119:140ஆதி 15:1சங் 91:2
அவரிடத்தில் அடைக்கலம் கொள்பவர்களுக்கு அவர் கேடயமானவர்.
அவருடைய வார்த்தைகளோடு நீ ஒன்றையும் கூட்டாதே, உபா 12:32உபா 4:2வெளி 22:18-19யோபு 13:7-91 கொரி 15:15
கூட்டினால் அவர் உன்னைக் கண்டித்து, பொய்யன் என நிரூபிப்பார்.
“யெகோவாவே, இரண்டு காரியங்களை நான் உம்மிடம் கேட்கிறேன்; லூக் 10:42சங் 27:42இராஜா 2:91 இராஜா 3:5-9சங் 21:2
நான் இறப்பதற்குள் அதை எனக்குத் தாரும்.
மாயையையும் பொய்களையும் என்னைவிட்டுத் தூரமாக்கும்; 1 தீமோ 6:6-8சங் 62:9-10சங் 119:37மத் 6:33லூக் 11:3சங் 119:29யோபு 23:12நீதி 21:6
எனக்கு வறுமையையோ, செல்வத்தையோ கொடுக்கவேண்டாம்,
ஆனால் அன்றன்றைக்குரிய உணவை மட்டும் எனக்குத் தாரும்.
இல்லாவிட்டால், நான் அளவுக்கதிகமாய் வைத்துக்கொண்டு ஓசி 13:6உபா 31:20எசேக் 16:49-50உபா 8:10-14உபா 32:15யோபு 31:24-28நெகே 9:25-26உபா 6:10-12
‘யெகோவா யார்?’ என்று கேட்டு ஒருவேளை உம்மை மறுதலிக்கக் கூடும்;
அல்லது நான் ஏழையாகி, திருடி
என் இறைவனுடைய பெயரை அவமானப்படுத்தக்கூடும்.
“வேலைக்காரர்களைப் பற்றி அவர்களுடைய எஜமானிடம் இழிவாகப் பேசாதே; பிரச 7:21ரோம 14:42 நாளாக 24:22-242 சாமு 19:26-27தானி 3:8-18தானி 6:13தானி 6:24நீதி 24:23-24
அப்படிப் பேசினால் அவர்கள் உன்னை சபிப்பார்கள், நீ குற்றவாளியாவாய்.
“தங்கள் தந்தையர்களை சபிக்கிறவர்களும், நீதி 20:20நீதி 30:17உபா 27:16யாத் 21:17நீதி 30:12-14லேவி 20:9உபா 21:20-211 தீமோ 5:4
தங்கள் தாய்மாரை ஆசீர்வதியாமல் இருக்கிறவர்களும் உண்டு;
தங்கள் அழுக்கிலிருந்து கழுவப்படாமலிருந்தும், லூக் 18:112 தீமோ 3:5நீதி 16:2எரே 2:351 யோவா 1:7-10நீதி 21:2தீத் 3:5எசேக் 36:25
தங்கள் கண்களுக்குத் தூய்மையாகக் காணப்படுகிறவர்களும் உண்டு;
எப்பொழுதும் கண்களில் பெருமையும் நீதி 6:17ஏசா 2:11சங் 101:5சங் 131:1தானி 11:36-37எசேக் 28:2-5எசேக் 28:9ஆப 2:4
ஆணவப் பார்வையையும் உடையவர்களும் உண்டு;
கூர்மையான வாள் போன்ற பற்களையும் சங் 57:4சங் 3:7சங் 14:4யோபு 29:17ஆமோ 8:4பிரச 4:1சங் 12:5சங் 58:6
தீட்டிய கத்திகள் போன்ற கீழ்வாய்ப் பற்களையும் உடையவர்களும் உண்டு;
அவர்கள் பூமியிலிருந்து ஏழைகளையும்,
மனுக்குலத்திலிருந்து எளியவர்களையும் தின்றுவிடுவார்கள்.
“இரத்தம் குடிக்கும் அட்டைக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். நீதி 30:21நீதி 30:29நீதி 6:16ரோம 16:182 பேது 2:13-152 பேது 2:3ஆமோ 1:11யோவா 8:39
அவர்கள், ‘தா! தா!’ என அழுகின்றனர்.
“ஒருபோதும் திருப்தியடையாத மூன்று காரியங்கள் உண்டு, இல்லை,
‘போதும்!’ என்று ஒருபோதும் சொல்லாத நான்காவது காரியமும் உண்டு:
பாதாளம், நீதி 27:20ஆப 2:5ஆதி 30:1
மலட்டுக் கருப்பை,
தண்ணீரால் திருப்தியடையாத நிலம்,
ஒருபோதும், ‘போதும்!’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே.
“தன் தந்தையை ஏளனம் செய்து, உபா 21:18-21நீதி 23:22நீதி 30:112 சாமு 18:14-17லேவி 20:9ஆதி 9:21-27நீதி 20:201 சாமு 17:44
தாய்க்குக் கீழ்ப்படிவதைக் கேலி செய்கிறவனுடைய கண்களை
பள்ளத்தாக்கிலுள்ள அண்டங்காக்கைகள் கொத்திப் பிடுங்கும்,
கழுகுகள் அவற்றைத் தின்னும்.
“எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும் மூன்று காரியங்கள் உண்டு, இல்லை, யோபு 42:3சங் 139:6
நான்காவதையும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை:
ஆகாயத்திலே பறக்கும் கழுகின் வழியும், ஏசா 40:31யோபு 39:27யாத் 22:16
பாறையின்மேல் ஊரும் பாம்பின் வழியும்,
நடுக்கடலிலே கப்பலின் வழியும்,
இளம்பெண்ணின் அன்பை தேடிய ஒரு மனிதரின் வழியுமே அவை.
“ஒரு விபசாரியின் வழியும் இவ்விதமானதே: நீதி 5:6நீதி 7:13-23எண் 5:11-30
அவள் சாப்பிட்டுவிட்டு தன் வாயைத் துடைத்துக்கொண்டு,
‘நான் பிழையேதும் செய்யவில்லை’ என்கிறாள்.
“மூன்று காரியங்களால் பூமி நிலைகுலைகிறது, இல்லை,
நான்காவது காரியத்தையோ அதினால் தாங்க முடியவில்லை:
அரசனாகிவிடும் வேலைக்காரன், நீதி 19:10பிரச 10:71 சாமு 25:10-111 சாமு 25:251 சாமு 25:31 சாமு 25:36-381 சாமு 30:16ஏசா 3:4-5
மூடனுக்கு அளவுக்கதிகமாய் உணவு கிடைப்பதும்,
யாராலும் விரும்பப்படாதிருந்தும் கடைசியில் திருமணமாகும் பெண், நீதி 21:19நீதி 27:15நீதி 21:9நீதி 29:21நீதி 19:13
தன் எஜமானியின் இடத்தை அபகரிக்கும் வேலைக்காரியுமே.
“பூமியில் மிகச்சிறிய உயிரினங்கள் நான்கு உண்டு, யோபு 12:7
ஆனாலும் அவை மிகவும் ஞானமுள்ளவை:
எறும்புகள் மிக வலிமை குறைந்த உயிரினங்கள்; நீதி 6:6-8
ஆனாலும், அவை கோடைகாலத்தில் தங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன;
குறுமுயல்களும் வலுக்குறைந்த பிராணிகளே; சங் 104:18லேவி 11:5
ஆனாலும், உயரமான கற்பாறைகளின் வெடிப்பில் தங்களுக்கு வீடுகளை அமைக்கின்றன.
வெட்டுக்கிளிகளுக்கோ அரசன் இல்லை, யாத் 10:4-6யோவே 1:6-7யோவே 2:25யோவே 2:7-11சங் 105:34யாத் 10:13-15யோவே 1:4வெளி 9:3-11
ஆனாலும் அவை ஒன்றாய் அணிவகுத்துச் செல்கின்றன;
பல்லியையோ கையால் பிடித்துக்கொள்ளலாம்,
ஆனாலும் அது அரச மாளிகைகளிலும் காணப்படுகிறது.
“வீர நடையுடைய மூன்று உண்டு, இல்லை,
கம்பீரத் தோற்றமுடைய நான்காவதும் உண்டு:
மிருகங்களில் வலிமைமிக்கது சிங்கம், அது எதைக் கண்டும் பின்வாங்குவதில்லை; நியாயாதி 14:18எண் 23:24
கர்வத்துடன் நடக்கும் சேவல், தானி 3:15-18நீதி 16:14நீதி 20:2
வெள்ளாட்டுக்கடா ஆகியவையும்;
தன் இராணுப்படை சூழ நிற்கும் அரசனுமே.
“நீ மூடத்தனமாய் நடந்து உன்னை நீயே மேன்மைப்படுத்தினால், யோபு 21:5யோபு 40:4மீகா 7:16-17நீதி 26:12ரோம 3:19பிரச 8:3-4நீதி 17:28
அல்லது தீமைசெய்ய திட்டமிட்டிருந்தால்,
உன் கையினால் உன் வாயை மூடிக்கொள்!
பாலைக் கடைந்தால் வெண்ணெய் வருவதுபோலவும், நீதி 17:14நீதி 28:25நீதி 29:22நீதி 15:18நீதி 16:28நீதி 26:21
மூக்கைக் கசக்குவதினால் இரத்தம் வருவதுபோலவும்,
கோபத்தை மூட்டுவதும் சண்டையை ஏற்படுத்தும்.”