பிரசங்கி 10

Ecclesiastes 10

செத்த ஈக்கள் நறுமணத் தைலத்திலும் கெட்ட நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மத் 5:13-16கலா 2:12-14யாத் 30:25நெகே 13:262 நாளாக 19:2யாத் 30:34-35நெகே 6:13

அதுபோலவே ஒரு சிறு மூடத்தனம் ஞானத்திற்கும், மதிப்பிற்கும் மேலோங்கி நிற்கும்.

ஞானமுள்ளவர்களின் இருதயம் நியாயத்தின் பக்கம் சாய்கிறது, பிரச 10:14லூக் 12:18-20பிரச 10:10லூக் 14:28-32நீதி 14:8நீதி 17:16பிரச 9:10

மூடர்களின் இருதயமோ வழிவிலகிப் போவதையே தேடுகிறது.

ஒரு மூடன் வீதியில் போகும்போதே, நீதி 18:2நீதி 13:161 பேது 4:4பிரச 5:3நீதி 18:6

புத்தியற்றவனாக நடந்து எல்லோருக்கும்

தான் எவ்வளவு மதியீனன் என்பதைக் காண்பிக்கிறான்.

ஒரு ஆளுநனின் கோபம் உனக்கெதிராக மூண்டால், நீதி 25:15பிரச 8:31 சாமு 25:24-44

நீ உன் பதவியைவிட்டு விலகாதே;

நிதானமாயிருந்தால் பெரிய குற்றமும் மன்னிக்கப்படும்.

சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீமையும் உண்டு, பிரச 5:13பிரச 6:1பிரச 3:16பிரச 4:1பிரச 4:7பிரச 9:3

ஒரு ஆளுநனிடமிருந்து வரும் ஒருவிதத் தவறே அது.

மூடர்கள் பல உயர்ந்த பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள்; நீதி 28:12நீதி 29:2எஸ்த 3:1சங் 12:81 இராஜா 12:13-14நீதி 28:28நியாயாதி 9:14-20யாக் 2:3-5

செல்வந்தர்களோ தாழ்ந்த பதவிகளையே வகிக்கிறார்கள்.

அடிமைகள் குதிரையில் ஏறிச் சவாரி செய்கிறதை நான் கண்டிருக்கிறேன்; நீதி 19:10எஸ்த 6:8நீதி 30:22

பிரபுக்களோ அடிமைகளைப்போல் நடந்து செல்வதையும் கண்டிருக்கிறேன்.

குழி ஒன்றை வெட்டுகிறவன் அதில் விழக்கூடும்; நீதி 26:27சங் 7:15-16ஆமோ 5:19எஸ்த 7:102 சாமு 17:23ஆமோ 9:3சங் 9:15-16நியாயாதி 9:5

பழைய சுவரை இடிப்பவனையும் பாம்பு கடிக்கக்கூடும்.

கற்களைக் குழிகளில் தோண்டி எடுப்பவன் அவற்றால் காயப்படக்கூடும்;

மரக்கட்டையை பிளக்கிறவனுக்கு அதனாலே ஆபத்து உண்டாகலாம்.

ஒரு கோடரி மழுங்கிப் போய் யாக் 1:5கொலோ 4:5பிரச 10:151 கொரி 14:20எபே 5:15-171 இராஜா 3:9பிரச 9:15-17அப் 6:1-9

அதின் முனை கூர்மையாக்கப்படாமல் இருந்தால்,

அதிக பலம் வேண்டியிருக்கும்.

ஆனால் தொழில் திறமையோ வெற்றியைக் கொண்டுவரும்.

ஒரு பாம்பை வசியப்படுத்துமுன் அது கடிக்குமானால், எரே 8:17சங் 58:4-5சங் 52:2சங் 64:3யாக் 3:6நீதி 18:21

அதை வசியப்படுத்தும் வித்தைத் தெரிந்தும் பயனில்லை.

ஞானமுள்ளவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தயவுள்ளவைகள்; கொலோ 4:6லூக் 4:22நீதி 15:2நீதி 22:11எபே 4:29நீதி 10:13-14நீதி 10:20-21நீதி 10:31-32

மூடனோ தன் உதடுகளாலேயே அழிக்கப்படுகிறான்.

அவனுடைய வார்த்தைகள் ஆரம்பத்தில் மூடத்தனமானவை; 1 சாமு 25:10-11நீதி 29:91 சாமு 20:26-331 சாமு 22:16-181 சாமு 22:7-82இராஜா 6:272இராஜா 6:312 சாமு 19:41

முடிவிலோ கொடிய பைத்தியக்காரத்தனமானவை.

மூடன் வார்த்தைகளை அதிகமாக்குகிறான். நீதி 15:2பிரச 3:22பிரச 5:3பிரச 6:12பிரச 8:7யாக் 4:13-14யோபு 35:16நீதி 10:19

ஒரு மனிதனும் வரப்போவதை அறியான்.

அவனுக்குப்பின் என்ன நடக்கும் என்பதை யாரால் அவனுக்குச் சொல்லமுடியும்?

மூடனின் வேலை அவனையே களைப்படையச் செய்யும்; ஏசா 57:1எரே 50:4-5பிரச 10:3ஏசா 35:8-10சங் 107:4சங் 107:7பிரச 10:10ஆப 2:6

ஏனெனில், பட்டணத்திற்குப் போகும் வழி அவனுக்குத் தெரியாது.

அடிமையை 1 அரசனாகவும் ஏசா 3:12ஏசா 5:11-12ஏசா 3:4-5நீதி 20:1-22 நாளாக 13:7எரே 21:122 நாளாக 36:22 நாளாக 36:5

விடியற்காலமே விருந்து உண்கிறவர்களை பிரபுக்களாகவும் கொண்ட நாடே, உனக்கு ஐயோ!

உயர்குடியில் பிறந்தவனை அரசனாகக் கொண்ட நாடே, நீ ஆசீர்வதிக்கப்படுவாய். நீதி 31:4-5உபா 14:26பிரச 10:6-7ஏசா 5:11எரே 30:21நீதி 28:2-3

குடிபோதைக்கு அல்லாமல் தங்கள் பெலத்திற்காக

உரிய நேரத்தில் சாப்பிடுகிற இளவரசர்களைக் கொண்ட நாடே, நீ ஆசீர்வதிக்கப்படுவாய்.

சோம்பேறியினுடைய வீட்டுக்கூரை வளைந்து தொங்கும்; நீதி 14:1நீதி 20:4நீதி 24:30-34எபி 6:11நீதி 21:25நீதி 23:212 பேது 1:5-10நீதி 12:24

செயலற்ற கைகளினால் அவனுடைய வீடு ஒழுகும்.

மகிழ்ச்சிக்காகவே விருந்து செய்யப்படுகிறது, சங் 104:151 பேது 4:3பிரச 2:1-2பிரச 7:11-12ஏசா 23:18ஏசா 24:11லூக் 12:19பிலி 4:15-19

திராட்சை இரசம் வாழ்க்கையை களிப்புள்ளதாக்குகிறது,

ஆனால் எல்லாவற்றிற்கும் தேவையானது பணமே.

உனது சிந்தனையிலும் அரசனை நிந்திக்காதே, அப் 23:5லூக் 12:2-32இராஜா 6:12பிரச 7:21-22யாத் 22:28ஏசா 8:21லூக் 19:40லூக் 10:40

உனது படுக்கை அறையிலும் பணக்காரனை சபிக்காதே,

ஏனெனில் ஆகாயத்துப் பறவை உன் வார்த்தைகளைக் கொண்டு செல்லலாம்,

சிறகடிக்கும் பறவை நீ சொல்வதைப் போய்ச் சொல்லலாம்.