சூரியனுக்குக் கீழே இன்னுமொரு தீங்கையும் நான் கண்டேன். அது மனிதரை பாரமாய் அழுத்துகிறது. பிரச 5:13 இறைவன் ஒருவனுக்கு செல்வத்தையும், சொத்துக்களையும், மதிப்பையும் கொடுத்திருக்கிறார்; அதினால் அவன் இருதயம் ஆசைப்படும் எதையும் குறைவில்லாமல் பெற்றிருக்கிறான். ஆனால் அவைகளை அனுபவிக்க இறைவன் அவனுக்கு இடம் கொடுக்கிறதில்லை. பதிலாக வேறொருவன் அவற்றை அனுபவிக்கிறான். இதுவும் அர்த்தமற்றதும், கொடுமையான தீங்குமாய் இருக்கிறது. பிரச 5:19சங் 17:14சங் 73:71 இராஜா 3:13புலம் 5:2யோபு 21:9-15தானி 5:18லூக் 12:19-20
ஒரு மனிதனுக்கு நூறு பிள்ளைகளும் நீடித்த வாழ்வும் இருக்கலாம்; எவ்வளவு காலம் அவன் வாழ்ந்தாலும் அவன் தனது செல்வச் செழிப்பை அனுபவியாமலும், செத்தபின் முறையான நல்லடக்கம் அவனுக்கு நடைபெறாமலும் போனால், அவனைவிட கருசிதைந்த பிண்டமே மேலானது என்றே நான் சொல்வேன். யோபு 3:162இராஜா 9:35பிரச 4:3எரே 22:19ஆதி 47:9ஏசா 14:19-201 நாளாக 28:51 சாமு 2:20-21 அது அர்த்தமற்றதாகவே வந்து, இருளில் மறைகிறது. இருளிலேயே அதின் பெயர் மூடப்பட்டிருக்கிறது. சங் 109:13 அக்குழந்தை சூரியனைக் காணாமலும், ஒன்றையும் அறியாமலும் இருந்தபோதுங்கூட, இந்த மனிதனைவிட அது அதிக இளைப்பாறுதலை உடையதாயிருக்கிறது. யோபு 14:1யோபு 3:10-13சங் 58:8சங் 90:7-9 அந்த மனிதன் இரண்டு முறைக்கு மேலாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும், தனது செல்வச் செழிப்பை அவன் அனுபவிக்கவில்லையே. அனைவரும் ஒரே இடத்திற்கு அல்லவோ போகிறார்கள். பிரச 3:20எபி 9:27யோபு 30:23பிரச 12:7பிரச 6:3ஆதி 5:23-24ஆதி 5:5ஏசா 65:20
மனிதனுடைய எல்லா உழைப்பும் அவனுடைய வாய்க்காகத்தானே. யோவா 6:27நீதி 16:261 தீமோ 6:6-8மத் 6:25பிரச 5:10பிரச 6:3லூக் 12:19ஆதி 3:17-19
ஆனாலும் அவனுடைய பசியோ ஒருபோதும் தீருவதில்லை.
ஒரு மூடனைவிட, ஞானமுள்ளவன் எதில் உயர்ந்தவன்? நீதி 19:1பிரச 2:14-161 தீமோ 6:17பிரச 5:11ஆதி 17:1லூக் 1:6சங் 101:2சங் 116:9
மற்றவர்களுக்கு முன்பாக எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என அறிவதினால் ஒரு ஏழைக்குக் கிடைக்கும் இலாபம் என்ன?
ஆசைக்கு இடங்கொடுத்து அலைவதைவிட, பிரச 1:14யோபு 31:7பிரச 1:2பிரச 11:9பிரச 2:11பிரச 3:12-13பிரச 4:4பிரச 5:18
கண்கள் கண்டதில் திருப்தியடைவதே நல்லது.
இதுவும் அர்த்தமற்றதே,
காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.
இருக்கிறவையெல்லாம் முன்னமே பெயரிடப்பட்டிருக்கின்றன; யோபு 9:32ஏசா 45:9-10யோபு 40:2பிரச 3:15ஆதி 3:17-19எரே 49:19யோபு 33:13ரோம 9:19-20
மனிதன் எப்படிப்பட்டவன் என்பதும் அறியப்பட்டேயிருக்கிறது.
தன்னிலும் வலிமையுள்ளவரோடு
ஒரு மனிதனாலும் வாக்குவாதம் பண்ண முடியாது.
வார்த்தைகள் கூடும்போது, பிரச 4:16பிரச 5:7பிரச 1:17-18பிரச 1:6-9பிரச 2:3-11பிரச 3:19பிரச 4:1-4பிரச 4:8
அர்த்தம் குறையும்.
இதினால் யாராவது பயனடைந்ததுண்டோ?
ஒரு மனிதன் தனது குறுகியதும், அர்த்தமற்றதுமான வாழ்நாளில், ஒரு நிழலைப்போல் கடந்துபோகிறான்; அந்நாட்களில் எது வாழ்க்கையில் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் செத்துப்போனபின் சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என அவனுக்கு யாரால் கூறமுடியும்? யாக் 4:14யோபு 14:2பிரச 3:22புலம் 3:24-27சங் 144:4சங் 39:5-61 நாளாக 29:15பிரச 8:13