அப்போஸ்தலருடைய நடபடிகள் 5

Acts 5

அனனியாவும் சப்பீராளும்

அனனியா என்னும் பெயருடைய ஒருவன், தனது மனைவி சப்பீராளுடன் சேர்ந்து, ஒரு சிறு நிலத்தை விற்றான். லேவி 10:1-32 தீமோ 2:20மத் 13:47-48யோவா 6:37யோசு 6:1 விற்ற பணத்தில் ஒரு பகுதியைத் தனது மனைவி அறியத் தனக்கென வைத்துக்கொண்டு, மறு பகுதியைக் கொண்டுவந்து முழுவதையும் கொடுப்பதுபோல, அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான். அப் 4:372 பேது 2:14-152இராஜா 5:21-25அப் 4:34-35அப் 5:3யோவா 12:6யோசு 7:11-12மல்கி 1:14

அப்பொழுது பேதுரு அவனிடம், “அனனியாவே, பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொல்லும்படி, சாத்தான் உனது இருதயத்தை நிரப்பியது எப்படி? நிலத்தை விற்றுப் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு பகுதியை நீ உனக்கென வைத்துக்கொண்டாயே. எரே 23:24ஏசா 29:151 பேது 5:8அப் 5:9யோவா 13:2யோவா 13:27பிரச 5:4எபே 6:11-16 அதை விற்குமுன்பு அது உனக்குச் சொந்தமாக இருக்கவில்லையோ? அது விற்கப்பட்ட பின்பும், அந்தப் பணம் உன்னிடம் இருக்கவில்லையோ? இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய நீ ஏன் நினைத்தாய்? நீ மனிதரிடம் பொய் சொல்லவில்லை, இறைவனிடமே பொய் சொன்னாய்” என்றான். அப் 5:31 நாளாக 29:31 தெச 4:82இராஜா 5:25-27யோசு 7:25-26லூக் 10:16அப் 5:9அப் 8:21-22

அனனியா இதைக் கேட்டபோது, அவன் கீழே விழுந்து இறந்துப்போனான். நடந்ததைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகவும் பயமுண்டாயிற்று. அப் 5:10-11அப் 2:43அப் 5:13எண் 16:26-34வெளி 11:13வெளி 11:51 நாளாக 13:121 நாளாக 15:13 அப்பொழுது இளைஞர் முன்வந்து, அவனது உடலைத் துணியில் சுற்றி, தூக்கிக்கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள். யோவா 19:402 சாமு 18:17உபா 21:23லேவி 10:4-6

கிட்டத்தட்ட மூன்றுமணி நேரத்திற்குப்பின், நடந்தது என்ன என்று அறியாமல், அவனுடைய மனைவி உள்ளே வந்தாள். பேதுரு அவளிடம், “நிலத்தை விற்று நீயும் அனனியாவும் பெற்றுக்கொண்ட பணம் இவ்வளவுதானா?” என்று கேட்டான். அப் 5:2

அதற்கு அவள், “ஆம், இவ்வளவுதான் அதன் விலை” என்றாள்.

அப்பொழுது பேதுரு அவளிடம், “கர்த்தருடைய ஆவியானவரைச் சோதிப்பதற்கு எப்படி நீயும் உடன்பட்டாய்? இதோ, உனது கணவனை அடக்கம் செய்தவர்கள் வாசற்படியிலே நிற்கின்றனர். அவர்கள் உன்னையும் சுமந்துகொண்டு போவார்கள்” என்றான். 1 கொரி 10:9அப் 5:3-4சங் 95:8-11சங் 78:56அப் 15:10சங் 78:18-20சங் 78:40-412இராஜா 6:32

அந்த வினாடியே அவளும் பேதுருவின் பாதத்தில் விழுந்து செத்துப்போனாள். அப்பொழுது அந்த இளைஞர் உள்ளே வந்து, அவள் இறந்துகிடப்பதைக் கண்டு, அவளையும் வெளியே தூக்கிக்கொண்டுபோய் அவளது கணவனுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்தார்கள். அப் 5:5 திருச்சபையோருக்கும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயம் ஏற்பட்டது. அப் 5:51 கொரி 10:11-12அப் 19:17எபி 4:1பிலி 2:12எபி 12:15சங் 89:7எபி 12:28

அப்போஸ்தலர் அநேகரைச் சுகப்படுத்தல்

அப்போஸ்தலர் அநேக அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் மக்களிடையே செய்தார்கள். விசுவாசிகள் அனைவரும் சாலொமோனுடைய மண்டபத்தில் கூட்டம் கூடுவது வழக்கமாயிருந்தது. அப் 19:112 கொரி 12:12எபி 2:4அப் 14:3அப் 2:42-43ரோம 15:19அப் 3:11யோவா 10:23 மக்கள் அவர்களை உயர்வாய் மதித்தபோதிலும், வேறு யாரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. அப் 2:47அப் 4:21அப் 19:17யோவா 12:42யோவா 19:381 இராஜா 17:181 சாமு 16:4-52 பேது 2:20-22 ஆனால் அதிகமதிகமாய் ஆண்களும் பெண்களும் கர்த்தர்மேல் விசுவாசம் வைத்து, அவர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அப் 2:47அப் 4:4ஏசா 55:11-13அப் 2:41அப் 6:7அப் 9:31அப் 9:35அப் 9:42 அதன் பலனாக, மக்கள் தங்களுள் வியாதிப்பட்டிருந்தவர்களை வீதிகளுக்குக் கொண்டுவந்து, அவர்களைக் கட்டில்கள்மேலும் பாய்கள்மேலும் கிடத்தினார்கள். பேதுரு நடந்துபோகையில், அவனுடைய நிழலாகிலும் படும்படிக்கே இப்படிச் செய்தார்கள். அப் 19:11-12மத் 14:36யோவா 14:12மத் 9:21 எருசலேமைச் சுற்றியிருந்த பட்டணங்களிலிருந்துங்கூட, மக்கள் பெருங்கூட்டமாய் வந்தார்கள். அவர்கள் தங்களில் வியாதிப்பட்டவர்களையும் தீய ஆவியினால் துன்புறுத்தப்பட்டவர்களையும் கொண்டுவந்தார்கள்; அவர்கள் அனைவரும் சுகமடைந்தார்கள். மாற் 16:17-18மாற் 2:3-4அப் 4:30யாக் 5:16யோவா 14:12லூக் 5:17லூக் 9:11மத் 15:30-31

அப்போஸ்தலர் துன்புறுத்தப்படுதல்

அப்பொழுது பிரதான ஆசாரியனும், சதுசேயர் குழுவைச் சேர்ந்த அவனுடைய கூட்டாளிகள் அனைவரும் பொறாமையால் நிறைந்து, அப் 13:45அப் 17:5அப் 7:91 பேது 2:11 சாமு 18:12-16பிரச 4:4யோவா 11:47-49யோவா 12:10 அப்போஸ்தலரைக் கைதுசெய்து, பொதுச் சிறைச்சாலையில் அடைத்தார்கள். அப் 4:32 கொரி 11:23லூக் 21:12அப் 12:5-7அப் 16:23-27அப் 8:3எபி 11:36வெளி 2:10 ஆனால் அந்த இரவில், கர்த்தருடைய தூதன் அந்தச் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்தான். அப் 16:26சங் 34:7அப் 12:7-11அப் 27:23அப் 8:26சங் 105:17-20ஏசா 61:1மத் 1:20 அவன் அவர்களிடம், “நீங்கள் போய் ஆலய முற்றத்தில் நின்று, இந்த ஜீவ வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள்” என்றான். யோவா 6:63யோவா 6:681 யோவா 5:11-121 யோவா 1:1-3மத் 21:23யோவா 12:50யோவா 17:3அப் 11:14

அதிகாலையிலேயே, அவர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே, ஆலய முற்றத்திற்குள் போய் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்கள். யோவா 8:2அப் 12:18-19அப் 22:15அப் 22:2-3அப் 4:5-7அப் 5:17அப் 5:24-25அப் 5:27

பிரதான ஆசாரியனும் அவனுடன் இருந்தவர்களும் அங்கே வந்து சேர்ந்தபோது, அவர்கள் ஆலோசனைச் சங்கத்தை, அதாவது இஸ்ரயேல் மக்களின் எல்லா யூதரின் தலைவர்களையும் ஒன்றுகூட்டி, சிறையிலிருந்து அப்போஸ்தலரைக் கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பினார்கள். ஆனால் ஆலயக்காவலர் அங்கே போனபோது, சிறைச்சாலையில் அப்போஸ்தலரைக் காணவில்லை. எனவே, அவர்கள் திரும்பிவந்து அதை அறிவித்தார்கள். திரும்பி வந்தவர்கள் அவர்களிடம், “சிறைச்சாலை பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருப்பதையும் சிறைக்காவலர் வாசல்களில் நின்று கொண்டிருப்பதையும் நாங்கள் கண்டோம். ஆனால் சிறைச்சாலைக் கதவுகளை நாங்கள் திறந்தபோது, உள்ளே நாங்கள் ஒருவரையும் காணவில்லை” என்றார்கள். சங் 2:4சங் 33:10அப் 5:19தானி 3:11-25தானி 6:22-24யோவா 8:59புலம் 3:37புலம் 3:55-58 ஆலயக்காவலர் தலைவனும் தலைமை ஆசாரியர்களும் இந்த செய்தியைக் கேட்டபோது, அதனால் என்ன நடக்கப்போகிறதோ என நினைத்து, மனக்குழப்பமடைந்தார்கள். அப் 4:1அப் 5:26அப் 2:12அப் 4:16-17அப் 4:21தானி 2:34-35தானி 2:44-45ஏசா 53:1-2

அப்பொழுது ஒருவன் வந்து, “இதோ, நீங்கள் சிறையில் அடைத்தவர்கள் ஆலய முற்றத்தில் நின்று மக்களுக்குப் போதிக்கிறார்கள்” என்று அறிவித்தான். அப்பொழுது, ஆலயக்காவலர் தலைவன் தனது ஆலயக்காவலருடன் போய், அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்தான். ஆனால், அவர்கள்மேல் வன்முறையைக் கையாளவில்லை. ஏனெனில் மக்கள் தங்கள்மேல் கல்லெறிவார்கள் என்று பயந்திருந்தார்கள். அப் 5:13அப் 4:21அப் 5:24லூக் 20:19லூக் 20:6லூக் 22:2மத் 14:5மத் 21:26

அவர்கள் அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்தின் முன்நிறுத்தினார்கள். பிரதான ஆசாரியன் கேள்விகளைக் கேட்டான். மத் 5:22அப் 22:30அப் 4:7அப் 6:12லூக் 22:66 அவன் அவர்களிடம், “இந்தப் பெயரால் நீங்கள் போதிக்கக் கூடாது என்று நாங்கள் உங்களுக்குக் கடுமையாக உத்தரவிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் உங்கள் போதனையினாலே எருசலேமை நிரப்பிவிட்டீர்கள். அந்த மனிதனைக் கொன்ற இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவே நீங்கள் உறுதிகொண்டிருக்கிறீர்கள்” என்றான். மத் 27:25அப் 4:18-21அப் 7:52அப் 4:10-111 தெச 2:15-16எரே 26:15மத் 21:441 இராஜா 18:17-18

ஆனால், பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் அவர்களிடம்: “மனிதனைவிட நாங்கள் இறைவனுக்கே கீழ்ப்படிய வேண்டும்! அப் 4:191 சாமு 15:24மாற் 7:7-9ஆதி 3:17வெளி 14:8-12 நீங்கள் மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்த இயேசுவை, நம்முடைய தந்தையரின் இறைவன் மரித்தோரிலிருந்து எழும்பச்செய்தார். கலா 3:131 பேது 2:24அப் 10:39அப் 13:28-29அப் 3:13-15அப் 4:10-11அப் 2:22-241 நாளாக 12:17 இறைவனோ இயேசுவை அதிபதியாகவும், இரட்சகராகவும், தனது வலதுபக்கத்தில் இருக்கும்படி உயர்த்தி, இவர் இஸ்ரயேலுக்கு மனந்திரும்புதலையும், பாவங்களுக்கான மன்னிப்பையும் கொடுக்கும்படி செய்தார். லூக் 24:47அப் 2:33எபி 2:10அப் 11:18லூக் 2:111 யோவா 4:14வெளி 1:5எபி 12:2 இவற்றிற்கு நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு, இறைவன் கொடுத்திருக்கும் பரிசுத்த ஆவியானவரும் சாட்சியாய் இருக்கிறார்” என்றார்கள். யோவா 15:26-27எபி 2:3-4அப் 1:8லூக் 24:47-481 பேது 1:12அப் 10:39-41அப் 13:31அப் 5:29

அவர்கள் இதைக் கேட்டபோது, கடுங்கோபமடைந்து இவர்களைக் கொல்ல யோசித்தார்கள். அப் 7:54அப் 2:37லூக் 4:28-29யோவா 16:2மத் 24:9ஆதி 4:5-8லூக் 11:50-54மத் 10:21 ஆனால் அந்த ஆலோசனைச் சங்கத்தில், கமாலியேல் என்னும் பெயருடைய ஒரு பரிசேயன் இருந்தான். அவன் ஒரு மோசேயின் சட்ட ஆசிரியனாகவும், எல்லா மக்களுடைய மதிப்பைப் பெற்றவனாகவும் இருந்தான்; அவன் எழுந்து நின்று, சிறிது நேரத்திற்கு அப்போஸ்தலரை வெளியே கொண்டுபோகும்படி உத்தரவிட்டான். அப் 22:3லூக் 2:46லூக் 5:17அப் 23:7-9யோவா 7:50-53சங் 76:10அப் 4:15 பின்பு கமாலியேல் அங்கிருந்தவர்களைப் பார்த்து: “இஸ்ரயேலரே, இவர்களுக்கு நீங்கள் செய்யப்போவதைக் கவனமாய் எண்ணிப்பாருங்கள். அப் 19:36அப் 22:26எரே 26:19மத் 27:19 ஏனெனில் சிலகாலத்திற்கு முன்பு, தெயுதாஸ் என்பவன் முன்வந்து, தன்னை ஒரு பெரிய ஆளாக எல்லோருக்கும் காண்பித்தான், கிட்டத்தட்ட நானூறுபேர் அவனுடன் சேர்ந்துகொண்டார்கள். ஆனால் அவன் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப்போனார்கள். அந்தக் கூட்டத்தினர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். அப் 8:92 பேது 2:22 தெச 2:3-7அப் 21:38கலா 2:6கலா 6:3யூதா 1:16மத் 24:24 அவனுக்குப்பின்பு, குடிமதிப்பு எடுக்கப்பட்ட காலத்தில் கலிலேயனான யூதாஸ் என்பவன் முன்வந்து, அவனும் ஒரு மக்கள் குழுவை கலகத்திற்கு வழிநடத்தினான். ஆனால் அவனும் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றியவர்களும் சிதறடிக்கப்பட்டார்கள். லூக் 2:1-2யோபு 20:5-9லூக் 13:1-2மத் 26:52சங் 7:14-15சங் 9:15-16 எனவே, இப்பொழுது இந்த விஷயத்திலும்கூட, நான் கூறும் ஆலோசனை இதுவே: இவர்களை விட்டுவிடுங்கள்! இவர்கள் போகட்டும்! ஏனெனில் இந்தத் திட்டமும், இந்த செயலும் மனிதரிடமிருந்து வந்ததானால், இது இல்லாமற்போகும். மத் 15:13புலம் 3:37ஏசா 8:9-10யோபு 5:12-14ஏசா 7:5-7நீதி 21:30சங் 33:10-111 கொரி 1:26-28 ஆனால் இது இறைவனிடமிருந்து வந்ததானால், உங்களால் இவர்களை நிறுத்தமுடியாது; அப்படி முயன்றால், நீங்கள் இறைவனுக்கு விரோதமாக யுத்தம் செய்கிறவர்களாய் இருப்பீர்களே” என்றான். நீதி 21:30ஏசா 46:10மத் 16:181 கொரி 1:25அப் 11:17அப் 7:51அப் 6:10அப் 9:5

அங்கிருந்தவர்கள் கமாலியேல் சொன்னதற்கு இணங்கினார்கள். அப்பொழுது அவர்கள் அப்போஸ்தலரை உள்ளே கூப்பிட்டு, அவர்களைச் சவுக்கினால் அடித்தார்கள். பின்பு அவர்கள், இயேசுவின் பெயரினால் பேசக்கூடாது என்று கட்டளையிட்டு, அவர்களைப் போகவிட்டார்கள். மத் 10:172 கொரி 11:24அப் 4:17-21அப் 5:28யோவா 19:1-4மாற் 13:9நீதி 12:10ஆமோ 2:12

அப்போஸ்தலர் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் போனபின், இயேசுவின் பெயருக்காக தாங்கள் அவமானப்பட்டுத் துன்பம் அடைவதற்குத் தகுந்தவர்களாக கருதப்பட்டதால், பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். யாக் 1:21 பேது 4:13-16லூக் 6:22பிலி 1:29யோவா 15:21மத் 5:10-122 கொரி 12:10ஏசா 66:5 ஒவ்வொரு நாளும் அவர்கள் ஆலய முற்றத்திலும், வீடுகள்தோறும் இடைவிடாது போதித்து, இயேசுவே கிறிஸ்து என்று நற்செய்தியை அறிவித்துவந்தார்கள். அப் 2:46அப் 20:20லூக் 21:37அப் 8:35அப் 9:202 தீமோ 4:2அப் 17:3ரோம 1:15-16