உதவி ஊழியர் நியமிக்கப்படுதல்
அந்நாட்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகியபோது, அவர்களில் கிரேக்க மொழி பேசும் யூதர்கள், எபிரெய மொழி பேசும் யூதருக்கு எதிராக முறையீடு செய்தார்கள். ஏனெனில், தங்களுடைய விதவைகள் அன்றாட உணவுப் பகிரும்போது, அலட்சியம் பண்ணப்படுவதாக அவர்கள் கூறினார்கள். அப் 2:41அப் 4:35யாக் 5:9அப் 2:47அப் 6:7அப் 9:39எபி 13:1அப் 11:20 அப்பொழுது பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் எல்லா சீடர்களையும் ஒன்றாய்க் கூட்டி, “நாம் இறைவனுடைய வார்த்தையை அறிவிக்கும் ஊழியத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தாமல், சாப்பாட்டுப் பந்தியில் பணிசெய்வது சரியானது அல்ல. உபா 1:9-14யாத் 18:17-262 தீமோ 2:4நெகே 6:3எண் 11:11-13அப் 21:22அப் 25:27அப் 4:19 எனவே பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் இருந்து ஏழுபேரைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் ஆவியானவரினாலும், ஞானத்தினாலும் நிறைந்தவர்களென நற்சான்று பெற்றவர்களாய் இருக்கவேண்டும். நாங்கள் இப்பொறுப்பை அவர்களிடம் ஒப்படைப்போம். 1 தீமோ 3:7-15உபா 1:13யாக் 3:17-181 தீமோ 5:10எண் 27:18-19அப் 13:2-33 யோவா 1:12ஆதி 41:38-39 நாங்களோ மன்றாடுவதற்கும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியத்தைச் செய்வதற்கும் எங்கள் முழு நேரத்தையும் செலுத்துவோம்” என்றார்கள். அப் 1:141 தீமோ 4:13-16பிலி 1:9-11அப் 2:422 தீமோ 4:2அப் 13:2-3கொலோ 1:9-13எபே 3:14-21
அவர்கள் சொன்னது அங்கு கூடியிருந்த அனைவருக்கும் திருப்தியளித்தது. எனவே அவர்கள் விசுவாசத்திலும், பரிசுத்த ஆவியானவரிலும் நிறைந்தவனான ஸ்தேவானைத் தெரிந்துகொண்டார்கள்; அவனுடன் பிலிப்பு, பிரொகோர், நிக்கானோ, தீமோன், பர்மெனா ஆகியோரையும், யூத விசுவாசத்தைப் பின்பற்றுபவனாயிருந்த அந்தியோகியனான நிக்கொலாவையும் தெரிந்துகொண்டார்கள். அப் 11:24அப் 21:8அப் 8:5-40அப் 6:3அப் 6:8அப் 7:1அப் 11:19அப் 13:1 அவர்கள் இவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். அப்போஸ்தலர் இவர்களுக்காக மன்றாடி, இவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள். 2 தீமோ 1:6எண் 8:10அப் 1:241 தீமோ 4:14அப் 8:17அப் 13:3அப் 9:171 தீமோ 5:22
இறைவனுடைய வார்த்தை தொடர்ந்து பரவியது. சீடருடைய தொகையும் எருசலேமில் வெகுவாய்ப் பெருகியது, அநேக ஆசாரியர்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள். அப் 19:20அப் 12:24கொலோ 1:6எபி 5:9ரோம 16:26அப் 14:22யோவா 12:42ரோம 1:5
ஸ்தேவான் கைதுசெய்யப்படுதல்
இறைவனின் கிருபையும் வல்லமையும் நிறைந்த ஸ்தேவான், மக்கள் மத்தியில் பெரிதான அதிசயங்களையும் அற்புத அடையாளங்களையும் செய்தான். அப் 4:29-30அப் 6:5அப் 7:551 தீமோ 3:13அப் 6:10அப் 2:17-18அப் 6:15அப் 6:3 ஆனால், சுதந்திரம் பெற்றவர்கள் என அழைக்கப்பட்ட யூத ஜெப ஆலயத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. அவர்கள் சிரேனே, அலெக்சந்திரியா, சிலிசியாவின் மாகாணங்கள், ஆசியா ஆகிய இடங்களைச் சேர்ந்த யூதர்களாய் இருந்தார்கள். அவர்கள் ஸ்தேவானுடன் விவாதம் செய்யத் தொடங்கினார்கள். அப் 15:23அப் 15:41அப் 22:3அப் 23:34மத் 27:32அப் 16:6அப் 18:24அப் 19:10 ஆனால், அவனிடமிருந்த ஞானத்தின் காரணமாகவும், அவன் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசியதினாலும் அவர்களால் அவனை எதிர்த்துநிற்க முடியாமல் போயிற்று. லூக் 21:151 கொரி 2:4மத் 10:19-20யோவா 7:46லூக் 12:11-12யோபு 32:8யாத் 4:12எசேக் 3:27
எனவே அவர்கள் இரகசியமாக சிலரைத் தூண்டிவிட்டு, “இவன் மோசேக்கும், இறைவனுக்கும் விரோதமாக அவர்களை நிந்தித்துப் பேசியதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லச் சொன்னார்கள். மத் 26:59-601 இராஜா 21:10-131 தீமோ 1:13அப் 15:21அப் 18:6அப் 21:20-22அப் 21:28அப் 23:12-15
இப்படி அவர்கள் மக்களையும், யூதரின் தலைவர்களையும், மோசேயின் சட்ட ஆசிரியர்களையும், ஸ்தேவானுக்கு எதிராகக் தூண்டிவிட்டார்கள். அதற்குப் பின்பு அவர்கள் திடீரென வந்து, ஸ்தேவானைப் பிடித்து ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக அவனைக் கொண்டுவந்தார்கள். நீதி 15:18அப் 14:2மத் 26:57அப் 13:50அப் 16:19-21அப் 17:13அப் 17:5-6அப் 21:27 அவர்கள் பொய்ச்சாட்சிகளை நிறுத்தினார்கள். அவர்கள், “இவன், இந்தப் பரிசுத்த இடத்திற்கும், மோசேயின் சட்டத்திற்கும் விரோதமாய்ப் பேசுகிறதை நிறுத்துகிறதில்லை. அப் 6:11அப் 21:28அப் 25:8அப் 7:58மத் 24:15சங் 27:12சங் 35:11சங் 56:5 நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இந்த இடத்தை அழிப்பார் என்றும், மோசே நமக்குக் கையளித்த நடைமுறைகளை மாற்றுவார் என்றும் இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்றார்கள். அப் 21:21தானி 9:26எபி 12:26-28அப் 15:1அப் 28:17கலா 3:19கலா 3:23கலா 4:3-5
அந்த நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் ஸ்தேவான்மேல் கண்ணோக்கமாயிருக்கையில் அவனுடைய முகம் இறைத்தூதனுடைய முகத்தைப்போல் பிரகாசிப்பதை அவர்கள் கண்டார்கள். மத் 13:43பிரச 8:1யாத் 34:29-35மத் 17:22 கொரி 3:182 கொரி 3:7-8மத் 5:22