சங்கீதங்கள் 42

Psalms 42
சங்கீதம் 42

பகுதி ii

கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.

மான் நீரோடைகளைத் தேடி ஏங்குவது போல், சங் 63:1-2சங் 143:6-7சங் 119:131ஏசா 26:8-9சங் 84:1-2சங் 48:1சங் 46:1சங் 85:1

இறைவனே என் ஆத்துமா உம்மைத் தேடி ஏங்குகிறது.

என் ஆத்துமா இறைவனுக்காக, உயிருள்ள இறைவனுக்காக தாகம் கொள்கிறது; சங் 63:1சங் 84:10யோவா 7:37சங் 27:4வெளி 22:1சங் 36:8-9சங் 84:2சங் 84:4

நான் எப்பொழுது இறைவனுடைய சமுகத்தில் வந்து நிற்பேன்?

மனிதர்களோ நாள்முழுதும் என்னைப் பார்த்து, சங் 79:10சங் 115:2யோவே 2:17சங் 42:10சங் 80:5சங் 102:9மீகா 7:10சங் 79:12

“உன் இறைவன் எங்கே?” என்று கேட்பதால்,

இரவும் பகலும்

என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.

என் ஆத்துமா எனக்குள் உருகுகையில் ஏசா 30:291 சாமு 1:15-16சங் 122:1சங் 62:8யோபு 29:2நாகூ 1:15சங் 100:4சங் 55:14

இவைகள் என் நினைவுக்கு வருகின்றன:

முந்திய நாட்களில் நான் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து,

இறைவனின் வீட்டிற்கு அவர்களோடு ஊர்வலமாய் நடந்து சென்றேன்;

பண்டிகை கொண்டாடும் மக்கள் கூட்டத்தின் நடுவே,

மகிழ்ச்சியின் சத்தத்தோடும் துதியின் சத்தத்தோடும் நடந்து சென்றேன்.

என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? சங் 37:7எபி 10:36-37சங் 61:2மத் 1:23சங் 27:13-14புலம் 3:24-26சங் 56:3சங் 43:5

ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்?

இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு;

நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக

இன்னும் அவரைத் துதிப்பேன்.

என் இறைவனே, என் ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகிறது; சங் 61:2யோனா 2:7உபா 3:8-9சங் 43:42 சாமு 17:22உபா 4:47-48மத் 27:46சங் 22:1

அதினால் நான் எர்மோன் மலைகள் இருக்கும்

யோர்தான் நதி தொடங்கும் நாட்டிலிருந்தும்,

மீசார் மலையிலிருந்தும் உம்மை நினைவுகூருவேன்.

உமது அருவிகளின் இரைச்சலினால் யோனா 2:3சங் 69:14-15சங் 88:7புலம் 3:53-55எசேக் 7:26எரே 4:20யோபு 1:14-19சங் 88:15-17

ஆழம் ஆழத்தைக் கூப்பிடுகிறது;

உம்முடைய எல்லா அலைகளும்,

பேரலைகளும் எனக்கு மேலாக மோதிச் செல்கின்றன.

பகலில் யெகோவா தமது உடன்படிக்கையின் அன்பை எனக்குக் கொடுக்கிறார்; சங் 16:7சங் 149:5சங் 63:6யோபு 35:10உபா 28:8அப் 16:25கொலோ 3:3சங் 133:3

இரவிலோ, அவருடைய பாடல் என்னோடு இருக்கிறது;

என் வாழ்வின் இறைவனை நோக்கிய மன்றாட்டாகவே அது இருக்கிறது.

நான் என் கன்மலையாகிய இறைவனிடம், சங் 38:6சங் 18:2சங் 43:2ஏசா 40:27புலம் 5:1-16சங் 28:1சங் 44:23-24சங் 62:2

“நீர் ஏன் என்னை மறந்து விட்டீர்?

பகைவனால் ஒடுக்கப்பட்டு

நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்?” என்கிறேன்.

நாளெல்லாம் என் பகைவர்கள் என்னைப் பார்த்து, சங் 42:3யோவே 2:17லூக் 2:35நீதி 12:18மீகா 7:10

“உன் இறைவன் எங்கே?”

என்று என்னைப் நிந்திப்பதால்,

என் எலும்புகள் சாவுக்கேதுவான வேதனையை அடைகின்றன.

என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? சங் 42:5எரே 30:17எரே 33:6சங் 43:5மத் 9:12

நீ ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்?

இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு;

நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக

இன்னும் அவரைத் துதிப்பேன்.