சங்கீதங்கள் 43

Psalms 43
சங்கீதம் 43

இறைவனே, என் நீதியை மெய்ப்பித்துக் காட்டும்; சங் 35:1சங் 26:1சங் 7:81 சாமு 24:15சங் 35:24சங் 5:6சங் 71:41 பேது 2:23

இறை பக்தியற்ற நாட்டினருக்கு விரோதமாய்

எனக்காக வழக்காடும்,

வஞ்சகமும் கொடுமையுமான மனிதரிடமிருந்து

என்னைத் தப்புவியும்.

ஏனெனில் நீரே என் இறைவன், என் கோட்டை. சங் 28:7சங் 42:9எபே 6:10ஏசா 40:31சங் 94:14சங் 44:91 நாளாக 28:9யாத் 15:2

நீர் ஏன் என்னைப் புறக்கணித்துவிட்டீர்?

பகைவனால் ஒடுக்கப்பட்டு,

நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்?

உமது ஒளியையும் உமது உண்மையையும் அனுப்பும்; சங் 36:9நீதி 3:5-6யோவா 1:4சங் 97:11சங் 143:10சங் 119:105சங் 84:1சங் 25:4-5

அவை எனக்கு வழிகாட்டட்டும்.

நீர் குடியிருக்கும் இடமான

உமது பரிசுத்த மலைக்கு அவை என்னைக் கொண்டுவரட்டும்.

அப்பொழுது இறைவனின் பலிபீடத்தண்டைக்குப் போவேன்; ஏசா 61:10ஆப 3:17-18சங் 66:13-15சங் 57:8சங் 116:12-19சங் 71:22-23சங் 33:2சங் 42:6

என் மகிழ்ச்சியும் என் களிப்புமான இறைவனிடத்திற்குப் போவேன்.

இறைவனே, என் இறைவனே,

யாழ் இசைத்து உம்மைத் துதிப்பேன்.

என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? சங் 42:5சங் 42:11

ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்?

இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு;

நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக

இன்னும் அவரைத் துதிப்பேன்.