யோபு 25

Job 25

பில்தாத் பேசுதல்

அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:

“ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது; கொலோ 1:20வெளி 6:161 நாளாக 29:11-122 கொரி 5:18-21தானி 4:34-37எபே 1:20-21எபே 2:16-17ஏசா 57:19

அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர்.

அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ? யாக் 1:17மத் 5:45தானி 7:10ஆதி 1:14-16ஆதி 1:3-5ஏசா 40:26யோவா 1:4யோவா 1:9

அவருடைய ஒளி யார்மேல் உதிக்காமல் இருக்கிறது?

அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி? ரோம 5:1சங் 130:3யோபு 15:14-16யோபு 4:17-19யோபு 9:2சங் 143:2சங் 51:5வெளி 1:5

பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி?

அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும், ஏசா 60:19-20யோபு 15:152 கொரி 3:10ஏசா 24:23யோபு 31:26

நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது,

பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும் ஏசா 41:14சங் 22:6ஆதி 18:27யோபு 4:19யோபு 7:17

மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!”