யெகோவா இஸ்ரயேலில் அன்பாயிருத்தல்
“இஸ்ரயேல் சிறுவனாக இருந்தபோதே, நான் அவனை நேசித்தேன்; மத் 2:15யாத் 4:22ஓசி 13:4ஓசி 2:15எரே 2:2உபா 7:7எசேக் 16:6ஓசி 12:13
எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்.
ஆனால், எவ்வளவு அதிகமாய் நான் அவர்களை அழைத்தேனோ, ஓசி 2:13எரே 18:15ஏசா 65:72இராஜா 17:13-16அப் 7:51ஓசி 11:7ஓசி 13:1-2யோவா 3:19
அவ்வளவு அதிகமாய் அவர்கள் என்னைவிட்டுத் தூரமானார்கள்.
அவர்கள் பாகால் தெய்வங்களுக்குப் பலியிட்டு,
உருவச் சிலைகளுக்குத் தூபங்காட்டினார்கள்.
எப்பிராயீமைக் கைபிடித்து உபா 1:31யாத் 15:26எரே 30:17ஓசி 7:15அப் 13:18உபா 32:10-12உபா 8:2யாத் 23:25
நடக்கக் கற்றுக்கொடுத்தவர் நானே;
ஆனாலும், அவர்களைப் பராமரித்தவர் நானே
என்பதை அவர்கள் உணரவில்லை.
நான் அவர்களை அன்பின் பிணைப்பினாலும் யோவா 12:32லேவி 26:132 கொரி 5:14ஏசா 63:9எரே 31:2-32 சாமு 7:14ஓசி 2:8சங் 78:23-25
மனித தயவின் கயிறுகளினாலும் வழிநடத்தினேன்.
ஒரு சிறு குழந்தையை கன்னத்தில் தூக்கும் ஒருவரைப்போல இருந்தேன்,
அவர்களுடைய கழுத்திலிருந்த நுகத்தை அகற்றினேன்,
அவர்களுக்குக் குனிந்து உணவூட்டினேன்.
“ஆனால் அவர்கள் மனந்திரும்ப மறுக்கிறார்கள். ஓசி 7:16ஓசி 8:132இராஜா 17:13-14ஓசி 10:6ஓசி 9:32இராஜா 15:192இராஜா 15:292இராஜா 17:3-6
ஆகையால் அவர்கள் எகிப்திற்கு திரும்பிப் போகமாட்டார்களோ?
அவர்கள்மேல் அசீரியா ஆளுகை செய்யாதோ?
நிச்சயமாக அவர்களுடைய தீமையான திட்டங்களினால் ஓசி 13:16ஓசி 10:14ஓசி 10:6உபா 28:52உபா 32:25எசேக் 15:2-7எசேக் 20:47ஏசா 18:5
வாள் அவர்களுடைய பட்டணங்களுக்குள் பாய்ந்து,
வாசல் கதவுகளின் தாழ்ப்பாள்களை முறித்துப்போட்டு, அவர்களை அழிக்கும்.
என் மக்கள் என்னைவிட்டு விலகிப்போகத் தீர்மானித்திருக்கிறார்கள். எரே 8:5ஆமோ 5:14-15ஆமோ 5:4-6ஓசி 11:2ஓசி 14:4ஓசி 7:16எரே 3:11எரே 3:6-8
அவர்கள் என்னை உன்னதமானவர் எனக் கூப்பிட்டாலும்,
அவர்களை எவ்விதத்திலும் உயர்த்தமாட்டேன்.
“ஆனாலும் எப்பிராயீமே, எப்படி நான் உன்னைக் கைவிடுவேன்? எரே 31:20ஓசி 6:4மத் 23:37உபா 32:36உபா 29:23யூதா 1:72 சாமு 24:16ஆமோ 4:11
இஸ்ரயேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்?
நான் எப்படி உன்னை அத்மா பட்டணத்தைப்போல் அழிக்கமுடியும்?
நான் எப்படி உன்னை செபோயீமைப்போல் ஆக்கமுடியும்?
என் இருதயமோ எனக்குள் மாற்றமடைந்திருக்கிறது;
என் கருணை பொங்குகிறது.
ஆகவே எனது கடுங்கோபத்தை செயல்படுத்தமாட்டேன்; எண் 23:19ஏசா 55:8-9மீகா 7:18-20ஏசா 12:6எரே 30:11எசேக் 37:27-28மல்கி 3:6ஓசி 14:4
நான் திரும்பி எப்பிராயீமை அழிக்கமாட்டேன்.
ஏனெனில் எப்படியிருந்தும் உங்கள் மத்தியில் வாழ்கின்ற பரிசுத்தரான நான் மனிதனல்ல;
நான் இறைவன்.
எனவே நான் கடுங்கோபத்துடன் வரமாட்டேன்.
ஒருகாலத்தில் அவர்கள் யெகோவாவைப் பின்பற்றுவார்கள்; யோவே 3:16ஆமோ 1:2ஏசா 31:4எரே 25:30ஏசா 64:2எரே 31:92 பேது 2:10அப் 24:25
அவர் சிங்கத்தைப்போல் கர்ஜிப்பார்.
அவர் கர்ஜிக்கும்போது,
அவருடைய பிள்ளைகள் மேற்குத் திசையிலிருந்து நடுக்கத்துடன் வருவார்கள்.
எகிப்திலிருந்து பறவைகள் வருவதுபோலவும், ஏசா 11:11ஏசா 60:8சகரி 10:10ஆமோ 9:14-15ஓசி 7:11எசேக் 28:25-26ஒபதி 1:17எசேக் 36:33-34
அசீரியாவிலிருந்து புறாக்கள் வருவதுபோலவும்
அவர்கள் நடுக்கத்துடன் வருவார்கள்.
நான் அவர்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்துவேன்”
என யெகோவா அறிவிக்கிறார்.
இஸ்ரயேலின் பாவம்
எப்பிராயீமியர் பொய்களுடனும், 1 கொரி 6:22 நாளாக 29:1-32ஓசி 12:7ஏசா 29:13ஏசா 44:20வெளி 1:6வெளி 3:212இராஜா 18:4-7
இஸ்ரயேல் குடும்பம் வஞ்சனையுடனும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
யூதாவும் உண்மையுள்ள,
பரிசுத்தரான இறைவனுக்கு எதிராக அடங்காமல் எதிர்த்து நிற்கிறான்.