எருசலேம் ஒரு பயனற்ற திராட்சைகொடி
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன? ஓசி 10:1ஏசா 5:1-7சங் 80:8-16எரே 2:21யோவா 15:1-6லூக் 20:9-16உன்னத 2:15உன்னத 6:11 ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ? லூக் 14:34-35எரே 24:8மத் 5:13மாற் 9:50 அது எரிபொருளாக நெருப்பிலே போடப்பட்டு, அதன் இரு முனைகளும் எரிந்து நடுப்புறமும் கருகிப்போன பின் அது எதற்காவது பயன்படுமோ? யோவா 15:6ஏசா 27:11சங் 80:16ஆமோ 4:11எசேக் 19:14எபி 12:29எபி 6:8ஏசா 1:31 முழுமையாக இருக்கும்போதே அது ஒன்றுக்கும் உதவவில்லையே, நெருப்பு அதை எரித்து அது கருகிப்போன பின்னர் அது எதற்குத்தான் பயன்படப்போகிறது? எரே 3:16
“ஆதலால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. காட்டு மரங்களின் நடுவிலுள்ள திராட்சைக்கொடியின் தண்டை நான் நெருப்புக்கு எரிபொருளாக ஒதுக்கியதுபோலவே, எருசலேமில் வாழும் மக்களையும் நான் நடத்துவேன். அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள். எசேக் 15:2எசேக் 17:3-10ஏசா 5:1-6ஏசா 5:24-25எரே 21:7எரே 24:8-10எரே 25:18எரே 25:9-11 என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து வெளியேறினாலும், நெருப்பு தொடர்ந்து அவர்களைச் சுட்டெரிக்கும். இவ்வாறு நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். எசேக் 14:8ஆமோ 9:1-4ஏசா 24:18சங் 34:161 இராஜா 19:17எசேக் 6:7எரே 21:10லேவி 26:17 அவர்கள் எனக்கு உண்மையாய் இராதபடியினால், நான் நாட்டைப் பாழாய்ப் போகச்செய்வேன்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். எசேக் 6:142 நாளாக 36:14-16எசேக் 14:13-21எசேக் 17:20எசேக் 33:29ஏசா 24:3-12ஏசா 6:11எரே 25:10-11