தோழியர்
பெண்களுள் பேரழகியே, உன்னத 1:8உன்னத 5:9எரே 14:8ரூத் 2:12ஏசா 2:5ரூத் 1:16-17உன்னத 1:4உன்னத 2:2
உன் காதலர் எங்கே போய்விட்டார்?
உன் காதலர் எப்பக்கம் திரும்பிப்போனார்?
சொன்னால் உன்னோடு சேர்ந்து நாங்களும் அவரைத் தேடுவோம்.
காதலி
என் காதலர் தோட்டங்களில் மேய்வதற்கும், உன்னத 5:131 தெச 4:13-14எசேக் 34:23ஏசா 40:11ஏசா 57:1ஏசா 58:11ஏசா 61:11யோவா 14:3
லில்லிப் பூக்களைச் சேர்ப்பதற்கும்,
நறுமணச்செடிகளின் பாத்திகளுக்கும்
போயிருக்கிறார்.
நான் என் காதலருக்குரியவள், என் காதலர் என்னுடையவர்; உன்னத 2:16உன்னத 7:10எபி 8:10வெளி 21:2-4
அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார்.
காதலன்
என் அன்பே, நீ திர்சா பட்டணத்தைப்போல அழகானவள், உன்னத 6:10சங் 48:21 இராஜா 14:17புலம் 2:15சங் 50:2வெளி 21:2உன்னத 2:14உன்னத 4:7
எருசலேமைப்போல வசீகரமானவள்,
கொடிகள் ஏந்தும் படைகளைப்போல கம்பீரமானவள்.
உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு; யாத் 32:10ஆதி 32:26-28எரே 15:1மத் 15:27-28உன்னத 4:1-3
அவை என்னை மயக்குகின்றன.
உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும்
வெள்ளாட்டு மந்தையைப் போன்றது.
உனது பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு உன்னத 4:2மத் 21:19மத் 25:30
மந்தையைப்போல் இருக்கின்றன.
அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை,
அவற்றில் எதுவும் மலடாய் அல்ல.
உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் உன்னத 4:3
பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை.
அறுபது அரசிகளும், சங் 45:141 இராஜா 11:31 இராஜா 11:12 நாளாக 11:21சங் 45:9வெளி 7:9
எண்பது வைப்பாட்டிகளும்;
கணக்கிடமுடியாத கன்னிப்பெண்களும் இருக்கலாம்.
ஆனால் என் புறாவோ, என் உத்தமியோ ஈடு இணையற்றவள், உன்னத 2:14ஆதி 30:13சங் 45:9நீதி 31:28-29வெளி 21:9-10உன்னத 5:2கலா 4:26சங் 126:2
அவள் தன் தாய்க்கு ஒரே மகள்,
அவள் அவளைப் பெற்றவளுக்குச் செல்லப்பிள்ளை.
கன்னிப்பெண்கள் அவளைக் கண்டு வாழ்த்தினார்கள்;
அரசிகளும் வைப்பாட்டிகளும் அவளைப் புகழ்ந்தார்கள்.
தோழியர்
சந்திரனைப்போல் அழகுள்ளவளாயும், சூரியனைப்போல் ஒளியுள்ளவளாயும், உன்னத 6:4வெளி 12:1யோபு 31:262 சாமு 23:4எபே 5:27ஏசா 58:8மத் 17:2வெளி 10:1
அணிவகுத்து நிற்கும் நட்சத்திரங்களைப்போல் கம்பீரமானவளாயும்
அதிகாலையைப்போல் தோன்றுகிற இவள் யார்?
காதலன்
பள்ளத்தாக்கின் புதுத் தளிர்களைப் பார்க்கவும், உன்னத 7:12அப் 15:36ஆதி 2:9ஏசா 5:2-4மாற் 11:13சங் 92:12-15உன்னத 4:12-15உன்னத 5:1
திராட்சைக்கொடிகள் மொட்டு விட்டிருக்கின்றனவா என்று பார்க்கவும்,
மாதுளை மரங்கள் பூத்திருக்கின்றனவா என்று பார்க்கவும்
நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.
நான் புரிந்துகொள்ளும் முன்னமே, ஓசி 11:8-9லூக் 15:20எரே 31:18-20
என் ஆசை என்னை என் மக்களின் அரச தேர்களுக்கு 1 அழைத்துச் சென்றது.
தோழியர்
திரும்பி வா, திரும்பி வா, சூலமித்தியே, ஆதி 32:22 சாமு 17:242 தெச 1:10எபே 2:14-17எபே 6:10-19கலா 5:17ஆதி 49:10எபி 7:2
நாங்கள் உன்னை நன்றாய்ப் பார்க்கும்படி திரும்பி வா, திரும்பி வா!
காதலன்
இரண்டு அணிகளின் நடனங்களைப் பார்ப்பதுபோல்,
நீங்கள் ஏன் சூலமித்தியை உற்றுப் பார்க்கிறீர்கள்?