யாத்திராகமம் 23

Exodus 23

நீதிக்கும் இரக்கத்திற்குமான சட்டங்கள்

“பொய் வதந்திகளைப் பரப்பவேண்டாம். தீயநோக்கமுள்ள சாட்சியாய் இருந்து கொடியவனுக்கு உதவவேண்டாம். சங் 101:5நீதி 19:5உபா 19:16-21யாத் 20:16மத் 26:59-61உபா 5:20லேவி 19:16சங் 35:11

“பிழையானதைச் செய்யும் மக்கள் கூட்டத்தைப் பின்பற்றவேண்டாம். ஒரு வழக்கில் நீங்கள் சாட்சி கொடுக்கும்போது, அதிகமான மக்களுக்கு சார்பாக இருந்து நீதியைப் புரட்டவேண்டாம். நீதி 1:10-11நீதி 1:15லூக் 23:23-24யோபு 31:34மத் 27:24-261 இராஜா 19:10உபா 1:17யாத் 23:6-7 ஒரு ஏழையின் வழக்கிலே அவனுக்கு பட்சபாதம் காட்டவேண்டாம். யாக் 3:17லேவி 19:15சங் 82:2-3உபா 1:17

“உங்கள் பகைவனுடைய மாட்டையோ அல்லது கழுதையையோ வழிதப்பி திரிகிறதை நீங்கள் காணநேரிட்டால், அதைத் திரும்பவும் அவனிடம் கொண்டுபோய்விடத் தவறவேண்டாம். உபா 22:1-41 தெச 5:15மத் 5:44ரோம 12:17-21லூக் 6:27-28நீதி 25:21யோபு 31:29-30நீதி 24:17-18 உங்களை வெறுக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டால், அதை அங்கேயே விட்டுவிட்டுப் போகவேண்டாம். அவனுக்கு உதவிசெய்யவும் தவறவேண்டாம். உபா 22:4

“உங்களிடத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வழக்கில் நீதிவழங்க மறுக்கவேண்டாம். மல்கி 3:5உபா 16:19உபா 27:19பிரச 5:8யாத் 23:2-3ஏசா 10:1-2யாக் 2:5-6எரே 5:28 பொய்க்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்படவேண்டாம். குற்றமற்றவனையும், உண்மையுள்ளவனையும் கொலைசெய்ய வேண்டாம். ஏனெனில் நான் குற்றவாளியைத் தண்டியாமல் விடமாட்டேன். எபே 4:25உபா 27:25யாத் 23:1யாத் 34:7ரோம 1:181 தெச 5:22லேவி 19:11உபா 19:16-21

“இலஞ்சம் வாங்கவேண்டாம், இலஞ்சம் பார்வையுள்ளவர்களைக் 1 குருடராக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டுகிறது. உபா 16:19நீதி 17:23ஏசா 5:23நீதி 15:271 சாமு 8:3உபா 10:17பிரச 7:7சங் 26:10

“பிறநாட்டினனை ஒடுக்கவேண்டாம்; பிறநாட்டினராய் இருப்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமே. ஏனெனில், நீங்களும் எகிப்தில் பிறநாட்டினராய் இருந்தீர்களே. உபா 27:19யாத் 22:21உபா 24:14-18மத் 18:33உபா 10:19யாத் 21:21எசேக் 22:7எபி 2:17-18

ஓய்வுநாளின் நீதிச்சட்டங்கள்

“நீங்கள் ஆறு வருடங்களுக்கு உங்கள் வயல்களை விதைத்து விளைச்சலை அறுவடை செய்யவேண்டும். லேவி 25:3-4 ஆனால் ஏழாவது வருடமோ, நிலமானது உழப்படாமலும் பயன்படுத்தப்படாமலும் விட்டுவிட வேண்டும். உங்கள் மத்தியிலுள்ள ஏழைகள் அதிலிருந்து வளரும் தானியங்களை உணவாகப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் விட்டதைக் காட்டு மிருகங்கள் தின்னலாம். உங்கள் திராட்சைத் தோட்டத்திற்கும், ஒலிவத்தோப்பிற்கும் அப்படியே செய்யுங்கள். லேவி 25:2-7லேவி 25:11-12லேவி 26:34-35லேவி 25:20லேவி 25:22

“நீங்கள் ஆறு நாட்களுக்கு உங்கள் வேலையைச் செய்யுங்கள். ஏழாம்நாளோ வேலைசெய்யவேண்டாம். அதனால் உங்கள் எருதும், கழுதையும் இளைப்பாறட்டும். பிறநாட்டினனும் உங்கள் வீட்டில் பிறந்த அடிமையும் இளைப்பாறி, புதுபெலன் பெறட்டும். லூக் 13:14யாத் 20:8-11யாத் 31:15-16யாத் 34:21யாத் 35:3உபா 5:13-15ஏசா 58:3

“நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் செய்யக் கவனமாயிருங்கள். பிற நாட்டு தெய்வங்களின் பெயரைச்சொல்லிக் கூப்பிடவேண்டாம். அவற்றின் பெயரை உங்கள் உதடுகளினால் உச்சரிக்கவும் வேண்டாம். யோசு 23:7சகரி 13:2உபா 4:91 தீமோ 4:16ஓசி 2:17உபா 12:3எரே 10:11யோசு 22:5

மூன்று வருடாந்திர பண்டிகைகள்

“வருடத்தில் மூன்றுமுறை நீங்கள் எனக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும். உபா 16:16யாத் 23:17யாத் 34:22-24லேவி 23:16லேவி 23:34லேவி 23:5

“முதலாவதாக புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி, ஏழுநாட்களுக்கு புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள். ஆபீப் மாதத்தில், குறிக்கப்பட்ட காலத்தில் இதைச் செய்யுங்கள். ஏனெனில் அந்த மாதத்தில்தான் நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வெளியேவந்தீர்கள். யாத் 34:20லூக் 22:7உபா 16:16எண் 28:16-25நீதி 3:9-102இராஜா 23:21-23உபா 16:1-8லேவி 23:5-8

“ஒருவரும் வெறுங்கையுடன் என்முன் வரக்கூடாது.

“நீங்கள் விதைத்த உங்கள் வயலின் விளைச்சலின் முதற்பலனைக் கொண்டு, அறுவடைப் பண்டிகையைக் கொண்டாடுங்கள். யாத் 34:22லேவி 23:9-21யாத் 22:29லேவி 23:34-44அப் 2:1உபா 16:9-15யோவா 7:2யோவா 7:37

“பின்பு ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், உங்கள் வயலின் விளைச்சலைச் சேர்க்கிற சேர்ப்பின் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.

“இவ்வாறாக வருடத்தில் மூன்றுமுறை எல்லா ஆண்களும் ஆண்டவராகிய யெகோவா முன்பாக வரவேண்டும். உபா 16:16யாத் 34:23உபா 12:5உபா 31:11யாத் 23:14லூக் 2:42சங் 84:7

“பலியின் இரத்தத்தை புளிப்பூட்டப்பட்ட எதனுடனும் சேர்த்து எனக்குச் செலுத்தவேண்டாம். யாத் 34:25லேவி 2:11உபா 16:4யாத் 12:10யாத் 12:8லேவி 7:15யாத் 12:15லேவி 7:12

“எனது பண்டிகைக் காணிக்கைகளின் கொழுப்பை மறுநாள் காலைவரை பலியிடாமல் வைத்திருக்கக்கூடாது.

“உங்கள் நிலத்திலுள்ள முதற்பலன்களில் சிறந்தவற்றையே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவர வேண்டும். யாத் 34:26உபா 14:21உபா 26:10யாத் 22:29நெகே 10:35உபா 26:2எண் 18:12-131 கொரி 15:20

“வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

தூதன் வழியை ஆயத்தப்படுத்துதல்

“பாருங்கள், வழியெல்லாம் உங்களைப் பாதுகாத்து நான் ஆயத்தப்படுத்தியிருக்கிற இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவதற்காக, நான் உங்களுக்கு முன்னால் ஒரு தூதனை அனுப்புகிறேன். யாத் 33:14சங் 91:11யாத் 32:34யாத் 14:19யாத் 33:2ஏசா 63:9யோவா 14:3மத் 25:34 அவர் சொல்வதை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு விரோதமாகக் கலகம் செய்யவேண்டாம். ஏனெனில் 2 என் பெயர் அவரில் இருப்பதால் உங்கள் கலகத்தை அவர் மன்னிக்கமாட்டார். சங் 78:56சங் 78:40எபி 12:25யோவா 10:30யோவா 10:38எபே 4:30யாத் 3:14எபி 10:26-29 அவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வீர்களானால், நான் உங்கள் பகைவர்களுக்குப் பகைவராய் இருப்பேன். உங்களை எதிர்ப்பவர்களை நானும் எதிர்ப்பேன். ஆதி 12:3உபா 30:7சகரி 2:8எரே 30:20அப் 9:4-5எண் 24:9 என் தூதன் உங்களுக்கு முன்சென்று, எமோரியர், ஏத்தியர், பெரிசியர் கானானியர், ஏவியர், எபூசியர் வாழும் இடத்திற்கு உங்களைக் கொண்டுபோவார். நானும் அவர்களை அழித்தொழிப்பேன். யாத் 23:20ஏசா 5:13ஆதி 15:19-21ஆதி 34:2யாத் 3:17யாத் 32:2யோசு 24:8-11 நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கவோ, வழிபடவோ, அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ வேண்டாம். நீங்கள் அவற்றை அழித்து அவர்களின் தெய்வச்சிலைகளையும் துண்டுகளாக நொறுக்கவேண்டும். யாத் 20:5உபா 12:30-31எண் 33:52உபா 12:3உபா 7:52 நாளாக 33:9யாத் 32:20லேவி 18:3 நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவையே வழிபடுங்கள், அவருடைய ஆசீர்வாதம் உங்கள் உணவிலும், தண்ணீரிலும் இருக்கும். உங்களிடமிருந்து நோயை நீக்கிவிடுவேன். உபா 7:15யாத் 15:26யோசு 22:5ஏசா 33:24சங் 103:3உபா 7:13உபா 10:12உபா 6:13 உங்கள் நாட்டில் ஒருவரும் கருச்சிதைவடையவோ, மலட்டுத்தன்மை உடையவர்களாகவோ இருக்கமாட்டார்கள். உங்களுக்கு முழுமையான ஆயுள் காலத்தை நான் கொடுப்பேன். உபா 7:14உபா 28:4யோபு 5:26யோபு 21:10ஏசா 65:20சங் 107:38சங் 144:131 நாளாக 23:1

“நான் உங்களுக்கு முன்பாக என் பயங்கரத்தை அனுப்பி, நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நாட்டினரையும் கலங்கப்பண்ணுவேன். உங்கள் பகைவரையெல்லாம் புறமுதுகு காட்டி ஓடச்செய்வேன். உபா 2:25ஆதி 35:5உபா 11:25உபா 7:23யாத் 15:14-16சங் 18:401 சாமு 14:152 நாளாக 14:14 ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் உங்கள் வழியைவிட்டுத் துரத்திவிட உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்புவேன். உபா 7:20யோசு 24:11-12 ஆனால் நான் அவர்களை ஒரு வருடத்திற்குள்ளாகவே துரத்திவிடமாட்டேன். அப்படிச் செய்தால், நாடு பாழாய்ப் போய்விடும், காட்டு விலங்குகளும் உங்களால் சமாளிக்க முடியாத அளவு பெருகிவிடும். உபா 7:22நியாயாதி 3:1-4யோசு 17:12-13யோசு 15:63யோசு 16:10 நீங்கள் அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும் அளவுக்குப் பெருகுகிறவரைக்கும், நான் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களை உங்கள் முன்னின்று துரத்துவேன்.

“செங்கடல் தொடங்கி பெலிஸ்தியரின் கடல் 3 வரைக்கும், பாலைவனம்தொடங்கி யூப்பிரடீஸ் நதிவரைக்கும் உங்கள் எல்லையை நிலைப்படுத்துவேன். அந்நாட்டில் வாழும் மக்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன். அப்பொழுது நீங்கள் அவர்களை உங்கள் முன்னிலையில் இருந்து வெளியே துரத்திவிடுவீர்கள். ஆதி 15:18உபா 11:24யோசு 21:44யோசு 1:4எண் 34:3-151 இராஜா 4:24யோசு 24:181 இராஜா 4:21 அவர்களுடனோ, அவர்களின் தெய்வங்களுடனோ ஒரு உடன்படிக்கையையும் செய்யவேண்டாம். உபா 7:2யாத் 34:12யாத் 34:15உபா 7:16சங் 106:352 கொரி 6:15யோசு 9:14-23எண் 25:1-2 உங்கள் நாட்டில் அவர்களை வாழவிடவேண்டாம். இல்லையெனில் நீங்கள் எனக்கு விரோதமாய் பாவம் செய்வதற்கு அவர்கள் காரணமாயிருப்பார்கள். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு நிச்சயமாக உங்களுக்கு ஒரு கண்ணியாக இருக்கும்” என்றார். சங் 106:36உபா 7:16யாத் 34:12நியாயாதி 2:3யோசு 23:13உபா 12:301 இராஜா 14:161 சாமு 18:21