தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும், சங் 71:2சங் 31:1சங் 140:6தானி 9:161 யோவா 1:9சங் 89:1-22 சாமு 7:25
இரக்கத்திற்கான என் கதறுதலுக்குச் செவிகொடும்;
உமது உண்மையின்படியும்
நீதியின்படியும் எனக்கு பதில் தாரும்.
உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும். பிரச 7:20யோபு 25:4ரோம 3:20சங் 130:31 யோவா 1:10கலா 2:16யோபு 15:14யோபு 14:3
வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே.
பகைவன் என்னைப் பின்தொடர்கிறான், புலம் 3:6சங் 7:1-2சங் 7:52 சாமு 2:22சங் 142:6சங் 17:9-13சங் 88:4-62 சாமு 18:11
அவன் என்னை தரையில் போட்டு தாக்குகிறான்;
வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்களைப்போல்,
அவன் என்னை இருளில் குடியிருக்கப்பண்ணுகிறான்.
ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது; சங் 142:3சங் 77:3லூக் 22:44சங் 102:3-4சங் 55:5யோபு 6:27சங் 102:1சங் 119:81-83
பயத்தால் என் இருதயம் கலங்குகிறது.
நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்; சங் 77:10-12சங் 77:5-61 சாமு 17:45-50மீகா 6:5சங் 111:41 சாமு 17:34-37ஏசா 63:7-14உபா 8:2-3
உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்;
உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.
நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்; யோபு 11:13சங் 63:1சங் 84:2சங் 88:9சங் 42:1-2சங் 44:20ஏசா 26:8-9ஏசா 35:7
வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது.
யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்; சங் 69:17சங் 28:1சங் 27:9சங் 71:12ஏசா 38:18சங் 102:2சங் 69:3சங் 70:5
என் உள்ளம் சோர்ந்துபோகிறது;
உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால்,
நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன்.
காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும், சங் 25:4-5நீதி 3:5-6சங் 32:8ஏசா 48:17ஏசா 30:21சங் 46:5சங் 143:10சங் 27:11
ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்;
நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்,
ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன்.
யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்; நீதி 18:10சங் 61:3-4சங் 142:5சங் 59:1சங் 31:15சங் 34:2-4சங் 56:9எபி 6:18
ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன்.
நீரே என் இறைவன்; சங் 25:4-5யோவா 14:26எபி 13:21சங் 23:3சங் 119:12நெகே 9:202 தீமோ 1:7யோவா 16:13-15
ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்;
உமது நல்ல ஆவியானவர்
என்னை நல்வழியில் நடத்துவாராக.
யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; சங் 31:1எபே 2:4-5சங் 119:25சங் 71:2சங் 138:7சங் 25:11சங் 34:19வெளி 7:14-17
உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும்.
உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்; சங் 54:5சங் 116:16சங் 119:941 சாமு 24:12-151 சாமு 25:291 சாமு 26:10சங் 136:15-20சங் 52:5
என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்;
ஏனெனில் நான் உமது அடியவன்.