யோபு பேசுதல்
அதற்குப்பின் யோபு தன் வாயைத் திறந்து தன் பிறந்த நாளைச் சபித்தான், எரே 20:14-15சங் 106:33சங் 39:2-3யோபு 1:22யோபு 2:5யோபு 2:9-10யோபு 3:3யோபு 35:16 யோபு சொன்னதாவது: நியாயாதி 18:14
“நான் பிறந்த நாளும், எரே 20:14-18எரே 15:10யோபு 10:18-19
‘ஒரு ஆண் குழந்தை உற்பத்தியானது!’ என்று சொல்லப்பட்ட இரவும் அழியட்டும்.
அந்த நாள் இருளடையட்டும்; அப் 27:20ஆமோ 5:18உபா 11:12யாத் 10:22-23யோவே 2:2மத் 27:45வெளி 16:10
உன்னதத்தின் இறைவன் அதைக் கவனத்தில் கொள்ளாதிருக்கட்டும்;
அதில் ஒளி பிரகாசியாதிருக்கட்டும்.
அந்த நாளை இருளும், யோபு 10:21-22யோபு 28:3எரே 2:6சங் 23:4உபா 4:11எசேக் 34:12ஏசா 9:2எரே 13:16
நிழலும் ஒருமுறை பற்றிக்கொள்ளட்டும்;
மேகம் அதின்மேல் மூடிக்கொள்ளட்டும்;
மந்தாரம் அதின் வெளிச்சத்தை மூழ்கடிக்கட்டும்.
அந்த இரவைக் காரிருள் பிடிப்பதாக;
வருடத்தின் நாட்களில் அது சேர்க்கப்படாத நாளாகவும்,
மாதங்களிலும் குறிக்கப்படாமலும் போவதாக.
அந்த இரவு பாழாவதாக; ஏசா 13:20-22ஏசா 24:8எரே 7:34வெளி 18:22-23
அதில் மகிழ்ச்சியின் சத்தம் எதுவும் கேளாதிருக்கட்டும்.
நாட்களைச் சபிக்கிறவர்களும், லிவியாதான் என்னும் பெரிய பாம்பை, யோபு 41:1யோபு 41:102 நாளாக 35:25ஆமோ 5:16எரே 9:17-18யோபு 41:25மத் 11:17மாற் 5:38
எழுப்புகிறவர்களும் அதைச் சபிக்கட்டும்.
அந்த நாளின் விடியற்கால நட்சத்திரங்கள் இருளடையட்டும்; யோபு 41:18எரே 13:16எரே 8:15யோபு 30:26
பகல் வெளிச்சத்திற்காக அது வீணாய்க் காத்திருக்கட்டும்;
அது அதிகாலையின் ஒளிக்கீற்றுகளைக் காணாதிருக்கட்டும்.
ஏனெனில், அந்த நாள் என் கண்களில் இருந்து கஷ்டத்தை மறைக்காமலும், பிரச 6:3-5ஆதி 20:18எரே 20:171 சாமு 1:5பிரச 11:10ஆதி 29:31யோபு 10:1யோபு 23:2
என் தாயின் கருப்பையை அடைக்காமலும் போயிற்றே.
“பிறக்கும்போதே ஏன் நான் அழிந்துபோகவில்லை? ஏசா 46:3யோபு 10:18-19ஓசி 9:14எரே 15:10சங் 139:13-16சங் 22:9-10சங் 58:8சங் 71:6
நான் கருப்பையில் இருந்து வெளியே வரும்போதே ஏன் சாகவில்லை?
என்னை ஏற்றுக்கொள்ள மடியும், ஆதி 30:3ஏசா 66:12ஆதி 50:23எசேக் 16:4-5
எனக்குப் பால் கொடுக்க மார்பகங்களும் ஏன் இருந்தன?
அவ்வாறு இல்லாதிருந்தால், பிரச 9:10யோபு 14:10-12யோபு 21:13பிரச 6:3-5யோபு 10:22யோபு 17:13யோபு 19:27யோபு 21:23
நான் அமைதியாய், இளைப்பாறுவேனே!
இப்பொழுது பாழாய்க்கிடக்கும் இடங்களில் தங்களுக்கு அரண்மனைகளைக் கட்டிய யோபு 15:28ஏசா 14:10-16சங் 49:14சங் 89:481 இராஜா 11:43பிரச 8:8எசேக் 26:20எசேக் 27:18-32
பூமியின் அரசர்களோடும், ஆலோசகர்களோடும்,
பொன்னை உடையவர்களும், 1 இராஜா 10:27யோபு 22:25செப்ப 1:18ஏசா 2:7யோபு 12:21யோபு 27:16-17எண் 22:18சகரி 9:3
தங்கள் வீடுகளை வெள்ளியால் நிரப்பினவர்களுமான ஆளுநர்களோடும் நான் இளைப்பாறுவேனே.
அல்லது செத்துப்பிறந்த குழந்தையைப் போலவும், சங் 58:8பிரச 6:31 கொரி 15:8
பகல் வெளிச்சத்தைக் காணாத பாலகனைப் போலவும் நான் ஏன் தரையில் புதைக்கப்படவில்லை?
கொடியவர்கள் அங்கே கலகத்திலிருந்து ஓய்ந்திருப்பார்கள்; வெளி 14:13யோபு 17:16எபி 4:11எபி 4:9ஏசா 57:1-2யோபு 14:132 தெச 1:6-7லூக் 12:4
சோர்வுற்றோர் அங்கே இளைப்பாறுவார்கள்.
கைதிகள்கூட அங்கே சுகம் அனுபவிப்பார்கள்; யோபு 39:7யாத் 5:15-19யாத் 5:6-8ஏசா 14:3-4நியாயாதி 4:3
அடிமைகளை நடத்துபவர்களின் சத்தத்தை இனி அவர்கள் கேட்பதில்லை.
அங்கே சிறியவர்களும், பெரியவர்களும் இருக்கிறார்கள்; பிரச 12:7பிரச 8:8யோபு 30:23பிரச 12:5எபி 9:27லூக் 16:22-23சங் 49:14-20சங் 49:2
அத்துடன் அடிமையும் தனது தலைவனிடமிருந்நு விடுதலையாகிறான்.
“அவலத்தில் மூழ்கியிருப்பவனுக்கு வெளிச்சம் எதற்கு, எரே 20:18யோபு 7:15-161 சாமு 1:10நீதி 31:62இராஜா 4:27யோபு 3:16யோபு 33:30யோபு 6:9
உள்ளத்தில் கசப்பு உள்ளவனுக்கு வாழ்வு எதற்கு?
மறைவான புதையல்களைவிட, சாவைத் தேடியும், வெளி 9:6நீதி 2:41 இராஜா 19:4யோனா 4:3யோனா 4:8எண் 11:15
அடையாதவர்களுக்கு வாழ்வு ஏன்?
அவர்கள் கல்லறையைச் சென்றடையும்போது,
மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருப்பார்களா?
இறைவனால் நெருக்கப்பட்டு, யோபு 19:8புலம் 3:7ஏசா 40:27ஓசி 2:6யோபு 12:14யோபு 19:12புலம் 3:9சங் 31:8
அவன் போகும் பாதை மறைக்கப்பட்ட,
மனிதனுக்கு வாழ்வு ஏன் கொடுக்கப்பட்டிருக்கிறது?
பெருமூச்சே எனது உணவு; சங் 102:9சங் 42:3-4சங் 80:5சங் 38:8ஏசா 59:11யோபு 33:20யோபு 6:7யோபு 7:19
என் கதறுதல் தண்ணீராய்ப் புரண்டோடுகிறது.
நான் எதற்கு பயந்தேனோ, அது என்மேல் வந்தது; யோபு 1:5யோபு 30:15யோபு 31:23
நான் எதற்கு அஞ்சினேனோ, அது எனக்கு நிகழ்ந்தது.
எனக்கு சமாதானமோ, அமைதியோ, யோபு 7:14யோபு 27:9சங் 143:11
இளைப்பாறுதலோ இல்லை. ஆனால் மனக்குழப்பத்தை மட்டும் அனுபவிக்கிறேன்.”