கலாத்தியர் 6

Galatians 6

எல்லோருக்கும் நன்மை செய்தல்

பிரியமானவர்களே, யாராவது ஒரு பாவம் செய்து அகப்பட்டுக்கொண்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவனை சாந்தமாக நல்வழிப்படுத்த வேண்டும். நீங்களும் கவனமாயிருங்கள். ஏனெனில், நீங்களும்கூட சோதனைக்கு உள்ளாகலாம். ரோம 15:12 தீமோ 2:252 தெச 3:15யாக் 5:19-20யூதா 1:22-231 யோவா 5:162 கொரி 2:7எசேக் 34:16 ஒவ்வொருவரும், மற்றவர்களுடைய சுமைகளைச் சுமக்க உதவிசெய்யுங்கள். இவ்விதமாகவே, நீங்கள் கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றுவீர்கள். ரோம 15:11 தெச 5:14யோவா 13:341 யோவா 4:21யாக் 2:8யோவா 15:12கலா 5:13-14யோவா 13:14-15 யாராவது தன்னுடைய உண்மை நிலையை அறியாது, தன்னை ஒரு முக்கியமான ஆளாகக் கருதினால், அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான். நீதி 26:121 கொரி 8:21 கொரி 3:18ரோம 12:32 கொரி 3:51 கொரி 13:2யாக் 1:22லூக் 18:11 ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களைத் தானே சோதித்துப் பார்க்கவேண்டும். அப்பொழுது மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்காமல், தன்னுடைய செயலின் தன்மையிலேயே ஒருவன் பெருமைப்பட முடியும். 2 கொரி 13:5சங் 26:21 கொரி 11:282 கொரி 1:122 கொரி 11:12-131 யோவா 3:19-221 கொரி 3:21-23லூக் 18:11 ஒவ்வொருவனும் தன்னுடைய சுமைக்குத் தானே பொறுப்பாளி. எரே 32:19ரோம 14:10-122 கொரி 5:10-11வெளி 2:23ரோம 2:6-91 கொரி 3:81 கொரி 4:5மத் 16:27 இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்கிறவர்கள், தங்களுக்கு அதைக் கற்றுக் கொடுக்கிறவர்களுடன், தங்களிடமுள்ள எல்லா நன்மைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். 1 தீமோ 5:17-18ரோம 15:27உபா 12:191 கொரி 9:9-14மத் 10:10

ஏமாந்து போகவேண்டாம்: இறைவனை ஏமாற்றித் தப்பமுடியாது. ஒரு மனிதன் தான் விதைக்கிறதையே அறுவடை செய்வான். 2 கொரி 9:6ஓசி 10:12யோபு 4:8ரோம 2:6-101 கொரி 15:33நீதி 11:18நீதி 1:31எபே 5:6 ஒருவன் தன்னுடைய மாம்ச இயல்புக்கு விதைத்தால், அந்த மாம்ச இயல்பிலிருந்து அழிவையே அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்; ஒருவன் பரிசுத்த ஆவியானவரைப் பிரியப்படுத்துவதற்காக விதைத்தால், அந்த பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடையாகப் பெற்றுக்கொள்வான். ரோம 8:13யாக் 3:182 பேது 2:19ஓசி 10:13யோபு 4:8கலா 6:7ரோம 6:21-22ரோம 13:14 நன்மை செய்வதில் நாம் சோர்வடையாது இருக்கவேண்டும். நாம் அதைக் கைவிடாமல் செய்யும்போது, ஏற்றகாலத்தில் அதன் அறுவடையைப் பெற்றுக்கொள்வோம். 1 கொரி 15:582 தெச 3:13ஏசா 40:30-31எபி 10:35-39எபி 12:31 பேது 2:15யாக் 5:71 பேது 3:17 ஆகவே நமக்குத் தருணம் கிடைக்கும்போதெல்லாம், எல்லா மக்களுக்கும் நன்மையைச் செய்வோமாக. முக்கியமாக விசுவாசிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். எபி 13:16நீதி 3:271 தெச 5:15தீத் 3:8மத் 25:40லூக் 6:35எபி 6:103 யோவா 1:5-8

புதிய படைப்பே முக்கியம்

என் கையெழுத்தாக நான் உங்களுக்கு எவ்வளவு பெரிய எழுத்துக்களில் இதை எழுதினேன் என்று பாருங்கள். 1 கொரி 16:21-23ரோம 16:22

வெளித்தோற்றத்தைக் காண்பித்து, மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற முயலுகிறவர்களே விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவினுடைய சிலுவையின் நிமித்தம், தாங்கள் துன்புறுத்தப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளும் ஒரே காரணத்திற்காகவே அவர்கள் இதைச் செய்கிறார்கள். கலா 5:112 கொரி 11:13அப் 15:1கொலோ 2:23கலா 2:3லூக் 16:152 கொரி 10:12அப் 15:5 விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களும், மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளாமல் இருக்கிறார்களே; அப்படியிருக்க உங்கள் விருத்தசேதனத்தைக் குறித்துத் தாங்கள் பெருமிதம் கொள்வதற்காகவே, நீங்களும் அதைச் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். பிலி 3:31 கொரி 5:62 பேது 2:19ரோம 2:17-252 கொரி 11:18மத் 23:15மத் 23:31 கொரி 3:21 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைத் தவிர, வேறு எதைக் குறித்தும் பெருமைகொள்வது வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில், அந்தச் சிலுவையில், உலகத்தின் கவர்ச்சிகரமான யாவும் அறையப்பட்டவைகளாக இருக்கின்றன. இந்த உலகத்தின் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில், நானும் சிலுவையில் அறையப்பட்டவனாகவே இருக்கிறேன். ரோம 6:6கலா 2:20எரே 9:23-241 கொரி 2:2பிலி 3:3ரோம 1:16கலா 5:242 கொரி 12:10-11 ஒருவன் விருத்தசேதனம் செய்துகொள்கிறானா அல்லது அதைச் செய்யாதிருக்கிறானா என்பது முக்கியமல்ல, அவன் ஒரு புதிய படைப்பாய் வாழ்கிறானா என்பதே முக்கியம். 2 கொரி 5:17கொலோ 3:10-11எபே 2:10கலா 5:6எபே 4:241 கொரி 7:19ரோம 2:28ரோம 8:1 இந்த ஒழுங்குவிதியைப் பின்பற்றுகிறவர்களுக்கு சமாதானமும், இரக்கமும் உண்டாவதாக. இறைவனுடைய இஸ்ரயேலர்கள்மேலும் அது இருப்பதாக. கலா 3:29பிலி 3:3ரோம 9:6-8கலா 3:7-91 பேது 2:5-9ரோம 4:12ஓசி 1:10ரோம 2:28-29

இனிமேலாவது ஒருவனும் எனக்குத் துன்பம் உண்டாக்காதிருக்கட்டும். ஏனெனில் இயேசுவின் தழும்புகளை நான் என் உடலில் சுமக்கிறேனே. 2 கொரி 1:5கொலோ 1:242 கொரி 11:23-252 கொரி 4:10கலா 5:11-12எபி 12:15யோசு 7:25கலா 1:7

பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக. ஆமென். 2 தீமோ 4:22ரோம 16:202 கொரி 13:14பிலே 1:25வெளி 22:21ரோம 16:23