யோபு 18

Job 18

பில்தாத் பேசுதல்

அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னது: யோபு 2:11யோபு 8:1யோபு 25:1யோபு 42:7-9

“நீ எப்பொழுது இந்தப் பேச்சுக்களை நிறுத்துவாய்? யோபு 13:5-6நீதி 18:13யாக் 1:19யோபு 11:2யோபு 16:2-3யோபு 21:2யோபு 3:17யோபு 3:5-6

நிதானமாயிரு, அப்பொழுது நாங்கள் பேசுவோம்.

உன் பார்வையில் நாங்கள் மிருகங்களைப்போல கருதப்பட்டு சங் 73:22யோபு 17:10யோபு 17:4பிரச 3:18யோபு 12:7-8ரோம 12:10

மதியீனர்களாய் எண்ணப்படுவது ஏன்?

உன் கோபத்தில் உன்னையே காயப்படுத்துகிறவனே, யோபு 14:18யோபு 16:9யோபு 13:14யோபு 5:2எசேக் 9:9ஏசா 54:10யோபு 40:8யோனா 4:9

உனக்காக பூமி கைவிடப்படுமோ?

பாறை தன் இடத்தைவிட்டு நகருமோ?

“கொடியவனின் விளக்கு அணைக்கப்படுகிறது; நீதி 13:9நீதி 20:20நீதி 24:20யோபு 21:17ஏசா 50:11நீதி 4:19யோபு 20:5

அவனுடைய நெருப்புச் சுவாலையும் எரியாமல் போகிறது.

அவனுடைய கூடார வெளிச்சம் இருளாகிறது; யோபு 21:17சங் 18:28வெளி 18:23

அவனுடைய விளக்கும் அணைந்து போகிறது.

அவனுடைய நடையின் கம்பீரம் பலவீனமடைகிறது; நீதி 4:12சங் 18:36சங் 33:101 கொரி 3:192 சாமு 15:312 சாமு 17:14ஓசி 10:6யோபு 15:6

அவனுடைய சுயதிட்டங்கள் அவனைக் கீழே வீழ்த்துகின்றன.

அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, சங் 9:15யோபு 22:10சங் 35:81 தீமோ 3:71 தீமோ 6:92 தீமோ 2:26எஸ்த 3:9எஸ்த 6:13

அந்த வலையின் சிக்கலிலே நடக்கிறான்.

பொறி அவன் குதிகாலைப் பிடிக்கிறது; ஏசா 8:14-15யோபு 1:15யோபு 1:17யோபு 5:5

கண்ணி 1 அவனை இறுக்கிப் பிடிக்கிறது.

சுருக்கு அவனுக்காகத் தரையிலும், எசேக் 12:13சங் 11:6ரோம 11:9

பொறி அவன் பாதையிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

எப்பக்கத்திலும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, யோபு 15:21எரே 6:25எரே 46:5எரே 49:29யோபு 20:25லேவி 26:362 கொரி 5:112இராஜா 7:6-7

அவன் கால்களை அலையவைக்கும்.

பேரழிவு அவனுக்காக காத்திருக்கிறது; 1 சாமு 2:361 சாமு 2:51 தெச 5:32 பேது 2:3ஏசா 8:21யோபு 15:23-24சங் 109:10சங் 34:10

பெருங்கேடு அவன் விழும்போது ஆயத்தமாக இருக்கிறது.

வியாதி அவன் தோலைத் தின்கிறது; ஆதி 49:3ஏசா 14:30யோபு 17:16யோனா 2:6வெளி 6:8சகரி 14:12

சாவின் முதற்பேறு அவன் அங்கங்களை விழுங்குகிறது.

அவன் தன் கூடாரத்தின் பாதுகாப்பிலிருந்து பிடுங்கப்பட்டு, நீதி 10:281 கொரி 15:55-56எபி 2:15யோபு 11:20யோபு 24:17யோபு 41:34யோபு 8:14யோபு 8:22

பயங்கரங்களின் அரசனிடம் கொண்டுபோகப்படுகிறான்.

அவனுடைய கூடாரத்தில் நெருப்பு குடியிருக்கும்; சங் 11:6உபா 29:23ஏசா 34:9-10ஆதி 19:24ஆப 2:6-11எரே 22:13யோபு 18:12-13யோபு 20:18-21

அவனுடைய உறைவிடங்களில் கந்தகம் வாரி இறைக்கப்படும்.

கீழே அவனுடைய வேர்கள் காய்ந்து போகின்றன; ஓசி 9:16ஏசா 5:24ஆமோ 2:9யோபு 15:30மல்கி 4:1யோபு 29:19யோபு 5:3-4

மேலே அவனுடைய கிளைகள் வாடிப்போகின்றன.

அவனைப் பற்றிய நினைவு பூமியிலிருந்து அற்றுப்போகிறது; சங் 34:16நீதி 10:7சங் 109:13நீதி 2:22யோபு 13:12சங் 83:4

மண்ணில் அவனுக்குப் பெயர் இல்லாதிருக்கிறது.

அவன் வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் தள்ளப்படுகிறான்; யோபு 20:8யோபு 10:22தானி 4:33தானி 5:21ஏசா 17:13-14ஏசா 8:21-22யோபு 11:14யோபு 3:20

உலகத்திலிருந்தும் துரத்தப்படுகிறான்.

அவனுடைய மக்கள் மத்தியில் அவனுக்கு சந்ததிகளே இல்லை, எரே 22:30ஏசா 14:21-22ஏசா 5:8-9யோபு 1:19யோபு 20:26-28யோபு 27:14-15யோபு 42:13-16யோபு 8:4

அவன் வாழ்ந்த இடத்தில் மீதியாயிருப்பவன் ஒருவனும் இல்லை.

அவன் முடிவைக்கண்டு மேற்கிலுள்ளோர் நடுங்கினர்; சங் 37:13எசேக் 21:25எரே 50:271 இராஜா 9:8உபா 29:23-24எரே 18:16யோபு 19:13-19யோபு 2:12-13

அவன் காலத்திற்கு பின்பு வாழ்ந்த கிழக்கிலுள்ளோர் திகிலுற்றனர்.

தீயவனின் குடியிருப்பு இத்தகையதே; எரே 9:3தீத் 1:161 தெச 4:52 தெச 1:8நியாயாதி 2:10எரே 10:251 சாமு 2:12யாத் 5:2

இறைவனை அறியாதவனின் இருப்பிடமும் இத்தகையதே.”