யோபு 17

Job 17

என் மூச்சு நின்றுபோகிறது, ஏசா 38:10-14சங் 88:3-5ஏசா 57:16யோபு 17:13-14யோபு 19:17யோபு 42:16யோபு 6:11

என் வாழ்நாட்கள் முடிகின்றன,

கல்லறை எனக்குக் காத்திருக்கிறது.

கேலி செய்கிறவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றனர்; 1 சாமு 1:6-7யோபு 12:4யோபு 16:20மத் 27:39-44யோபு 13:9யோபு 21:3சங் 25:13சங் 35:14-16

அவர்களுடைய பகைமையே என் கண்முன் இருக்கிறது.

“இறைவனே, நீர் கேட்கும் பிணையை நீரே எனக்குத் தாரும். எபி 7:22ஏசா 38:14நீதி 11:15ஆதி 43:9ஆதி 44:32சங் 119:122யோபு 9:33நீதி 22:26

வேறு யார் எனக்கு அதைக் கொடுப்பார்கள்?

விளங்கிக்கொள்ளாதபடி அவர்களுடைய மனதை நீர் அடைத்தீர். மத் 11:25மத் 13:111 கொரி 1:202 சாமு 17:14ஏசா 19:14ரோம 11:82 நாளாக 25:162 சாமு 15:31

ஆகையால் அவர்களை வெற்றிகொள்ள விடமாட்டீர்.

தன் சொந்த நலன் கருதி சிநேகிதர்களுக்குத் துரோகம் செய்தால், சங் 12:2-3நீதி 20:19நீதி 29:51 இராஜா 11:12உபா 28:65யாத் 20:5யோபு 11:20யோபு 32:21-22

அவருடைய பிள்ளைகளின் கண்கள் மங்கிப்போகும்.

“இறைவன் என்னை எல்லோருக்கும் ஒரு பழமொழியாக்கினார்; யோபு 30:9சங் 44:141 இராஜா 9:7ஆதி 31:27ஏசா 5:12

என்னைக் காண்போர் என் முகத்தில் துப்புகின்றனர்.

துயரத்தினால் என் கண்கள் மங்கிப்போயின; யோபு 16:16சங் 6:7சங் 31:9-10பிரச 6:12யோபு 16:8புலம் 5:17சங் 109:23

என் உடலமைப்பு ஒரு நிழலைப்போல் ஆயிற்று.

நேர்மையான மனிதர் இதைக்கண்டு திகைக்கிறார்கள்; பிரச 5:8ஆப 1:13அப் 13:46யோபு 22:19யோபு 34:30சங் 73:12-15ரோம 11:33

குற்றமற்றவர்கள் இறைவனற்றவர்களுக்கு விரோதமாக எழும்புவார்கள்.

ஆனாலும் நேர்மையானவர்கள் தங்கள் வழிகளில் உறுதியாய் நிற்பார்கள்; நீதி 4:18ஏசா 1:15-16யோபு 22:302 கொரி 12:9-10நீதி 14:16சங் 84:7ஆதி 20:5ஏசா 40:29-31

சுத்தமான கைகளை உடையவர்கள் வலிமை அடைவார்கள்.

“நீங்கள் எல்லோரும் வாருங்கள், முயன்று பாருங்கள்! யோபு 42:7யோபு 6:291 கொரி 1:201 கொரி 6:5யோபு 12:2யோபு 15:9யோபு 17:4யோபு 32:9

நான் உங்களில் ஞானமுள்ள ஒருவரையும் காணவில்லை.

என் நாட்கள் கடந்துபோயின; என் திட்டங்கள் சிதைந்துவிட்டன. யோபு 7:6ஏசா 38:10நீதி 16:92 கொரி 1:15-17ஏசா 8:10யாக் 4:13-15புலம் 3:37பிரச 9:10

என் இருதயத்தின் ஆசைகளும் அவ்வாறே சிதறிப்போயின.

இந்த மனிதர் இரவைப் பகலாக மாற்றுகிறார்கள்; உபா 28:67யோபு 24:14-16யோபு 7:13-14யோபு 7:3-4

வெளிச்சம் இருளுக்கு சமீபமாயிருக்கிறது என்கிறார்கள்.

நான் எதிர்பார்த்திருக்கும் ஒரே வீடு பாதாளமாய் இருந்திருந்தால், யோபு 10:21-22ஏசா 57:2யோபு 14:14யோபு 17:1யோபு 3:13யோபு 30:23புலம் 3:25-26சங் 139:8

நான் என் படுக்கையை இருளில் விரித்திருந்தால்,

நான் அழிவைப் பார்த்து, ‘நீ என் தகப்பன்’ என்றும், சங் 16:101 கொரி 15:421 கொரி 15:53-54அப் 13:34-37அப் 2:27-31ஏசா 14:11யோபு 13:28யோபு 21:26

புழுவைப் பார்த்து, ‘நீ என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் சொல்லியிருந்தால்,

என் நம்பிக்கை எங்கே? யோபு 13:15யோபு 19:10யோபு 4:6யோபு 6:11யோபு 7:6

யாராவது அதைக் கண்டுபிடிக்க முடியுமா?

என் நம்பிக்கை என்னுடன் பாதாளத்திற்கு வருமோ? யோபு 3:17-19யோனா 2:62 கொரி 1:9எசேக் 37:11ஏசா 38:17-18யோபு 18:13-14யோபு 33:18-28சங் 143:7

அதனுடன் நானும் ஒன்றாக தூசிக்குள் இறங்குவேனோ?”