சங்கீதங்கள் 81

Psalms 81
சங்கீதம் 81

கித்தீத் என்னும் இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.

நம்முடைய பெலனாகிய இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுங்கள், எரே 31:7சங் 66:1சங் 100:1-2பிலி 4:13சங் 46:11சங் 8:1சங் 28:7ஆதி 50:17

யாக்கோபின் இறைவனை சத்தமிட்டு ஆர்ப்பரியுங்கள்.

இசையைத் தொடங்குங்கள், தம்புராவை தட்டுங்கள்; சங் 149:1-3கொலோ 3:16சங் 92:3எபே 5:19யாத் 15:20மாற் 14:26யாக் 5:13சங் 95:1-2

நாதமுள்ள யாழையும் வீணையையும் மீட்டுங்கள்.

நாளிலும், லேவி 23:24-25எண் 15:32 நாளாக 2:42 நாளாக 13:14உபா 16:15எண் 10:1-101 நாளாக 15:241 நாளாக 16:42

நமது பண்டிகையின் நாளான பெளர்ணமி நாளிலும் கொம்பு எக்காளத்தை ஊதுங்கள்.

இது இஸ்ரயேலுக்கு ஒரு விதிமுறையாகவும்,

யாக்கோபின் இறைவனுடைய நியமமாகவும் இருக்கிறது.

இறைவன் எகிப்திற்கு விரோதமாகப் புறப்பட்டபொழுது, உபா 28:49எரே 5:15சங் 114:11 கொரி 14:21-22யாத் 11:4யாத் 13:8-9ஏசா 28:11சங் 77:15

அதை யோசேப்புக்கான ஒழுங்குவிதியாக ஏற்படுத்தினார்.

நான் அறியாத ஒரு குரலை இவ்வாறு கேட்டேன்:

“நான் அவர்களுடைய தோள்களிலிருந்து சுமையை விலக்கினேன்; ஏசா 9:4ஏசா 10:27யாத் 6:6மத் 11:29யாத் 1:14சங் 68:13

கனமான கூடைகளை சுமப்பதிலிருந்து அவர்களுடைய கைகளை விடுவித்தேன்.

உங்கள் கஷ்டத்தில் நீங்கள் கூப்பிட்டீர்கள், நான் உங்களைத் தப்புவித்தேன்; யாத் 19:19எண் 20:13யாத் 2:23சங் 50:15யாத் 14:10யாத் 14:30-31சங் 91:14-15யாத் 14:24

முழங்குகிற மேகத்திலிருந்து நான் உங்களுக்குப் பதிலளித்தேன்;

மேரிபாவின் தண்ணீர் அருகில் நான் உங்களைச் சோதித்தேன்.

என் மக்களே கேளுங்கள், நான் உங்களை எச்சரிக்கிறேன்; சங் 50:7யாத் 15:26யோவா 3:111 யோவா 5:9ஏசா 1:19ஏசா 55:3-4யோவா 3:32-33சங் 81:13

இஸ்ரயேலே, நீங்கள் எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.

உங்கள் மத்தியில் நீங்கள் வேறு தெய்வத்தை வைத்திருக்கக்கூடாது; ஏசா 43:12உபா 32:121 கொரி 8:5-6உபா 6:14யாத் 20:3-5மல்கி 2:11சங் 44:20

வேறு எந்த தெய்வத்தையும் நீங்கள் வணங்கவும் கூடாது.

எகிப்திலிருந்து உங்களைக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே; யோவா 15:7யாத் 20:2சங் 107:9யோவா 7:37வெளி 21:6எபே 3:19-20சங் 37:3-4வெளி 22:17

உங்கள் வாயை விரிவாய்த் திறவுங்கள்;

நானே அதை நிரப்புவேன்.

“ஆனால் என் மக்களோ, எனக்குச் செவிகொடுக்க மறுத்துவிட்டார்கள்; எரே 7:23-24உபா 32:18யாத் 32:1எரே 2:11-13உபா 32:15எபி 10:29நீதி 1:30சகரி 7:11

இஸ்ரயேல் மக்கள் எனக்குப் அடங்கியிருக்கவில்லை.

எனவே நான் அவர்களை தங்கள் சொந்தத் திட்டங்களிலேயே நடக்கும்படி, எரே 7:24ரோம 1:24ஏசா 30:1அப் 7:422 தெச 2:9-11அப் 14:16ரோம 1:26-27எரே 44:16-17

அவர்களை அவர்களுடைய பிடிவாதமான இருதயங்களுக்கே ஒப்புவித்தேன்.

“என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், உபா 5:29ஏசா 48:18உபா 10:12-13லூக் 19:41-42மத் 23:37உபா 32:29

இஸ்ரயேலர் என் வழிகளைப் பின்பற்றியிருந்தால்,

எவ்வளவு நலமாயிருந்திருக்கும்.

நான் எவ்வளவு விரைவில் அவர்களுடைய பகைவர்களை அடக்குவேன், ஆமோ 1:8நியாயாதி 2:20-23யோசு 23:13எண் 14:9எண் 14:45சங் 47:3சகரி 13:7

என் கரம் அவர்களின் எதிரிகளுக்கு விரோதமாய் திரும்பும்!

யெகோவாவை வெறுக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஒடுங்கி விழுவார்கள்; உபா 7:10சங் 63:3ரோம 1:30ரோம 8:7யாத் 20:5யோவே 3:20யோவா 15:22-23சங் 102:28

அவர்களுக்குரிய தண்டனை என்றென்றைக்குமாய் நீடித்திருக்கும்.

ஆனால் நீங்களோ, மிகச்சிறந்த கோதுமையினால் உணவளிக்கப்படுவீர்கள்; உபா 32:13-14சங் 147:141 சாமு 14:25-26யோவே 2:24நியாயாதி 14:18நியாயாதி 14:8-9யோபு 29:6

மலைத் தேனினால் நான் உங்களைத் திருப்தியாக்குவேன்.”