இயேசுவுக்கு வாசனைத் தைலம் ஊற்றுதல்
பஸ்கா என்ற பண்டிகையும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகையும் வருவதற்கு, இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவைக் கைதுசெய்து, அவரைக் கொலைசெய்வதற்கு தந்திரமான ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். யாத் 12:6-20லூக் 22:1-2யோவா 13:1உபா 16:1-8அப் 4:25-28லேவி 23:5-7யோவா 11:47யோவா 11:53-57 ஆனால், “பண்டிகை காலத்தில் அப்படிச் செய்யக்கூடாது, செய்தால் மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்” என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள். யோவா 12:19யோவா 7:40புலம் 3:27லூக் 20:6மத் 26:5மாற் 11:18மாற் 11:32நீதி 19:21
பெத்தானியாவிலே, அவர் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கும்போது, ஒரு பெண் அங்கே வந்தாள்; அவள் நளதம் என்னும் விலையுயர்ந்த நறுமணத் தைலமுள்ள, வெள்ளைக்கல் குடுவையைக் கொண்டுவந்தாள். அவள் அதை உடைத்து, அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள். லூக் 7:37-39யோவா 12:1-8யோவா 11:2மத் 26:6-13உன்னத 4:13-14உன்னத 5:5மத் 21:17
அங்கிருந்தவர்களில் சிலர், “இந்த வாசனைத் தைலத்தை இவ்விதமாய் வீணாக்குவது ஏன்?” என்று கோபத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். யோவா 12:4-5மத் 26:8-9பிரச 4:4பிரச 5:4-8மல்கி 1:12-13 “இதை ஒரு வருட சம்பளத்தைவிடக் கூடுதலான பணத்துக்கு விற்றிருக்கலாமே. அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்று சொல்லி, அவர்கள் அவளை கடுமையாய் திட்டினார்கள். யோவா 13:29மத் 20:111 கொரி 10:10உபா 1:27எபே 4:28யாத் 16:7-8யோவா 12:5-6யோவா 6:43
அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து, “அவளை விடுங்கள். ஏன் அவளுக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்கள்? அவள் இந்தச் செயலை ஒரு சிறந்த நோக்கத்துடனேயே செய்தாள். தீத் 3:14எபி 10:24எபி 13:21மத் 26:102 தீமோ 2:21அப் 9:36எபே 2:10தீத் 2:14 ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள்; 1 விரும்புகிற போதெல்லாம், நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். உபா 15:11மத் 26:111 யோவா 3:16-19யாக் 2:14-16அப் 3:21யோவா 12:7-8யோவா 13:33யோவா 16:28 அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என்னை அடக்கம்பண்ணுவதற்கென, முன்னதாகவே ஆயத்தம் செய்யும்படி, அவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றினாள். 2 கொரி 8:12யோவா 12:72 நாளாக 31:20-212 கொரி 8:1-3லூக் 23:53மாற் 15:421 நாளாக 29:1-172 நாளாக 34:19-33 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளுடைய ஞாபகமாக சொல்லப்படும்” என்றார். மத் 26:12-13மாற் 16:15மத் 24:14சங் 112:6-9எண் 31:54சகரி 6:14
அப்பொழுது பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து, தலைமை ஆசாரியர்களுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படிப் போனான். லூக் 22:3-6யோவா 13:2மத் 26:14-16சங் 41:9யோவா 13:30யோவா 6:70-71மத் 10:4சங் 55:12-14 அவர்கள் அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்து, அவனுக்குப் பணம் தருவதென வாக்குறுதி கொடுத்தார்கள். எனவே யூதாஸ் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தான். 1 தீமோ 6:101 இராஜா 21:202இராஜா 5:262 பேது 2:14-15ஓசி 7:3யூதா 1:11லூக் 22:5-6மத் 26:15
கர்த்தருடைய பஸ்கா என்ற விருந்து
புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடுவது வழக்கமாயிருந்தது. எனவே, இயேசுவினுடைய சீடர்கள் அவரைப் பார்த்து, “பஸ்கா உணவைச் சாப்பிடும்படி, நாங்கள் எங்கே உமக்காக ஆயத்தம் பண்ணவேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். யாத் 12:61 கொரி 5:7-8யாத் 12:18யாத் 12:8லேவி 23:5-6மத் 26:17-19எண் 28:16-18உபா 16:1-4
அப்பொழுது இயேசு, தம்முடைய சீடர்களில் இருவரை அனுப்பி அவர்களிடம், “பட்டணத்திற்குள் போங்கள். தண்ணீர் குடத்தைச் சுமந்து வருகிற ஒருவனைச் சந்திப்பீர்கள். அவனைப் பின்தொடர்ந்து போங்கள். லூக் 22:10-13மத் 26:18-19எபி 4:13எபி 5:9யோவா 15:14லூக் 19:30-33மத் 8:9மாற் 11:2-3 அவன் போகிற வீட்டினுடைய சொந்தக்காரனிடம், ‘என்னுடைய விருந்தினருக்கான அறை எங்கே இருக்கிறது? அங்கு நானும், என்னுடைய சீடர்களும் பஸ்காவைச் சாப்பிடவேண்டும்’ என்று போதகர் கேட்கிறார் என அவனுக்குச் சொல்லுங்கள். வெளி 3:20யோவா 11:28யோவா 13:13மாற் 10:17மாற் 11:3 அவன் உங்களுக்கு ஒரு பெரிய மேல்வீட்டு அறையைக் காண்பிப்பான். அது கம்பளங்கள் போடப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டதாய் இருக்கும். அங்கே நாம் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். அப் 1:132 நாளாக 6:30அப் 20:8யோவா 2:24-25யோவா 21:17நீதி 16:1நீதி 21:1-2சங் 110:3
சீடர்கள் புறப்பட்டு பட்டணத்துக்குள் போய், இயேசு தங்களுக்குச் சொன்ன விதமாகவே எல்லாம் இருப்பதைக் கண்டார்கள். அப்படியே, அவர்கள் பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். யோவா 16:4லூக் 22:13லூக் 22:35
மாலை வேளையானபோது, இயேசு பன்னிரண்டு சீடர்களோடு அங்கு வந்து சேர்ந்தார். லூக் 22:14யோவா 13:21-26லூக் 22:21-23மத் 26:20-24 அவர்கள் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான். என்னோடு சாப்பிடுகிறவர்களில், ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார். சங் 41:9யோவா 6:47யோவா 6:70யோவா 1:51யோவா 13:21யோவா 13:38யோவா 3:11யோவா 3:3
அவர்கள் துக்கமடைந்து, ஒருவர் பின் ஒருவராக அவரிடம், “நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்டார்கள். யோவா 13:22லூக் 22:21-23மத் 26:22
“என்னுடனே ஒரே கிண்ணத்தில் தொட்டுச் சாப்பிடுகிற பன்னிரண்டு சீடர்களில் ஒருவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான்” என இயேசு பதிலளித்தார். யோவா 13:26யோவா 6:71லூக் 22:47மத் 26:23மத் 26:47மாற் 14:43 மானிடமகனாகிய என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடியே நான் போகிறேன். ஆனால் மானிடமகனாகிய என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ! அவன் பிறக்காமலே இருந்திருந்தால் அது அவனுக்கு “நலமாய் இருந்திருக்கும்” என்றார். ஏசா 53:1-12மத் 26:24-25தானி 9:24மத் 18:6-7சகரி 13:7அப் 1:25அப் 13:27-29அப் 2:23
அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்துச் சொன்னதாவது, “இதை எடுத்துச் சாப்பிடுங்கள்; இது என்னுடைய உடல்.” மத் 26:26-29மாற் 14:241 கொரி 10:16-171 கொரி 11:23-29லூக் 22:18-20லூக் 24:30யோவா 6:48-58ஆதி 41:26
பின்பு இயேசு பாத்திரத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் எல்லோரும், அந்தப் பாத்திரத்திலிருந்து குடித்தார்கள். மத் 26:27மாற் 14:221 கொரி 10:16லூக் 22:17ரோம 14:6
இயேசு அவர்களைப் பார்த்து, “இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, இது அநேகருக்காகச் சிந்தப்படுகிறது. யாத் 24:8சகரி 9:11வெளி 7:9-17எபி 9:15-231 கொரி 10:161 கொரி 11:25எபி 13:20-21யோவா 6:53 உண்மையாய் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் இறைவனுடைய அரசில் திராட்சைப்பழ இரசத்தைப் புதிதாகக் குடிக்கும் அந்த நாள்வரைக்கும், இனிமேல் நான் குடிக்கமாட்டேன்” என்றார். மத் 26:29சங் 104:15ஆமோ 9:13-14யோவே 3:18லூக் 22:16-18லூக் 22:29-30சகரி 9:17
அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, ஒலிவமலைக்குச் சென்றார்கள். மத் 26:30லூக் 22:391 கொரி 14:15அப் 16:25கொலோ 3:16எபே 5:18-20யாக் 5:13நியாயாதி 18:1-4
பேதுருவின் மறுதலிப்பு முன்னறிவிக்கப்படுதல்
இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப்போவீர்கள், சகரி 13:7யோவா 16:32மத் 26:31யோவா 16:12 தீமோ 4:16லூக் 22:31-32
“ ‘மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன்,
அப்பொழுது ஆடுகள் சிதறடிக்கப்படும்’ 2
என்று பரிசுத்த வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னதாகவே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார். மத் 28:16மாற் 16:7மத் 28:7மத் 28:10மத் 26:321 கொரி 15:4-6யோவா 21:1மத் 16:21
அதற்குப் பேதுரு அவரிடம், “எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப்போனாலும், நான் போகமாட்டேன்” என்றான். யோவா 13:36-38லூக் 22:33-34மத் 26:33-35யோவா 21:15
அப்பொழுது இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இன்று இரவே, சேவல் இரண்டுமுறை கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார். யோவா 13:38மாற் 14:66-721 கொரி 10:12ஆதி 1:5ஆதி 1:8யோவா 18:17யோவா 18:25-27லூக் 22:34
ஆனால் பேதுருவோ, “நான் உம்முடன் சாகவேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், உம்மை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன்” என்று வலியுறுத்திச் சொன்னான். மற்றெல்லோருங்கூட அவ்விதமாகவே சொன்னார்கள். யாத் 19:8யோவா 13:372இராஜா 8:13உபா 5:27-29எரே 10:23எரே 17:9யோபு 40:4-5நீதி 16:18
கெத்சமனே பூங்கா
அவர்கள் கெத்செமனே என்னும் ஒரு இடத்திற்குச் சென்றார்கள். அங்கு இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து, “நான் மன்றாடப்போகிறேன், அதுவரை இங்கே உட்கார்ந்திருங்கள்” என்றார். மாற் 14:36மாற் 14:39சங் 18:5-6யோவா 18:1-11லூக் 22:39-46மத் 26:36-46சங் 109:4சங் 22:1-2 இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்முடன் கூட்டிக்கொண்டு சென்றார். அவர் மிகவும் துயருற்று கலக்கமடையத் தொடங்கினார். லூக் 22:44எபி 5:7மாற் 1:16-19மாற் 5:37சங் 38:11சங் 69:1-3சங் 88:14-16ஏசா 53:10 “என் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழிப்பாயிருங்கள்” என்றார். யோவா 12:27மாற் 13:35-371 பேது 5:81 பேது 4:7எபே 6:18-19ஏசா 53:12ஏசா 53:3-4புலம் 1:12
இயேசு சற்றுத் தூரமாய்ப் போய்த், தரையில் விழுந்து மன்றாடினார். முடியுமானால், அந்த வேளை தம்மை விட்டுக் கடந்து போகட்டும் என்று அவர் வேண்டிக் கொண்டார். மாற் 14:41அப் 10:25-26உபா 9:18ஆதி 17:3எபி 5:7மத் 26:392 நாளாக 7:3வெளி 4:10 அவர் தொடர்ந்து, “அப்பா பிதாவே, எல்லாவற்றையும் செய்ய உம்மால் இயலும். இந்தப் பாத்திரத்தை என்னைவிட்டு எடுத்துவிடும். ஆனால், என் சித்தத்தின்படியல்ல, உமது சித்தத்தின்படியே ஆகட்டும்” என்றார். கலா 4:6யோவா 5:30ரோம 8:15-16எபி 5:7-8யோவா 12:27எரே 32:27யோவா 18:11யோவா 6:38-39
பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்தபோது, அவர்கள் நித்திரையாயிருப்பதைக் கண்டார். அவர் பேதுருவைப் பார்த்து, “சீமோனே, நீ நித்திரை செய்கிறாயோ? ஒருமணி நேரமாவது விழித்திருக்க உங்களால் முடியவில்லையா? மத் 26:402 சாமு 16:17எபி 12:3லூக் 22:45-46லூக் 9:31-32மத் 25:5மாற் 14:29-31மாற் 14:40-41 விழித்திருந்து மன்றாடுங்கள், அப்பொழுது நீங்கள் சோதனைக்குள் விழமாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார். மத் 26:41லூக் 21:36மத் 24:42லூக் 22:40ரோம 7:18-25வெளி 3:2-3லூக் 22:46கலா 5:17
இயேசு மீண்டும் போய், அதேவிதமாகவே மன்றாடினார். மத் 26:42-442 கொரி 12:8மத் 6:7லூக் 18:1 இயேசு திரும்பவும் வந்தபோது சீடர்கள் மீண்டும் நித்திரையாயிருப்பதை அவர் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன. அவரிடம் என்ன சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆதி 44:16மாற் 9:33-34ரோம 3:19
இயேசு மூன்றாம் முறையும் திரும்பிவந்து, சீடர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறுகிறீர்களோ? போதும்! வேளை வந்துவிட்டது. போதும்! மானிடமகனாகிய நான் பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறேன். மாற் 14:35மாற் 9:31யோவா 17:11 இராஜா 18:271 இராஜா 22:152இராஜா 3:13அப் 7:52பிரச 11:9 எழுந்திருங்கள், நாம் போவோம்! என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ வருகிறான்!” என்றார். மத் 26:46யோவா 18:1-2
இயேசு கைதுசெய்யப்படுதல்
இயேசு பேசிக்கொண்டிருக்கையில், பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு கூட்ட மக்கள் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். இவர்கள் தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும், யூதரின் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தார்கள். யோவா 18:3-11லூக் 22:47-53மத் 26:47-56அப் 1:16சங் 2:1-2சங் 22:11-13சங் 3:1-2
இயேசுவைக் காட்டிக்கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தான்: “நான் யாரை முத்தமிடுகிறேனோ, அவரே இயேசு; அவரைக் கைதுசெய்து, காவலுடன் கூட்டிச் செல்லுங்கள்” என்று சொல்லியிருந்தான். மத் 26:48-50நீதி 27:6யாத் 12:13சங் 55:20-211 சாமு 23:22-232 சாமு 20:9-102 தெச 3:17யோசு 2:12 யூதாஸ் இயேசுவுக்கு அருகில் வந்து, “போதகரே!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான். ஏசா 1:3யோவா 13:13-14யோவா 20:16லூக் 6:46மல்கி 1:6மத் 23:7-10மாற் 12:14 அப்பொழுது அவர்கள் இயேசுவைப் பிடித்து, அவரைக் கைது செய்தார்கள். அப் 2:23நியாயாதி 16:21யோவா 18:12புலம் 4:20 அவ்வேளையில், அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன், தன்னுடைய வாளை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரனை வெட்டினான்; அவனுடைய காது வெட்டுண்டது. யோவா 18:10-11லூக் 22:49-51மத் 26:51-54
இயேசு அவர்களைப் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு வாள்களுடனும் தடிகளுடனும் வந்திருக்கிறீர்கள்? 1 சாமு 26:18லூக் 22:52-531 சாமு 24:14-15மத் 26:55 ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்திலே போதித்துக்கொண்டு, உங்களோடு தானே இருந்தேன். அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை. ஆம், வேதவசனங்கள் நிறைவேற வேண்டுமே” என்றார். யோவா 18:20யோவா 8:2தானி 9:24-26லூக் 22:37மத் 1:22மத் 26:54மத் 26:56மாற் 12:35 அப்பொழுது எல்லோரும், இயேசுவைத் தனியே விட்டு ஓடிப்போனார்கள். மாற் 14:27யோவா 16:322 தீமோ 4:16சங் 88:18சங் 38:11சங் 88:7-8ஏசா 63:3யோவா 18:8
இயேசுவைப் பின்பற்றிய ஒரு இளைஞன், மென்பட்டு மேலுடையை உடுத்திக் கொண்டவனாய் இருந்தான். அவர்கள் அவனைப் பிடிக்க முயன்றபோது, அவன் தன்னுடைய மேலுடையை விட்டுவிட்டு, நிர்வாணமாய்த் தப்பி ஓடினான். மாற் 13:14-16ஆதி 39:12யோபு 2:4
ஆலோசகரின் முன் இயேசு
அவர்கள் இயேசுவை பிரதான ஆசாரியனிடம் கொண்டுப் போனார்கள். அங்கே எல்லா தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் ஒன்றுகூடி இருந்தார்கள். மத் 26:57-68யோவா 18:12-14லூக் 22:54-62ஏசா 53:7யோவா 18:19-24அப் 4:5-6மத் 26:3மாற் 15:1 பேதுரு சிறிது தூரத்தில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், பிரதான ஆசாரியனுடைய முற்றத்திற்குள் போனான். அங்கே, அவன் காவலாளிகளுடன் நெருப்பின் அருகே உட்கார்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தான். யோவா 18:18மத் 26:3யோவா 18:15-16யோவா 18:251 இராஜா 19:131 இராஜா 19:91 சாமு 13:7லூக் 22:44
தலைமை ஆசாரியர்களும், ஆலோசனைச் சங்கத்தில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிரான சாட்சியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு சாட்சியும் கிடைக்கவில்லை. 1 பேது 3:16-18அப் 24:1-13மத் 26:59-60மத் 5:221 இராஜா 21:13அப் 6:11-13தானி 6:4சங் 27:12 பலர் இயேசுவுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னவை, ஒன்றுக்கொன்று ஒத்துப்போகவில்லை.
பின்பு சிலர் எழுந்து நின்று, இயேசுவுக்கு எதிராக பொய்ச்சாட்சி கொடுத்தார்கள்: அப் 6:13-14மத் 26:60-61எரே 26:18எரே 26:8-9யோவா 2:18-21மத் 27:40மாற் 15:29 “மனிதருடைய கைகளினால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை நான் இடித்துப்போட்டு பின்பு மூன்று நாட்களில், நான் கைகளினால் கட்டப்படாத, வேறொரு ஆலயத்தைக் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்றார்கள். யோவா 2:192 கொரி 5:1எபி 9:11அப் 7:48எபி 9:24மாற் 15:29தானி 2:34தானி 2:45 அப்பொழுதுங்கூட, அவர்களுடைய சாட்சி ஒன்றுக்கொன்று வேறுபட்டது.
அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, இயேசுவிடம், “நீ பதில் சொல்லமாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கிற சாட்சி என்ன?” கேட்டான். யோவா 19:9-10மத் 26:62-63மாற் 15:3-5 ஆனால் இயேசுவோ ஒன்றும் பேசாதிருந்தார், பதில் எதுவும் சொல்லவில்லை. மத் 26:63-64மாற் 15:2ஏசா 53:7யோவா 10:30-31யோவா 19:71 பேது 2:23யோவா 10:36லூக் 22:67-71
மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து, “நீ போற்றப்பட்டவரின் மகனான கிறிஸ்துவா?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “ஆம், நானே அவர், மானிடமகனாகிய நான் வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார். தானி 7:13-14சங் 110:1எபி 1:3மாற் 13:26மத் 24:30லூக் 22:69மத் 26:64எபி 12:2
அப்பொழுது பிரதான ஆசாரியன் தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இனியும் நமக்குச் சாட்சிகள் வேண்டுமோ? மத் 26:65அப் 14:13-14ஏசா 36:22எரே 36:23-24லேவி 21:10எண் 14:6 இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் கேட்டீர்களே. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றான். லேவி 24:16யோவா 10:31-33யோவா 19:71 இராஜா 21:9-13யோவா 5:18யோவா 8:58-59லூக் 22:71மத் 26:65-66
அவர்கள் எல்லோரும் இயேசுவை, இவன் சாக வேண்டியவன் எனத் தீர்ப்புக் கூறினார்கள். அப்பொழுது சிலர், இயேசுவின்மேல் துப்பத் தொடங்கினார்கள். அவர்கள் அவருடைய கண்களைக் கட்டிவிட்டு, தங்களுடைய கைகளால் அவரை குத்தி, “தீர்க்கதரிசனம் சொல்!” என்று சொன்னபின்பு, காவலாளிகளும் அவரைப் பிடித்துக் கொண்டுபோய் அடித்தார்கள். மத் 26:67-68அப் 23:2ஏசா 50:6யோவா 19:3லூக் 22:63-64எஸ்த 7:8ஏசா 52:14ஏசா 53:3
பேதுரு இயேசுவை மறுதலித்தல்
அவ்வேளையில் பேதுரு கீழே அந்த முற்றத்திலேயே இருந்தான். அப்பொழுது பிரதான ஆசாரியனின் வேலைக்காரிகளில் ஒருத்தி அவ்வழியாய் வந்தாள். மாற் 14:54மத் 26:69-75யோவா 18:15-18யோவா 18:25-27மத் 26:58லூக் 22:55-62 அவள் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள். மாற் 14:54அப் 10:38யோவா 1:45-49யோவா 19:19மத் 2:23மத் 21:11மாற் 1:24மாற் 10:47
அவனை உற்றுப்பார்த்து, “நீயும் நாசரேத் ஊரானாகிய அந்த இயேசுவோடுகூட இருந்தவன்” என்றாள்.
ஆனால் அவனோ, “எனக்குத் தெரியாது, நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு விளங்கவும் இல்லை” என்று மறுதலித்தான். அவன் இவ்வாறு சொல்லிவிட்டு, முற்றத்தின் வாசல் பக்கமாய் போனான். அப்பொழுது சேவல் கூவிற்று. மாற் 14:29-312 தீமோ 2:12-13யோவா 13:36-38மத் 26:71-72மாற் 14:72
அந்த வேலைக்காரி அவனை அங்கேயும் கண்டு, அங்கே சுற்றி இருந்தவர்களைப் பார்த்து, “இவனும் அவர்களில் ஒருவன்” என்றாள். கலா 6:1யோவா 18:17யோவா 18:25லூக் 22:58மாற் 14:38 பேதுரு மீண்டும் அதை மறுதலித்தான். அப் 2:7லூக் 22:59-60மத் 26:73-74மாற் 14:68நியாயாதி 12:6யோவா 18:26-27
சிறிது நேரத்திற்குப் பின்பு அங்கு நின்றவர்கள் பேதுருவைப் பார்த்து, “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். ஏனென்றால் நீ ஒரு கலிலேயன்” என்றார்கள்.
அப்பொழுது பேதுரு, “நீங்கள் சொல்கிற அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். 1 கொரி 10:122இராஜா 10:322இராஜா 8:12-15எரே 17:9
உடனே சேவல் இரண்டாம் முறையாக கூவியது. அப்பொழுது, “சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்தான். அவன் மனம்வருந்தி அழுதான். மாற் 14:30மாற் 14:68எசேக் 7:162 கொரி 7:102 சாமு 24:10எசேக் 16:63எசேக் 36:31எரே 31:18-20