போகீமில் யெகோவாவின் தூதன்
யெகோவாவின் தூதனானவர் கில்காலில் இருந்து போகீமுக்குப் போய் சொன்னதாவது: “நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்து உங்கள் முற்பிதாக்களுக்குத் தருவேன் என்று நான் வாக்களித்த நாட்டிற்கு, நான் உங்களை வழிநடத்தி வந்தேன். நான் உங்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறமாட்டேன் என்றும், யாத் 20:2யாத் 23:20ஆதி 17:7-8லேவி 26:42சங் 105:44-45அப் 7:30-33யாத் 14:14யாத் 14:19 இந்நாட்டு மக்களோடு எந்த உடன்படிக்கையையும் நீங்கள் செய்யவேண்டாம் என்றும், அவர்களுடைய பலிபீடங்களை உடைத்துப்போடும்படியும் நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்களோ அதற்கு கீழ்ப்படியவில்லை. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்? உபா 7:2-4எரே 2:36உபா 7:16எஸ்றா 9:1-3எரே 2:5எண் 33:52-532 கொரி 6:14-17உபா 12:2-3 அதனால் இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்களுக்கு முன்பாக நான் அவர்களைத் துரத்தமாட்டேன்; அவர்கள் உங்கள் விலாக்களுக்கு, குத்தும் முள்ளாக இருப்பார்கள். அவர்களின் தெய்வங்கள் உங்களுக்கு கண்ணியாகவும் இருக்கும்.” யோசு 23:13எண் 33:55சங் 106:36உபா 7:16யாத் 23:33யாத் 34:12நியாயாதி 2:21நியாயாதி 3:6
யெகோவாவின் தூதனானவர் இவற்றை எல்லா இஸ்ரயேலர்களிடமும் சொன்னபோது மக்கள் சத்தமிட்டு அழுதார்கள். 2 கொரி 7:10யாக் 4:91 சாமு 7:6எஸ்றா 10:1எரே 31:9லூக் 6:21லூக் 7:38நீதி 17:10 அவர்கள் அந்த இடத்தை போகீம் 1 என்று அழைத்தார்கள். அங்கேயே அவர்கள் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்தினார்கள். 1 சாமு 7:9ஆதி 35:8நியாயாதி 13:19நியாயாதி 6:24யோசு 7:26
கீழ்ப்படியாமையும் தோல்வியும்
முன்பு யோசுவா இஸ்ரயேலரைப் போக அனுமதித்தபோது, அவர்கள் அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும்படி போனார்கள். ஒவ்வொருவரும் தங்கள் உரிமைச்சொத்தைப் பெறும்படி போனார்கள். யோசு 24:28-31யோசு 22:6 மக்கள் யோசுவாவின் வாழ்நாள் முழுவதும் யெகோவாவுக்குப் பணிசெய்தனர். யெகோவா இஸ்ரயேலருக்காகச் செய்த எல்லாப் பெரிய செயல்களையும் கண்டிருந்த, யோசுவாவுக்குப் பின் வாழ்ந்த சபைத்தலைவர்களின் காலத்திலும் மக்கள் யெகோவாவுக்கு சேவை செய்தார்கள். பிலி 2:122இராஜா 12:2யோசு 24:312 நாளாக 24:14-222 நாளாக 24:2
யெகோவாவின் அடியவனும், நூனின் மகனுமான யோசுவா நூற்றுப்பத்து வயதில் இறந்தான். யோசு 24:29-30 அவர்கள் திம்னாத் ஏரேஸில் அவனுடைய உரிமைச்சொத்தான நிலத்தில் அவனுடைய உடலை அடக்கம்பண்ணினார்கள். இது காயாஸ் மலைக்கு வடக்கே எப்பிராயீம் மலைநாட்டில் இருக்கிறது. யோசு 19:50யோசு 24:30
அதன்பின்பு அந்த எல்லா தலைமுறையினரும் தங்கள் தந்தையருடன் சேர்க்கப்பட்டபின், யெகோவாவையும் அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்தவற்றையும் அறியாத வேறு ஒரு தலைமுறை தோன்றியது. 1 சாமு 2:12தீத் 1:16யாத் 5:21 நாளாக 28:9அப் 13:36எரே 31:342 சாமு 7:12உபா 31:16 அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, பாகால் தெய்வங்களுக்குப் பணிசெய்தனர். நியாயாதி 10:6நியாயாதி 3:7நியாயாதி 4:1நியாயாதி 6:11 இராஜா 18:18நியாயாதி 8:33நியாயாதி 13:11 சாமு 7:4 அவர்கள் தங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் முற்பிதாக்களின் யெகோவாவாகிய இறைவனை கைவிட்டார்கள். தங்களைச் சுற்றியிருந்த மக்களின் பலவிதமான தெய்வங்களைப் பின்பற்றி வணங்கினார்கள். யெகோவாவுக்கு கோபமூட்டினார்கள். யாத் 20:5உபா 13:5உபா 29:25உபா 6:14-15உபா 29:18உபா 5:9உபா 31:16-17உபா 32:15 அவர்கள் யெகோவாவைக் கைவிட்டு பாகாலுக்கும், அஸ்தரோத்துக்கும் பணிசெய்ததினாலேயே யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள். நியாயாதி 10:6சங் 106:361 கொரி 10:20-22நியாயாதி 3:71 கொரி 8:51 இராஜா 11:331 இராஜா 11:51 சாமு 31:10 இஸ்ரயேலருக்கு விரோதமாக யெகோவா கோபங்கொண்டு அவர் அவர்களைக் கொள்ளைக்காரரிடத்தில் ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தார்கள். அவர் அவர்களைச் சுற்றிலுமிருந்த அவர்களுடைய பகைவர்களுக்கு விற்றுப்போட்டார், அந்தப் பகைவர்களைத் தொடர்ந்து அவர்களால் எதிர்க்க முடியவில்லை. 2இராஜா 17:20சங் 106:40-42உபா 32:30உபா 31:17-182 நாளாக 36:16நியாயாதி 10:7நியாயாதி 3:7-8நியாயாதி 4:2 இஸ்ரயேலர் சண்டையிடப் போகும்போதெல்லாம், யெகோவா அவர்களுக்கு ஆணையிட்டபடி யெகோவாவின் கரம் அவர்களுக்கெதிராக இருந்து அவர்களைத் தோல்வியுறச் செய்தது. அவர்கள் பெரும் துயரத்திற்குள்ளானார்கள். உபா 28:15-68யோசு 23:15-16லேவி 26:14-461 சாமு 13:61 சாமு 14:241 சாமு 30:62 கொரி 4:8உபா 32:40-41
அக்காலத்தில் யெகோவா நீதிபதிகளை நியமித்தார். அவர்கள் இஸ்ரயேல் மக்களை கொள்ளையரின் கைகளிலிருந்து மீட்டுக்கொண்டார்கள். அப் 13:201 சாமு 12:11சங் 106:43-45நியாயாதி 3:15நெகே 9:27நியாயாதி 3:9-10நியாயாதி 4:5நியாயாதி 6:14 ஆயினும் அவர்கள் அந்த நீதிபதிகளுக்கு செவிகொடுக்க மறுத்து, அந்நிய தெய்வங்களை வணங்கி விபசாரம் செய்தார்கள். யெகோவாவின் கட்டளைக்கு கீழ்படிந்த அவர்களின் முன்னோரின் வழியில் நடக்காமல், அவர்கள் விரைவில் வழிவிலகினார்கள். உபா 9:12கலா 1:6நியாயாதி 2:7ஓசி 2:2வெளி 17:1-51 சாமு 12:121 சாமு 12:171 சாமு 12:19 யெகோவா அவர்களுக்காக நீதிபதியை நியமித்தபோதெல்லாம், அவர் அந்த நீதிபதியோடுகூட இருந்து, அவர்களுடைய எதிரிகளிடமிருந்து நீதிபதியின் வாழ்நாளெல்லாம் அவர்களைப் பாதுகாத்தார். அவர்கள் தங்கள் பகைவர்களினால் ஒடுக்கப்பட்ட வேதனைக் குரலைக் கேட்டு யெகோவா அவர்களுக்கு இரங்கினார். உபா 32:36யோசு 1:5யாத் 2:242இராஜா 13:22-23ஓசி 11:8சங் 106:44-452இராஜா 13:4ஆதி 6:6 ஆனால் அந்த நீதிபதி இறந்தவுடன், இஸ்ரயேல் மக்கள் திரும்பவும் தங்கள் முன்னோரைவிட தூய்மையற்ற வழியில் நடந்தார்கள். அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி வணங்கி அதற்கு சேவை செய்தார்கள். அவர்கள் இப்படி தங்கள் தீய நடத்தைகளிலிருந்தும் பிடிவாதமான வழிகளிலிருந்தும் விடுபட மறுத்தார்கள். நியாயாதி 8:33நியாயாதி 4:12 நாளாக 24:17-18நியாயாதி 3:11-12மத் 23:32எரே 23:171 சாமு 15:23நியாயாதி 2:7
அப்பொழுது யெகோவா இஸ்ரயேலின்மேல் கோபம் மூண்டவராகி, “இந்த மக்கள் நான் அவர்களின் முற்பிதாக்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறிவிட்டார்கள். எனக்குச் செவிகொடுக்கவில்லை. நியாயாதி 2:14யோசு 23:16உபா 29:10-13உபா 32:22யாத் 24:3-8யாத் 32:10-11எசேக் 20:37நியாயாதி 10:7 அதனால் யோசுவா இறக்கும்போது, அழிக்காமல் விட்டுச்சென்ற எந்த நாட்டையும் இவர்களுக்கு முன்பாக துரத்திவிடமாட்டேன். யோசு 23:13எசேக் 20:24நியாயாதி 2:3நியாயாதி 3:3 ஆனால் நான் இவர்களைக்கொண்டு இஸ்ரயேலர்கள் தங்கள் முற்பிதாக்கள் நடந்ததுபோல, யெகோவாவின் வழியைக் கைக்கொண்டு அதில் நடக்கிறார்களோ, இல்லையோ என இஸ்ரயேலரைச் சோதிப்பேன்” என்றார். உபா 8:2உபா 8:16உபா 13:3நீதி 17:3ஆதி 22:12 நாளாக 32:31நியாயாதி 3:1-4யோபு 23:10 எனவே யெகோவா அந்த நாடுகளை அப்படியே தொடர்ந்து இருக்க விட்டிருந்தார்; அவர்களை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடுக்கவோ, உடனே துரத்திவிடவோ இல்லை.