ஆலோசனைச் சங்கத்தின்முன் ஸ்தேவானின் உரை
அப்பொழுது பிரதான ஆசாரியன் ஸ்தேவானிடம், “இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா?” என்று கேட்டான். யோவா 18:19-21மத் 26:61-62அப் 6:13-14யோவா 18:33-35மாற் 14:58-60
அதற்கு ஸ்தேவான் பதிலாக சொன்னதாவது: “சகோதரரே, தந்தையரே, எனக்குச் செவிகொடுங்கள்! நம்முடைய தந்தை ஆபிரகாம் ஆரானிலே 1 வாழ்வதற்குமுன் மெசொப்பொத்தாமியாவிலே இருந்தார். அப்பொழுது மகிமையின் இறைவன் அவருக்கு அங்கே காட்சியளித்தார். அப் 22:1ஆதி 11:31சங் 29:3எபி 1:3யோவா 1:14நெகே 9:7ஆதி 15:71 கொரி 2:8 இறைவன் ஆபிரகாமிடம், ‘நீ உன் நாட்டையும் உன் உறவினரையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’ 2 என்றார். ஆதி 12:1எபி 11:8ஆதி 15:7யோசு 24:32 கொரி 6:17லூக் 14:33மத் 10:37நெகே 9:8
“அப்படியே ஆபிரகாம் கல்தேயருடைய நாட்டைவிட்டுப் புறப்பட்டு, ஆரானில் குடியிருந்தான். ஆபிரகாமுடைய தகப்பன் இறந்தபின், நீங்கள் இப்பொழுது வாழுகிற இந்த நாட்டிற்கு இறைவன் அவனை அனுப்பினார். ஆதி 12:4-5ஆதி 11:31-32ஏசா 41:2ஏசா 41:9 இறைவன் இங்கே ஆபிரகாமுக்கு ஒரு அடி நிலத்தைக்கூட உரிமைச்சொத்தாகக் கொடுக்கவில்லை. ஆனால் அந்தக் காலத்தில் அவனுக்குப் பிள்ளை இல்லாதிருந்தும்கூட, அவனுக்குப்பின் அவனுடைய தலைமுறையினரும் இந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று இறைவன் வாக்குப்பண்ணினார். ஆதி 17:8ஆதி 12:7ஆதி 13:15ஆதி 15:18ஆதி 26:3உபா 10:11உபா 11:9உபா 2:5 இறைவன் ஆபிரகாமுடன் இவ்விதமாக பேசினார்: ‘உனது தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அவர்கள் நானூறு வருடங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள். ஆதி 15:13யாத் 12:40-41கலா 3:17ஆதி 15:16 ஆனால் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணிசெய்கிற அந்த நாட்டையோ நான் நியாயந்தீர்ப்பேன்.’ இறைவன் தொடர்ந்து, ‘அதற்குப் பின்பு அவர்கள் அந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டுவந்து, இந்த இடத்திலே என்னை வழிபடுவார்கள்’ 3 என்றார். யாத் 3:12சங் 105:27-36யாத் 7:1-14ஆதி 15:14-16நெகே 9:9-11சங் 135:8-9சங் 136:10-15சங் 74:12-14 பின்பு இறைவன், ஆபிரகாமுக்கு விருத்தசேதனத்தின் உடன்படிக்கையைக் கொடுத்தார். ஆபிரகாம் ஈசாக்கிற்குத் தகப்பனாகி, அவன் பிறந்து எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்தான். பின்பு ஈசாக்கு, யாக்கோபிற்குத் தகப்பனானான், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரத் தந்தையருக்குத் தகப்பனானான். ஆதி 17:9-14ஆதி 35:23-261 நாளாக 1:341 நாளாக 2:1-2அப் 2:29யாத் 1:1-4கலா 3:15கலா 3:17
“கோத்திரத் தந்தையர் யோசேப்பின்மேல் பொறாமை கொண்டதால், அவர்கள் அவனை எகிப்தியருக்கு அடிமையாக விற்றார்கள். ஆனால் இறைவனோ, அவனோடுகூட இருந்தார். ஆதி 39:2சங் 105:17ஏசா 43:2ஆதி 45:4ஏசா 41:10ஆதி 37:18-29ஆதி 39:21-23ஆதி 39:5 அவனுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்து, அவனைத் தப்புவித்தார். இறைவன் யோசேப்பிற்கு ஞானத்தைக் கொடுத்து, எகிப்தின் அரசனாகிய பார்வோனின் நல்மதிப்பைப் பெறும்படி செய்தார். ஆகவே அவன் யோசேப்பை எகிப்திலும் தனது அரண்மனை முழுவதிலும் அதிகாரியாக ஏற்படுத்தினான். 2 தீமோ 4:18நீதி 3:4ஆதி 48:16நீதி 2:6சங் 22:24ஆதி 42:6சங் 34:17-19ஆதி 41:12-46
“பின்பு முழு எகிப்தையும் கானான் நாட்டையும் பஞ்சம் தாக்கியது. இதனால் பெருந்துன்பம் ஏற்பட்டது; நமது தந்தையருக்கும் உணவு கிடைக்கவில்லை. ஆதி 41:54-57ஆதி 42:5ஆதி 43:1ஆதி 45:11ஆதி 45:5-6ஆதி 47:13-15சங் 105:16 எகிப்திலே தானியம் இருக்கிறது என யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் நமது தந்தையரை முதலாவது பயணமாக, அங்கே போகும்படி அனுப்பினான். ஆதி 42:1-24ஆதி 43:2 அவர்களது இரண்டாவது பயணத்தின்போது, யோசேப்பு தன்னை யார் என்று தன் சகோதரருக்கு அறிவித்தான். பார்வோனும் யோசேப்பின் குடும்பத்தைப்பற்றி அறிந்துகொண்டான். ஆதி 45:1-18ஆதி 46:31 இதற்குப் பின்பு, யோசேப்பு தனது தகப்பன் யாக்கோபையும், அவனுடைய குடும்பத்தார் எல்லோரையும் அழைத்தான். அவர்கள் எல்லோருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள். உபா 10:22ஆதி 46:26-27யாத் 1:51 நாளாக 2:5-6ஆதி 45:9-11ஆதி 46:12சங் 105:23 அப்பொழுது யாக்கோபு எகிப்திற்குச் சென்றான். அங்கே அவனும், நமது தந்தையரும் காலமானார்கள். யாத் 1:6ஆதி 49:33ஆதி 46:3-7உபா 10:22உபா 26:5எபி 11:21-22யோசு 24:4எண் 20:15 அவர்களது உடல்கள் சீகேமுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்த கல்லறையில் வைக்கப்பட்டன. அந்தக் கல்லறையைச் சீகேமில் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு ஆமோரின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் வாங்கியிருந்தான். யோசு 24:32ஆதி 23:16யாத் 13:19ஆதி 33:9-20ஆதி 34:2-31ஆதி 49:29-32ஆதி 50:13ஆதி 35:19
“இறைவன் ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற காலம் நெருங்கியபோது, எகிப்திலிருந்த நமது மக்களின் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது. யாத் 1:7-12அப் 13:17அப் 7:6ஆதி 15:13-16சங் 105:24-252 பேது 3:8-9யாத் 1:20 பின்பு, யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத புதிய அரசன், எகிப்திற்கு அதிகாரியாக வந்தான். 4 யாத் 1:8 அந்த அரசன் நமது மக்களைக் கொடுமையாக நடத்தினான். நமது முற்பிதாக்களைத் தங்கள் குழந்தைகளைச் சாகும்படி எறிந்துவிட வேண்டுமென்று பலவந்தப்படுத்தி, அவர்களை ஒடுக்கினான். சங் 105:25யாத் 1:9-22சங் 83:4-5வெளி 12:4-5சங் 129:1-3
“இந்தக் காலத்திலேதான் மோசே பிறந்தான். அவன் ஒரு சாதாரண குழந்தை அல்ல. மூன்று மாதங்களாக, அவன் தனது தகப்பன் வீட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டான். எபி 11:23யாத் 2:2-101 சாமு 16:12 பின்பு, அவன் வீட்டிலிருந்து வெளியே எறியப்பட்டபோது, பார்வோனின் மகள் அவனை எடுத்துத் தனது சொந்த மகனாக அவனை வளர்த்தாள். எபி 11:24உபா 32:26யாத் 2:2-10 எனவே மோசே எகிப்தியரின் ஞானத்திலெல்லாம் கற்றுத்தேறி, பேச்சிலும் செயலிலும் வல்லமையுடையவனாய் இருந்தான். ஏசா 19:112 நாளாக 9:22தானி 1:17-20தானி 1:4லூக் 24:191 இராஜா 4:29-30
“மோசே நாற்பது வயதுடையவனான போது, தனது சகோதரர்களாகிய இஸ்ரயேலரைச் சந்திக்க உள்ளத்தில் தீர்மானித்தான். யாத் 2:11-12எபி 11:24-26பிலி 2:12-13நீதி 21:1எஸ்றா 7:27யாக் 1:17வெளி 17:172 நாளாக 30:12 அவர்களில் ஒருவன், ஒரு எகிப்தியனால் துன்புறுத்தப்படுவதைக் கண்டான். அப்பொழுது மோசே அவனைப் பாதுகாக்கும்படி போய், எகிப்தியனைக் கொலைசெய்தான். யோவா 18:10-11அப் 7:28யோவா 18:25-27 தன்னுடைய சொந்த மக்களை இறைவன் தப்புவிப்பதற்காகத் தன்னைப் பயன்படுத்துகிறார் என்று அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று மோசே நினைத்தான். ஆனால் அவர்களோ அப்படிப் புரிந்துகொள்ளவில்லை. 1 கொரி 15:102 கொரி 6:1லூக் 18:34லூக் 9:451 கொரி 3:91 சாமு 14:451 சாமு 19:52இராஜா 5:1 மறுநாள் இரண்டு இஸ்ரயேலர்கள் சண்டையிடுவதை மோசே கண்டு, ‘நண்பர்களே, நீங்கள் சகோதரர் அல்லவா; ஏன் ஒருவரையொருவர் காயப்படுத்துகிறீர்கள்?’ என்று சொல்லி, அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றான். யாத் 2:13-151 யோவா 3:11-151 கொரி 6:6-8ஆதி 13:8ஆதி 45:24யோவா 15:17-18பிலி 2:1பிலி 2:3
“ஆனால் மற்றவனைத் துன்புறுத்தியவன், மோசேயை ஒருபக்கமாய்த் தள்ளிவிட்டு, ‘எங்கள்மேல் உன்னை அதிபதியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்? லூக் 12:14அப் 7:35நீதி 9:7-81 சாமு 25:14-15அப் 3:13-15அப் 4:11-12அப் 4:7அப் 5:33 நேற்று அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொல்லப்பார்க்கிறாயோ?’ 5 என்று கேட்டான். இதை மோசே கேட்டபோது, அவன் மீதியானுக்கு ஓடிப்போய், அங்கே ஒரு வெளிநாட்டானாக குடியிருந்தபோது அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். யாத் 18:2-4யாத் 2:14-22யாத் 4:19-20
“நாற்பது ஆண்டுகள் சென்றபின்பு, முட்செடி எரிந்துகொண்டிருந்த அக்கினி ஜுவாலையில், இறைத்தூதனானவர் மோசேக்குக் காட்சியளித்தார். இது சீனாய் மலையின் அருகேயுள்ள பாலைவனத்திலே நடந்தது. யாத் 3:1-2அப் 7:35ஏசா 43:2அப் 7:32யாத் 3:6ஏசா 63:9அப் 7:17தானி 3:27 அவன் இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தான். அவன் அதை இன்னும் நன்றாகப் பார்க்கும்படி, அதன் அருகே போனான். அங்கே அவன் கர்த்தரின் குரலைக் கேட்டான். அந்தக் குரல்: யாத் 3:3-4 ‘நான் உனது தந்தையரின் இறைவன்; ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவன்’ 6 என்றது. இதைக் கேட்டபோது, மோசே பயந்து நடுங்கினான். அதைப்பார்க்க அவன் துணியவில்லை. யாத் 3:6மத் 22:321 இராஜா 19:13அப் 3:13அப் 9:4-6தானி 10:7-8யாத் 3:15யாத் 33:20
“அப்பொழுது கர்த்தர் அவனிடம், ‘நீ உனது பாதரட்சைகளை கழற்றிப்போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்த நிலமாய் இருக்கிறது. யாத் 3:5யோசு 5:152 பேது 1:18பிரச 5:1 எகிப்தில் இருக்கும் என் மக்கள் ஒடுக்கப்படுவதை நான் கண்டேன். நான் அவர்களுடைய வேதனைக் குரலைக் கேட்டு, அவர்களை விடுதலைசெய்ய இறங்கி வந்திருக்கின்றேன். இப்பொழுது நீ வா; நான் உன்னைத் திரும்பவும் எகிப்திற்கு அனுப்புவேன்’ 7 என்றார். யாத் 3:7-10யாத் 4:31நெகே 9:9சங் 106:44யாத் 2:23-25யாத் 3:14யோவா 6:38ஓசி 12:13
“இந்த மோசேயைத்தான் இஸ்ரயேலர் பார்த்து, ‘எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?’ எனக் கேட்டுப் புறக்கணித்திருந்தார்கள். ஆனால், அவனே அவர்களின் அதிகாரியாகவும் மீட்பனாகவும் இருக்கும்படி இறைவனால் அனுப்பப்பட்டான். முட்செடியில் அவனுக்குக் காட்சியளித்த இறைவன் தம் தூதர் மூலமாய் இதைச் செய்தார். லூக் 19:14சங் 118:22-23எண் 20:16சங் 113:7-8சங் 75:7யாத் 14:191 சாமு 10:271 சாமு 12:8 மோசே அவர்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தி, எகிப்திலும் செங்கடல் அருகேயும், நாற்பது வருடங்களாக பாலைவனத்திலும் அதிசயங்களையும் அற்புத அடையாளங்களையும் செய்தான். யாத் 12:41யாத் 14:21யாத் 33:1யாத் 14:27-29யாத் 16:35யாத் 7:1-14சங் 78:12-33அப் 13:18
“இந்த மோசேதான் இஸ்ரயேலரிடம், ‘இறைவன் உங்கள் சொந்த மக்களிலிருந்தே, என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள்’ 8 என்று சொன்னவன். உபா 18:15-19அப் 3:22-23யோவா 18:37அப் 7:38மத் 17:3-5லூக் 9:30-31லூக் 9:35மாற் 9:7 பாலைவனத்தில் கூடியிருந்த மக்களுடனும், சீனாய் மலையில் தன்னுடன் பேசிய இறைவனின் தூதனுடனும், நமது தந்தையருடனும் இருந்தவன் இவனே. நமக்குக் கொடுக்கும்படி, ஜீவ வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டவனும் இந்த மோசேயே. ரோம 3:2எபி 5:121 பேது 4:11அப் 7:53உபா 33:4யோவா 1:17உபா 32:46-47உபா 5:27-31
“ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அவர்கள் அவனைப் புறக்கணித்து, தங்கள் இருதயத்தை எகிப்தை நோக்கித் திருப்பினார்கள். எண் 14:3-4எண் 11:5நெகே 9:16-17அப் 7:51-52யாத் 16:3எசேக் 20:6-141 இராஜா 2:27யாத் 14:11-12 அவர்கள் ஆரோனிடம், ‘நமக்கு முன்பாகப் போகும்படி தெய்வங்களைச் செய். எங்களை எகிப்திலிருந்து வழிநடத்திவந்த மோசேயைப்பற்றியோ, அவனுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது!’ 9 என்றார்கள். யாத் 32:1யாத் 32:23 அக்காலத்தில்தான் அவர்கள் ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தில் ஒரு சிலையைச் செய்தார்கள். அவர்கள் அதற்குப் பலிகளைக் கொண்டுவந்து, தாங்கள் கைகளினால் செய்த அந்தச் சிலையை கொண்டாடினார்கள். சங் 106:19-21நெகே 9:18ஆப 2:18-20ஓசி 9:1ஓசி 9:10வெளி 9:20உபா 9:12-18யாத் 32:17-20 அதனால் இறைவன் அவர்களைவிட்டு விலகி, வான மண்டலத்திலுள்ள சூரிய, சந்திர, நட்சத்திரங்களை வணங்கும்படி அவர்களை விட்டுவிட்டார். இது இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதற்கு ஒத்திருக்கின்றது: ஆமோ 5:25-26எசேக் 20:39எரே 19:13சங் 81:11-12உபா 4:19எபி 3:15-17ஏசா 63:10யோபு 31:26-28
“இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாக நீங்கள் இருந்தபோது,
எனக்கு பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ?
நீங்கள் மோளேக் தெய்வத்தின் கூடாரத்தையும், ஆமோ 5:26-27யாத் 20:4-5உபா 5:8-9லேவி 20:2-52இராஜா 17:16-182இராஜா 18:112இராஜா 21:6உபா 4:16-18
உங்கள் ரெம்பான் தெய்வத்தின் நட்சத்திரத்தையும் தூக்கித்திரிந்தீர்களே.
இவைகளெல்லாம் நீங்கள் வணங்கும்படி செய்துகொண்ட விக்கிரகங்களே.
எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் நாடுகடத்தும்படி 10 அனுப்புவேன்.
“நமது முற்பிதாக்கள் பாலைவனத்தில், தங்களுடன் சாட்சியின் கூடாரத்தை வைத்திருந்தார்கள். இது மோசேக்கு இறைவன் அறிவுறுத்திய விதமாக, அவன் கண்ட மாதிரியின்படி செய்யப்பட்டிருந்தது. யாத் 25:40யாத் 38:21எபி 8:51 நாளாக 28:111 நாளாக 28:192 நாளாக 24:6யாத் 25:8-9யாத் 26:30 நமது தந்தையர் அந்தக் கூடாரத்தைப் பெற்றுக்கொண்டு, யோசுவாவின் தலைமையின்கீழ் யூதரல்லாதவர்களின் நாட்டைக் கைப்பற்றியபோது, அந்தக் கூடாரத்தைத் தங்களுடன் கொண்டுவந்தார்கள். அந்த மக்களை அவர்களுக்கு முன்பாக இறைவனே துரத்தினார். அந்தக் கூடாரம் நமது நாட்டில் தாவீதின் காலம்வரைக்கும் இருந்தது. சங் 44:2யோசு 18:1யோசு 23:9யோசு 24:181 நாளாக 15:1-171 நாளாக 16:391 நாளாக 21:291 இராஜா 8:4 தாவீது இறைவனின் தயவைப் பெற்றவனாய், தான் யாக்கோபின் இறைவனுக்கு ஒரு உறைவிடத்தை அமைக்கலாமோ என்று கேட்டான். சங் 132:1-5அப் 13:222 சாமு 7:1-51 நாளாக 17:1-41 நாளாக 22:7-81 சாமு 16:11 சாமு 16:11-132 சாமு 6:21 ஆனால், சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினான். 1 இராஜா 8:201 இராஜா 6:37-382 சாமு 7:131 நாளாக 17:11 இராஜா 5:11 இராஜா 7:13-512 நாளாக 2:1-42 நாளாக 3:1
“எப்படியும் மகா உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வதுபோல்: அப் 17:24-25ஏசா 66:1-21 இராஜா 8:272 நாளாக 2:5-62 நாளாக 6:18சங் 91:9சங் 91:1தானி 4:17
“ ‘வானம் எனது அரியணை, ஏசா 66:1சங் 11:4யோவா 4:21எரே 23:24வெளி 3:211 இராஜா 22:19மத் 23:22மத் 5:34-35
பூமி எனது பாதபீடம்.
நீங்கள் எனக்கு எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்?
நான் இளைப்பாறும் இடம் எங்கே இருக்கும்?
இவற்றையெல்லாம் என் கரம் படைக்கவில்லையா?’ 11 எரே 32:17ஏசா 66:2சங் 33:6-9அப் 14:15யாத் 20:11ஏசா 40:28ஏசா 45:12ஏசா 45:7-8
என்று கர்த்தர் கேட்கிறார்.
“அடங்காதவர்களே! இருதயங்களிலும், காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே! நீங்களும் உங்கள் தந்தையரைப் போலவே இருக்கிறீர்கள்: நீங்கள் எப்போதும் பரிசுத்த ஆவியானவரை எதிர்க்கிறீர்கள்! உபா 10:16எபே 4:30ஏசா 63:10எரே 4:4லேவி 26:41பிலி 3:3யாத் 33:5யாத் 32:9 உங்கள் தந்தையர் துன்பப்படுத்தாத இறைவாக்கினர் எப்போதாவது இருந்ததுண்டோ? நீதியானவரின் வருகையை முன்னறிவித்தவர்களைக்கூட, அவர்கள் கொலைசெய்தார்களே. இப்பொழுது நீங்களே அவரைக் காட்டிக்கொடுத்துக் கொலைசெய்தீர்கள். மத் 5:121 இராஜா 19:102 நாளாக 36:161 தெச 2:15அப் 3:14-15எரே 2:30லூக் 11:47-51மத் 23:31-37 இறைத்தூதரின் மூலமாய் கொடுக்கப்பட்ட மோசேயின் சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை” என்றான். எபி 2:2கலா 3:19அப் 7:38உபா 33:2யோவா 7:19கலா 6:13எசேக் 20:18-21ரோம 2:23-25
ஸ்தேவான் மீது கல்லெறிதல்
அவர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் ஆத்திரமடைந்து, ஸ்தேவானைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள். அப் 5:33சங் 35:16யோபு 16:9லூக் 13:28மத் 13:50மத் 25:30அப் 22:22-23புலம் 2:16 ஆனால் ஸ்தேவான் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாய், மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனின் மகிமையைக் கண்டான், இறைவனுடைய வலதுபக்கத்தில் இயேசு நிற்கிறதையும் அவன் கண்டான். மாற் 16:19எபி 1:32 கொரி 4:6அப் 6:10அப் 6:5அப் 6:8எபி 8:1சங் 109:31 “இதோ பாருங்கள், நான் பரலோகம் திறந்திருப்பதையும், மானிடமகன் இறைவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்றான். மத் 26:64-65அப் 10:11வெளி 11:19மத் 3:16வெளி 19:11அப் 10:16தானி 7:13-14வெளி 4:1
இதைக் கேட்டபோது, அவர்கள் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, உரத்த குரலில் கூச்சலிட்டு, அவனை நோக்கி விரைந்து ஓடிப்போய்த் தாக்கினார்கள். சகரி 7:11அப் 23:27சங் 58:4அப் 21:27-31அப் 7:54நீதி 21:13 பின்பு அவனைப் பட்டணத்திலிருந்து வெளியே இழுத்துக்கொண்டுபோய், அவன்மேல் கல்லெறியத் தொடங்கினார்கள். அப்பொழுது சாட்சிக்காரர்கள் தங்கள் மேலுடைகளைக் கழற்றி, சவுல் என்னும் பெயருடைய ஒரு வாலிபனின் காலடியில் வைத்தார்கள். அப் 22:20அப் 8:1அப் 6:13லேவி 24:14-161 இராஜா 21:13அப் 22:4உபா 13:9-10உபா 17:7
அவர்கள் ஸ்தேவானின்மேல் கல்லெறிந்து கொண்டிருக்கையிலே அவன், “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடினான். லூக் 23:46சங் 31:5அப் 22:161 கொரி 1:2அப் 2:21அப் 9:14யோவே 2:32அப் 9:21 பின்பு அவன் முழங்காற்படியிட்டு உரத்த குரலில், “கர்த்தாவே இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தவேண்டாம்” என்றான். அவன் இதைச் சொன்னபின்பு, விழுந்து நித்திரையடைந்தான். மத் 5:44லூக் 23:341 கொரி 15:201 தெச 4:13-14ரோம 12:14-21அப் 20:36அப் 9:40லூக் 6:28