ஆபிராமுடன் யெகோவாவினுடைய உடன்படிக்கை
அதற்குபின் ஒரு தரிசனத்தில் யெகோவாவின் வார்த்தை ஆபிராமுக்கு வந்தது: ஏசா 41:10சங் 119:114சங் 84:11எபி 13:5-6ஆதி 26:24ஏசா 41:14உபா 33:26-29புலம் 3:24
“ஆபிராமே, பயப்படாதே.
நானே உன் கேடயம்,
நானே உன் மகா பெரிய வெகுமதி.”
அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் பிள்ளையில்லாதவனாய் இருக்க, எனக்கு நீர் எதைத் தரப்போகிறீர்? என் சொத்துக்களை உரிமையாக்கிக் கொள்ளப்போகிறவன் தமஸ்கு பட்டணத்தைச் சேர்ந்த எலியேசர்தானே?” ஆதி 25:211 சாமு 1:11அப் 7:5ஆதி 12:1-3ஆதி 24:10ஆதி 24:2ஆதி 43:19ஆதி 44:1 பின்னும் ஆபிராம், “நீர் எனக்குப் பிள்ளைகளைக் கொடுக்கவில்லையே; ஆதலால், என் வீட்டு வேலைக்காரன் என் வாரிசாகப் போகிறான்” என்றான். ஆதி 14:14நீதி 29:21பிரச 2:7எபி 10:35-36எரே 12:1ஆதி 12:2ஆதி 13:16நீதி 13:12
அப்பொழுது ஆபிராமுக்கு யெகோவாவினுடைய வார்த்தை வந்தது: “இந்த மனிதன் உன் வாரிசாய் இருக்கமாட்டான், உன் சதையும் உன் இரத்தமுமாய் உன்னிலிருந்து பிறக்கும் உன் மகனே உன் வாரிசாய் இருப்பான்” என்றார். ஆதி 17:162 சாமு 7:12கலா 4:28ஆதி 21:122 நாளாக 32:21பிலே 1:122 சாமு 16:11 பின்பு யெகோவா ஆபிராமை வெளியே கூட்டிக்கொண்டுவந்து, “வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ண முடியுமானால் எண்ணு; உன் சந்ததியும் அவற்றைப் போலவே இருக்கும்” என்றார். எபி 11:12ரோம 4:18உபா 1:10யாத் 32:13ஆதி 22:17உபா 10:22எரே 33:221 நாளாக 27:23
ஆபிராம் யெகோவாவை விசுவாசித்தான், அந்த விசுவாசத்தை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். யாக் 2:23கலா 3:6-14ரோம 4:9ரோம 4:20-25ரோம 4:3-6எபி 11:8சங் 106:31ரோம 4:11
பின்னும் யெகோவா ஆபிராமிடம், “இந்த நாட்டை நீ உடைமையாக்கிக்கொள்ளும்படி இதை உனக்குக் கொடுப்பதற்காக, கல்தேயரின் ஊர் பட்டணத்திலிருந்து உன்னைக் கொண்டுவந்த யெகோவா நானே” என்றார். ஆதி 12:1அப் 7:2-4ஆதி 13:15-17நெகே 9:7-8சங் 105:42சங் 105:44ரோம 4:13ஆதி 12:7
அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் இதை உரிமையாக்கிக்கொள்வேன் என்பதை எப்படி அறிவேன்?” என்று கேட்டான். லூக் 1:18லூக் 1:342இராஜா 20:8ஏசா 7:11நியாயாதி 6:17-24நியாயாதி 6:36-40சங் 86:171 சாமு 14:9-10
யெகோவா அவனிடம், “ஒரு இளம் பசுவையும், ஒரு வெள்ளாட்டையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் என்னிடம் கொண்டுவா, அவை ஒவ்வொன்றும் மூன்று வயதுடையதாய் இருக்கவேண்டும்; அத்துடன் ஒரு காட்டுப்புறாவையும் ஒரு புறாக்குஞ்சையும் கொண்டுவா” என்றார். லேவி 14:22லேவி 14:30லூக் 2:24லேவி 1:14லேவி 3:1லேவி 3:6லேவி 9:2ஆதி 22:13
அப்பொழுது ஆபிராம் அவை எல்லாவற்றையும் அவரிடம் கொண்டுவந்து, மிருகங்களை இரண்டாகப் பிளந்து, அவைகளை ஒன்றுக்கொன்று எதிராக ஒழுங்குபடுத்தி வைத்தான்; பறவைகளையோ அவன் இரண்டாக வெட்டவில்லை. எரே 34:18-19லேவி 1:17ஆதி 15:172 தீமோ 2:15 அப்பொழுது மாமிசம் தின்னிப் பறவைகள், வெட்டி வைத்த உடல்களை உண்பதற்கு இறங்கின, ஆபிராம் அவைகளைத் துரத்திவிட்டான். மத் 13:4சங் 119:13எசேக் 17:3எசேக் 17:7
சூரியன் மறைந்துகொண்டிருக்கும்போது, ஆபிராம் ஆழ்ந்த நித்திரை அடைந்தான்; பயங்கரமான காரிருள் அவனை மூடிக்கொண்டது. ஆதி 2:21யோபு 33:15தானி 10:8-91 சாமு 26:12அப் 9:8-9யோபு 4:13-14சங் 4:3-5அப் 20:9 அவ்வேளையில் யெகோவா ஆபிராமிடம், “நீ நன்கு அறிந்துகொள்: உன் சந்ததிகள் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள், அவர்கள் நானூறு வருடங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள். அப் 7:6-7யாத் 1:11யாத் 12:40-41அப் 7:17யாத் 1:1-2கலா 3:17லேவி 19:34யாத் 23:9 ஆனால் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணிசெய்கிற அந்த நாட்டையோ நான் நியாயந்தீர்ப்பேன்; அதன்பின் அவர்கள் அதிக உடைமைகளுடன் அங்கிருந்து வெளியேறுவார்கள். நெகே 9:9-11யாத் 6:5-6யாத் 12:32-38யோசு 24:4-71 சாமு 12:8உபா 4:20யாத் 7:1-14சங் 135:14 நீயோ, மன சமாதானத்துடன் உன் முன்னோருடன் சேருவாய், முதிர்வயதில் இறந்து அடக்கம்பண்ணப்படுவாய். யோபு 5:26ஆதி 25:7-92 நாளாக 34:28எண் 27:13தானி 12:131 நாளாக 29:28அப் 13:36பிரச 12:7 உன் சந்ததிகள் நான்காம் தலைமுறையில் மறுபடியும் இங்கே திரும்பி வருவார்கள்; ஏனெனில், எமோரியருடைய பாவம் இன்னும் முழு அளவை அடையவில்லை” என்றார். 1 இராஜா 21:26தானி 8:23யாத் 12:40மத் 23:32-351 தெச 2:162 பேது 3:8-9சகரி 5:5-11
சூரியன் மறைந்து இருள் உண்டானபோது, எரிகின்ற தீப்பந்தமும், புகையும் நெருப்பு ஜாடியும் தோன்றி, வெட்டிவைத்த துண்டுகளிடையே சென்றது. எரே 34:18-19நியாயாதி 6:21எரே 11:41 நாளாக 21:26யாத் 3:2-32 சாமு 22:9உபா 4:20ஏசா 62:1 அந்நாளிலே யெகோவா ஆபிராமுடன் ஒரு உடன்படிக்கை செய்து, “எகிப்தின் நதிக்கும் ஐபிராத்து நதிக்கும் இடையிலுள்ள யோசு 1:3-4ஆதி 12:7ஆதி 24:7ஆதி 13:15உபா 11:24யாத் 23:27-31ஏசா 27:12நெகே 9:8 கேனியர், கெனிசியர், கத்மோனியர் எண் 24:21-22 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், ஆதி 14:5ஏசா 17:5 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் என்பவர்களின் நாட்டை உன் சந்ததிக்குக் கொடுக்கிறேன்” என்றார். உபா 7:1யாத் 23:23-28யாத் 33:2யாத் 34:11ஆதி 10:15-19மத் 8:28