1 நாளாகமம் 15

1 Chronicles 15

பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவருதல்

அதன்பின் தாவீது தனக்கென தாவீதின் நகரத்திலே வீடுகளைக் கட்டினான், அதன்பின் அவன் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கென ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கென ஒரு கூடாரத்தையும் அமைத்தான். 1 நாளாக 16:1சங் 132:51 நாளாக 15:31 நாளாக 17:1-5அப் 7:462 சாமு 13:7-82 சாமு 14:242 சாமு 5:9 பின்னர் தாவீது, “லேவியரைத்தவிர வேறு யாரும் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கக்கூடாது. ஏனெனில் யெகோவா தனது உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்காகவும், தனக்கு முன் எப்பொழுதும் பணி செய்தவற்காகவும் அவர்களையே தெரிந்தெடுத்திருக்கிறார்” எனச் சொன்னான். உபா 10:8உபா 31:9எண் 18:1-8எரே 33:17-22யோசு 3:3எண் 4:19-20எண் 4:2-15எண் 8:13-14

தாவீது யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைத் தான் ஆயத்தப்படுத்தியிருந்த இடத்திற்கு கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலர் எல்லோரையும் எருசலேமில் ஒன்றுகூட்டினான். 1 நாளாக 13:51 இராஜா 8:11 நாளாக 15:12 சாமு 6:122 சாமு 6:171 நாளாக 15:12

அத்துடன் தாவீது ஆரோனுடைய, லேவியருடைய சந்ததிகளையும் ஒன்றுகூடும்படி அழைத்தான். 1 நாளாக 6:16-301 நாளாக 6:49-501 நாளாக 12:26-28யாத் 6:16-22எண் 3:4

கோகாத்தின் சந்ததிகளிலிருந்து ஊரியேல் என்னும் தலைவனும், 1 நாளாக 6:22-24

அவனுடைய உறவினர்கள் 120 பேரும்;

மெராரியின் சந்ததிகளில் இருந்து அசாயா என்னும் தலைவனும், 1 நாளாக 6:29-30

அவனுடைய உறவினர்கள் 20 பேரும்;

கெர்சோமின் சந்ததிகளிலிருந்து 1 நாளாக 15:111 நாளாக 23:8

யோயேல் என்னும் தலைவனும் அவனுடைய உறவினர்கள் 130 பேரும்;

எலிசாபானின் சந்ததிகளிலிருந்து யாத் 6:22

செமாயா என்னும் தலைவனும் அவனுடைய உறவினர்கள் 200 பேரும்;

எப்ரோனின் சந்ததிகளிலிருந்து யாத் 6:181 நாளாக 23:121 நாளாக 23:191 நாளாக 26:231 நாளாக 26:30-311 நாளாக 6:2எண் 26:58

எலியேல் என்னும் தலைவனும், அவனுடைய உறவினர்கள் 80 பேரும்;

ஊசியேலின் சந்ததிகளிலிருந்து அம்மினதாப் என்னும் தலைவனும், 1 நாளாக 23:121 நாளாக 6:181 நாளாக 6:22யாத் 6:18யாத் 6:22

அவனுடைய உறவினர்கள் 122 பேரும் அங்கு அழைக்கப்பட்டனர்.

பின்பு தாவீது ஆசாரியர்களாகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியர்களாகிய ஊரியேல், அசாயா, யோயேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்தான். 1 நாளாக 12:281 இராஜா 2:351 சாமு 22:20-231 நாளாக 18:161 இராஜா 2:262 சாமு 15:24-292 சாமு 15:352 சாமு 20:25 அவன் அவர்களிடம், “நீங்கள் லேவிய குடும்பங்களின் தலைவர்கள்; நீங்களும் உங்களுடன் ஒத்த மற்ற லேவியர்களும் உங்களைச் சுத்திகரித்துக்கொண்டு, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை அதற்காக நான் ஆயத்தப்படுத்திய இடத்திற்குக் கொண்டுவாருங்கள். 2 நாளாக 35:61 நாளாக 15:14யாத் 19:14-15ரோம 12:1-22 நாளாக 30:151 நாளாக 15:11 நாளாக 15:31 நாளாக 24:31 முதல்முறை லேவியராகிய நீங்கள் அதைக் கொண்டுவராததினால்தான், எங்கள் இறைவனாகிய யெகோவா தனது கோபத்தை நம்மேல் வரப்பண்ணினார். நாம் முறையான வழியில் எப்படிச் செய்வதென அவரிடம் விசாரியாது போனோம்” என்றான். 2 சாமு 6:31 கொரி 14:401 கொரி 11:21 யோவா 1:8-101 நாளாக 13:7-111 நாளாக 15:22 சாமு 6:7-8உபா 31:9 எனவே ஆசாரியர்களும் லேவியர்களும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காகத் தங்களைத் பரிசுத்தப்படுத்திக் கொண்டார்கள். 2 நாளாக 29:152 நாளாக 29:34யோவே 2:16-17லேவி 10:3 லேவியர்கள் யெகோவாவின் வார்த்தைப்படி, மோசே கட்டளையிட்டவாறு இறைவனின் பெட்டியைத் தாங்கும் கம்புகளைத் தோளில் வைத்துப் பெட்டியைச் சுமந்து வந்தார்கள். எண் 4:15எண் 7:91 இராஜா 8:82 நாளாக 5:9யாத் 25:12-15யாத் 37:3-5யாத் 40:20எண் 4:5-6

தாவீது லேவியர்களின் தலைவர்களிடம், “உங்கள் சகோதரர்களை வீணை, யாழ், கைத்தாளங்களை இசைப்பதற்கும் மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவதற்கும் பாடகர்களாகவும் நியமியுங்கள்” என்றான். 1 நாளாக 13:81 நாளாக 16:421 நாளாக 23:52 நாளாக 5:13நெகே 12:361 நாளாக 15:121 நாளாக 15:27-281 நாளாக 25:1-6

அதன்படியே லேவியர்கள் யோயேலின் மகன் ஏமானையும், தன் சகோதரரிலிருந்து பெரகியாவின் மகன் ஆசாப்பையும், தங்கள் சகோதரரான மெராரியரிலிருந்து குஷாயாவின் மகன் ஏத்தானையும் நியமித்தார்கள். 1 நாளாக 6:331 நாளாக 6:391 நாளாக 6:441 நாளாக 15:191 நாளாக 25:1-51 சாமு 8:2சங் 73:1சங் 83:1 அவர்களோடு அவர்களுடைய சகோதரர்களான சகரியா, யாசியேல், செமிராமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தத்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத் ஏதோம், ஏயேல் என்பவர்களை வரிசையில் வாசல் காவலர்களாக நிறுத்தினார்கள். 1 நாளாக 26:41 நாளாக 13:141 நாளாக 16:381 நாளாக 16:5-61 நாளாக 25:2-61 நாளாக 25:9-311 நாளாக 26:151 நாளாக 26:8

பாடகர்களாகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும் வெண்கல கைத்தாளங்களை இசைக்க நியமிக்கப்பட்டார்கள். 1 நாளாக 25:61 நாளாக 13:81 நாளாக 15:161 நாளாக 16:421 நாளாக 16:51 நாளாக 25:1சங் 150:5 சகரியா, ஆசியேல், செமிராமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்ற இராகத்தில் யாழ் மீட்டார்கள். சங் 46:1-11 மத்தத்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத் ஏதோம், ஏயேல், அசசியா என்பவர்கள், “செமனீத்” என்னும் இராகத்தில் யாழ் வாசிக்க நியமிக்கப்பட்டார்கள். 1 நாளாக 15:181 நாளாக 16:51 நாளாக 25:6-71 சாமு 10:5சங் 12:1சங் 150:3சங் 33:2சங் 6:1-10 லேவியரின் தலைவனாயிருந்த கெனானியா பாடகர்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். அவன் மிகவும் தேர்ச்சி பெற்றவனாயிருந்தபடியினால், அவனுக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. 1 நாளாக 15:161 நாளாக 15:271 நாளாக 25:7-8

பெரெகியாவும், எல்க்கானாவும் உடன்படிக்கைப்பெட்டி இருந்த கூடார வாசலைக் காவல்செய்ய நியமிக்கப்பட்டார்கள். 1 நாளாக 9:21-232இராஜா 22:42இராஜா 25:18சங் 84:10 ஆசாரியர்களாகிய செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் இறைவனின் பெட்டிக்கு முன்னால் எக்காளம் ஊதுவதற்கென நியமிக்கப்பட்டார்கள். ஓபேத் ஏதோமும், எகியாவும்கூட உடன்படிக்கைப் பெட்டிக்கு வாசல் காவலாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். 1 நாளாக 16:61 நாளாக 15:28எண் 10:81 நாளாக 15:181 நாளாக 15:232 நாளாக 5:12-13யோவே 2:1யோவே 2:15

அப்பொழுது தாவீதும், இஸ்ரயேலர்களின் தலைவர்களும், ஆயிரம்பேரின் தளபதிகளும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து கொண்டுவருவதற்காக மிக மகிழ்ச்சியுடன் சென்றார்கள். 2 சாமு 6:12-231 நாளாக 13:11-142 நாளாக 20:27-28எஸ்றா 6:16மீகா 5:2பிலி 3:3பிலி 4:4சங் 100:1-2 யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துவந்த லேவியர்களுக்கு இறைவன் உதவியபடியால் அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் பலியிட்டனர். எண் 23:291 நாளாக 29:14யோபு 42:8சங் 66:13-151 சாமு 7:122 கொரி 2:162 கொரி 3:52 சாமு 6:13 தாவீதும் பெட்டியைச் சுமக்கும் எல்லா லேவியர்களும், பாடகர்களும், பாடகர் குழுவுக்குப் பொறுப்பான கெனனியாவும் மென்பட்டு மேலங்கியை உடுத்தியிருந்தனர். மெல்லிய நூலினால் நுட்பமாகச் செய்யப்பட்ட உடையை அணிந்திருந்தனர். அதோடு தாவீது நார்பட்டு ஏபோத்தையும் அணிந்திருந்தான். 1 சாமு 2:182 சாமு 6:14 இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை, கொம்பு வாத்தியங்களையும், எக்காளங்களையும் ஊதிக்கொண்டும், கைத்தாளங்களினால் ஒலி எழுப்பிக்கொண்டும், யாழையும் வீணையையும் மீட்டுக்கொண்டும் மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு கொண்டுவந்தார்கள். 1 நாளாக 13:81 நாளாக 15:162 நாளாக 5:12-132 சாமு 6:15எஸ்றா 3:10-11சங் 150:3-5சங் 47:1-5சங் 68:25

யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி தாவீதின் நகரத்தினுள் வரும்போது, சவுலின் மகள் மீகாள் ஜன்னலின் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். தாவீது அரசன் நடனமாடி மகிழ்ச்சிக் களிப்புடன் வருவதைக் கண்டபோது அவனைத் தனது இருதயத்தில் இகழ்ந்தாள். 2 சாமு 6:20-232 சாமு 6:161 கொரி 2:141 சாமு 18:27-281 சாமு 19:11-171 சாமு 25:441 சாமு 4:32 கொரி 5:13