யோபு பேசுதல்
அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
“இன்றும் என் முறையீடு கசப்பானதாக இருக்கிறது; யோபு 10:1யோபு 7:11சங் 32:4யோபு 11:6யோபு 6:2-3புலம் 3:19-20சங் 77:2-9
நான் வேதனையுடன் புலம்பியும், அவருடைய கரங்கள் என்மேல் பாரமாயிருக்கின்றன.
அவரை எங்கே கண்டுகொள்ளலாம் என்று மாத்திரம் எனக்குத் தெரிந்தாலோ, யோபு 16:21எபி 4:6எரே 14:7யோபு 13:3யோபு 31:35-372 கொரி 5:19-20ஏசா 26:8ஏசா 55:6-7
அவரின் உறைவிடத்திற்கு என்னால் போகக் கூடுமானாலோ,
நான் என் வழக்கை அவர் முன்னால் வைப்பேன்; யோபு 13:18தானி 9:18-19யாத் 32:12-13ஆதி 18:25-32ஆதி 32:12ஏசா 43:26யோபு 37:19யோசு 7:8-9
என் வாயை விவாதங்களால் நிரப்புவேன்.
அவர் எனக்கு என்ன பதில் சொல்வார் என்பதை அறிந்து, 1 கொரி 4:3-4யோபு 10:2யோபு 13:22-23யோபு 42:2-6
அவர் சொல்வதை யோசித்துப் பார்ப்பேன்.
அவர் தமது மிகுந்த வல்லமையினால் என்னை எதிர்ப்பாரோ? 2 கொரி 12:9-10யோபு 13:21யோபு 9:33-34எசேக் 20:33எசேக் 20:35ஏசா 27:4ஏசா 27:8யோபு 9:19
இல்லை, அவர் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவரமாட்டார்.
நேர்மையானவன் அவருக்குமுன் தன் வழக்கைக் கொண்டுவரலாம்; யோபு 13:3ஏசா 1:18ரோம 8:1எரே 12:1எரே 3:5யோபு 9:15ரோம 3:19-22ரோம 8:33-34
நானும் என் நீதிபதியிடமிருந்து என்றென்றும் விடுதலை பெறுவேன்.
“ஆனால் நான் கிழக்கேபோனால் அங்கே அவர் இல்லை; யோபு 9:11சங் 10:11 தீமோ 6:16யோபு 35:14ஏசா 45:15சங் 13:1-3
மேற்கே போனாலும் நான் அவரைக் காணவில்லை.
அவர் வடக்கிலே வேலையாயிருக்கும்போதும் நான் அவரைக் காணவில்லை; ஏசா 8:17சங் 89:46
அவர் தெற்கே திரும்பும்போதும் ஒரு நொடிப்பொழுதுகூட நான் அவரைக் காணவில்லை.
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; யாக் 1:121 பேது 1:7யாக் 1:2-4சங் 139:1-3நீதி 17:3சங் 66:10சகரி 13:9சங் 17:3
அவர் என்னைச் சோதித்தபின், நான் தங்கமாய் விளங்குவேன்.
என் பாதங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றின; சங் 44:182 பேது 2:20-22சங் 17:5யோபு 17:9சங் 125:5ரோம 2:72 கொரி 1:12அப் 20:18-19
நான் விலகாமல் அவருடைய வழியையே கடைப்பிடித்திருக்கிறேன்.
அவருடைய உதடுகளின் கட்டளைகளிலிருந்து நான் விலகவில்லை; எரே 15:16சங் 119:11சங் 119:103யோவா 4:34சங் 19:9-10யோபு 22:22யோவா 4:32யோவா 8:31
என் அன்றாட உணவைவிட, அவருடைய வாயின் வார்த்தைகளை ஒரு பொக்கிஷமாக நான் நினைத்தேன்.
“ஆனால் அவரோ தன்னிகரற்றவராய் இருக்கிறார்; அவரை யாரால் எதிர்க்கமுடியும்? சங் 115:3நீதி 19:21தானி 4:35ஏசா 46:10பிரச 3:14யோபு 12:14எண் 23:19-20சங் 135:6
தாம் விரும்பும் எதையும் அவர் செய்வார்.
எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுகிறார்; 1 தெச 3:31 தெச 5:9ஏசா 40:27-28சங் 97:2ரோம 11:331 பேது 2:8யோபு 7:3மீகா 6:9
இப்படிப்பட்ட அநேக திட்டங்களை அவர் இன்னும் வைத்திருக்கிறார்.
அதினால்தான் நான் அவர் முன்பு திகில் அடைகிறேன்; சங் 119:120யோபு 31:23சங் 77:3ஆப 3:16யோபு 10:15யோபு 23:3
இவற்றையெல்லாம் சிந்திக்கும்போது அவருக்குப் பயப்படுகிறேன்.
இறைவன் என் இருதயத்தை சோர்வடையப் பண்ணினார்; சங் 22:14யோபு 27:2உபா 20:3ஏசா 6:5சங் 88:16ஏசா 57:16யோவே 1:15ரூத் 1:20
எல்லாம் வல்லவர் என்னைத் திகிலடையப் பண்ணினார்.
அப்படியிருந்தும், நான் இருளினால் மவுனமாக்கப்படவில்லை; யோபு 19:8ஏசா 57:12இராஜா 22:20யோபு 15:22யோபு 18:18யோபு 18:6யோபு 22:11யோபு 6:9
என் முகத்தை மூடும் காரிருளின் நிமித்தம் நான் பேசாதிருக்கவும் இல்லை.