நோக்கமும் பொருளடக்கமும்
இஸ்ரயேலின் அரசனும் தாவீதின் மகனுமான சாலொமோனின் நீதிமொழிகள்: நீதி 10:11 நாளாக 22:91 நாளாக 28:5பிரச 1:1நீதி 25:11 இராஜா 2:121 இராஜா 4:31-322 சாமு 12:24-25
இவைகளால் ஞானத்தையும் அறிவுரையையும் கற்றுக்கொள்ளலாம்; நீதி 7:4உபா 4:5-61 இராஜா 3:9-122 தீமோ 3:15-17நீதி 17:16நீதி 16:16நீதி 4:5-7நீதி 8:5
நுண்ணறிவுள்ள வார்த்தைகளையும் விளங்கிக்கொள்ளலாம்.
இவைகளால் நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றைச் செய்ய, நீதி 2:1-9யோபு 22:221 இராஜா 3:28நீதி 8:10-11
அறிவுரையும் விவேகமும் உள்ள வாழ்க்கையை வாழ உதவுகிறது.
இவைகள் அறிவற்றவர்களுக்கு விவேகத்தையும், நீதி 8:5நீதி 8:17சங் 119:9நீதி 8:12நீதி 8:32நீதி 9:4-6சங் 119:1302 தீமோ 2:22
வாலிபர்களுக்கு அறிவையும் அறிவுடைமையையும் கொடுக்கின்றன.
ஞானமுள்ளவர்கள் இவைகளைக் கேட்டு, தங்கள் அறிவைக் கூட்டிக்கொள்ளட்டும்; நீதி 12:1நீதி 9:91 கொரி 10:15யோபு 34:10யோபு 34:16சங் 119:98-100யோபு 34:342 நாளாக 25:16
பகுத்தறிவு உள்ளவர்கள், இவைகளினால் வழிநடத்துதலைப் பெறட்டும்.
இவைகளினால் நீதிமொழிகளையும், உவமைகளையும், சங் 78:2மாற் 4:11சங் 49:4அப் 8:30-31எபி 5:14மாற் 4:34பிரச 12:11மத் 13:10-17
ஞானிகளின் வார்த்தைகளையும், புதிர்களையும் விளங்கிக்கொள்ளட்டும்.
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; யோபு 28:28சங் 111:10நீதி 9:10பிரச 12:13நீதி 15:33நீதி 18:2நீதி 1:22நீதி 1:29-30
ஆனால் மூடர்கள் ஞானத்தையும் அறிவுரையையும் புறக்கணிக்கிறார்கள்.
ஞானத்தை அடைவதற்கான புத்திமதிகள்
பாவிகளின் அழைப்பிதலைக் குறித்த எச்சரிக்கை
என் மகனே, உன் தகப்பனின் அறிவுரைகளைக் கேள்; நீதி 6:20நீதி 30:17நீதி 5:1-22 தீமோ 1:5நீதி 2:1நீதி 31:1உபா 21:18-21லேவி 19:3
உன் தாயின் போதனைகளை விட்டுவிடாதே.
அவை உன் தலையைச் சிறப்பிக்கும் மகுடமாகவும், தானி 5:29நீதி 4:9ஆதி 41:42நீதி 3:22நீதி 6:20-21எசேக் 16:11ஏசா 3:19உன்னத 1:10
உன் கழுத்தை அலங்கரிக்கும் பொன் மாலையாகவும் இருக்கும்.
என் மகனே, பாவிகள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுக்க முயன்றால், எபே 5:11நீதி 16:29சங் 1:1நீதி 13:20உபா 13:8ரோம 16:18நீதி 7:21-23நீதி 20:19
அவர்களுடன் இழுப்புண்டு போகாதே.
அவர்கள் உன்னிடம், “நீ எங்களோடுகூட வா; நீதி 1:18எரே 5:26நீதி 12:6அப் 25:3எரே 18:18-20அப் 23:15எரே 11:19யோவா 15:25
குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும்படி பதுங்கிக் காத்திருப்போம்,
அப்பாவியான மனிதரை வழிமறித்துப் பறிப்போம்;
பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், சங் 124:3சங் 28:1ரோம 3:13எரே 51:34புலம் 2:16புலம் 2:5மீகா 3:2-3எண் 16:30-33
மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்;
பலவித விலைமதிப்புள்ள பொருட்களையும் எடுத்து, 1 தீமோ 6:9-10யோபு 24:2-3லூக் 12:15ஆகா 2:9ஏசா 10:13-14எரே 22:16-17நாகூ 2:12நீதி 1:19
நமது வீடுகளைக் கொள்ளைப் பொருட்களால் நிரப்புவோம்;
எங்களுடன் பங்காளியாயிரு;
நாம் கொள்ளையிட்டதைப் பகிர்ந்துகொள்வோம்” என்று சொல்லுவார்களானால்,
என் மகனே, நீ அவர்களோடுகூடப் போகாதே; சங் 119:101சங் 1:1நீதி 4:14-15நீதி 4:27சங் 26:4-52 கொரி 6:17நீதி 13:20நீதி 9:6
அவர்களுடைய வழிகளில் காலடி வைக்காதே.
ஏனெனில் அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன, ஏசா 59:7நீதி 6:18நீதி 4:16ரோம 3:5
இரத்தஞ்சிந்த வேகமாய் செல்கின்றன.
பறவைகள் பார்த்துக்கொண்டிருக்கையில், எரே 8:7யோபு 35:11நீதி 7:23ஏசா 1:3
அவற்றைப் பிடிக்க வலை விரிப்பது பயனற்றதல்லவா.
ஆனாலும் இந்த மனிதர்கள், தங்கள் சொந்த இரத்தத்தைச் சிந்துவதற்கே காத்திருக்கிறார்கள்; சங் 9:16எஸ்த 7:10நீதி 28:17நீதி 5:22-23சங் 7:14-16மத் 27:4-5சங் 55:23நீதி 9:17-18
அவர்கள் தங்களுக்காகவே பதுங்கியிருக்கிறார்களே,
தகாத முறையில் சம்பாதிக்கத் தேடுகிற அனைவரின் முடிவும் இதுவே; நீதி 15:272 பேது 2:3ஆப 2:9யாக் 5:1-4எரே 22:17-19மீகா 2:1-3நீதி 23:3-41 தீமோ 3:3
அதின் பலன் அதைப் பெறுகிறவர்களின் உயிரை எடுத்துவிடும்.
ஞானத்தைப் புறக்கணிக்காதிருக்க எச்சரிக்கை
ஞானம் வீதியிலே சத்தமிட்டு அழைக்கிறது, நீதி 9:3கொலோ 2:31 கொரி 1:24லூக் 11:49நீதி 8:1-51 கொரி 1:30மத் 13:54யோவா 7:37
பொது இடங்களில் தனது குரலை எழுப்புகிறது;
அது இரைச்சலுள்ள வீதிகளின் சந்தியில் சத்தமிடுகிறது, அப் 5:20மத் 10:27மத் 13:2நீதி 9:3யோவா 18:20
பட்டணத்தின் நுழைவாசல்களில் நின்று உரையாற்றுகிறது.
“அறிவற்றவர்களே, எவ்வளவு காலம் அறியாமையின் வழிகளை விரும்புவீர்கள்? நீதி 1:292 பேது 3:3யோவா 3:20நீதி 5:12சங் 1:1லூக் 19:42மத் 11:29-30மத் 9:13
ஏளனம் செய்பவர்களே, எவ்வளவு காலம் ஏளனத்தில் மகிழ்ந்திருப்பீர்கள்?
மூடர்களே, எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அறிவை வெறுப்பீர்கள்?
நீங்கள் எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்! அப் 3:19எசேக் 33:11எசேக் 18:27-30அப் 2:36-38யோவே 2:28ஏசா 32:15ஏசா 55:6-7நீதி 12:1
என் சிந்தனைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன்,
என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன்.
ஆனால், நான் கூப்பிட்டபோது நீங்கள் என்னைப் புறக்கணித்து, ஏசா 65:12ரோம 10:21எரே 7:13ஏசா 66:4எபி 12:25-26எசேக் 8:18மத் 22:5-6சகரி 7:11-12
எனது கையை நீட்டியபோது ஒருவரும் அதைக் கவனிக்காதபடியினாலும்,
நீங்கள் என் புத்திமதிகளையெல்லாம் தள்ளிவிட்டு, லூக் 7:30சங் 81:11நீதி 1:30நீதி 12:1சங் 107:112 நாளாக 36:16நீதி 5:12
எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாதபடியினாலும்
உங்களுக்குப் பேராபத்து வரும்போது நான் சிரிப்பேன், நீதி 10:24சங் 2:4சங் 37:13லூக் 14:24நீதி 6:15நியாயாதி 10:14
பேரழிவு உங்களை மேற்கொள்கையில் ஏளனம் செய்வேன்;
பேரழிவு உங்கள்மேல் புயலைப்போல் வரும்போதும், நீதி 3:25-261 தெச 5:3ஏசா 17:13லூக் 21:23-26லூக் 21:34-35நாகூ 1:3நீதி 10:24-25சங் 58:9
பேராபத்து சுழற்காற்றைப் போல் உங்களை அடித்துச் செல்லும்போதும்,
துன்பமும் தொல்லையும் உங்களைத் திணறடிக்கும்போதும் நான் உங்களை ஏளனம் செய்வேன்.
“அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள், நான் பதில் கொடுக்கமாட்டேன்; மீகா 3:4ஏசா 1:15யாக் 4:3எரே 11:11சகரி 7:13மத் 25:10-12யோபு 27:91 சாமு 8:18
அவர்கள் என்னைத் தேடுவார்கள், ஆனால் என்னைக் கண்டடையமாட்டார்கள்.
ஏனெனில் அவர்கள் அறிவை வெறுத்து, நீதி 6:23யோபு 21:14-15நீதி 1:22எபி 11:25ஏசா 27:11அப் 7:51-54யோவா 3:20லூக் 10:42
யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைத் தெரிந்துகொள்ளாமல் போனார்கள்.
அவர்கள் என் புத்திமதிகளை ஏற்றுக்கொள்ளாமல், நீதி 1:25சங் 81:11எரே 8:9லூக் 14:18-20சங் 119:173சங் 119:111
எனது கடிந்துகொள்ளுதலை புறக்கணித்தபடியால்,
அவர்கள் தங்கள் நடத்தையின் பலனை அனுபவிப்பார்கள், நீதி 14:14எரே 6:19யோபு 4:8நீதி 22:8கலா 6:7-8ஏசா 3:10-11எரே 2:19
அவர்களுடைய சதித்திட்டங்களின் பலனால் நிரப்பப்படுவார்கள்.
அறிவீனர்களின் அசட்டுத்தனம் அவர்களைக் கொல்லும், நீதி 8:36எரே 2:19யோவா 3:36எபி 12:25லூக் 16:19-25உபா 32:15-44எபி 12:8யாக் 5:5
மூடர்களின் மனநிறைவு அவர்களை அழிக்கும்;
ஆனால் எனக்குச் செவிகொடுப்பவர் யாரும் பாதுகாப்பாக வாழ்வார்கள், சங் 25:12-13ஏசா 26:3சங் 112:7-8யோவா 10:27-29நீதி 14:26லூக் 21:9நீதி 8:32-35லூக் 21:19
அவர்கள் தீமைக்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பார்கள்.”