“யோபுவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்; யோபு 13:6யோபு 34:2மாற் 4:9சங் 49:1-3
நான் சொல்வதைக் கவனியும்.
இப்பொழுது நான் பேசப் போகிறேன்; யோபு 3:1யோபு 31:30மத் 5:2சங் 78:2
என் வார்த்தைகள் என் நாவின் நுனியில் இருக்கின்றன.
என் வார்த்தைகள் நேர்மையான இருதயத்திலிருந்து வெளிவருகின்றன; யோபு 27:41 தெச 2:3-4நீதி 20:15யோபு 15:2யோபு 36:3-4யோபு 38:2யோபு 6:28நீதி 15:2
நான் அறிந்தவற்றை என் உதடுகள் உண்மையாய்ப் பேசுகின்றன.
இறைவனின் ஆவியானவரே என்னைப் படைத்தார்; யோபு 32:8ஆதி 2:7யோபு 27:31 கொரி 15:45யோபு 10:12சங் 33:6ரோம 8:2யோபு 10:3
எல்லாம் வல்லவரின் சுவாசமே எனக்கு உயிரைத் தருகிறது.
உம்மால் முடியுமானால் எனக்குப் பதில் கூறும்; யோபு 33:32-33அப் 10:26யோபு 13:18யோபு 23:4-5யோபு 32:1யோபு 32:12யோபு 32:14சங் 50:21
என்னோடு வாதாட உம்மை ஆயத்தப்படுத்தும்.
இறைவனுக்கு முன்பாக நானும் உம்மைப் போன்றவன்தான்; யோபு 4:192 கொரி 5:1யோபு 10:92 கொரி 5:20யாத் 4:16ஆதி 2:7ஆதி 3:19ஆதி 30:2
நானும் மண்ணிலிருந்தே உருவாக்கப்பட்டேன்.
என்னைப்பற்றிய பயத்தினால் நீர் கலங்க வேண்டியதில்லை, யோபு 13:21யோபு 9:34சங் 32:4சங் 88:16
என் கையும் உம்மேல் பாரமாயிருக்காது.
“என் காது கேட்க நீ பேசியிருக்கிறாய்; உபா 13:14எரே 29:23
நான் கேட்க, உன் வார்த்தைகளினாலேயே இப்படிக் கூறினாய்:
‘நான் தூய்மையானவன், குற்றமற்றவன், யோபு 10:7யோபு 16:17யோபு 11:4யோபு 9:21யோபு 29:14எரே 2:35யோபு 13:18யோபு 13:23
நான் சுத்தமானவன், பாவமற்றவன்.
இருந்தும் இறைவன் என்னிடம் குற்றம் கண்டிருக்கிறார்; யோபு 13:24-25யோபு 19:11யோபு 10:15-17யோபு 14:16யோபு 16:9யோபு 30:21யோபு 31:35யோபு 34:5
என்னைத் தம் பகைவனாக எண்ணுகிறார்.
அவர் என் கால்களை விலங்குகளில் மாட்டுகிறார்; யோபு 13:27யோபு 31:4அப் 16:24தானி 4:35எரே 20:2யோபு 14:16சங் 105:18
என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.’
“ஆனால் நான் உமக்குச் சொல்கிறேன், இதில் நீர் சொன்னது சரியல்ல, எசேக் 18:25யோபு 36:5பிரச 7:20எரே 18:6யோபு 1:22யோபு 26:14யோபு 32:17யோபு 34:10-12
ஏனெனில் இறைவன் மனிதனைவிட மிகவும் பெரியவர்.
அவர் மனிதனுடைய கேள்விகள் எதற்குமே பதிலளிக்கவில்லை யோபு 40:2ஏசா 45:9தானி 4:35ரோம 11:341 கொரி 10:22அப் 1:7அப் 5:39அப் 9:4-5
என நீர் ஏன் முறையிடுகிறீர்?
மனிதர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும், நீதி 1:242 நாளாக 33:10சங் 62:11யோபு 33:29லூக் 24:25யோவா 3:19ஏசா 6:9மத் 13:14
இறைவன் ஒருவிதமாகவும், இன்னொரு விதமாகவும் பேசுகிறார்.
மனிதர் படுத்திருக்கையில், எண் 12:6யோபு 4:13ஆதி 20:3ஆதி 31:24தானி 4:5தானி 8:18எரே 23:28ஆதி 15:12
ஆழ்ந்த நித்திரையிலும், கனவிலும்,
இரவு தரிசனத்திலும் அவர் பேசுகிறார்.
அவர் மனிதர்களின் காதுகளில் பேசி, யோபு 36:10யோபு 36:15சங் 40:6ஏசா 50:5அப் 16:14ஏசா 6:10லூக் 24:452 சாமு 7:27
தம்முடைய எச்சரிப்புகளினால் அவர்களைத் திகிலூட்டக்கூடும்.
பிழை செய்வதிலிருந்து மனிதரை விலக்கவும், ஏசா 2:11யாக் 4:102 நாளாக 32:252 கொரி 12:7ஆதி 20:6யோபு 17:11மத் 27:19அப் 9:2-6
தற்பெருமையை தடுக்கவுமே இவ்வாறு செய்கிறார்.
மனிதருடைய ஆத்துமா பிரேதக்குழியில் விழாதபடியும், யோபு 33:28யோபு 33:302 பேது 3:9ரோம 2:4யோபு 15:22யோபு 33:22யோபு 33:242 பேது 3:15
அவர்களுடைய உயிர் வாளால் அழியாதபடியும் காப்பாற்றுகிறார்.
“அல்லது மனிதர்கள் தங்கள் எலும்புகளில் உண்டான யோபு 30:17யோபு 5:17-181 கொரி 11:32சங் 119:71சங் 94:122 நாளாக 16:102 நாளாக 16:12உபா 8:5
தொடர்ச்சியான நோவுடன் படுக்கையிலேயே தண்டிக்கப்படக் கூடும்.
அப்பொழுது அவர்களுடைய உள்ளம் உணவையும், யோபு 3:24சங் 107:17-18ஆமோ 5:11ஆதி 3:6எரே 3:19
சுவையான உணவையும் வெறுக்கிறது.
அவர்களுடைய சதை முழுவதும் அழிந்து, யோபு 19:20யோபு 13:28யோபு 7:5நீதி 5:11யோபு 14:20யோபு 14:22யோபு 16:8சங் 102:3-5
முன்பு மறைந்திருந்த எலும்புகள் வெளியே தெரிகின்றன.
அவர்களுடைய ஆத்துமா பிரேதக் குழியையும், 2 சாமு 24:16யோபு 33:281 கொரி 10:101 சாமு 2:6அப் 12:23யாத் 12:23ஏசா 38:10யோபு 15:21
அவர்களுடைய உயிர் மரண தூதுவர்களையும் நெருங்குகிறது.
ஆனாலும் ஆயிரத்தில் ஒருவனான தூதன் ஒருவன் மல்கி 3:12 கொரி 5:20பிரச 7:28ஆகா 1:13மல்கி 2:7தானி 9:14எசேக் 18:25-28எபி 12:5-12
அவர்கள் பக்கத்திலிருந்து, அவர்களுக்காகப் பரிந்துபேசி,
அவர்களுக்கு சரியானவற்றைச் சொல்லிக்கொடுத்து,
அவர்களுக்குக் கிருபைகாட்டி, சங் 49:7-81 பேது 1:18-19யோபு 33:18மத் 20:281 தீமோ 2:6யாத் 33:19ஓசி 14:4யோபு 22:21
‘நான் அவர்களுக்கு மீட்கும் பொருளைக் கண்டுபிடித்தேன்.
ஆகவே இவர்களைக் குழிக்குள் போவதிலிருந்து தப்பவிடும்’ என்று சொல்வானாகில்,
அவர்களின் உடல் குழந்தையின் உடலைப்போல் புதிதாகும், சங் 103:52இராஜா 5:14யோசு 14:10-11உபா 34:7யோபு 42:16ஓசி 2:15
அவர்கள் வாலிப நாட்களில் இருந்ததுபோல் மாற்றப்படுவார்கள்.
அப்பொழுது அவர்கள் இறைவனை நோக்கி மன்றாடி, சங் 50:15சங் 30:5அப் 2:28அப் 9:11ஏசா 30:19எபி 11:26எரே 33:3யூதா 1:24
அவரிடமிருந்து தயவு பெறுகிறார்கள்;
அவர்கள் இறைவனுடைய முகத்தைக் கண்டு மகிழ்வார்கள்,
இறைவன் அவர்களுடைய நீதியின் நிலையிலேயே திரும்பவும் வைக்கிறார்.
அவர்கள் மற்றவர்களைப் பார்த்து: ரோம 6:212 சாமு 12:13சங் 14:21 யோவா 1:8-10எரே 31:18-19மத் 16:26ரோம 7:222 நாளாக 16:9
‘நான் பாவம் செய்து, நியாயத்தைப் புரட்டினேன்,
செய்ததற்குத் தகுந்த தண்டனையை நான் பெறவில்லை.
பிரேதக் குழிக்குள் போகாமல் என் ஆத்துமாவை இறைவனே மீட்டுக்கொண்டார்; யோபு 33:24யோபு 3:16யோபு 3:9யோபு 33:22ஏசா 38:17-18ஏசா 9:2யோவா 11:9யோபு 17:16
நானும் ஒளியை அனுபவித்து சந்தோஷமாய் வாழ்வேன்.’
“இறைவன் இவற்றையெல்லாம் மனிதருக்கு இரண்டு முறைகள், ஏன், 1 கொரி 12:6எபே 1:11பிலி 2:132 கொரி 5:5எபி 13:212இராஜா 6:10கொலோ 1:29யோபு 33:14-17
மூன்று முறைகள் திரும்பத் திரும்பச் செய்கிறார்.
குழியிலிருந்த அவர்களுடைய ஆத்துமாவை, சங் 56:13ஏசா 38:17யோபு 33:28சங் 40:1-2அப் 26:18ஏசா 2:5யோவா 8:12யோபு 33:24
வாழ்வின் ஒளியால் பிரகாசிக்கச் செய்கிறார்.
“யோபுவே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேளும்; யோபு 18:2யோபு 13:6யோபு 21:2யோபு 32:11
மவுனமாய் இரும், நான் பேசுவேன்.
அதின்பின் ஏதாவது சொல்ல இருந்தால் எனக்குப் பதில் கூறும்; யோபு 15:4-5யோபு 21:27யோபு 22:5-9யோபு 27:5
தயங்காமல் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க நான் விரும்புகிறேன்.
அப்படியில்லாவிட்டால், மவுனமாய் இருந்து நான் சொல்வதைக் கேளும். சங் 34:11யோபு 33:3நீதி 4:1-2நீதி 5:1-2நீதி 8:5சங் 49:3
நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்.”