யோபு 6

Job 6

யோபு பதிலளித்தல்

யோபு மறுமொழியாக சொன்னது: யோபு 4:1

“என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு யோபு 23:2யோபு 31:6யோபு 4:5

நிறுக்கப்பட்டால் நலமாயிருக்கும்!

அவை கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; நீதி 27:3யோபு 23:2யோபு 37:19-20மத் 11:28சங் 40:5சங் 77:4

ஆகவே எனது வார்த்தைகள் மூர்க்கமாய் இருப்பது ஆச்சரியமல்லவே.

எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் பாய்ந்திருக்கின்றன, சங் 38:2யோபு 30:15சங் 88:15-16நீதி 18:14யோபு 16:12-14மாற் 15:34சங் 143:7யோபு 9:17

என் ஆவி அவைகளின் நஞ்சைக் குடிக்கிறது;

இறைவனின் பயங்கரங்கள் எனக்கெதிராய் அணிவகுத்து நிற்கின்றன.

தனக்குப் புல் இருக்கும்போது காட்டுக் கழுதை கத்துமோ? எரே 14:6யோவே 1:18-20சங் 104:14சங் 42:1

தீனி இருக்கும்போது எருது கதறுமோ?

சுவையில்லாத உணவு உப்பின்றி சாப்பிடப்படுமோ? யோபு 34:3கொலோ 4:6யோபு 12:11யோபு 6:30லேவி 2:13லூக் 14:34எபி 6:4-5யோபு 16:2

முட்டையின் வெள்ளைக்கருவில் ஏதேனும் சுவை உண்டோ?

இப்படியான உணவு என்னை நோயாளியாக்குகிறது; 1 இராஜா 17:121 இராஜா 22:27தானி 10:3எசேக் 12:18-19எசேக் 4:14எசேக் 4:16யோபு 3:24சங் 102:9

நான் அதைத் தொட மறுக்கிறேன்.

“நான் வேண்டிக்கொள்வதையும், சங் 119:81யோபு 17:14-16யோபு 6:11-13

நான் நம்பி எதிர்பார்ப்பதையும் இறைவன் எனக்குக் கொடுக்கட்டும்.

இறைவன் என்னை நசுக்க உடன்படட்டும், 1 இராஜா 19:4யோனா 4:3ஏசா 48:10-13யோபு 7:15-16யோனா 4:8யோபு 14:13யோபு 19:21யோபு 3:20-22

தன் கையை நீட்டி என்னை வெட்டிப்போடட்டும்!

இந்த ஆறுதல் எனக்கு இன்னும் இருக்கும்; யோபு 23:12ஏசா 57:15லேவி 19:2சங் 40:9-10சங் 71:17-181 சாமு 2:22 பேது 2:4-5அப் 20:20

எனது முடிவில்லாத வேதனையிலும்

பரிசுத்தரின் வார்த்தைகளை நான் மறுக்கவில்லை.

“நான் இன்னும் எதிர்பார்ப்புடன் இருக்க எனக்கு என்ன பெலன் இருக்கிறது? சங் 103:14-16யோபு 17:1சங் 102:23சங் 39:5யோபு 10:20யோபு 13:25யோபு 13:28யோபு 17:14-16

நான் இன்னும் பொறுமையாய் இருக்க என் முடிவு என்ன?

ஒரு கல்லின் பெலன் எனக்கு உண்டோ? யோபு 40:18யோபு 41:24

எனது சதை வெண்கலமோ?

எனக்கே நான் உதவிசெய்யத்தக்க வல்லமை என்னில் உண்டோ? 2 கொரி 1:12யோபு 26:2யோபு 12:2-3யோபு 13:2யோபு 19:28கலா 6:4

வெற்றிக்கான ஆதாரம் என்னைவிட்டு நீங்கிற்று.

“எதிர்பார்ப்பில்லாதவன், எல்லாம் வல்லவரைப் பற்றிய கலா 6:2நீதி 17:171 கொரி 12:26ரோம 12:152 கொரி 11:29எபி 13:3லூக் 23:40யோபு 15:4

பயத்தைக் கைவிட்ட போதிலும்,

அவனுக்கு அவனுடைய நண்பர்களின் தயவு இருக்கவேண்டும்.

ஆனால் என் சகோதரர்களோ, விட்டுவிட்டு பொங்கி ஓடும் சங் 38:11எரே 15:18சங் 41:9யோவா 13:18யோவா 16:32சங் 55:12-14எரே 30:14எரே 9:4-5

பருவகால நீரோடைகளைப்போல, நம்பத்தகாதவர்களாய் இருக்கிறார்கள்.

அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும்,

அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் வழிந்தோடும்.

ஆனால் வெப்பக் காலத்தில் வற்றி, 1 இராஜா 17:1யோபு 24:19

வெயிலில் கால்வாய்களிலிருந்து மறைந்துபோகின்றன.

வியாபாரிகளின் கூட்டம் நீரோடையைத் தேடி;

பாதையைவிட்டு விலகி பாழ்நிலங்களுக்குச் சென்று அழிகின்றன.

தேமாவின் வியாபாரிகளும், சேபாவின் வியாபாரிகளும் ஆதி 25:15ஏசா 21:14எரே 25:231 இராஜா 10:1எசேக் 27:22-23ஆதி 10:7ஆதி 25:3சங் 72:10

தண்ணீரைத் தேடி நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள்.

அவர்கள் நம்பிக்கையுடன் போனதால் வருத்தப்படுகிறார்கள்; எரே 14:3-4எரே 17:13ரோம 5:5ரோம 9:33

அவ்விடத்தைச் சேர்ந்ததும் ஏமாற்றமடைகிறார்கள்.

இப்பொழுது நீங்களும் அப்படியே எனக்கு உதவாமல் போனீர்கள்; சங் 38:112 தீமோ 4:16எரே 17:5-6ஏசா 2:22எரே 51:9யோபு 13:4யோபு 2:11-13யோபு 6:15

என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.

நான், ‘எனக்காக எதையாவது கொடுங்கள் என்றோ, 1 சாமு 12:3அப் 20:33யோபு 42:11

உங்கள் செல்வத்தினால் என்னை மீட்டுக்கொள்ளுங்கள் என்றோ,

என் பகைவரின் கைகளிலிருந்து என்னை விடுவியுங்கள் என்றோ, எரே 15:21யோபு 5:20சங் 107:2சங் 49:15சங் 49:7-8லேவி 25:48நெகே 5:8

கொடியவர்களின் பிடியிலிருந்து என்னை மீட்டு விடுங்கள்’ என்றோ நான் சொன்னதுண்டா?

“எனக்கு போதியுங்கள்; நான் மவுனமாய் இருப்பேன்; யாக் 3:2நீதி 9:9யோபு 10:2யோபு 34:32சங் 19:12சங் 39:1-2யோபு 33:1யோபு 5:27

நான் எதிலே தவறு செய்தேனோ அதை எனக்குக் காட்டுங்கள்.

நேர்மையான வார்த்தைகள் எவ்வளவு வேதனையாக இருக்கின்றன! பிரச 12:10-11யோபு 13:5யோபு 16:3-5யோபு 21:34யோபு 24:25யோபு 32:3யோபு 4:4நீதி 12:18

ஆனால் உங்கள் விவாதங்கள் எதை நிரூபிக்கின்றன?

நான் சொன்னவற்றைத் திருத்த எண்ணுகிறீர்களோ? யோபு 8:2எபே 4:14மத் 12:37ஓசி 12:1யோபு 10:1யோபு 2:10யோபு 3:3-26யோபு 34:3-9

மனச்சோர்வுற்ற மனிதரின் வார்த்தைகளை வெறும் காற்றாக மதிக்கிறீர்களோ?

அநாதைகளுக்கு எதிராகக்கூட நீங்கள் சீட்டுப்போடுவீர்கள்; 2 பேது 2:3யாக் 1:27யோபு 22:9யோபு 24:3யோபு 24:9யோவே 3:3நாகூ 3:10சங் 7:15

உங்கள் நண்பர்களை விற்பதற்கும் பேரம் பேசுவீர்கள்.

“ஆனால் இப்பொழுதோ தயவாக என்னைப் பாருங்கள். யோபு 13:4யோபு 27:4யோபு 33:3யோபு 11:3யோபு 36:4

உங்கள் முகத்துக்கு முன்பாக நான் பொய் சொல்வேனா?

போதும் விட்டுவிடுங்கள், அநியாயஞ்செய்ய வேண்டாம்; யோபு 17:10யோபு 23:10யோபு 27:4-6யோபு 34:5யோபு 42:6மல்கி 3:18

பொறுங்கள், நீதி இன்னும் என் பக்கமிருக்கிறது.

என் உதடுகளில் அநீதி உண்டோ? யோபு 12:11யோபு 34:3யோபு 6:6எபி 5:14யோபு 33:8-12யோபு 42:3-6

என் வாய் வஞ்சகத்தை நிதானித்து அறியாதோ?