2 இராஜாக்கள் 6

2 Kings 6

தொலைந்த கோடரி மிதத்தல்

இறைவாக்கினர் கூட்டம் எலிசாவிடம், “பாரும், உம்மோடுகூட நாங்கள் குடியிருக்கும் இந்த இடம் மிகவும் சிறியதாய் இருக்கிறது. 2இராஜா 2:3ஏசா 54:2-31 இராஜா 20:351 சாமு 19:202இராஜா 4:1ஏசா 49:19-20யோசு 17:14யோசு 19:47 நாங்கள் யோர்தானுக்குப் போய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மரங்களை வெட்டி, குடியிருப்பதற்கு ஒரு வசிப்பிடத்தைக் கட்டுவோம்” என்றார்கள். 1 கொரி 9:61 தெச 2:91 தீமோ 6:62 தெச 3:8அப் 18:3அப் 20:34-35யோவா 21:3

அப்பொழுது எலிசா, “போங்கள்” என்றான்.

அவர்களில் ஒருவன் எலிசாவிடம், “உமது அடியவர்களுடன் நீரும் வரமாட்டீரோ?” என்று கேட்டான். 2இராஜா 5:23நியாயாதி 19:6நியாயாதி 4:8யோபு 6:28

எலிசா அதற்கு, “நான் வருவேன்” என்று கூறினான். அவன் அவர்களுடன் கூடப்போனான். உபா 19:5உபா 29:11

அவர்கள் யோர்தானுக்குப் போய் மரங்களை வெட்டத்தொடங்கினார்கள். அவர்களில் ஒருவன் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போது, அவனின் இரும்புக் கோடரி, பிடி கழன்று தண்ணீருக்குள் விழுந்தது. அப்பொழுது அவன், “ஐயா, என் தலைவனே! அது இரவலாக வாங்கப்பட்டதே” என்றான். 2இராஜா 3:102இராஜா 6:15பிரச 10:10சங் 37:21வெளி 18:102இராஜா 4:7வெளி 18:16வெளி 18:19

அதற்கு இறைவனுடைய மனிதன், “அது எங்கே விழுந்தது?” என்று கேட்டான். அவன் அந்த இடத்தைக் காட்டியபோது எலிசா ஒரு கொம்பை வெட்டி அங்கே எறிந்து அந்த இரும்பை மிதக்கச் செய்தான். 2இராஜா 2:212இராஜா 4:41யாத் 15:25மாற் 8:23-25யோவா 9:6-7மாற் 7:33-34 “அதை வெளியே எடு” என்று எலிசா கூற அவன் தன் கையை நீட்டி அதை எடுத்தான். 2இராஜா 4:362இராஜா 4:7யாத் 4:4அப் 9:41லூக் 7:15

சீரிய யுத்தங்கள்

இந்த நாட்களில் சீரிய அரசன் இஸ்ரயேலுடன் யுத்தம் செய்தான். அவன் தன் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, “நான் இந்தந்த இடங்களில் எனது படை முகாம்களை அமைப்பேன்” என்று சொன்னான். 2இராஜா 6:24நீதி 20:18நீதி 21:301 இராஜா 22:31ஏசா 7:5-7ஏசா 8:10யோபு 5:12-131 இராஜா 20:1

ஆனால் இறைவனுடைய மனிதனாகிய எலிசாவோ இஸ்ரயேல் அரசனுக்குச் செய்தி அனுப்பி, “நீர் இந்த இடங்களைக் கடக்கும்போது கவனமாயிரும். ஏனென்றால் சீரியர் இவ்விடத்துக்கு வரப்போகிறார்கள்” என்றான். ஆமோ 3:71 இராஜா 20:131 இராஜா 20:282இராஜா 3:17-192இராஜா 4:272இராஜா 6:12வெளி 1:1 அதன்படி இஸ்ரயேல் அரசன் இறைவனின் மனிதன் குறிப்பிட்ட இடங்களுக்கு ஆட்களை அனுப்பி உளவு பார்த்தான். எலிசா பலமுறை அரசனை எச்சரித்துக்கொண்டே வந்தான். அரசனும் அந்தந்த இடங்களில் விழிப்பாக இருந்தான். 1 இராஜா 20:152 நாளாக 20:202இராஜா 13:142இராஜா 2:122இராஜா 5:14அப் 27:24ஆமோ 7:1-6யாத் 9:20-21

இது சீரிய அரசனுக்குக் கோபமூட்டியது. அவன் தன் அதிகாரிகளை வரவழைத்து, “உங்களில் எவன் இஸ்ரயேல் அரசனுக்கு சார்பானவன் என்று எனக்குச் சொல்லமாட்டீர்களா?” என்று கேட்டான். 1 சாமு 22:81 சாமு 28:21ஏசா 57:20-21யோபு 18:7-11மத் 2:3-12சங் 48:4-5

அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன், “அரசனாகிய என் தலைவனே, அப்படியாக எங்களில் ஒருவரும் இல்லை. இஸ்ரயேலில் உள்ள இறைவாக்கினன் எலிசா தான் நீர் உமது படுக்கையறையில் பேசும் வார்த்தைகளைக்கூட இஸ்ரயேலின் அரசனுக்கு வெளிப்படுத்துகிறான்” என்றான். ஆமோ 3:7தானி 2:28-302இராஜா 6:9-10தானி 2:22-23பிரச 10:202இராஜா 5:13-152இராஜா 5:3தானி 2:47

அதற்கு அரசன், “நான் ஆட்களை அனுப்பி அவனைப் பிடிப்பதற்காக அவன் எங்கேயிருக்கிறான் என்று போய்ப் பாருங்கள்” என்று கட்டளையிட்டான். அப்பொழுது எலிசா தோத்தானில் இருப்பதாகச் செய்தி கொண்டுவரப்பட்டது. ஆதி 37:17யோவா 11:47-531 சாமு 23:22-23அப் 23:12-27எரே 36:26மத் 2:4-8சங் 10:8-10சங் 37:12-14 அரசன் அந்த இடத்துக்குக் குதிரைகளையும், தேர்களையும், ஒரு பலத்த இராணுவத்தையும் அனுப்பினான். இவர்கள் இரவில் வந்து பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டனர். 1 சாமு 23:261 சாமு 24:22இராஜா 18:17யோவா 18:3-6மத் 26:47மத் 26:552இராஜா 1:9-13

அடுத்தநாள் இறைவனுடைய மனிதனின் வேலையாள், அதிகாலையில் எழும்பி வெளியே போனபோது, பட்டணம் குதிரைகளும் தேர்களும் கொண்ட இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். உடனே அந்த வேலையாள், “ஆ, என் எஜமானே! நாங்கள் என்ன செய்வோம்?” என்றான். மத் 8:262 நாளாக 20:12யாத் 24:13சங் 53:51 இராஜா 19:212இராஜா 3:112இராஜா 5:202இராஜா 5:27

அதற்கு இறைவாக்கினன், “பயப்படாதே. அவர்களுடைய பக்கத்தில் இருப்பவர்களைக் காட்டிலும், நம்முடைய பக்கத்தில் இருப்பவர்கள் அநேகர்” என்றான். ரோம 8:31ஏசா 41:10-141 யோவா 4:42 நாளாக 32:7-8அப் 18:9-10யாத் 14:13சங் 55:18ஏசா 8:10

அத்துடன் எலிசா, “யெகோவாவே, இவன் பார்க்கத்தக்கதாக இவனுடைய கண்களைத் திறந்துவிடும்” என்று மன்றாடினான். அப்பொழுது யெகோவா அந்த வேலையாளின் கண்களைத் திறந்தார், அவன் பார்த்தான். மலைகளை மூடத்தக்கதான அநேக நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்திருப்பதை அவன் கண்டான். சங் 68:17சங் 34:7சகரி 6:1-7அப் 26:18எபி 1:142இராஜா 2:11ஏசா 42:7மத் 26:53

பகைவர் எலிசாவை நோக்கி வந்தபோது, எலிசா யெகோவாவை நோக்கி, “இந்தப் படையினரைக் குருடராக்கும்” என்று மன்றாடினான். எலிசா வேண்டிக்கொண்டபடியே யெகோவா அவர்களைக் குருடராக்கினார். அப் 13:11யோவா 12:40ஆதி 19:11யோவா 9:39உபா 28:28யோபு 5:14ரோம 11:7சகரி 12:4

எலிசா அவர்களை நோக்கி, “இது பாதையுமல்ல, நகரமுமல்ல; என்னைப் பின்பற்றி வாருங்கள். நீங்கள் தேடித்திரியும் மனிதனிடம் உங்களை வழிநடத்துவேன்” என்று கூறி அவர்களைச் சமாரியாவுக்கு வழிநடத்திக்கொண்டு போனான். 2 சாமு 16:18-19லூக் 24:16லூக் 9:23மத் 16:24மாற் 8:34

அவர்கள் பட்டணத்துக்குள் போனதும் எலிசா, “யெகோவாவே இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும்” என்றான். யெகோவா அவர்களுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது தாங்கள் சமாரியாவுக்குள் இருப்பதை அவர்கள் கண்டார்கள். 2இராஜா 6:17நியாயாதி 20:40-42லூக் 16:23லூக் 24:31

இஸ்ரயேல் அரசன் அவர்களைக் கண்டபோது எலிசாவிடம், “என் தகப்பனே, நான் அவர்களைக் கொன்றுவிடட்டுமா?” என்று கேட்டான். 2இராஜா 5:132இராஜா 8:92இராஜா 2:121 சாமு 24:191 சாமு 24:41 சாமு 26:82இராஜா 13:14லூக் 22:49

அதற்கு எலிசா, “அவர்களைக் கொல்லாதே. உனது வாளாலும், வில்லாலும் சிறைப்பிடித்த கைதிகளைக் கொல்லலாமா? அவர்களுக்குச் சாப்பிட அப்பமும், குடிக்கத் தண்ணீரும் கொடுத்து அவர்களுடைய எஜமானிடம் திருப்பி அனுப்பிவிடு” என்றான். ஆதி 48:22ரோம 12:20-212 நாளாக 28:8-15உபா 20:11-16ஓசி 2:18ஓசி 1:7யோசு 24:12மத் 5:44 அப்படியே அரசனும் அவர்களுக்கு ஒரு பெரிய விருந்தை ஆயத்தப்படுத்தினான். அவர்கள் சாப்பிட்டு, குடித்து முடித்தவுடன் அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் தங்கள் எஜமானிடம் திரும்பிப் போனார்கள். அதன்பின் சீரியப் படைப் பிரிவுகள் இஸ்ரயேலை திடீர் தாக்குதல் செய்வதை நிறுத்திவிட்டார்கள். 2இராஜா 5:22இராஜா 24:22இராஜா 6:8-9லூக் 10:29-37லூக் 6:352 நாளாக 28:15மத் 5:47நீதி 25:21-22

சமாரியாவில் பஞ்சம்

சில நாட்களுக்குப்பின்பு சீரிய அரசனான பெனாதாத் தன் முழுப் படைகளையும் திரட்டி அணிவகுத்துச்சென்று சமாரியாவை முற்றுகையிட்டான். 1 இராஜா 20:11 இராஜா 22:312இராஜா 17:5உபா 28:52பிரச 9:142இராஜா 18:92இராஜா 25:1 அப்போது சமாரியாவில் ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டிருந்தது. முற்றுகை நெடுநாட்களுக்கு நீடித்தபடியால், ஒரு கழுதையின் தலை எண்பது சேக்கல் வெள்ளிக்கும் காற்படி புறாத்தீனி ஐந்து சேக்கல் வெள்ளிக்கும் விற்கப்பட்டது. 2இராஜா 6:28-29எரே 14:13-15எரே 14:18எரே 52:6எரே 32:241 இராஜா 18:22இராஜா 25:32இராஜா 7:4

இஸ்ரயேல் அரசன் ஒரு நாள் நகரத்தின் மதில்மேல் நடந்து போகும்போது ஒரு பெண் அவனைப் பார்த்து, “என் தலைவனாகிய அரசனே, எனக்கு உதவிசெய்யும்” என்று சத்தமிட்டுக் கெஞ்சினாள். 2 சாமு 14:4அப் 21:28ஏசா 10:3லூக் 18:3

அரசன் அதற்குப் பதிலாக, “யெகோவா உனக்கு உதவிசெய்யாவிட்டால் நான் எங்கேயிருந்து உனக்கு உதவிசெய்ய முடியும்? சூடடிக்கும் களத்திலிருந்தா அல்லது திராட்சை ஆலையிலிருந்தா?” என்று கேட்டான். சங் 118:8-9சங் 124:1-3எரே 17:5சங் 127:1சங் 146:3சங் 60:11சங் 62:8ஏசா 2:2 பின்பும் அரசன் அவளைப் பார்த்து, “என்ன விஷயம்?” என்று கேட்டான். 2 சாமு 14:5நியாயாதி 18:23புலம் 4:10லேவி 26:29லூக் 23:291 சாமு 1:8உபா 28:53-57எசேக் 5:10

அதற்கு அவள் பதிலாக, “என்னோடிருக்கும் இப்பெண் என்னிடம், ‘இன்றைக்கு சாப்பிடும்படி உன் மகனைத் தா, நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம்’ என்று கூறினாள். அப்படியே நாங்கள் என் மகனைச் சமைத்துச் சாப்பிட்டோம். அடுத்தநாள் நான் அவளிடம், ‘நாங்கள் சாப்பிடும்படி உன் மகனைத் தா’ என்று கேட்டேன். ஆனால் அவள் அவனை ஒளித்துவிட்டாள்” என்று முறையிட்டாள். உபா 28:53லேவி 26:291 இராஜா 3:26உபா 28:57ஏசா 49:15ஏசா 66:13

அந்தப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட அரசன் தன் மேலங்கியைக் கிழித்தான். அவன் மதிலுக்கு மேலாக நடந்து கொண்டுபோகும்போது அவனுடைய உள் உடை துக்கவுடையாய் இருப்பதை மக்கள் யாவரும் கண்டனர். 1 இராஜா 21:272இராஜா 19:12இராஜா 5:7ஏசா 58:5-7 அப்பொழுது அரசன், “இன்று சாப்பாத்தின் மகன் எலிசாவின் தலையை நான் வெட்டாவிட்டால், இறைவன் என்னை எவ்வளவு அதிகமாகவும் தண்டிக்கட்டும்” என்றான். ரூத் 1:171 இராஜா 19:21 இராஜா 18:171 இராஜா 2:231 இராஜா 22:81 சாமு 14:441 சாமு 25:221 சாமு 3:17

அந்த வேளையில் எலிசா தன் வீட்டுக்குள் தன்னைச் சந்திக்க வந்த முதியோர்களோடு உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அரசன் ஒரு தூதுவனை தனக்கு முன்னே போகும்படி அனுப்பியிருந்தான். ஆனால் அவன் அங்கு போய்ச்சேரும் முன்பே எலிசா முதியோரைப் பார்த்து, “இக்கொலைகாரன் என் தலையை வெட்டுவதற்கு ஒருவனை அனுப்புகிறதை நீங்கள் காணவில்லையா? பாருங்கள் இந்தத் தூதுவன் வரும்போது, அவன் வரும்முன் கதவைப் பூட்டிக்கொண்டு நில்லுங்கள். பின்னாலே கேட்பது அவனுடைய எஜமானின் காலடிச் சத்தமல்லவா” என்றான். 1 இராஜா 18:4எசேக் 14:1எசேக் 20:1எசேக் 8:11 இராஜா 18:13-141 இராஜா 21:101 இராஜா 14:61 இராஜா 21:13 இவ்வாறு எலிசா அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தத் தூதுவன் அங்கு வந்தான். யோபு 2:9ஏசா 8:211 சாமு 28:6-81 சாமு 31:42 கொரி 2:112 கொரி 2:7யாத் 16:6-8ஆதி 4:13

அப்போது அரசன், “இந்தப் பேராபத்து யெகோவாவிடமிருந்துதான் வந்திருக்கிறது. ஆகையால் இன்னும் நான் ஏன் யெகோவாவுக்குக் காத்திருக்கவேண்டும்” என்றான்.