யெகோவாவைத் துதியுங்கள். சங் 135:3சங் 33:1சங் 42:4சங் 92:1சங் 63:3-5வெளி 5:9-14சங் 122:1-4வெளி 19:1-6
நமது இறைவனுக்குத் துதிகளைப் பாடுவது எவ்வளவு நல்லது,
அவரைத் துதிப்பது எவ்வளவு மகிழ்ச்சியும் தகுதியுமாயிருக்கிறது.
யெகோவா எருசலேமைக் கட்டியெழுப்புகிறார்; உபா 30:3ஏசா 56:8சங் 51:18ஏசா 62:7சங் 102:20-22எபே 2:12-19எசேக் 38:8எசேக் 39:27-28
அவர் நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரை ஒன்றுசேர்க்கிறார்.
அவர் உள்ளம் உடைந்தவர்களைச் சுகப்படுத்தி, சங் 34:18யோபு 5:18எரே 33:6ஏசா 61:1லூக் 4:18ஓசி 6:1-2ஏசா 57:15சங் 51:17
அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, ஏசா 40:26சங் 148:3சங் 8:3ஆதி 15:5
அவை ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார்.
நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்; ஏசா 40:28சங் 139:17-18சங் 96:4ரோம 11:33நாகூ 1:3சங் 40:5சங் 48:1எரே 10:6
அவருடைய அறிவுக்கு எல்லையே இல்லை.
யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆதரிக்கிறார்; சங் 25:91 பேது 5:6சங் 146:8-9யாக் 4:10செப்ப 2:3சங் 145:14சங் 149:41 சாமு 2:8
ஆனால் கொடியவர்களையோ தரையில் வீழ்த்துகிறார்.
யெகோவாவை நன்றியுடன் துதி பாடுங்கள்; சங் 95:1-2சங் 47:6-7சங் 68:32சங் 107:21-22சங் 92:1-3வெளி 5:8-10யாத் 15:20-21
யாழினால் நம் இறைவனுக்கு இசை மீட்டுங்கள்.
அவர் ஆகாயத்தை மேகங்களினால் மூடுகிறார்; யோபு 5:10சங் 65:9-13அப் 14:17ஆதி 9:14யோபு 26:8-9மத் 5:451 இராஜா 18:44-45ஆமோ 5:7-8
பூமிக்கு மழையைக் கொடுத்து,
மலைகளில் புல்லை வளரப்பண்ணுகிறார்.
மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் சங் 104:27-28யோபு 38:41மத் 6:26சங் 136:25லூக் 12:24சங் 145:15-16
அவர் உணவு கொடுக்கிறார்.
குதிரையின் பலத்தில் அவர் பிரியம் கொள்வதில்லை, 1 சாமு 16:7ஏசா 31:1நீதி 21:31சங் 20:7சங் 33:16-18பிரச 9:11ஓசி 1:7யோபு 39:19-25
படைவீரனின் கால் வலிமையில் அவர் மகிழ்ச்சி அடைவதுமில்லை;
யெகோவா தமக்குப் பயந்து, சங் 33:18மல்கி 3:16-17செப்ப 3:17சங் 149:4ஏசா 62:4சங் 35:27சங் 33:22நீதி 11:20
தங்கள் நம்பிக்கையை அவருடைய உடன்படிக்கையின் அன்பில்
வைத்திருக்கிறவர்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்.
எருசலேமே யெகோவாவைப் பாராட்டு; ஏசா 12:6யோவே 2:23ஏசா 52:7சங் 135:19-21சங் 146:10சங் 149:2
சீயோனே உன் இறைவனைத் துதி.
ஏனெனில் அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, சங் 128:3-6ஏசா 44:3-5சங் 115:14-15எரே 30:19-20சங் 144:12சங் 125:2புலம் 2:8-9நெகே 12:30
உன்னிடத்திலுள்ள உன் மக்களை ஆசீர்வதிக்கிறார்.
அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானத்தைக் கொடுத்து, சங் 29:11ஏசா 60:17-18சங் 81:16சங் 132:15உபா 32:141 நாளாக 22:9உபா 8:7-8ஏசா 66:12
சிறந்த கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
அவர் பூமிக்குத் தமது கட்டளையை அனுப்புகிறார்; யோபு 37:12சங் 107:202 தெச 3:1யோபு 34:29மத் 8:13மத் 8:8-9சங் 33:9யோனா 1:4
அவருடைய வார்த்தை விரைந்து செல்கிறது.
அவர் மூடுபனியை கம்பளியைப்போல் பரப்புகிறார்; யோபு 37:6யோபு 38:29சங் 148:8ஏசா 55:10யோபு 37:9-10
உறைபனித் துகள்களை சாம்பலைப்போல் தூவுகிறார்.
அவர் தமது பனிக்கட்டி மழையை சிறு கற்களைப்போல் வீசியெறிகிறார்; யோபு 38:29-30யோபு 38:22-23யோபு 37:9-10சங் 78:47-48யாத் 9:23-25யோசு 10:11
அவருடைய பனியின் குளிர்காற்றை யாரால் தாங்கமுடியும்?
அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; சங் 147:15சங் 33:9யோபு 37:10யோபு 6:16-17சங் 107:20யோபு 37:17
அவர் தமது தென்றல் காற்றுகளை வீசச்செய்ய, வெள்ளம் ஓடுகிறது.
அவர் தமது வார்த்தையை யாக்கோபுக்கும், மல்கி 4:4சங் 78:5உபா 33:2-4உபா 4:45உபா 5:22உபா 5:31ரோம 3:2ரோம 9:4
தமது சட்டங்களையும் விதிமுறைகளையும் இஸ்ரயேலுக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவர் இப்படி வேறு எந்த மக்களுக்கும் வெளிப்படுத்தவில்லை; உபா 4:32-34உபா 4:7-81 பேது 2:9-10எபே 2:12ரோம 3:1-2எபே 5:8அப் 14:16அப் 26:27
அவர்கள் அவருடைய சட்டங்களை அறியாதிருக்கிறார்கள்.
யெகோவாவைத் துதி.