நாவை அடக்குதல்
என் சகோதரரே, உங்களில் பலர் போதகர்கள் ஆவதற்கு விரும்பாதீர்கள். ஏனெனில் போதிக்கிற நாம் அதிக தீர்ப்பிற்கு உட்படுவோம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. 1 தீமோ 1:7லூக் 12:47-481 பேது 5:31 கொரி 12:28மத் 23:13மத் 23:8-102 கொரி 5:10ரோம 2:20-21 நாம் எல்லோரும் பலவிதங்களில் தவறு செய்கிறோம். தன் பேச்சில் ஒருபோதும் தவறாதவனாக யாராவது இருந்தால், அவனே முழுநிறைவு பெற்ற மனிதன். இப்படிப்பட்டவன், தனது முழு உடலையும் அடக்கி ஆளும் ஆற்றல் உடையவன். யாக் 1:26நீதி 13:31 பேது 3:10மத் 12:37சங் 34:13யாக் 3:5-6நீதி 20:91 யோவா 1:8-10
குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படி, அவைகளுடைய வாய்களில் கடிவாளங்களைப் போடும்போது, அவைகளின் முழு உடலையும் நாம் கட்டுப்படுத்துகிறோம். சங் 32:9சங் 39:1யாக் 1:262இராஜா 19:28ஏசா 37:29 அல்லது கப்பல்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவை மிகப்பெரியவைகளாய் இருந்தும், பலத்த காற்றினாலேயே அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலின் மாலுமி தான் விரும்புகின்ற திசையை நோக்கி, ஒரு சிறு சுக்கானாலே அவற்றைத் திருப்புகிறான். மத் 8:24அப் 27:14-38சங் 107:25-27யோனா 1:4 அதேபோலவே, நாவும் உடலின் ஒரு சிறு அங்கமாயிருக்கிறது; ஆனால் அது பெரும் அளவில் பெருமை பேசுகிறது. ஒரு சிறு நெருப்புப் பொறி எவ்வளவு பெரிய காட்டையும் எரித்துவிடுகிறது என்பதை எண்ணிப்பாருங்கள். நீதி 18:21எரே 9:3-8நீதி 12:18நீதி 15:2சங் 17:10சங் 73:8-9சங் 12:2-4சங் 52:1-2 நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது. சங் 120:2-3நீதி 16:27மாற் 7:15மத் 15:11-20நீதி 15:1மாற் 7:20-22லூக் 16:24கொலோ 3:8-9
எல்லா விதமான மிருகங்களும், பறவைகளும், ஊரும் பிராணிகளும், கடலில் வாழும் உயிரினங்களும் மனிதனால் அடக்கிக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. மாற் 5:4 ஆனால் நாவையோ ஒருவனாலும் அடக்கிக் கட்டுப்படுத்த முடியாது. அது கட்டுக்கடங்காத கொடியது. மரணத்தை விளைவிக்கும் விஷம் நிறைந்ததாயிருக்கிறது. ரோம 3:13சங் 140:3சங் 55:21யாக் 3:6சங் 57:4சங் 64:3-4சங் 58:4சங் 59:7
நாம் நாவினாலே நமது கர்த்தரையும், பிதாவையும் துதிக்கிறோம். அதே நாவினாலேயே இறைவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கிறோம். சங் 10:7ஆதி 1:26-27ஏசா 29:13சங் 62:4ஆதி 9:6சங் 59:122 சாமு 19:21அப் 2:26 ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகிறது. எனக்கு பிரியமானவர்களே, இவ்விதமாய் இருக்கக்கூடாதே. ரோம 12:141 பேது 3:91 கொரி 3:3சங் 50:16-201 தீமோ 5:13மீகா 3:11ஆதி 20:9எரே 7:4-10 ஒரே ஊற்றிலிருந்து நல்ல தண்ணீரும் உப்புத் தண்ணீரும் சுரக்க முடியுமா? எனக்கு பிரியமானவர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைக்கொடி அத்திப்பழங்களையும் விளைவிக்குமா? அதேபோல், உப்புத் தண்ணீர் ஊற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதுமில்லை. லூக் 6:43-44மத் 12:33மத் 7:16-20எரே 2:21ரோம 11:16-18எசேக் 47:8-11ஏசா 5:2-42இராஜா 2:19-22
இரண்டுவிதமான ஞானம்
உங்களுக்குள்ளே ஞானம் உள்ளவன் யார்? அறிவுள்ளவன் யார்? அவன் தன்னுடைய நல்ல வாழ்க்கையினாலே அதைக் காண்பிக்கட்டும். ஞானத்திலிருந்து வரும் மனத்தாழ்மையினால் செயல்களைச் செய்து காண்பிக்கட்டும்; கலா 5:23யாக் 3:17மத் 5:5கொலோ 3:121 பேது 2:12தீத் 3:22 தீமோ 2:25பிலி 1:27 ஆனால், உங்களுடைய இருதயங்களிலே கசப்பான பொறாமையையும், சுயநல ஆசையையும் இருக்குமேயானால், அதைக்குறித்து பெருமைப்பட வேண்டாம், சத்தியத்திற்கு எதிராக பொய் பேசவேண்டாம். யாக் 3:161 கொரி 13:4பிலி 2:31 கொரி 3:3ரோம 13:132 கொரி 12:201 பேது 2:1-2பிலி 1:15 அப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வரும் ஒன்றல்ல; இது உலக ஞானம். இது ஆவிக்குரிய தன்மையற்றது. இது பிசாசினிடத்திலிருந்து வருகிறது. யாக் 3:171 கொரி 3:19யாக் 1:171 கொரி 2:14யோவா 3:17பிலி 3:191 தீமோ 4:12 கொரி 1:12 ஏனெனில் எங்கே பொறாமையும் சுயநல ஆசையும் இருக்கின்றதோ, அங்கே ஒழுங்கீனமும் எல்லாவிதத் தீயசெயல்களும் இருக்கின்றன. யாக் 3:141 கொரி 3:31 கொரி 14:331 யோவா 3:12கலா 5:20ஆதி 11:9அப் 19:29
ஆனால் பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ, முதலாவது தூய்மை உடையதாய் இருக்கிறது; அது சமாதானத்தை விரும்புகிறதும், தயவுடையதும், பணிவுடையதும், இரக்கம் நிறைந்ததும், நல்ல கனியினால் நிறைந்ததுமாய் இருக்கிறது; அது பாரபட்சமும் போலித்தன்மையற்றதுமாய் இருக்கிறது. கலா 5:22-23நீதி 2:61 கொரி 13:4-7யாக் 3:15ரோம 12:9மத் 5:8யாக் 1:5யாக் 1:17 சமாதானத்தை உண்டுபண்ணுகிறவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கிறார்கள். மத் 5:9ஓசி 10:12பிலி 1:11ஏசா 32:16-17கலா 6:8நீதி 11:30நீதி 11:18எபி 12:11