1 ஒருகாலத்தில் மக்களால் நிறைந்திருந்த எருசலேம் பட்டணம், ஏசா 3:261 இராஜா 4:21எஸ்றா 4:20வெளி 18:16-17ஏசா 54:42இராஜா 23:35ஏசா 22:2புலம் 5:16
இப்பொழுது எவ்வளவு பாழாய்க் கிடக்கிறது!
ஒருகாலத்தில் நாடுகளின் மத்தியில் மிகவும் பெரியவளாய் இருந்தவள்,
இன்று ஒரு விதவையைப் போலானாளே!
நாடுகளின் மத்தியில் அரசியாய் இருந்தவள்
இப்பொழுது அடிமையானாளே.
இரவில் அவள் மனங்கசந்து அழுகிறாள், சங் 6:6மீகா 7:5எசேக் 23:22-25எரே 13:17எரே 22:20-22எரே 30:14எரே 4:30எரே 9:1
அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வடிகிறது.
அவளுக்குப் பிரியமானவர்களில் அவளை
ஆறுதல் செய்வதற்கு ஒருவரும் இல்லை.
அவளுடைய நண்பர்கள் அவளுக்கு துரோகம் செய்தார்கள்;
அவர்கள் அவளின் விரோதிகளானார்கள்.
துன்பத்தையும், கொடுமையான அடிமை வேலையையும் அனுபவித்தபின், உபா 28:64-67புலம் 2:92 நாளாக 36:20-212இராஜா 24:14-152இராஜா 25:112இராஜா 25:21ஆமோ 9:1-4எசேக் 5:12
யூதா நாடுகடத்தப்பட்டுப் போனாள்.
பிறநாடுகளின் மத்தியில் அவள் குடியிருக்கிறாள்;
ஆனால் அவளுக்கோ இளைப்பாறும் இடம் இல்லை.
அவளுடைய துன்பத்தின் மத்தியில்
அவளைப் பின்தொடர்ந்த யாவரும் அவளைப் பிடித்துக்கொண்டார்கள்.
நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்கு ஒருவரும் வராததால், எரே 9:11யோவே 1:8-13ஏசா 24:4-6எரே 10:22எரே 14:2புலம் 2:6-7ஏசா 32:9-14எரே 33:10-12
சீயோனின் தெருக்கள் துக்கங்கொண்டாடுகின்றன.
அவளுடைய வாசல்கள் யாவும் பாழாய்க் கிடக்கின்றன.
அவளுடைய ஆசாரியர்கள் புலம்புகிறார்கள்.
அவளுடைய இளம்பெண்கள் துயரப்படுகிறார்கள்,
அவள் கசப்பான வேதனையில் இருக்கிறாள்.
அவளுடைய பகைவர்கள் அவளுக்கு தலைவர்களாகி விட்டார்கள்; உபா 32:15-27எசேக் 8:17-18எசேக் 9:9எரே 30:14-15எரே 39:9சங் 90:7-82 நாளாக 36:14-16தானி 9:7-16
அவளுடைய பகைவர்கள் சுகவாழ்வு அடைந்திருக்கிறார்கள்.
அவளுடைய அநேக பாவங்களின் நிமித்தம்
யெகோவா அவளுக்கு துக்கத்தைக் கொடுத்தார்.
அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன்
கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
சீயோன் மகளின் எசேக் 24:252இராஜா 19:212 சாமு 4:11-12உபா 28:25உபா 32:30எசேக் 11:22-23எசேக் 24:21எசேக் 7:20-22
சீர்சிறப்பெல்லாம் அவளைவிட்டு நீங்கிற்று.
அவளுடைய இளவரசர்கள் மேய்ச்சலை காணாத
மான்களைப் போலானார்கள்;
அவர்கள் தங்களை துரத்துகிறவர்களுக்கு முன்பாக
பலவீனமுற்று தப்பி ஓடினார்கள்.
எருசலேம் துன்பப்பட்டு அலைந்த நாட்களில், சங் 79:4உபா 4:34-37சங் 42:4சங் 77:5-9உபா 4:7-8உபா 8:7-9ஓசி 2:7ஏசா 5:1-4
முற்காலத்தில் தனக்குச் சொந்தமாயிருந்த
செல்வங்களையெல்லாம் நினைவுகூருகிறாள்.
அவளுடைய மக்கள் பகைவரின் கையில் விழுந்தபோது,
அவளுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருந்ததில்லை.
மக்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கண்டு,
அவளுடைய பகைவர் அவளைப் பார்த்து நகைத்தார்கள்.
எருசலேம் பெரும் பாவம் செய்து அசுத்தமடைந்தாள். ஏசா 59:2-13புலம் 1:20-22எரே 13:22எரே 13:26புலம் 1:11புலம் 1:4-51 இராஜா 8:46-471 இராஜா 9:9
அவளை கனம்பண்ணின யாவரும்
அவளுடைய நிர்வாணத்தைக் கண்டதினால்,
அவளை அவமதிக்கிறார்கள்;
அவள் தனக்குள் அழுது,
தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள்.
அவளுடைய அசுத்தம் அவளுடைய உடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது; உபா 32:29ஏசா 47:7சங் 25:18பிரச 4:1புலம் 1:172 தெச 2:4-8ஏசா 3:8எரே 13:17-18
அவள் தன்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவில்லை.
ஆகையினால் அவளுடைய வீழ்ச்சி அதிர்ச்சியாயிருந்தது;
அவளை தேற்றுவார் ஒருவரும் இல்லை.
“யெகோவாவே, என்னுடைய துன்பத்தைப் பாரும்;
என்னுடைய பகைவன் என்னை வெற்றி கொண்டானே” என்று அழுகிறாள்.
பகைவன் எருசலேமின் இன்பமான உபா 23:3எரே 51:51ஏசா 64:10-11புலம் 1:7நெகே 13:1சங் 74:4-8எசேக் 44:7எசேக் 7:22
எல்லாவற்றின்மேலும் தன் கைகளை வைத்தான்.
அவளுடைய பரிசுத்த இடத்திற்குள்
பிறநாட்டினர் நுழைவதை அவள் கண்டாள்.
யெகோவா தடைசெய்தவர்கள்
அவருடைய சபைக்குள் நுழைவதை அவள் கண்டாள்.
அவளுடைய மக்கள் யாவரும் எரே 52:6எரே 38:9புலம் 2:121 சாமு 30:11-12உபா 28:52-572இராஜா 6:25எசேக் 4:15-17எசேக் 5:16-17
அப்பத்தைத் தேடித் தவிக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்கள் திரவியங்களை
உணவுக்காக பண்டம் மாற்றம் செய்கிறார்கள்.
அவள், “யெகோவாவே கவனித்துப் பாரும்!
நான் அவமதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று துக்கிக்கிறாள்.
“இந்த வழியாய் கடந்துபோகிறவர்களே, தானி 9:12லூக் 23:28-31எரே 18:16எரே 30:24புலம் 4:6-11ஏசா 13:13புலம் 2:13லூக் 21:22-23
உங்களுக்கு இது ஒரு பொருட்டாய் தோன்றவில்லையோ?
சுற்றிலும் நோக்கிப்பாருங்கள்.
யெகோவா தமது கடுங்கோபத்தின் நாளில்,
என்மேல் கொண்டுவந்த வேதனையைப்போன்ற
வேதனை ஏதும் உண்டோ?
“யெகோவா உயரத்திலிருந்து நெருப்பை அனுப்பினார். ஆப 3:16யோபு 30:30எசேக் 17:20யோபு 19:6சங் 22:14எசேக் 12:13எபி 12:29நாகூ 1:6
அதை எனது எலும்புகளுக்குள் இறங்கப் பண்ணினார்.
அவர் என்னுடைய கால்களுக்கு ஒரு வலையை விரித்து,
என்னைப் பின்னோக்கி திருப்பிவிட்டார்.
அவர் என்னைப் பாழாக்கி,
நாள்தோறும் மயக்கமடையச் செய்தார்.
“என்னுடைய பாவங்கள் ஒரு நுகமாக கட்டப்பட்டிருக்கின்றன; உபா 28:48ஏசா 47:6எசேக் 25:4எசேக் 25:7எரே 28:14நீதி 5:22எசேக் 11:9எசேக் 21:31
அவை அவருடைய கைகளால் ஒன்றாக்கப்பட்டு,
என் கழுத்தின்மேல் போடப்பட்டுள்ளன.
யெகோவா என் பெலனை குன்றப்பண்ணினார்.
என்னால் எதிர்க்க முடியாதவர்களிடத்தில்
என்னை ஒப்புக்கொடுத்து விட்டார்.
“என் மத்தியிலிருந்த இராணுவவீரர்களையெல்லாம் ஏசா 63:3ஏசா 28:18மல்கி 4:3எபி 10:29லூக் 21:24வெளி 14:19-20வெளி 19:152இராஜா 24:14-16
யெகோவா புறக்கணித்துவிட்டார்;
என்னிடமுள்ள என்னுடைய வாலிபரை நசுக்கும்படி,
எனக்கெதிராக ஒரு படையை அழைத்திருக்கிறார்.
யூதாவின் கன்னிகையை யெகோவா
தம் திராட்சை ஆலையில் மிதித்துப்போட்டார்.
“இதனால்தான் நான் அழுகிறேன். புலம் 1:2சங் 119:136எரே 13:17எரே 14:17புலம் 2:11புலம் 2:18புலம் 3:48-49பிரச 4:1
என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது.
என்னைத் தேற்ற என் அருகில் யாரும் இல்லை.
என் ஆவிக்கு புத்துயிர் அழிக்கவும் ஒருவரும் இல்லை.
பகைவன் வெற்றிகொண்டபடியினால்,
என்னுடைய பிள்ளைகள் ஆதரவற்றுப் போனார்கள்.”
சீயோன் தன் கைகளை உதவிக்காக நீட்டுகிறாள், எரே 4:31ஏசா 1:15புலம் 1:92இராஜா 24:2-42இராஜா 25:1எரே 21:4-5எரே 34:22புலம் 1:16
அவளை ஆறுதல்படுத்த ஒருவரும் இல்லை.
யாக்கோபின் அயலவர் அவனுக்குப்
பகைவர்களாகும்படி யெகோவா நியமித்திருக்கிறார்;
அவர்கள் மத்தியில் எருசலேம்
ஒரு அசுத்தப் பொருளாயிற்று.
“யெகோவா நேர்மையுள்ளவர், சங் 119:751 சாமு 12:14-15செப்ப 3:5எரே 12:1புலம் 1:12புலம் 3:42நெகே 9:33சங் 107:11
இருந்தாலும் நான் அவருடைய கட்டளைக்கு எதிராகக் கலகம் செய்தேன்.
மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள்;
என்னுடைய துன்பத்தைப் பாருங்கள்.
என் இளைஞரும், இளம்பெண்களும்
நாடுகடத்தப்பட்டுப் போனார்கள்.
“நான் என் கூட்டாளிகளை கூப்பிட்டேன், புலம் 1:11புலம் 1:2புலம் 2:20யோபு 19:13-19எரே 14:15-18எரே 2:28எரே 23:11-15எரே 27:13-15
அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள்.
என்னுடைய ஆசாரியரும்,
முதியோரும் தங்கள் உயிரைக் காக்க
உணவு தேடுகையில்,
பட்டணத்தில் அழிந்துபோனார்கள்.
“யெகோவாவே பாரும்! நான் எவ்வளவாய் துயரப்பட்டிருக்கிறேன். எசேக் 7:15புலம் 2:11உபா 32:25ஏசா 16:11நீதி 28:13எரே 4:19யோபு 30:271 இராஜா 8:47-50
நான் எனக்குள்ளே கடும் வேதனைப்படுகிறேன்.
என் இருதயத்தில் கலக்கமுற்றிருக்கிறேன்.
ஏனெனில் நான் அதிகமாய் கலகம் பண்ணினேன்.
வெளியே, வாள் அழிக்கிறது;
உள்ளே, மரணம் மட்டுமே இருக்கிறது.
“என்னுடைய புலம்பலை மக்கள் கேட்டிருக்கிறார்கள், புலம் 1:8எரே 50:11புலம் 1:16புலம் 1:22புலம் 2:15சங் 35:15எரே 51:24புலம் 1:2
ஆனால் என்னைத் தேற்றுவதற்கோ ஒருவரும் இல்லை.
என் பகைவர்கள் யாவரும் எனக்கு வந்த துயரத்தைக் கேள்விப்பட்டு,
நீர் அதை செய்தபடியால் மகிழ்ச்சியடைகிறார்கள்.
அவர்களும் என்னைப் போலாகும்படி நீர்
அறிவித்த நாளை வரப்பண்ணும்.
“அவர்களுடைய கொடுமைகள் எல்லாம் உமக்கு முன்பாக வரட்டும்; எரே 8:18வெளி 6:10சங் 109:14-15நெகே 4:4-5எபே 3:13ஏசா 13:7எரே 10:25எரே 18:23
என்னுடைய எல்லா பாவங்களுக்காக
நீர் எனக்குச் செய்ததுபோலவே,
அவர்களுக்கும் செய்யும்.
என் புலம்பல்கள் அநேகம்,
என் இருதயமும் சோர்ந்துபோகிறது.”