பகுதி iv
இறைவனின் மனிதனாகிய மோசேயின் மன்றாட்டு.
யெகோவாவே, தலைமுறைதோறும் உபா 33:271 யோவா 4:16சங் 71:3எசேக் 11:16சங் 91:1சங் 91:9யாத் 33:14-19யோவா 6:56
நீரே எங்கள் வாழ்விடமாய் இருக்கிறீர்.
மலைகள் தோன்றுமுன்னும், பூமியையும் எபி 13:8ஆதி 1:1சங் 102:24-27வெளி 1:8சங் 93:21 தீமோ 6:15-16எபி 1:10-12சங் 33:9
உலகத்தையும் நீர் உருவாக்குமுன்னும்,
நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் நீரே இறைவனாய் இருக்கிறீர்.
நீர் மனிதனை மீண்டும் தூசிக்குத் திருப்பி, ஆதி 3:19பிரச 12:7யோபு 34:14-15எண் 14:35சங் 104:29சங் 146:4ஆதி 6:6-7யோபு 12:10
“மனுமக்களே, தூசியாகுங்கள்” என்கிறீர்.
உமது பார்வையில் ஆயிரம் வருடங்கள் 2 பேது 3:8சங் 39:5மத் 24:43லூக் 12:38மத் 14:25யாத் 14:24நியாயாதி 7:19
கழிந்துபோன ஒரு நாளைப் போலவும்,
இரவின் ஒரு சாமத்தைப் போலவும் இருக்கின்றன.
ஆனாலும் மரண நித்திரையில் நீர் மானிடரை வெள்ளம்போல வாரிக்கொண்டு போகிறீர்; ஏசா 40:61 பேது 1:24யோபு 22:16சங் 103:15-16சங் 73:20யோபு 27:20-21ஏசா 29:7-8ஏசா 8:7-8
அவர்கள் காலையில் முளைக்கும் பசும்புல்லைப்போல் இருக்கிறார்கள்:
அது காலையில் புதிதாக முளைத்துப் பூத்தாலும், யோபு 14:2சங் 92:7யாக் 1:11மத் 6:30
மாலையாகும்போது உலர்ந்து வாடிப்போகும்.
நாங்கள் உமது கோபத்தால் சோர்ந்துபோகிறோம், சங் 39:11உபா 2:14-16யாத் 14:24எபி 3:10-11எபி 3:17எண் 17:12-13சங் 59:13சங் 90:11
உமது கடுங்கோபத்தால் திகிலடைகிறோம்.
நீர் எங்கள் அநியாயங்களை உமக்கு முன்பாகவும், எரே 16:17பிரச 12:14எபி 4:12-13எரே 23:24சங் 19:121 யோவா 3:20எரே 9:13-16சங் 10:11
எங்கள் இரகசிய பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
எங்கள் நாட்கள் எல்லாம் உமது கடுங்கோபத்தால் கடந்துபோய்விட்டது; சங் 78:33சங் 39:5சங் 90:4
நாங்கள் எங்களுடைய வருடங்களைப் புலம்பலோடே முடிக்கின்றோம்.
எங்கள் வாழ்நாட்கள் எழுபது வருடங்களே; யாக் 4:14சங் 78:392 சாமு 19:35உபா 34:7ஆதி 47:91 இராஜா 1:1யோபு 14:10யோபு 24:24
நாங்கள் பெலனுள்ளவர்களாய் இருந்தால், அது எண்பது வருடங்களாகவும் இருக்கலாம்,
ஆனாலும் அவை கஷ்டமும் துன்பமும் நிறைந்தவையாகவே இருக்கின்றன;
எங்கள் வாழ்நாட்கள் விரைவாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.
உமது கோபத்தின் வல்லமையை யார் அறிவார்? ஏசா 33:14லேவி 26:24நாகூ 1:62 கொரி 5:11உபா 28:59உபா 29:20-29லேவி 26:18லேவி 26:21
உமக்குப் பயப்படத்தக்கதாய் உமது கோபத்தை யார் அறிவார்?
எங்கள் நாட்களை சரியாகக் கணக்கிட எங்களுக்குப் போதியும், எபே 5:16-17சங் 39:4யோவா 9:4உபா 32:29நீதி 4:7நீதி 3:13-18நீதி 16:16நீதி 23:12
அதினால் நாங்கள் ஞானமுள்ள இருதயத்தைப் பெற்றுக்கொள்வோம்.
யெகோவாவே, மனமிரங்கும்; எவ்வளவு காலத்திற்கு இந்த நிலை? உபா 32:36சங் 106:45சங் 135:14சங் 80:14ஆமோ 7:3ஆமோ 7:6ஓசி 11:8யோவே 2:13-14
உமது பணியாளர்கள்மேல் கருணையாய் இரும்.
காலையிலே எங்களை உமது உடன்படிக்கையின் அன்பினால் திருப்தியாக்கும்; சங் 23:6சங் 85:6சங் 31:7சங் 86:4சங் 103:3-5பிலி 4:4சங் 149:2சங் 36:7-8
அப்பொழுது நாங்கள் இன்பமாய்ப் பாடி,
எங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாய் இருப்போம்.
நீர் எங்களைத் துன்புறுத்திய நாட்களுக்கும், சங் 126:5-6சங் 30:5ஏசா 40:1-2யோவா 16:20ஏசா 12:1எரே 31:12-13ஏசா 61:3ஏசா 65:18-19
நாங்கள் துன்பங்களைக் கண்ட வருடங்களுக்கும் ஈடாக எங்களை மகிழச் செய்யும்.
உமது செயல்கள் உம்முடைய பணியாளர்களுக்கும், ஆப 3:2சங் 44:1உபா 32:4உபா 1:39எண் 14:15-24யோசு 23:14யோசு 4:22-24எண் 14:30-31
உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் காண்பிக்கப்படுவதாக.
எங்கள் இறைவனாகிய யெகோவாவின் தயவு எங்கள்மேல் இருப்பதாக; நீதி 16:31 கொரி 3:72 தெச 2:16யோபு 22:28ஏசா 26:12சங் 118:25சங் 68:28சங் 80:3
எங்கள் கைகளின் வேலையை நிலைப்படுத்தும்;
ஆம், எங்கள் கைகளின் வேலையை நிலைப்படுத்தும்.