ஆமோஸ் 7

Amos 7

தரிசனங்கள்

ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: அரசனுடைய பங்கு அறுவடை செய்யப்பட்டது. அதன்பின் இரண்டாவது விளைச்சல் வளர்ந்து கொண்டிருந்தபோது, யெகோவா வெட்டுக்கிளிக் கூட்டங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். யோவே 1:4ஆமோ 8:1ஆமோ 4:9ஏசா 33:4யோவே 2:25நாகூ 3:15-17ஆமோ 7:4ஆமோ 7:7 வெட்டுக்கிளிக் கூட்டம் நாட்டை வெறுமையாக்கியது. அப்போது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, மன்னியும்! யாக்கோபு எப்படி உயிர் பிழைப்பான்? அவன் மிகவும் சிறியவனாயிருக்கிறானே!” எனக்கூறி அழுதேன். ஏசா 37:4எசேக் 11:13யாத் 10:15எசேக் 9:8எரே 14:20-21எரே 14:7எரே 42:2ஆமோ 7:5

எனவே யெகோவா தமது மனதை மாற்றிக்கொண்டார். உபா 32:36யோனா 3:10ஓசி 11:8ஆமோ 7:6யோவே 2:14சங் 106:45யாக் 5:16எரே 26:19

“இப்படி இது நடக்காது” என்றும் யெகோவா சொன்னார்.

பின்பு ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: ஆண்டவராகிய யெகோவா நெருப்பினால் நியாயத்தீர்ப்பை நியமித்தார். அது மகா ஆழத்தை வற்றச் செய்தது; நிலத்தையும் சுட்டெரித்தது. ஆமோ 7:1ஏசா 66:15-16ஆமோ 1:4ஆமோ 1:7ஆமோ 4:11ஆமோ 5:6ஆமோ 7:7உபா 32:22 அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் கெஞ்சிக்கேட்கிறேன். இதை நிறுத்தும். யாக்கோபு எப்படி உயிர் தப்புவான்? அவன் மிகவும் சிறியவனாயிருக்கிறானே” என்று அழுதேன். சங் 85:4ஆமோ 7:2-3ஏசா 1:9ஏசா 10:25எரே 30:19யோவே 2:17

எனவே யெகோவா தமது மனதை மாற்றிக்கொண்டார். ஆமோ 7:3நியாயாதி 10:16நியாயாதி 2:18எரே 26:19யோனா 3:10யோனா 4:2சங் 135:14சங் 90:13

“இதுவும் நடக்காது” என்று ஆண்டவராகிய யெகோவா சொன்னார்.

பின்பு ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: யெகோவா தூக்குநூலின்படி கட்டப்பட்ட சுவரின் அருகில் நின்றுகொண்டிருந்தார். அவர் கையில் ஒரு தூக்குநூல் இருந்தது. 2இராஜா 21:13ஏசா 28:17வெளி 21:152 சாமு 8:2எசேக் 40:3ஏசா 34:11புலம் 2:8வெளி 11:1 அப்பொழுது யெகோவா என்னிடம், “ஆமோஸே, நீ என்னத்தைக் காண்கிறாய்?” என்று கேட்டார். ஆமோ 8:2எரே 15:6புலம் 2:8எசேக் 7:2-92இராஜா 21:13ஏசா 28:17மீகா 7:18எரே 1:11-13

அதற்கு நான், “தூக்குநூலைக் காண்கிறேன்” என்றேன்.

அதற்கு யெகோவா, “பார், இஸ்ரயேல் என்னும் எனது மக்கள் மத்தியில் தூக்குநூலை வைக்கிறேன். அது அவர்களுடைய பாவங்களை எடுத்துக்காட்டும். நான் இனி அவர்களை தப்பவிடமாட்டேன்.

“ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் அழிக்கப்படும். 2இராஜா 15:8-10ஆதி 46:1ஆமோ 3:14ஆமோ 5:5ஆமோ 8:14ஆதி 26:23-25ஓசி 10:8ஏசா 63:18

இஸ்ரயேலின் பரிசுத்த இடங்கள் பாழாக்கப்படும்.

யெரொபெயாமின் வீட்டிற்கு எதிராக நான் வாளுடன் எழும்புவேன்” என்று சொன்னார்.

ஆமோஸ், அமத்சியா

அப்பொழுது பெத்தேலின் ஆசாரியனான அமத்சியா இஸ்ரயேல் அரசன் யெரொபெயாமிற்குச் சொல்லி அனுப்பிய செய்தியாவது: “ஆமோஸ் இஸ்ரயேலின் மத்தியிலே உமக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறான். அவனுடைய வார்த்தைகளை நாட்டு மக்களால் சகித்துக்கொண்டிருக்க முடியாதிருக்கிறது. எரே 38:41 இராஜா 12:31-32அப் 24:5எரே 26:8-11மத் 21:231 இராஜா 13:33அப் 5:28லூக் 23:2 ஏனெனில் ஆமோஸ் சொல்வதாவது: 2இராஜா 17:6ஆமோ 6:7-8ஆமோ 7:9சங் 56:5அப் 6:14எரே 28:10-11மத் 26:61எரே 26:9

“ ‘யெரொபெயாம் வாளினால் சாவான்.

இஸ்ரயேலர் நிச்சயமாக தங்கள் சொந்த நாட்டிலிருந்து

நாடுகடத்தப்பட்டுத் தூரமாய் போவார்கள்.’ ”

அதன்பின் அமத்சியா ஆமோஸிடம், “தரிசனக்காரனே நாட்டைவிட்டு வெளியே போ; யூதா நாட்டிற்குத் திரும்பிப்போ; அங்கே உழைத்துச் சாப்பிடு; அங்கேயே உனது இறைவாக்கையும் சொல். 1 கொரி 2:14மத் 8:341 சாமு 9:9ஏசா 30:10ரோம 16:181 பேது 5:21 சாமு 2:362 நாளாக 16:10 இனிமேல் பெத்தேலில் இறைவாக்கைச் சொல்லாதே. ஏனெனில் இது அரசனின் பரிசுத்த வழிபாட்டு இடமும், அரசுக்குரிய ஆலயத்தின் இருப்பிடமுமாய் இருக்கிறது” என்றான். 1 இராஜா 12:32ஆமோ 2:121 இராஜா 12:291 இராஜா 13:1அப் 4:17-18அப் 5:28அப் 5:40

அதற்கு ஆமோஸ் அமத்சியாவிடம், “நான் இறைவாக்கினனும் அல்ல; இறைவாக்கினனின் மகனும் அல்ல, நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்தி மரங்களை பராமரிக்கிறவனுமாய் இருந்தேன். ஆமோ 1:1சகரி 13:51 கொரி 1:272இராஜா 2:52இராஜா 4:382 நாளாக 19:22இராஜா 2:31 இராஜா 20:35 ஆனால் மந்தை மேய்த்துக்கொண்டிருந்த என்னை யெகோவா அழைத்து, ‘நீ போய், இஸ்ரயேலரனான என் மக்களுக்கு இறைவாக்குச் சொல்,’ என்றார். 2 சாமு 7:8எசேக் 2:3-4அப் 1:8அப் 5:20எரே 1:7மத் 4:18-19மத் 9:9சங் 78:70-72 ஆகவே இப்பொழுதும் நீ யெகோவாவினுடைய வார்த்தையைக் கேள், எசேக் 20:46எசேக் 21:2மீகா 2:6ஆமோ 7:13உபா 32:2எரே 28:15-171 இராஜா 22:191 சாமு 15:16

“ ‘நீ இஸ்ரயேலருக்கு விரோதமாக இறைவாக்கு சொல்லாதே,

ஈசாக்கின் வீட்டிற்கு விரோதமாய் பிரசங்கிப்பதை நிறுத்து’ என்கிறாயே.

“ஆதலால் யெகோவா சொல்வது இதுவே: ஓசி 9:32இராஜா 17:6எசேக் 4:13எரே 28:16ஓசி 4:13-14ஆமோ 7:11ஏசா 13:16எரே 29:21

“ ‘உன் மனைவி இந்த நகரத்தில் வேசியாவாள்,

உன் மகன்களும் மகள்களும் வாளால் சாவார்கள்.

உன் நாடும் அளக்கப்பட்டு பங்கிடப்படும்,

நீயும் இறைவனை அறியாதவர்களின் நாட்டிலே சாவாய்.

நிச்சயமாகவே இஸ்ரயேலர் நாடுகடத்தப்படுவார்கள்.

தங்கள் சொந்த நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள்.’ ”