தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், பூமியதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், இஸ்ரயேலரைக் குறித்து அவன் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்: அக்காலத்தில் உசியா, யூதாவுக்கு அரசனாகவும், யோவாசின் மகன் யெரொபெயாம் இஸ்ரயேலுக்கு அரசனாகவுமிருந்தார்கள். சகரி 14:52 நாளாக 26:1-231 இராஜா 19:192 நாளாக 11:62 நாளாக 20:202 சாமு 14:2ஆமோ 7:141 கொரி 1:27
அவன் சொன்னதாவது: யோவே 3:16எரே 25:30ஏசா 42:13ஆமோ 9:3எரே 12:4நாகூ 1:4ஆமோ 3:7-8ஆமோ 4:7-8
“யெகோவா சீயோனிலிருந்து கர்ஜிக்கிறார்;
எருசலேமிலிருந்து முழங்குகிறார்.
மேய்ப்பர்களின் மேய்ச்சல் நிலங்கள் உலர்ந்து போகின்றன.
கர்மேல் மலையுச்சியும் காய்ந்து போகிறது.”
இஸ்ரயேலரின் அயலவர்மேல் நியாயத்தீர்ப்பு
யெகோவா சொல்வது இதுவே: 2இராஜா 10:32-332இராஜா 8:12ஆமோ 1:9ஆமோ 2:6ஏசா 8:4எரே 49:23-27ஆமோ 1:13ஆமோ 1:6
“தமஸ்குவினுடைய மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
ஏனென்றால் அவர்கள் கீலேயாத்தை இரும்பு பற்களுள்ள கருவிகளால் போரடித்தார்களே.
ஆசகேலின் வீட்டின்மேல் நெருப்பை அனுப்புவேன். 2இராஜா 13:252இராஜா 13:32இராஜா 8:7-15எரே 49:272இராஜா 6:24எரே 17:271 இராஜா 19:151 இராஜா 20:1-22
அது அவனுடைய மகன் பெனாதாதின் அரண்களையும் எரித்துப்போடும்.
தமஸ்குவின் வாசலை நான் உடைப்பேன். 2இராஜா 16:9ஆமோ 9:7எரே 51:30ஏசா 43:14புலம் 2:9எரே 50:36நாகூ 3:13
ஆவேன் பள்ளத்தாக்கிலுள்ள அரசனை அழித்து,
பெத் ஏதேனில் செங்கோல் பிடிப்பவனையும் அழிப்பேன்;
ஆராமின் மக்களை கீருக்கு நாடுகடத்துவேன்”
என்று யெகோவா சொல்கிறார்.
யெகோவா சொல்வது இதுவே: 2 நாளாக 28:18ஆமோ 1:11ஒபதி 1:111 சாமு 6:17ஆமோ 1:9எசேக் 35:5ஏசா 14:29-31எரே 47:4-5
“காசா பட்டணம் திரும்பதிரும்ப செய்த
அநேக பாவங்களின் நிமித்தம்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
ஏனெனில் அவர்கள் முழுச்சமுதாயத்தையும் சிறைப்பிடித்து ஏதோமியரிடம் விற்றார்களே.
காசாவின் மதில்களின்மேல் நெருப்பை அனுப்புவேன்; செப்ப 2:42இராஜா 18:8எரே 47:12 நாளாக 26:6ஆமோ 1:4உபா 32:35உபா 32:41-43எரே 25:18-20
அது அதன் அரண்களை சுட்டெரிக்கும்.
அஸ்தோத்தின் அரசனை நான் அழிப்பேன். எசேக் 25:16ஏசா 14:29-31எரே 47:4-5செப்ப 2:4-72 நாளாக 26:6ஏசா 20:1சங் 81:14சகரி 9:6
அஸ்கலோனில் செங்கோல் பிடிப்பவனையும் ஒழிப்பேன்.
பெலிஸ்தியரில் கடைசியாய் இருப்பவன் சாகும்வரைக்கும்,
எக்ரோனுக்கெதிராக என் கரத்தை நீட்டுவேன்”
என்று ஆண்டவராகிய யெகோவா சொல்கிறார்.
யெகோவா சொல்வது இதுவே: 1 இராஜா 9:11-14ஏசா 23:1-18யோவே 3:4-8சகரி 9:2-42 நாளாக 2:8-162 சாமு 5:11எசேக் 26:1-211 இராஜா 5:1-11
“தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
ஏனென்றால் சகோதர உடன்படிக்கையை உதாசீனம் செய்து,
சிறைப்பிடிக்கப்பட்ட முழுச்சமுதாயத்தையும் ஏதோமுக்கு விற்றார்களே.
தீருவின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன். சகரி 9:4ஆமோ 1:7ஆமோ 1:4எசேக் 26:12
அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
யெகோவா சொல்வது இதுவே: எசேக் 25:12-142 நாளாக 28:17எண் 20:14-21யோவே 3:19மல்கி 1:4எரே 49:7-22சங் 137:7எசேக் 35:1-15
“ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
இரக்க உணர்வின்றி தன் சகோதரனான
இஸ்ரயேலை வாளுடன் துரத்திச் சென்றானே.
அத்துடன் அவன் கோபம் அடங்காமல்,
அவனுடைய மூர்க்கத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே.
தேமானின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன். எரே 49:7ஒபதி 1:9-10எரே 49:13எரே 49:20எரே 49:22ஆதி 36:11ஆதி 36:33ஏசா 34:6
அது போஸ்றாவின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
யெகோவா சொல்வது இதுவே: எசேக் 25:2-7ஓசி 13:16எரே 49:1-6எசேக் 35:10ஏசா 5:8செப்ப 2:8-91 சாமு 11:1-22 நாளாக 20:1
“அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும்,
நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
தன் எல்லைகளை விரிவாக்கும்படி கீலேயாத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே.
ரப்பாவின் மதிலுக்கு நெருப்பு மூட்டுவேன். ஆமோ 2:2உபா 3:11எரே 49:22 சாமு 12:26ஏசா 30:30தானி 11:40எசேக் 25:5ஏசா 9:5
அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.
அது யுத்தநாளின் முழக்கத்தின் மத்தியிலும்,
புயல் நாளின் சூறாவளியின் மத்தியிலும் நடக்கும்.
அதன் அரசனும் நாடுகடத்தப்படுவான். எரே 49:3
அவனும் அவனுடைய அதிகாரிகளும் ஒன்றாக சிறைப்படுவார்கள்”
என்று யெகோவா சொல்கிறார்.