2 பேதுரு 1

2 Peter 1

இயேசுகிறிஸ்துவின் வேலைக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு, தீத் 2:13ரோம 3:21-262 கொரி 4:13யோவா 12:26தீத் 1:4ரோம 1:122 பேது 1:41 பேது 1:1

நம்முடைய இறைவனும் இரட்சகருமான இயேசுகிறிஸ்து ஏற்படுத்திய நீதியின் மூலமாய், எங்களுடைய விசுவாசத்தைப் போன்ற உயர்மதிப்புடைய விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எழுதுகிறதாவது:

இறைவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிவதன் மூலமாய் கிருபையும் சமாதானமும் நிறைவாய் உங்களுடன் இருப்பதாக. 2 பேது 3:18யோவா 17:3பிலி 3:81 பேது 1:2ஏசா 53:11எண் 6:24-26யூதா 1:2ரோம 1:7

இறைவனுடைய அழைப்பின் நிச்சயம்

நம்முடைய வாழ்க்கைக்கும் இறை பக்திக்கும் தேவையான எல்லாவற்றையும், அவருடைய இறைவல்லமை நமக்குக் கொடுத்திருக்கிறது. அவரைப்பற்றி எங்களுக்கு இருக்கும் அறிவின் மூலமாய் நமக்கு இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவரே தமது மகிமையினாலும் நன்மையினாலும் நம்மை அழைத்திருக்கிறார். 1 பேது 5:102 தீமோ 1:9ரோம 8:28-301 கொரி 3:21-23சங் 84:11ரோம 8:32எபே 1:19-212 கொரி 12:9 இவற்றின் மூலமாகவே இறைவனுடைய பெரிதான, உயர்மதிப்புடைய வாக்குத்தத்தங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குத்தத்தங்களின் மூலமாய், அந்த இறை இயல்பில் நீங்களும் பங்குகொள்ளலாம், தீய ஆசைகளினால் உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சீர்கேட்டிலிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். எபே 4:23-24எசேக் 36:25-272 கொரி 3:18கொலோ 3:10எபி 12:102 கொரி 6:171 யோவா 3:2கலா 6:8

இந்த காரணத்தினால் உங்கள் விசுவாசத்திற்கு உறுதுணையாக நற்பண்பை வளர்த்துக்கொள்ள எல்லா முயற்சியையும் செய்யுங்கள்; நற்பண்புடன் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்; பிலி 4:8நீதி 4:232 பேது 3:182 பேது 1:2-3எபி 6:112 பேது 1:10பிலி 1:92 பேது 3:14 அறிவுடன் சுயக்கட்டுப்பாட்டையும்; சுயக்கட்டுப்பாடுடன் விடாமுயற்சியையும்; விடாமுயற்சியுடன் இறை பக்தியையும்; எபி 10:36ரோம 5:3-4லூக் 21:192 பேது 1:3எபி 12:11 கொரி 9:252 கொரி 6:4கலா 5:23 இறை பக்தியுடன் சகோதர பாசத்தையும்; சகோதர பாசத்துடன் அன்பையும் கூட்டிச் சேர்த்துக்கொள்ளுங்கள். எபி 13:1ரோம 12:101 தெச 3:12கொலோ 3:14யோவா 13:34-351 கொரி 13:1-81 யோவா 3:161 யோவா 4:21 ஏனெனில் இப்பண்புகள் உங்களில் வளர்ந்து பெருகும்போது, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றி உங்களிடமிருக்கும் அறிவில் நீங்கள் பயனற்றவர்களாகவோ, பலன் கொடுக்காதவர்களாகவோ இருக்காதபடி, இவை உங்களைத் தடுத்துக்கொள்ளும். தீத் 3:14யோவா 15:2கொலோ 3:16எபி 6:12பிலி 1:91 தெச 3:121 கொரி 15:581 தெச 4:1 ஆனால் யாராவது இந்தப் பண்புகள் அற்றவனாயிருந்தால், அவன் தூரப்பார்வையற்றவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்; தனது முந்திய பாவங்களிலிருந்து, தான் சுத்திகரிக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான். 1 யோவா 2:9-112 பேது 2:18-20தீத் 2:141 யோவா 1:7எபே 5:26யாக் 2:14-26ரோம 6:1-4ரோம 6:11

ஆகையால் எனக்கு பிரியமானவர்களே, உங்களது அழைப்பையும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள அதிக ஆர்வம் உள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் இவற்றை செய்வீர்களானால், ஒருபோதும் விழுந்துபோகமாட்டீர்கள். 2 பேது 3:17லூக் 6:47-49எபி 6:111 யோவா 3:19-21சங் 121:32 பேது 1:52 தீமோ 2:19மத் 7:24-25 நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள். வெளி 5:10மத் 25:34வெளி 3:212 தீமோ 4:8தானி 7:27எபி 6:17யோவா 10:10தானி 7:14

வேதவசனத்தின் இறைவாக்கு

நான் இவற்றை உங்களுக்கு எப்பொழுதும் நினைப்பூட்டிக்கொண்டே இருப்பேன்; நீங்கள் இவற்றை அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது சத்தியத்தில் உறுதிப்படுத்தப்பட்டும் இருக்கிறீர்கள். ஆனால் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். 1 யோவா 2:21ரோம 15:14-15பிலி 3:1கொலோ 2:72 யோவா 1:2யூதா 1:52 பேது 1:131 பேது 5:10 இந்த உடலாகிய கூடாரத்தில் நான் வாழும் வரைக்கும், இவ்விதமாய் உங்கள் ஞாபகத்தைப் புதுப்பிப்பது சரியென்றே நான் எண்ணுகிறேன். 2 பேது 1:142 பேது 3:1எபி 13:32 கொரி 5:82 தீமோ 1:62 கொரி 5:1-42 பேது 1:12ஆகா 1:14 ஏனெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்குத் தெளிவுபடுத்தியபடி, சீக்கிரமாய் நான் இந்தக் கூடாரத்தைவிட்டுப் பிரிந்துவிடுவேன் என்று அறிந்திருக்கிறேன். 2 தீமோ 4:6யோவா 21:18-19உபா 31:14உபா 4:21-221 இராஜா 2:2-3அப் 20:25யோசு 23:14 ஆகவே நான் இறந்துபோன பின்பும், நீங்கள் இவற்றை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்கதாய், என்னால் இயன்ற எல்லாவற்றையும் இப்பொழுது நான் செய்வேன். உபா 31:19-29சங் 71:182 பேது 1:12யோசு 24:24-291 நாளாக 29:1-202 பேது 1:4-72 தீமோ 2:2எபி 11:4

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையையும் அவருடைய வருகையையும் நாங்கள் உங்களுக்குச் சொன்னபோது, தந்திரமான கட்டுக்கதைகளை நாங்கள் கைக்கொள்ளவில்லை. நாங்களோ அவருடைய மகத்துவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாயிருக்கிறோம். 1 யோவா 4:14யோவா 1:141 தீமோ 1:41 கொரி 2:41 யோவா 1:1-31 தீமோ 4:7எபே 4:14லூக் 9:28-32 “இவர் என் மகன், இவரில் நான் அன்பாயிருக்கிறேன்” 1 என்று சொல்லுகிற குரல் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய இறைவனிடமிருந்து அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றுக்கொண்டார். மாற் 9:7மத் 17:5மத் 3:17லூக் 3:22லூக் 9:34-35மாற் 1:11மத் 12:18யோவா 3:35 அந்த புனிதமான மலையின்மேல் நாங்கள் அவருடன் இருந்தபோது, பரலோகத்திலிருந்து வந்த அந்தக் குரலை நாங்களும் கேட்டோம். மத் 17:6யாத் 3:5யோசு 5:15ஏசா 11:9ஆதி 28:16-17யாத் 3:1சகரி 8:3ஏசா 56:7

இவற்றையும்விட வெகு நிச்சயமான இறைவாக்கினர்களின் வார்த்தைகளையும் நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். பொழுது புலர்ந்து, உங்கள் இருதயங்களில் கிறிஸ்து விடிவெள்ளிபோல் உதிக்குமளவும், இருளான இடத்தில் ஒளிவீசும் வெளிச்சம்போன்ற அந்த இறைவார்த்தைக்குக் கவனம் செலுத்தினால், நீங்கள் நலன்பெறுவீர்கள். ஏசா 9:2சங் 119:105வெளி 22:16யோவா 5:392 கொரி 4:4-6ஏசா 8:20யோவா 1:7-9நீதி 6:23 எல்லாவற்றிற்கும் மேலாக, வேதவசனத்திலுள்ள எந்த இறைவாக்கும் இறைவாக்கினனுடைய சொந்த விளக்கத்தினால் உண்டானது அல்ல, இதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். 2 பேது 3:3ரோம 12:6யாக் 1:3ரோம 13:111 தீமோ 1:9ரோம 6:6 ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதர்களின் சித்தப்படி உண்டானது அல்ல, இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரினால் ஏவப்பட்டு, இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டதையே மனிதர் பேசினார்கள். 2 தீமோ 3:15-172 சாமு 23:21 பேது 1:11லூக் 1:70அப் 1:16அப் 3:18எபி 10:15வெளி 19:10