ரோமர் 14

Romans 14

விசுவாசத்தில் பலவீனமானவனை ஏற்றுக்கொள்ளுதல்

விசுவாசத்தில் பலவீனமாயிருக்கிறவனை, அவனுடைய கருத்து வேறுபாடுகளைக்குறித்து அவனுடன் வாதாடாமல் ஏற்றுக்கொள்ளுங்கள். ரோம 15:11 கொரி 8:7-131 கொரி 9:22ரோம 15:7ரோம 14:211 கொரி 3:1-2ஏசா 35:3-4ஏசா 40:11 ஒருவனுடைய விசுவாசம், எல்லாவித உணவையும் சாப்பிட அவனை அனுமதிக்கிறது. ஆனால் விசுவாசத்தில் பலவீனமாய் இருக்கிற இன்னொருவனோ, மரக்கறி உணவை மட்டுமே சாப்பிடுகிறான். 1 தீமோ 4:4நீதி 15:17ரோம 14:14கலா 2:12ரோம 14:22-23ஆதி 9:31 கொரி 10:25எபி 13:9 எனவே எல்லாவகை உணவையும் சாப்பிடுகிறவன் அவற்றைச் சாப்பிடாமல் தவிர்த்துக்கொள்கிறவனை இகழ்வாகப் பார்க்கக்கூடாது. அதுபோல் எல்லாவகை உணவையும் சாப்பிடாதவனோ எல்லாவகை உணவைச் சாப்பிடுகிறவனில் குற்றம் காணவும் கூடாது. ஏனெனில் இறைவன் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரே. ரோம 14:10கொலோ 2:16-17லூக் 18:91 கொரி 10:29-30ரோம 14:13அப் 10:341 கொரி 8:11-13அப் 10:44 இன்னொருவனுடைய வேலைக்காரனை நியாயந்தீர்க்க நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அதற்கு அவனுடைய சொந்த எஜமானரே பொறுப்பாளி. அவன் உறுதியாய் நிற்பான், ஏனெனில் கர்த்தர் அவனுக்கு உறுதியாய் நிற்க ஆற்றலைக் கொடுக்க வல்லவராக இருக்கிறார். யாக் 4:11-12ரோம 9:20ரோம 8:31-39யூதா 1:241 கொரி 4:4-5யோவா 10:28-30சங் 37:24எபி 7:25

ஒருவன் ஒருநாளைவிட, இன்னொரு குறிப்பிட்ட நாள் சிறந்தது என்று எண்ணுகிறான்; ஆனால் இன்னொருவனோ, எல்லா நாட்களையும் ஒரேவிதமாகவே எண்ணுகிறான். ஒவ்வொருவனும் தன்னுடைய மனதில் இவற்றைக்குறித்து உறுதியாகத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். கொலோ 2:16-17கலா 4:9-10ரோம 14:231 கொரி 8:71 யோவா 3:19-21ரோம 14:141 கொரி 8:11 ஒருநாளை சிறப்பான ஒன்றாக எண்ணுகிறவன், கர்த்தருக்காகவே அதைச் செய்கிறான். இறைச்சியைச் சாப்பிடுகிறவனும் இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டுச் சாப்பிடுவதனால், அவனும் கர்த்தருக்காகவே அதைச் செய்கிறான்; அப்படியே சிலவற்றைச் சாப்பிடாமல் தவிர்த்துக்கொள்கிறவனும், இறைவனுக்கு நன்றி செலுத்துகிறதினால் கர்த்தருக்கென்றே அதைச் செய்கிறான். 1 கொரி 10:30-311 தீமோ 4:3-5யாத் 12:14யாத் 12:42யாத் 16:25கலா 4:10ஏசா 58:5யோவா 6:28 ஏனெனில் நம்மில் யாரும் தனக்கென்று மட்டுமே வாழ்வதுமில்லை, நம்மில் யாரும் தனக்கென்று மட்டுமே மரிப்பதுமில்லை. 1 பேது 4:22 கொரி 5:151 கொரி 6:19-201 தெச 5:10தீத் 2:14கலா 2:19-20பிலி 1:20-24ரோம 14:9 நாம் வாழ்ந்தாலும் கர்த்தருக்கென்றே வாழ்கிறோம்; நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்றே மரிக்கிறோம். எனவே நாம் வாழ்ந்தாலும் மரித்தாலும் கர்த்தருடையவர்கள். பிலி 1:201 தெச 5:10அப் 21:131 கொரி 15:23வெளி 14:13பிலி 2:17அப் 13:36அப் 20:24 கிறிஸ்துவும் மரித்தவர்களுக்கும் உயிருடன் இருக்கிறவர்களுக்கும் ஆண்டவராய் இருக்கவேண்டுமென்கிற காரணத்திற்காகவே மரித்து, உயிருடன் எழுந்தார். வெளி 1:18லூக் 24:26எபி 12:2யோவா 5:22-231 பேது 1:211 பேது 4:52 தீமோ 4:1அப் 10:42

இப்படியிருக்க நீ ஏன் உன் சகோதரனை நியாயந்தீர்க்கிறாய்? ஏன் உன் சகோதரனை உதாசீனம் செய்கிறாய்? ஏனெனில் நாம் எல்லோரும் இறைவனுடைய நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்திற்கு முன்பாக நிற்போம். 2 கொரி 5:101 கொரி 4:5பிரச 12:14ரோம 2:16ரோம 14:3-4யோவா 5:22மத் 25:31-32அப் 10:42 எழுதப்பட்டிருக்கிறபடியே: ஏசா 45:22-25பிலி 2:10-11சங் 72:11ரோம 10:91 யோவா 4:15மத் 10:32ஏசா 49:18ரோம 15:9

“ ‘நான் வாழ்வது நிச்சயம்போலவே,

ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக முடங்கும்;

ஒவ்வொரு நாவும் இறைவனை அறிக்கையிடும் என்பதும் நிச்சயம்’ ” 1

என்று கர்த்தர் சொல்கிறார்.

எனவே நாம் ஒவ்வொருவரும் நம்மைக்குறித்து இறைவனுக்குக் கணக்குக் கொடுப்போம். மத் 12:361 பேது 4:5மத் 16:27கலா 6:5பிரச 11:9லூக் 16:2மத் 18:23-35

ஆகவே நாம் ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பதை நிறுத்துவோம். உங்கள் சகோதரர்களுடைய வழியில் அவர்கள் தடுக்கி விழக்கூடிய தடைக்கல்லையோ, இடையூறையோ போடாதிருக்கத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். 2 கொரி 6:31 கொரி 8:9-13யாக் 4:11லூக் 17:2ரோம 16:17யாக் 2:4ரோம 14:10ஏசா 57:14 கர்த்தராகிய இயேசுவில் இருக்கிற ஒருவனாகிய நான், எந்த உணவும் தன்னிலேயே அசுத்தமானது அல்ல என்பதை திடமாய் நம்புகிறேன். ஆனால் யாராவது எந்த உணவையும் அசுத்தமானது என நம்பினால், அது அவனுக்கு அசுத்தமானதாகவே இருக்கும். தீத் 1:151 தீமோ 4:4ரோம 14:21 கொரி 8:7அப் 10:14-15அப் 11:8-91 கொரி 8:10அப் 10:28 நீ சாப்பிடுகிற உணவின் காரணமாக உன் சகோதரன் மனத்தாங்கல் அடைந்தால், நீ அவனில் அன்பு காட்டுகிறவனாய் நடந்துகொள்ளவில்லை. நீ சாப்பிடும் உணவினால் எந்த சகோதரனுக்காக கிறிஸ்து மரித்தாரோ அந்த சகோதரனை நீ அழித்துப்போட வேண்டாம். 1 கொரி 8:11-12கலா 5:13பிலி 2:2-41 கொரி 13:4-51 கொரி 8:1எபே 5:2ரோம 14:20ரோம 15:2 நீங்கள் நன்மை என எண்ணுகிறதை மற்றவர்கள் தீமையாய்ப் பேசுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். 1 கொரி 10:29-301 தெச 5:22ரோம 12:172 கொரி 8:20-21 ஏனெனில் இறைவனுடைய அரசு சாப்பிடுவதையும் குடிப்பதையும் பற்றியதுமான விஷயமல்ல. அது நீதி, சமாதானம் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்குள்ளான சந்தோஷம் என்பவைகளைப் பற்றியதே. மத் 6:33ரோம 15:131 கொரி 4:201 கொரி 8:8கலா 5:22ரோம 8:61 தெச 2:12தானி 2:44 ஏனெனில் இவ்விதம் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவன் இறைவனுக்குப் பிரியமாய் இருப்பான். அவன் மனிதரால் நன்மதிப்பையும் பெறுவான். 2 கொரி 8:211 பேது 2:201 பேது 2:52 கொரி 5:111 தெச 1:3-41 கொரி 7:221 பேது 3:161 தீமோ 2:3

எனவே நாம் சமாதானத்தை நம் மத்தியில் கொண்டுவரும் காரியங்களிலும், ஒருவரையொருவர் பக்தியில் பலப்படுத்தும் காரியங்களிலும் ஈடுபட முயற்சிசெய்வோம். எபே 4:29ரோம 12:18சங் 34:14ரோம 15:2எபி 12:141 தெச 5:11-122 கொரி 13:11கொலோ 3:12-15 உணவுக்காக இறைவனுடைய வேலையை அழித்துப்போட வேண்டாம். எல்லா உணவும் சுத்தமானதுதான், ஆனால் ஒருவன் சாப்பிடும் உணவு மற்றொருவனுக்குத் தடையாக இருக்குமானால், அதை அவன் சாப்பிடுவது தீயதுதான். ரோம 14:14-15மத் 18:6தீத் 1:15அப் 10:151 கொரி 10:31-331 கொரி 6:12-13ரோம 14:211 தீமோ 4:3-5 இறைச்சியைச் சாப்பிடுவதோ, திராட்சை இரசத்தைக் குடிப்பதோ, அல்லது வேறு எதைச் செய்வதோ, உனது சகோதரன் பாவத்தில் விழுவதற்குக் காரணமாய் இருக்குமானால், அவற்றைச் செய்யாதிருப்பது நல்லது. 1 கொரி 8:13ரோம 14:13ரோம 15:1-2லூக் 17:1-2மல்கி 2:8மத் 16:23மத் 18:7-10எபி 12:13

இந்த விஷயத்தில் நீ கொண்டிருக்கும் விசுவாசம் உனக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கட்டும். தான் சரியென்று ஏற்றுக்கொண்டதைக்குறித்து தனக்குள் குற்ற உணர்வு ஏற்படாதிருப்பவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். 1 யோவா 3:21ரோம 14:5யாக் 3:13கலா 6:1ரோம 14:23ரோம 14:14ரோம 14:22 கொரி 1:12 ஆனால், யாராவது தான் சாப்பிடுவதைக்குறித்து அது சரியென்று விசுவாசம் இல்லாதிருந்தால், அவன் தன்னைத்தானே குற்றப்படுத்துகிறான். ஏனெனில் அவன் அதைச் சாப்பிடும்போது விசுவாச வாழ்வின் அடிப்படையில் சாப்பிடவில்லை; விசுவாசத்திலிருந்து வராததெல்லாம் பாவமே. எபி 11:6தீத் 1:151 கொரி 11:29-311 கொரி 8:7ரோம 14:5ரோம 13:2