ஓசியா 8

Hosea 8

இஸ்ரயேல் சுழல்காற்றை அறுவடை செய்தல்

“உங்கள் உதடுகளில் எக்காளத்தை வையுங்கள்; ஓசி 6:7உபா 28:49எரே 4:13ஓசி 5:8ஆப 1:8எபி 8:8-131 கொரி 15:522இராஜா 18:27

யெகோவாவின் ஆலயத்துக்கு மேலாக ஒரு எதிரி கழுகைப்போல் பறக்கிறான்.

ஏனெனில் அவர்கள் எனது உடன்படிக்கையை மீறி,

எனது சட்டத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள்.

‘எங்கள் இறைவனே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்!’ என்று மத் 7:21தீத் 1:161 யோவா 2:42இராஜா 10:162இராஜா 10:29ஓசி 7:13-14ஏசா 48:1-2எரே 7:4

இஸ்ரயேலர் என்னை நோக்கிக் கதறுகிறார்கள்.

ஆனால் இஸ்ரயேலர் நன்மையானதைப் புறக்கணித்துவிட்டார்கள்; புலம் 3:66சங் 81:10-11ஆமோ 1:111 தீமோ 5:12உபா 28:25புலம் 4:19லேவி 26:36சங் 36:3

அதனால் ஒரு பகைவன் அவர்களைப் பின்தொடர்வான்.

என் மக்கள் எனது சம்மதம் இன்றி அரசர்களை ஏற்படுத்துகிறார்கள்; ஓசி 13:9-102இராஜா 15:10-301 இராஜா 12:16-201 இராஜா 16:31ஓசி 13:2ஓசி 2:8யோவா 10:141 இராஜா 12:28

எனது அங்கீகாரம் இல்லாமல், அவர்கள் இளவரசர்களைத் தெரிந்துகொள்கிறார்கள்.

அவர்கள் தங்கள் வெள்ளியினாலும், தங்கத்தினாலும்

தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கிறார்கள்;

இது அவர்களின் அழிவுக்கே ஏதுவாகும்.

யெகோவா சொல்வதாவது: சமாரியாவே, உன் கன்றுக்குட்டி விக்கிரகத்தை எறிந்துவிடு; ஓசி 10:5எரே 13:27நீதி 1:222இராஜா 17:16-182இராஜா 17:21-23அப் 7:41உபா 32:22ஓசி 8:6

எனது கோபம் உனக்கெதிராக பற்றியெரிகிறது.

எவ்வளவு காலத்திற்கு இவர்கள் தூய்மையடையாது இருப்பார்கள்?

அந்த விக்கிரகம் இஸ்ரயேலிலிருந்து வந்தது; ஆப 2:18ஏசா 44:9-20எரே 10:14எரே 10:3-9சங் 106:19-20சங் 115:4-82 நாளாக 31:12 நாளாக 34:6-7

அது இறைவனல்ல,

அதை ஒரு கைவினைஞன் செய்தான்,

எனவே சமாரியாவின் கன்றுக்குட்டி

துண்டுதுண்டாக உடைக்கப்படும்.

“ஏனெனில் அவர்கள் காற்றை விதைத்து, நீதி 22:8யோபு 4:8கலா 6:7நாகூ 1:3ஓசி 10:12-13ஓசி 7:9நியாயாதி 6:3-6ஓசி 2:9

சுழல்காற்றை அறுவடை செய்கிறார்கள்.

பயிரின் தண்டில் கதிர் இல்லை;

அதிலிருந்து மாவும் கிடைக்காது.

அது தானியத்தைக் கொடுக்குமானால்

அவற்றை அந்நியர் விழுங்குவார்கள்.

இஸ்ரயேல் விழுங்கப்பட்டது; எரே 22:28எரே 51:342 தீமோ 2:20-212இராஜா 17:1-62இராஜா 18:11உபா 28:25உபா 28:64எசேக் 36:3

இப்பொழுது அவர்கள் நாடுகளுக்குள்ளே

ஒருவருக்கும் பயனற்ற பானையைப்போல் இருக்கிறார்கள்.

அவர்கள் தனிமையில் அலைந்து திரியும் காட்டுக் கழுதைபோல் எரே 2:24எசேக் 16:33-34ஓசி 5:13ஓசி 7:112இராஜா 15:19ஏசா 30:6எசேக் 23:5-9ஓசி 12:1

அசீரியாவுக்குப் போய்விட்டார்கள்.

எப்பிராயீமர் தன்னை தன் காதலர்களுக்கு விற்றுப் போட்டார்கள்.

அப்படி அவர்கள் தங்களைப் பிற தேசத்தாருக்குள் விற்றிருந்தாலும், எசேக் 16:37எசேக் 26:7எசேக் 23:22-26ஆகா 2:6ஓசி 10:10ஏசா 10:8எரே 42:21 நாளாக 5:26

இப்பொழுது நான் அவர்களை ஒன்றுசேர்ப்பேன்.

வலிமைமிக்க அரசனின் கையின் ஒடுக்குதலின்கீழ்,

அவர்கள் வலிமை குன்றத் தொடங்குவார்கள்.

“எப்பிராயீம் பாவநிவாரண காணிக்கைகளுக்காகப் பலிபீடங்களைக் கட்டினாலும், ஓசி 12:11உபா 4:28ஏசா 10:10-11ஓசி 10:1-2ஓசி 10:8எரே 16:13

இவை பாவம் செய்வதற்கான பலிபீடங்களாயின.

நான் அவர்களின் நலத்திற்காக எனது சட்டத்தைப்பற்றிய உபா 4:6-8ரோம 7:122இராஜா 17:15-16எசேக் 20:11ஓசி 4:6ஏசா 30:9எரே 6:16-17நெகே 9:13-14

அநேக காரியங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்;

ஆனால் அவர்கள் அவற்றை ஒரு அந்நியமான காரியமாக மதித்தார்கள்.

அவர்கள் எனக்குப் பலிகளைச் செலுத்தி, ஓசி 9:6ஓசி 9:9ஆமோ 5:22ஆமோ 8:7உபா 28:68யாத் 20:3ஓசி 11:5ஓசி 5:6

அதன் இறைச்சியை அவர்கள் சாப்பிடுகிறார்கள்;

ஆனாலும் யெகோவா அவர்களின் செயல்களில் பிரியப்படவில்லை.

இப்பொழுது யெகோவா அவர்களின் கொடுமையை நினைவில்கொண்டு,

அவர்களுடைய பாவத்திற்காக அவர்களைத் தண்டிப்பார்.

அவர்கள் எகிப்திற்கே திரும்பிப் போவார்கள்.

ஏனெனில் இஸ்ரயேல் தன்னை உண்டாக்கியவரை மறந்து, உபா 32:18எரே 17:27ஆமோ 2:5ஓசி 13:6ஏசா 17:10ஆமோ 1:10எபே 2:10எரே 2:32

அரண்மனைகளைக் கட்டுகிறது;

யூதா அநேக பட்டணங்களைச் சுற்றி அரண்களைக் கட்டியிருக்கிறது.

ஆகவே நான் அவர்களுடைய பட்டணங்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்;

அது அவர்களுடைய கோட்டைகளைச் சுட்டெரிக்கும்.”