கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்; சங் 98:4எரே 31:7சங் 106:47சங் 46:1வெளி 19:1-22 சாமு 6:15சங் 47:5சகரி 9:9
மகிழ்ச்சியின் சத்தத்துடன் ஆர்ப்பரித்து இறைவனைத் துதியுங்கள்.
உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர், சங் 95:3சங் 99:3மல்கி 1:14உபா 7:21சங் 66:3-5சங் 68:35நெகே 1:5சங் 47:7
அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர்.
அவர் மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார், 1 கொரி 15:25சங் 18:47சங் 81:14சங் 110:1யோசு 10:24-25பிலி 3:21உபா 33:29யோசு 21:44
மக்கள் கூட்டத்தை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்.
இறைவன் தமக்கு அன்பான யாக்கோபியரை, 1 பேது 1:4ஆமோ 6:8நாகூ 2:21 யோவா 4:9-10ஆமோ 8:7ஓசி 14:4உபா 7:6-8எபே 2:4-5
தமது உரிமைச்சொத்தாக தேர்ந்தெடுப்பார்.
இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்; சங் 68:331 கொரி 15:521 தெச 4:16சங் 24:7-10சங் 78:65வெளி 11:152 சாமு 6:15யோசு 6:5
யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர்த்தப்பட்டிருக்கிறார்.
இறைவனுக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்; ஏசா 12:4-6மத் 25:34சங் 117:1-2சங் 68:41 நாளாக 16:9ஏசா 33:22மத் 27:37சங் 145:1
நமது அரசருக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்.
ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்; சகரி 14:9கொலோ 3:16சங் 47:8சங் 47:2வெளி 11:151 கொரி 14:14-15
அவருக்குத் துதியின் சங்கீதத்தைப் பாடுங்கள்.
இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்; 1 நாளாக 16:31வெளி 19:6சங் 45:6-7சங் 93:1சங் 110:6சங் 22:27-29சங் 89:14சங் 9:4
அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
மக்களின் தலைவர்கள், சங் 89:18ஆதி 49:10சங் 72:7-9யாத் 3:6ஆதி 17:7-8ஏசா 41:8-10யாத் 3:15கலா 3:29
ஆபிரகாமின் இறைவனுடைய மக்களாக ஒன்றுகூடுகிறார்கள்.
ஏனெனில் பூமியின் அரசர்கள் இறைவனுக்கே உரியவர்கள்;
அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.