யோபு பேசுதல்
அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது:
“நீ சொல்வது உண்மையென நான் அறிவேன். யோபு 4:17யோபு 25:4சங் 143:2ரோம 3:201 இராஜா 8:46யோபு 14:3-4யோபு 32:2யோபு 33:9
மனிதன் எப்படி இறைவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கமுடியும்?
இறைவனோடு மனிதன் வாதாட விரும்பினால், யோபு 10:2யோபு 40:21 யோவா 1:81 யோவா 3:20ஏசா 57:15-16யோபு 23:3-7யோபு 31:35-37யோபு 33:13
அவர் கேட்கும் ஆயிரத்தில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதிலளிக்க முடியாது.
இறைவன் இருதயத்தில் ஞானமுள்ளவர், வல்லமையில் பலமுள்ளவர். யோபு 36:5எபே 3:20ரோம 11:33எபே 3:10யாத் 14:17-18யோபு 9:19யூதா 1:24-25நீதி 29:1
அவரை எதிர்த்து சேதமின்றித் தப்பினவன் யார்?
அவர் மலைகளை அவைகளுக்குத் தெரியாமலே நகர்த்துகிறார்; லூக் 21:11மத் 27:51ஆப 3:10வெளி 11:13வெளி 16:18-201 கொரி 13:2ஆப 3:6ஏசா 40:12
அவர் தன் கோபத்தில் அவற்றைப் புரட்டிப் போடுகிறார்.
அவர் பூமியின் தூண்கள் அதிரும்படி அதை அதின், ஆகா 2:6எபி 12:26சங் 75:3ஏசா 2:21யோபு 26:11யோபு 38:4-7ஏசா 2:19ஆகா 2:21
இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
அவர் கட்டளையிட்டால், சூரியனும் ஒளி கொடாதிருக்கும்; ஏசா 13:10ஆமோ 8:9லூக் 21:25-26ஆமோ 4:13தானி 4:35யாத் 10:21-22எசேக் 32:7-8யோபு 37:7
நட்சத்திரங்களின் ஒளியையும் மூடி மறைக்கிறார்.
அவர் தனிமையாகவே வானங்களை விரித்து, ஏசா 44:24ஏசா 40:22சங் 104:2-3யோபு 37:18சகரி 12:1எரே 10:11மத் 14:25-30சங் 33:6
கடல் அலைகளின்மேல் மிதிக்கிறார்.
சப்தரிஷி, மிருகசீரிடம், கார்த்திகை நட்சத்திரங்களையும், ஆமோ 5:8ஆதி 1:16யோபு 38:31-41சங் 147:4அப் 28:13சங் 104:13யோபு 37:9சங் 104:3
தென்திசை நட்சத்திரக் கூட்டங்களையும் படைத்தவர் அவரே.
அவர் ஆழ்ந்தறிய முடியாத அதிசயங்களையும் யோபு 5:9சங் 72:18எபே 3:20ரோம 11:33தானி 4:2-3சங் 136:4பிரச 3:11ஏசா 40:26-28
அவர் கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.
அவர் என்னைக் கடந்து செல்லும்போது, அவரை என்னால் காணமுடியாது; யோபு 23:8-9யோபு 35:14சங் 77:191 தீமோ 6:16
அவர் என் அருகில் வரும்போது, அவரை என்னால் பார்க்க முடியாது.
அவர் எதையும் பறித்தெடுத்தால் அதை யாரால் நிறுத்த முடியும்? ஏசா 45:9யோபு 11:10யோபு 23:13தானி 4:35யோபு 34:29ரோம 11:34எரே 18:6யோபு 33:13
‘நீர் என்ன செய்கிறீர்?’ என யாரால் அவரிடம் கேட்க முடியும்?
இறைவன் தமது கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை; யோபு 26:12சங் 89:10ஏசா 30:7ஏசா 51:9யாக் 4:6-7ஏசா 31:2-3யோபு 40:9-11
ராகாப் என்ற பெரிய விலங்கைச் சேர்ந்தவர்களும்
அவருடைய காலடியில் அடங்கிக் கிடந்தனர்.
“இப்படியிருக்க, நான் அவரோடு எப்படி விவாதம் செய்வேன்? 1 இராஜா 8:27யோபு 11:4-5யோபு 23:4யோபு 23:7யோபு 25:6யோபு 33:5யோபு 4:19யோபு 9:3
அவரோடு வாதாடும் வார்த்தைகளை நான் எங்கே கண்டுபிடிப்பேன்?
நான் நீதிமானாயிருந்தாலும் என்னால் அவருடன் வழக்காட முடியாது; யோபு 10:15யோபு 8:51 பேது 2:23யோபு 10:2யோபு 22:27யோபு 5:81 கொரி 4:41 இராஜா 8:38-39
எனது நீதிபதியிடம் இரக்கத்திற்காக மன்றாடத்தான் என்னால் முடியும்.
அவர் என் அழைப்பிற்கு இணங்கினாலும், அப் 12:14-16யாத் 6:9நியாயாதி 6:13யோபு 29:24லூக் 24:41சங் 116:1-2சங் 126:1சங் 18:6
என் விண்ணப்பத்திற்குச் செவிகொடுப்பார் என நான் நம்பவில்லை.
அவர் என்னைப் புயலினால் தாக்குவார்; யோபு 16:14யோபு 2:3யோபு 34:6எசேக் 13:13ஏசா 28:17எரே 23:19யோவா 15:25யோவா 9:3
காரணமில்லாமல் அவர் என் காயங்களைப் பலுகச்செய்வார்.
அவர் என்னைத் திரும்பவும் யோபு 7:19புலம் 3:15எபி 12:11யோபு 27:2யோபு 3:20புலம் 3:18-19புலம் 3:3சங் 39:13
மூச்சுவிட முடியாமல் துன்பத்திற்குள் அமிழ்த்தி விடுவார்.
பெலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அவரே வல்லமையுடையவர். யோபு 9:32-33யோபு 9:41 கொரி 1:25யோபு 40:9-10மத் 6:13சங் 62:11யோபு 31:35யோபு 33:5-7
நீதியை எடுத்துக்கொண்டால் அவரை விசாரணைக்கு அழைப்பவன் யார்?
நான் மாசற்றவனாய் இருந்தாலும் என் வாயே எனக்குக் குற்றத் தீர்ப்பளிக்கும்; யோபு 15:5-6யோபு 32:1-2யோபு 34:35யோபு 4:17யோபு 9:2பிலி 3:12-15சங் 130:3சங் 143:2
நான் குற்றமற்றவனாய் இருந்தாலும், அது என்னைக் குற்றவாளி எனத் தீர்க்கும்.
“நான் குற்றமற்றவன், யோபு 1:1சங் 139:23-241 கொரி 4:4யோபு 7:21நீதி 28:261 யோவா 3:20எரே 17:9-10யோபு 7:15-16
என்னைப்பற்றி எனக்கு அக்கறையில்லை;
என் சொந்த வாழ்வையே நான் வெறுக்கிறேன்.
எல்லாம் ஒன்றுதான்; அதினால்தான் நான் சொல்கிறேன், பிரச 9:1-3எசேக் 21:3-4யோபு 10:8லூக் 13:2-4
‘குற்றமற்றவர்களையும், கொடியவர்களையும் அவர் அழிக்கிறார்.’
வாதை திடீர் மரணத்தைக் கொண்டுவரும்போது, யோபு 24:122 சாமு 14:152 சாமு 14:17எசேக் 14:19-21எசேக் 21:13எபி 11:36-37யோபு 1:13-19யோபு 2:7
அவர் குற்றமற்றவனின் தவிப்பைக் கண்டு ஏளனம் செய்கிறார்.
நாடு கொடியவர்களின் கையில் விழும்போது, யோபு 10:3எரே 12:1-2சங் 73:3-72 சாமு 15:30யோபு 21:7-152 சாமு 19:4தானி 4:17தானி 5:18-21
அவர் அதின் நீதிபதிகளின் கண்களை மூடிக் கட்டுகிறார்.
அவர் அதைச் செய்யவில்லையென்றால் அதைச் செய்வது வேறு யார்?
“எனது நாட்கள் ஓடுபவனைவிட வேகமாய்ப் போகின்றன; யாக் 4:14யோபு 7:6-7சங் 90:9-10எஸ்த 8:14சங் 39:11சங் 39:5சங் 89:47
அவை ஒருகண நேர மகிழ்ச்சியும் இல்லாமல் பறந்து போகின்றன.
நாணல் படகுகள் வேகமாகச் செல்வது போலவும், ஆப 1:8ஏசா 18:22 சாமு 1:23எரே 4:13யோபு 39:27-30புலம் 4:19நீதி 23:5
தங்கள் இரைமேல் பாய்கிற கழுகுகளைப் போலவும் அவை பறந்து போகின்றன.
‘நான் என் குற்றச்சாட்டை மறந்து, என் முகபாவனையை மாற்றி சிரிப்பேன்’ யோபு 7:13எரே 8:18யோபு 7:11சங் 77:2-3
என்று சொன்னாலும்,
நான் இன்னும் என் பாடுகளைக் குறித்துத் திகிலடைகிறேன்; சங் 119:120யோபு 10:14யோபு 14:16யோபு 21:6யோபு 3:25யோபு 7:21யோபு 9:2யோபு 9:20-21
நீர் என்னைக் குற்றமற்றவனாக எண்ணமாட்டீர் என்றும் அறிவேன்.
நான் ஏற்கெனவே குற்றவாளி என்பது தீர்க்கப்பட்டிருக்க, யோபு 10:7எரே 2:35யோபு 10:14-17யோபு 10:2யோபு 21:16-17யோபு 21:27யோபு 22:5-30யோபு 9:22
ஏன் வீணாய் போராட வேண்டும்?
நான் என்னை பனிநீரினால் கழுவினாலும், எரே 2:22சங் 26:61 யோவா 1:8ஏசா 1:16-18எரே 4:14யோபு 31:7நீதி 28:13ரோம 10:3
என் கைகளை சோப்பினால் சுத்தப்படுத்தினாலும்,
நீர் என்னைச் சேற்றின் குழிக்குள் அமிழ்த்துவீர். ஏசா 59:6ஏசா 64:6யோபு 15:6யோபு 9:20பிலி 3:8-9
அப்பொழுது என் சொந்த உடைகளே என்னை அருவருக்கும்.
“நான் அவருக்குப் பதிலளிக்கவும், அவரை நீதிமன்றத்தில் எதிர்க்கவும் ரோம 9:20பிரச 6:10ஏசா 45:9எண் 23:19சங் 143:21 யோவா 3:201 சாமு 16:7எரே 49:19
அவர் என்னைப்போல் ஒரு மனிதனல்ல.
எங்கள் இருவருக்கும் நடுவராயிருந்து தீர்ப்புக்கூறவும், 1 சாமு 2:251 யோவா 2:1-2யோபு 9:19சங் 106:231 இராஜா 3:16-28
எங்கள் இருவர்மேலும் தம் கையை வைத்து,
என்னிடத்திலிருந்து இறைவனது தண்டனையின் கோலை அகற்ற சங் 39:10யோபு 13:11யோபு 33:7யோபு 13:20-22யோபு 23:15யோபு 29:2-25யோபு 31:23யோபு 37:1
ஒருவர் இருந்தால் நலமாயிருக்குமே;
அவருடைய பயங்கரம் என்னைப் பயமுறுத்தாது.
நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்,
ஆனால் இப்போதைய நிலையில் அப்படிப் பேச என்னால் முடியாது.