யோபு பேசுதல்
அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
“எவ்வளவு காலத்திற்கு என்னை வேதனைப்படுத்தி, 2 பேது 2:7-8யாக் 3:6-8நியாயாதி 16:16யோபு 18:2யோபு 27:2யோபு 8:2நீதி 12:18நீதி 18:21
வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
இப்பொழுது பத்துமுறை நீங்கள் என்னை நிந்தித்திருக்கிறீர்கள்; ஆதி 31:7தானி 1:20யோபு 15:11-12யோபு 15:4-6யோபு 18:4-21யோபு 19:17நெகே 4:12சங் 69:8
வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசுகிறீர்கள்.
நான் வழி தவறியது உண்மையானால், 2 கொரி 5:10எசேக் 18:4நீதி 9:122 சாமு 24:17கலா 6:5யோபு 11:3-6
என் தவறு என்னை மட்டுமே சாரும்.
நீங்கள் உண்மையிலேயே உங்களை எனக்கு மேலாக உயர்த்தி, சங் 35:26சங் 38:16சங் 55:121 சாமு 1:6ஏசா 4:1யோவா 9:2யோவா 9:34லூக் 1:25
நான் சிறுமையாக்கப்பட்டதை எனக்கு விரோதமாக உபயோகித்தாலும்,
இறைவனே எனக்குத் தவறிழைத்து, யோபு 18:8-10யோபு 16:11-14யோபு 27:2யோபு 7:20எசேக் 12:13எசேக் 32:3ஓசி 7:12புலம் 1:12-13
என்னைச் சுற்றி வலை வீசியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
“இதோ, ‘கொடுமை!’ என நான் அழுதபோதிலும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை; ஆப 1:2-3புலம் 3:8யோபு 21:27யோபு 23:3-7யோபு 30:20யோபு 31:35-36யோபு 34:5யோபு 40:8
நான் கூக்குரலிட்டாலும் நீதி கிடைக்கவில்லை.
நான் கடந்துசெல்லாதபடி அவர் என் வழியைத் தடைசெய்து, யோபு 3:23புலம் 3:7புலம் 3:9நீதி 4:19சங் 88:8ஓசி 2:6ஏசா 50:10எரே 13:16
என் பாதைகளை இருளாக்கினார்.
அவர் என் மேன்மையை என்னைவிட்டு அகற்றி, சங் 89:44யோபு 29:7-14யோபு 12:17யோபு 30:1புலம் 5:16சங் 89:39ஓசி 9:11ஏசா 61:6
மகுடத்தை என் தலையிலிருந்து எடுத்துப்போட்டார்.
அவர் என்னை எல்லாப் பக்கத்திலும் உடைத்து, அற்றுப்போகச் செய்கிறார்; யோபு 24:20சங் 37:35-362 கொரி 4:8-9யோபு 12:14யோபு 1:13-19யோபு 17:11யோபு 17:15யோபு 2:7
அவர் என் நம்பிக்கையை ஒரு மரத்தைப்போல பிடுங்குகிறார்.
அவருடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது; யோபு 13:24யோபு 16:9யோபு 33:10உபா 32:22புலம் 2:5சங் 89:46சங் 90:7
என்னைத் தம் பகைவரில் ஒருவனாக எண்ணுகிறார்.
அவருடைய படைகள் எனக்கெதிராக அணிவகுத்து, யோபு 30:12யோபு 16:13யோபு 16:11ஏசா 10:5-6ஏசா 51:23
அவர்கள் எனக்கு விரோதமாய் வழியை உண்டாக்கி,
என் கூடாரத்தைச் சுற்றி முற்றுகையிடுகிறார்கள்.
“அவர் என் சகோதரரை என்னிடமிருந்து தூரமாக்கினார்; சங் 88:8சங் 69:8சங் 88:18சங் 31:11சங் 69:202 தீமோ 4:16யோபு 16:7யோபு 6:21-23
எனக்கு அறிமுகமானவர்களும் முழுவதுமாக என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள்.
என் உறவினர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; சங் 38:112 சாமு 16:23எரே 20:10யோவா 13:18மத் 10:21மீகா 7:5-6நீதி 18:24சங் 55:12-14
என் சிநேகிதர்கள் என்னை மறந்துவிட்டார்கள்.
என் விருந்தினரும், பணிப்பெண்களும் என்னை அந்நியராக எண்ணுகிறார்கள்; யோபு 31:31-32சங் 123:3
அவர்கள் என்னை அயலாராகப் பார்க்கிறார்கள்.
நான் என் வேலைக்காரனைக் கூப்பிட்டு, என் வாயினால் கெஞ்சினாலும், யோபு 1:15-17யோபு 1:19
அவன் எனக்குப் பதிலளிப்பதில்லை.
என் மூச்சு என் மனைவிக்கே அருவருப்பாயிருக்கிறது; யோபு 2:9-10யோபு 17:1
நான் என் சொந்தக் குடும்பத்தினருக்கும் 1, வெறுப்பானேன்.
சிறுவர்களும் என்னை இகழ்கிறார்கள்; 2இராஜா 2:23யோபு 30:1யோபு 30:12ஏசா 3:5
நான் பேச எழும்போது அவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.
என் நெருங்கிய சிநேகிதர்கள் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; சங் 41:9சங் 109:4-5சங் 55:12-14யோபு 6:14-15லூக் 22:48சங் 38:11சங் 55:20
நான் நேசித்தவர்களும் எனக்கெதிரானார்கள்.
நான் வெறும் எலும்பும் தோலுமாயிருக்கிறேன்; சங் 102:5புலம் 4:8யோபு 33:19-22யோபு 2:4-6யோபு 30:30யோபு 7:5புலம் 3:4புலம் 5:10
நான் பற்களின் ஈறோடு தப்பியிருக்கிறேன்.
“என் சிநேகிதர்களே, இரங்குங்கள், என்மீது இரக்கம் கொள்ளுங்கள்; யோபு 1:11சங் 38:21 கொரி 12:26எபி 13:3யோபு 2:10யோபு 2:5யோபு 6:14யோபு 6:4
இறைவனின் கரமே என்னை அடித்திருக்கிறது.
இறைவனைப் போலவே நீங்களும் ஏன் என்னைத் தொடர்ந்து துன்புறுத்துகிறீர்கள்? சங் 69:26ஏசா 51:23யோபு 10:16யோபு 13:25யோபு 16:11யோபு 2:5யோபு 31:31மீகா 3:3
என்னை வேதனைப்படுத்தியது போதாதோ?
“ஆ, எனது வார்த்தைகள் எழுதப்பட்டு, ஏசா 30:8ஏசா 8:1யோபு 31:35
ஒரு புத்தகச்சுருளிலே பதிவுசெய்யப்பட்டால்,
அவை இரும்பு ஆணியினால் ஈயத்தகட்டில் எழுதப்பட்டால், எரே 17:1உபா 27:2-3உபா 27:8யாத் 28:11-12யாத் 28:21யாத் 32:16
அல்லது என்றும் நிலைக்கும்படி, கற்பாறையில் செதுக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், எபே 1:7ஏசா 54:5சங் 78:35நீதி 23:11சங் 19:14யோவா 5:22-29ஏசா 59:20-21எரே 50:34
கடைசி நாளில் அவர் பூமியின்மேல் நிற்பார் என்றும் அறிவேன்.
என் தோல் அழிந்துபோன பின்னும், மத் 5:81 யோவா 3:2சங் 17:151 கொரி 13:12வெளி 1:7சங் 16:111 கொரி 15:53பிலி 3:21
நான் என் உடலில் இறைவனைக் காண்பேன்.
நானே அவரை என் சொந்தக் கண்களால் காண்பேன்; சங் 73:26ஏசா 26:19எண் 24:17
வேறொருவன் அல்ல, நானே காண்பேன்.
என் உள்ளம் அதற்காக எனக்குள்ளே எவ்வளவாய் ஏங்குகிறது!
“ ‘இவன் கஷ்டத்திற்கான காரணம் இவனிலே இருக்கிறபடியால், யோபு 19:221 இராஜா 14:13சங் 69:26
நாம் இவனை எப்படி குற்றப்படுத்தலாம்?’ என்று நீங்கள் சொல்வீர்களானால்,
நீங்களே வாளுக்குப் பயப்படவேண்டும்; பிரச 11:9பிரச 12:14யோபு 13:7-11யோபு 15:22யோபு 22:4மத் 7:1-2சங் 1:5சங் 58:10-11
ஏனெனில், கடுங்கோபம் தண்டனையை வாளினாலேயே கொண்டுவரும்.
அப்பொழுது, நியாயத்தீர்ப்பு உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”