அடிமைத்தன நுகத்துக்குக் கீழ்ப்பட்ட எல்லோரும் தங்கள் எஜமான்களை முழு மதிப்புக்குரியவர்களாக எண்ணவேண்டும். அப்பொழுதே நமது இறைவனின் பெயருக்கும், எங்கள் போதித்தலுக்கும் அவதூறு ஏற்படாது. 1 பேது 2:17-20எபே 6:5-8தீத் 2:5தீத் 2:8-101 கொரி 7:21-22ரோம 2:24கொலோ 3:22-25மல்கி 1:6 விசுவாசிகளான எஜமான்களின்கீழ் இருக்கும் அடிமைகளும் தங்கள் எஜமான்கள் சகோதரர்களானபடியால், அவர்களுக்குக் குறைவான மதிப்பைக் கொடுக்கக்கூடாது. மாறாக தங்கள் பணியினால் இலாபம் பெறுபவர்கள், விசுவாசிகளும் தங்களுக்கு அன்பானவர்களுமாய் இருப்பதனால், அவர்கள் இன்னும் சிறப்பாய் பணிசெய்ய வேண்டும். 1 தீமோ 4:11கொலோ 4:1ஆதி 16:4-51 பேது 5:11 தீமோ 5:12 பேது 2:102 தெச 1:3கொலோ 1:2
நீ அவர்களுக்கு போதித்து, வற்புறுத்திக் கூறவேண்டிய காரியங்கள் இவையே.
கள்ளப் போதகர்களும் பண ஆசையும்
யாராவது தவறான கோட்பாடுகளை போதிக்கிறவனாகவும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நலமான அறிவுறுத்தல்களுக்கும், இறை பக்திக்கு உகந்த போதித்தலுக்கும் உடன்படாதவனாகவும் இருந்தால், 1 தீமோ 1:31 தீமோ 1:102 தீமோ 4:3ரோம 16:17தீத் 1:92 தீமோ 1:13தீத் 2:1-21 தெச 4:8 அவன் ஆணவம் உள்ளவனும், ஒன்றும் புரியாதவனாய் இருக்கிறான். அவன் எரிச்சல், சண்டை, அவதூறான பேச்சுகள், தீமையான சந்தேகங்கள் ஆகியவற்றை உண்டாக்கும் வார்த்தைகளைக் கொண்ட சண்டை சச்சரவுகளிலும், எதிர்வாதம் செய்வதிலும் மிதமிஞ்சிய விருப்பம் கொண்டவன். 2 தீமோ 2:232 தீமோ 3:41 தீமோ 3:62 பேது 2:122 தீமோ 2:14யூதா 1:101 தீமோ 1:41 தீமோ 1:7 அத்துடன், சீர்கெட்ட மனங்கொண்ட மனிதருக்கிடையில் உண்டாகும் முரண்பாடான பேச்சுகளிலும் அவனுக்கு விருப்பமுண்டு. இம்மனிதரோ சத்தியத்தை இழந்துபோனவர்களாய், இறை பக்தியை பணம் சம்பாதிக்கும் இலாபத்திற்கான ஒரு வழி என எண்ணுகிறார்கள். 2 பேது 2:32 தீமோ 3:5தீத் 1:112 தீமோ 3:8தீத் 1:15-161 தீமோ 6:6ரோம 16:17-181 தீமோ 3:3
ஆனால் மனத்திருப்தியுடன் உள்ள இறை பக்தியே பெரும் இலாபம். எபி 13:51 தீமோ 6:8பிலி 4:11-13நீதி 16:8லூக் 12:31-321 தீமோ 4:8பிலி 1:21நீதி 15:16 ஏனெனில், நாம் இந்த உலகத்திற்கு ஒன்றையும் கொண்டுவரவுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றையும் கொண்டுபோவதுமில்லை. யோபு 1:21சங் 49:17லூக் 12:20-21பிரச 5:15-16நீதி 27:24லூக் 16:22-23 ஆனால் நமக்கு உணவும் உடையும் இருந்தால், நாம் அதில் மனதிருப்தி உள்ளவர்களாக இருப்போம். எபி 13:5-6மத் 6:11மத் 6:25-33ஆதி 28:20நீதி 30:8-9உபா 2:7பிரச 3:12-13உபா 8:3-4 செல்வந்தர்களாக இருக்க விரும்பும் மக்களோ, சோதனைக்குள்ளும் கண்ணிக்குள்ளும் விழுவதோடு, மூடத்தனமான கேடு விளைவிக்கும் அநேக ஆசைகளுக்குள்ளும் விழுகிறார்கள்; இவை மனிதரைப் பாழாக்கும் அழிவுக்குள் அமிழ்த்துகின்றன. 1 யோவா 2:15-17நீதி 15:27நீதி 28:20-221 தீமோ 3:7அப் 8:202 பேது 2:3மாற் 4:19எபே 4:22 ஏனெனில் பணத்தில் ஆசைகொள்வதே எல்லா வகையான தீமைகளுக்கும் ஆணிவேராய் இருக்கிறது. சிலர் பணத்தில் ஆசைக் கொண்டவர்களாய், விசுவாசத்தைவிட்டு விலகிப்போய், அநேக துன்பங்களினால் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டார்கள். நீதி 1:191 தீமோ 6:9சங் 32:10நீதி 1:31தீத் 1:11ஏசா 56:11யூதா 1:11மீகா 3:11
தீமோத்தேயுவுக்குப் பவுலின் கட்டளை
ஆனால், இறைவனுடைய மனிதனே, நீயோ இவை எல்லாவற்றையும் விட்டுத் தப்பி ஓடி நீதி, இறை பக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை, சாந்தம் ஆகியவற்றை நாடித்தேடு. 2 தீமோ 2:221 தீமோ 4:122 தீமோ 3:17எபி 12:142 பேது 1:5-7பிலி 4:8-91 கொரி 10:141 கொரி 6:18 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு. நித்திய வாழ்வைப் பற்றிக்கொள். இதற்காகவே நீ அழைக்கப்பட்டு, அநேக சாட்சிகளின் முன்னால், உன் விசுவாசத்தைக்குறித்து நல்ல அறிக்கை செய்தாய். 1 பேது 5:101 தீமோ 1:181 கொரி 9:25-262 தீமோ 4:7எபே 6:10-18பிலி 3:12-141 தீமோ 6:13வெளி 3:3 எல்லாவற்றிற்கும் உயிர் கொடுக்கிற இறைவனுக்கு முன்பாகவும், பொந்தியு பிலாத்துவின் முன்னால் தனது சாட்சியில் நல்ல அறிக்கை செய்த கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாகவும் நான் உனக்குப் பொறுப்புக் கொடுக்கிறேன். யோவா 18:36-371 தீமோ 5:21மத் 27:11யோவா 5:21வெளி 1:5வெளி 3:141 சாமு 2:61 தீமோ 2:5 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மீண்டும் தோன்றுமளவும், எவ்வித மாசும் மறுவுமின்றி இந்தக் கட்டளைகளைக் கைக்கொள். 2 பேது 3:141 பேது 1:71 தெச 5:23எபி 9:28யூதா 1:24பிலி 1:10தீத் 2:131 நாளாக 28:9-10 இறைவனே தமக்குரிய காலத்தில் கிறிஸ்துவை தோன்றப்பண்ணுவார். இறைவனே துதிக்கப்படத்தக்க ஒரே ஆளுநரும், அரசர்களுக்கு அரசர், கர்த்தர்களுக்கு கர்த்தர் ஆனவர். வெளி 19:16வெளி 17:141 தீமோ 1:17எரே 10:10சங் 47:21 தீமோ 1:11தானி 2:44-47எரே 46:18 இறைவன் ஒருவரே சாவாமை உடையவர். அணுக முடியாத ஒளியில் வாழ்பவர். ஒருவராலும் காணப்படாதவர், காணவும் முடியாதவர். அவருக்கே கனமும், நித்திய வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென். 1 தீமோ 1:17யோவா 1:181 யோவா 1:5கொலோ 1:15சங் 90:2யோவா 6:46யாத் 3:14ஏசா 57:15
இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கிறவர்களிடம், அகந்தை உடையவர்களாய் இருக்கவேண்டாம் என்றும், அவர்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின்மேல் வைக்கவேண்டாம் என்றும் கட்டளையிடு. நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நிறைவாக நமக்குக் கொடுக்கும் இறைவனில் அவர்களுடைய நம்பிக்கையை, வைக்கும்படி கட்டளையிடு. நீதி 11:28அப் 14:17மத் 19:231 தீமோ 4:10யாக் 1:9-10நீதி 27:24எரே 9:23-24எரே 17:7-8 அவர்கள் தங்கள் பணத்தைக் கொடுத்து நன்மை செய்யவேண்டும் என்றும், நற்செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாய் இருக்கவேண்டும் என்றும், தாராள மனமுள்ளவர்களாயும், மனமுவந்து தங்களுக்குள்ளவற்றை பகிர்ந்து கொடுக்க விருப்பமுடையவர்களாயும் இருக்கவேண்டும் என்றும் கட்டளையிடு. எபி 13:161 யோவா 3:17சங் 37:3ரோம 12:8கலா 6:10லூக் 12:21நீதி 11:24-25தீத் 2:14 இவ்விதமாகவே, அவர்கள் வருங்காலத்திற்கான உறுதியான அஸ்திபாரமாக தங்களுக்குத் திரவியத்தைச் சேர்த்து வைத்துக்கொள்வார்கள். இதனால், அவர்கள் உண்மையான வாழ்வை அடைய முடியும். மத் 6:19-211 தீமோ 6:122 தீமோ 2:19லூக் 16:91 பேது 1:4கலா 6:8-9நீதி 31:25எபே 3:17
தீமோத்தேயுவே, இறைவன் உன்னிடத்தில் ஒப்படைத்தவற்றைக் கவனமாகக் காத்துக்கொள். பக்தியில்லாத பேச்சுக்களையும், பொய்யாகவே அறிவு எனக்கூறும் முரண்பாடான நோக்கங்களையும் விட்டு விலகியிரு. கொலோ 2:82 தீமோ 2:162 தீமோ 1:12-142 தீமோ 3:14-16கொலோ 2:18ரோம 3:21 தீமோ 6:142 தெச 2:15 சிலர் இவற்றை அறிக்கைசெய்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். 2 தீமோ 2:181 தீமோ 1:191 தீமோ 1:61 தீமோ 6:102 தீமோ 4:22கொலோ 4:18மத் 6:13ரோம 1:7
கிருபை உன்னோடு இருப்பதாக.