கிறிஸ்துவிற்குள் உயிர்ப்பிக்கப்படுதல்
நீங்களோ ஒருகாலத்தில் உங்களுடைய மீறுதல்களிலும், பாவங்களிலும் மரித்தவர்களாக இருந்தீர்கள். கொலோ 2:13எபே 2:5-6கொலோ 3:1-4எபே 4:18ரோம 8:2யோவா 5:21யோவா 11:25-261 யோவா 3:14 அப்பொழுது நீங்கள், இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு ஆகாயத்து ஆட்சியின் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடந்தீர்கள். அந்த தீய ஆவியே இப்பொழுது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. எபே 6:121 யோவா 5:19எபே 2:3யோவா 12:31கொலோ 3:6-7எபே 5:6யோவா 8:441 கொரி 6:11 ஒருகாலத்தில் நாம் எல்லோரும் அவர்களிடையே வாழ்ந்தோம். நமது மாம்சத்திலிருந்து எழும் இச்சைகளைத் தீர்த்துக்கொள்கிறவர்களாகவும், மாம்சத்திலிருந்து எழும் ஆசைகளின்படியும் யோசனைகளின்படியும், நடக்கிறவர்களாகவும் இருந்தோம். மற்றவர்களைப் போலவே, இறைவனுடைய கோபத்துக்கு உட்பட்டவர்களாய் இருந்தோம். தீத் 3:3எபே 4:22கலா 5:16-241 பேது 1:14ரோம 13:141 கொரி 6:9-11சங் 51:5ரோம 6:12 ஆனால் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள இறைவன், நமக்கு மிகுந்த அன்பு காண்பித்தார். 1 பேது 1:3எபே 1:7சங் 86:15தீத் 3:4-7ரோம 5:8எபே 2:7சங் 145:8ரோம 10:12 எப்படியென்றால், நாம் மீறுதல்களினால் இறந்தவர்களாய் இருந்தபோதும், நம்மை கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். இறைவனுடைய கிருபையினாலேயே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். ரோம 3:24எபே 2:8ரோம 5:10ரோம 5:8அப் 15:11எபே 2:1ரோம 8:2தீத் 2:11 இறைவன் கிறிஸ்துவுடனேகூட நம்மை உயிருடன் எழுப்பி, கிறிஸ்து இயேசுவில் நம்மைத் தம்முடனே பரலோகத்தின் உயர்வான இடங்களில் அமரும்படி செய்தார். கொலோ 3:1-3எபே 1:3கொலோ 2:12-13ரோம 6:4-5யோவா 17:21-26வெளி 3:20-21யோவா 12:26எபே 1:19-20 இனிவரும் காலங்களிலும், கிறிஸ்து இயேசுவில் நமக்குக் காட்டிய தயவின்மூலம், இறைவனுடைய கிருபையின் அளவற்ற நிறைவை காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார். 1 தீமோ 1:16-17தீத் 3:42 தெச 1:12எபே 2:4ஏசா 60:15வெளி 5:9-14எபே 3:5சங் 106:48 விசுவாசத்தின்மூலமாய், கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இந்த இரட்சிப்பு உங்களால் உண்டானதல்ல. இது இறைவனுடைய கொடையே ஆகும். ரோம 3:22-26எபே 2:5ரோம 4:16யோவா 1:12-13ரோம 10:17ரோம 10:9-10அப் 16:31யாக் 1:16-18 இந்த இரட்சிப்பு நற்செயல்களினால் வந்தது அல்ல. ஆகையால் இதைக்குறித்து ஒருவரும் பெருமைப்பாராட்ட முடியாது. 2 தீமோ 1:9ரோம 11:6தீத் 3:3-5ரோம 9:161 கொரி 1:29-31ரோம 3:20ரோம 4:2ரோம 9:11 ஏனெனில், நாங்கள் கிறிஸ்து இயேசுவில் படைக்கப்பட்ட இறைவனின் வேலைப்பாடுகளாய் இருக்கிறோம். நல்ல செயல்களைச் செய்யும்படி, இறைவனால் முன்னதாகவே ஆயத்தம் பண்ணப்பட்டபடியே நம்மை ஏற்பாடு செய்திருக்கிறார். பிலி 2:13கொலோ 1:10எபி 13:212 கொரி 5:172 கொரி 9:8எபே 4:24பிலி 1:62 தீமோ 3:17
யூதரும் யூதரல்லாதவரும் கிறிஸ்துவினால் இணைக்கப்படுதல்
ஆகையால், “விருத்தசேதனம் செய்துகொண்டிருக்கிறோம்” என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள், பிறப்பினால் யூதரல்லாதவர்களாய் இருந்த உங்களை, “விருத்தசேதனம் பெறாதவர்கள்” என்று உங்களை அழைத்தார்கள் என்பதை நீங்கள் நினைவில்கொள்ளுங்கள். இந்த விருத்தசேதனம், மனிதரின் கைகளால் உடலில் செய்யப்பட்டது. கொலோ 2:11கொலோ 2:13கொலோ 3:11ரோம 2:28-29கலா 6:121 கொரி 12:21 கொரி 6:11கொலோ 1:21 அக்காலத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவிலிருந்து புறம்பானவர்களாய், இறைவனின் சுதந்தரமாகிய இஸ்ரயேலுக்கு உட்படாதவர்களாகவும், வாக்குக்கொடுக்கப்பட்ட உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை அறியாதவர்களாகவும் இருந்தீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாதவர்களாகவும், இறைவன் இல்லாதவர்களாகவுமே இந்த உலகத்தில் வாழ்ந்தீர்கள். கலா 4:8கொலோ 1:211 பேது 1:3எரே 31:31-341 தெச 4:13எபே 4:18எசேக் 37:26யோவா 15:5 ஆனால் முன்பு ஒருகாலத்தில் தூரமாய் இருந்த நீங்கள், இப்பொழுதோ கிறிஸ்து இயேசுவில், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே இறைவனுக்கு சமீபமாயிருக்கிறீர்கள். அப் 2:39கொலோ 1:20-22கொலோ 1:13-14எபே 2:19-221 கொரி 6:11ஏசா 57:19ஏசா 43:6ரோம 3:23-30
கிறிஸ்துவே நமது சமாதானத்தின் வழியானார். அவரே இருபிரிவினரையும் ஒன்றாக்கி, தடையாயிருந்த பகைமைச் சுவரை தமது உடலின் மூலமாக அழித்தார். கலா 3:28கொலோ 3:15கொலோ 3:11எபே 2:151 கொரி 12:12-13கொலோ 1:20கொலோ 2:10-14ஏசா 9:6-7 கிறிஸ்து தமது உடலினால் மோசேயின் சட்டத்தை, அதின் கட்டளைகளோடும் விதிமுறைகளோடும் நீக்கியதினால், இந்த இருபிரிவினரையும் தம்மில் ஒரு புதிய மனிதனாக உருவாக்கி, சமாதானத்தை ஏற்படுத்தினார். கொலோ 2:14கலா 3:10கொலோ 1:21-22எபி 8:13கொலோ 2:20கொலோ 3:10கலா 3:28கலா 6:15 சிலுவையினால் இருபிரிவினரையும் ஒரே உடலாக இறைவனுடன் ஒப்புரவாக்குவதே அவருடைய நோக்கமாயிருந்தது. கிறிஸ்து தமது சிலுவையினால் அவர்களது பகைமையைச் சாகடித்தார். கொலோ 1:20-22ரோம 5:102 கொரி 5:18-21கொலோ 2:141 பேது 4:1-2கலா 2:20எபே 2:15ரோம 6:6 இவ்விதமாய் அவர் தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாய் இருந்த அவர்களுக்கும் நற்செய்தியின் சமாதானத்தைப் பிரசங்கித்தார். ஏசா 57:19-21அப் 10:36ரோம 5:1அப் 2:39உபா 4:7எபே 2:13-14சங் 148:14சகரி 9:10 ஆகவே கிறிஸ்து மூலமாக நாங்கள் இரு பிரிவினரும் ஒரே ஆவியானவரினால் பிதாவின் முன்னிலையில் வரக்கூடியவர்களாய் இருக்கிறோம். 1 கொரி 12:13எபே 3:12ரோம 5:2எபே 4:4யோவா 14:6எபி 10:19-20யோவா 10:9எபி 4:15-16
ஆகையால் யூதரல்லாதவர்களாகிய நீங்கள் இனிமேலும் அந்நியரும் அறியாதவரும் அல்ல, இப்பொழுது நீங்களும் இறைவனுடைய மக்களுடன் குடியுரிமை பெற்றவர்களாயும், இறைவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாயும் இருக்கிறீர்கள். பிலி 3:201 யோவா 3:1கலா 3:26-28கலா 6:10எபே 2:12எபே 3:6எபி 11:13எபி 12:22-24 நீங்களும் அப்போஸ்தலர், இறைவாக்கினர் ஆகியோரை அஸ்திபாரமாயும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாயும் கொண்டு கட்டப்பட்டிருக்கிறீர்கள். 1 பேது 2:4-5ஏசா 28:161 பேது 2:7-8சங் 118:22எபே 4:11-13மத் 16:18வெளி 21:141 கொரி 3:9-11 கிறிஸ்துவிலேயே அந்த முழுக்கட்டிடமும் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கர்த்தரில் ஒரு பரிசுத்த ஆலயமாக இருக்கும்படி வளர்ச்சி பெறுகிறது. 1 கொரி 3:16-171 கொரி 3:92 கொரி 6:16எபே 4:13-161 இராஜா 6:7எபி 3:3-4யாத் 26:1-37எசேக் 42:12 நீங்களும்கூட கிறிஸ்துவில், இறைவன் தமது ஆவியானவரினால் குடியிருக்கும் இடமாக சேர்த்துக் கட்டப்படுகிறீர்கள். 1 பேது 2:4-51 கொரி 3:16யோவா 17:21-231 யோவா 4:161 யோவா 4:13யோவா 14:17-231 கொரி 6:19ரோம 8:9-11