யாக்கோபு 1

James 1

இறைவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாயிருக்கிற யாக்கோபு, எசேக் 12:151 பேது 1:1யோவா 7:35அப் 8:1அப் 26:7அப் 15:13அப் 15:23உபா 28:64

வெவ்வேறு நாடுகளில் சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் எழுதுகிறதாவது:

வாழ்த்துகள்.

சோதனைகள்

பிரியமானவர்களே, நீங்கள் பலவித விசுவாச கஷ்டங்களுக்கு உள்ளாகும் போதெல்லாம், அதை மிகுந்த சந்தோஷமானதாகவே கருதவேண்டுமென்று எண்ணிக்கொள்ளுங்கள். 1 பேது 1:6-8யாக் 1:122 கொரி 12:9-10மத் 5:10-12லூக் 6:22-23பிலி 1:292 பேது 2:9ரோம 8:17-18 ஏனெனில் உங்கள் விசுவாசம் பரீட்சிக்கப்படும்போது, அது உங்களில் மனவுறுதியை உண்டாக்குகிறது என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ரோம 5:3-4எபி 10:36கொலோ 1:112 கொரி 4:17ரோம 8:281 பேது 1:72 பேது 1:6ரோம 15:4 மனவுறுதி உங்களில் முழுமையாய் செயலாற்றுகிறபொழுது, நீங்கள் முதிர்ச்சி பெற்றவர்களாயும், எதிலுமே குறைவுபடாது முழுநிறைவு பெற்றவர்களாயும் இருப்பீர்கள். 1 பேது 5:10லூக் 21:19மத் 5:482 தீமோ 3:17கலா 6:9எபி 13:21யாக் 5:7-11ஆப 2:3 உங்களில் யாராவது ஞானத்தில் குறைவுள்ளவராக இருந்தால், அவர்கள் இறைவனிடம் கேட்கவேண்டும். அப்பொழுது அது அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஏனெனில் இறைவன் குற்றங்குறை பாராமல், எல்லோருக்கும் தாராளமாய்க் கொடுக்கிறவராய் இருக்கிறார். நீதி 2:3-6யோவா 15:7எரே 29:12-13நீதி 3:5-71 யோவா 5:14-152 நாளாக 1:10மத் 7:7-11யாக் 3:17 ஆனாலும், நீங்கள் கேட்கும்போது, விசுவாசத்துடன் கேட்கவேண்டும், சந்தேகப்படக்கூடாது. ஏனெனில் சந்தேகப்படுகிறவர்கள், காற்றினால் அங்குமிங்கும் அடிக்கப்படுகிற கடலின் அலையைப் போலிருக்கிறார்கள். மத் 21:21-22எபி 11:6மாற் 11:22-24எபே 4:14எபி 10:23எபி 13:91 தீமோ 2:82 பேது 2:17 சந்தேகப்படுகிறவர்கள் தாங்கள் கர்த்தரிடமிருந்து எதையாவது பெறலாமென்று நினைக்கக்கூடாது; யாக் 4:3நீதி 15:8ஏசா 1:15ஏசா 58:3-4நீதி 21:27 அப்படிப்பட்டவர்கள் இருமனமுடையவர்கள். அவர்கள் செய்வதிலெல்லாம் உறுதியற்றவர்களாய் இருக்கிறார்கள். 1 இராஜா 18:21மத் 6:24யாக் 4:8ஏசா 29:132 பேது 2:142இராஜா 17:412 பேது 3:162இராஜா 17:33

தாழ்ந்த நிலைமையில் இருக்கின்ற ஒரு சகோதரன் உயர்ந்த நிலைமையைக் குறித்து மேன்மைப்பாராட்டட்டும். எரே 9:23-24யாக் 2:5-6நீதி 19:12 கொரி 6:10சங் 113:7-8சங் 62:9வெளி 2:9லூக் 1:52 செல்வந்தனாய் இருக்கின்ற சகோதரனோ, தாழ்மையுள்ள மனப்பான்மையைக்குறித்து மேன்மைப்பாராட்டட்டும். ஏனெனில் காட்டுப் பூவைப்போல் செல்வந்தன் மறைந்துபோவான். 1 பேது 1:241 யோவா 2:17யோபு 14:21 தீமோ 6:17மத் 5:3சங் 103:15ஏசா 40:6யாக் 4:14 கடும் வெயிலுடன் சூரியன் மேலே எழும்ப, செடி வாடிப்போகிறது; அதன் பூக்களும் உதிர்ந்து விழுகின்றன, அதன் அழகும் அழிந்துபோகிறது. இவ்விதமாகவே செல்வந்தனும் தனது வழிகளில் வீழ்ச்சியடைவான். ஏசா 40:7-8சங் 37:35-36லூக் 16:19-25மாற் 4:6யாக் 5:1-7சங் 49:6-14லூக் 12:16-21மத் 13:6

கஷ்டங்கள் மத்தியில் மனவுறுதியுடன் நின்று வெற்றிகொள்ளும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில் அவன் கஷ்டங்களில் உறுதியாய் நின்றபின், இறைவன் தம்மில் அன்பாயிருக்கிறவர்களுக்கு கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிற ஜீவக்கிரீடத்தைப் பெற்றுக்கொள்வான். 1 பேது 5:101 பேது 1:6-8வெளி 2:10யாக் 5:11ரோம 8:28மத் 10:221 கொரி 9:252 தீமோ 4:8

சோதிக்கப்படும்போது, “இறைவன் என்னைச் சோதிக்கிறார்” என்று ஒருவனும் சொல்லக்கூடாது. ஏனெனில் இறைவன் தீமையினால் சோதிக்கப்படுகிறவரல்ல, அவர் யாரையும் அப்படிச் சோதிக்கிறவருமல்ல; யாக் 1:12ஆப 2:12-13ரோம 9:19-20ஆதி 3:12யாக் 1:2ஏசா 63:17 ஆனால் ஒவ்வொருவனும் தனது சொந்தத் தீய ஆசையினாலேயே இழுப்புண்டும், கவரப்பட்டும் சோதிக்கப்படுகிறான். மாற் 7:21-22எபே 4:22மத் 15:18எபி 3:13நீதி 4:23ரோம 7:13யாக் 4:1-2மத் 5:28 அப்பொழுது அந்த ஆசையானது கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கின்றது; பாவம் முழு வளர்ச்சி பெறும்போது, அது மரணத்தை பிறப்பிக்கின்றது. சங் 7:14யோபு 15:35ரோம 5:12-21ஆதி 2:17ஏசா 59:4ஆதி 3:6ரோம 6:21-23மீகா 2:1-3

எனக்கு பிரியமானவர்களே, ஏமாந்து போகவேண்டாம். கலா 6:7யாக் 1:19கொலோ 2:8கொலோ 2:4எபி 13:1பிலி 2:121 கொரி 6:92 தீமோ 2:18 நல்லதும் முழுநிறைவானதுமான நன்கொடை அனைத்தும், பரலோகத்திலிருக்கின்ற பிதாவினிடத்திலிருந்தே வருகின்றன. அவரே பரலோக வெளிச்சத்தின் பிதா, அவர் இடம் மாறும் நிழலைப்போல் மாறுகிறவரல்ல. யோவா 3:27மத் 7:11எபி 13:8யோவா 8:12எண் 23:19சங் 84:111 யோவா 1:5நீதி 2:6 பிதா படைத்தவை எல்லாவற்றிலும், நாம் முதற்கனிகளாய் இருக்கும்படி நம்மைத் தமது சித்தத்தின்படி, சத்திய வார்த்தையின் மூலமாக நமக்கு பிறப்பைக் கொடுத்தார். ரோம 8:29-311 பேது 1:23யோவா 3:3-5யோவா 1:131 பேது 1:32 தெச 2:13-14எபே 2:4-5வெளி 14:4

கேட்டலும் செயல்படுலும்

பிரியமானவர்களே, நீங்கள் கவனிக்கவேண்டியது என்னவென்றால்: செவிகொடுத்துக் கேட்பதில் நீங்கள் துரிதமாயும், பேசுவதிலும் கோபிப்பதிலும் தாமதமாயும் இருக்கவேண்டும். நீதி 17:27நீதி 21:23நீதி 14:29நீதி 10:19நீதி 18:13நீதி 13:3எபே 4:26நீதி 16:32 ஏனெனில், இறைவன் நம்மில் விரும்பும் நீதியான வாழ்வை மனிதனுடைய கோபம் உண்டாக்குவதில்லை. 2 தீமோ 2:24-25எபே 4:26யாக் 3:17-18எண் 20:11-12 எனவே, பரவியிருக்கின்ற எல்லா ஒழுக்கக்கேட்டையும் தீமையையும் உங்களைவிட்டு அகற்றுங்கள். நீங்களோ, உங்களுக்குள் நாட்டப்பட்டிருக்கும் வார்த்தையைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த வார்த்தையே உங்களை இரட்சிக்கும் வல்லமையுடையது. எபே 4:221 பேது 2:11எபே 1:13யோவா 6:63சங் 25:9கொலோ 3:5-81 பேது 2:1எபி 12:1

வார்த்தையை கேட்கிறவர்களாய் மட்டுமில்லாமல், அதன்படி செய்யுங்கள். இல்லையெனில், நீங்கள் உங்களையே ஏமாற்றிக்கொள்வீர்கள். ரோம 2:13லூக் 6:46-48யோவா 13:17யாக் 4:171 யோவா 2:3லூக் 11:28யாக் 2:14-20மத் 12:50 வார்த்தையைக் கேட்டும் அதன்படி நடக்காதவன், தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்தும், மத் 7:26-27யாக் 2:14-26எசேக் 33:31-32லூக் 6:47எரே 44:16லூக் 6:7 தன்னில் இருந்த குறையை உடனே மறந்துபோகிற மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான். 2 பேது 3:11லூக் 1:66லூக் 7:391 தெச 1:5நியாயாதி 8:18மத் 8:27 ஆனால் நமக்கு விடுதலை கொடுக்கும் இந்த முழுநிறைவான சட்டத்தைக் கூர்ந்துகவனிக்கும் மனிதன், தான் கேட்டதை மறந்துவிடாமல், அதை கைக்கொண்டு தொடர்ந்து நடக்கவேண்டும். அப்படி நடந்தால், அவன் தன் செய்கையில் ஆசீர்வதிக்கப்படுவான். லூக் 11:28யோவா 13:172 கொரி 3:17-181 பேது 2:16லூக் 6:47-49கலா 5:1யாக் 2:12யோவா 8:31-32

யாராவது தங்களை பக்தியுள்ளவர்கள் என்று எண்ணினாலும், அவர்கள் தங்களுடைய நாவை அடக்காவிட்டால், தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். அவர்களுடைய பக்தியும் பயனற்றதே. எபே 4:29சங் 141:31 பேது 3:10எபே 5:4நீதி 19:1சங் 34:13நீதி 10:31நீதி 10:19 கஷ்டப்படும் அநாதைகளையும் விதவைகளையும் பராமரிக்கிறதும், உலகத்தால் கறைபடாது தங்களைக் காத்துக்கொள்வதுமே, நம்முடைய பிதாவாகிய இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிற தூய்மையான, மாசற்ற பக்தியாயிருக்கிறது. ஏசா 1:16-171 யோவா 3:17-19கலா 6:9-10ரோம 12:2மத் 25:34-46ஏசா 58:6-71 யோவா 2:15-17யோபு 31:15-20